நேற்றைய அலசலான ரஜினிகாந்தும் தமிழகமும்-ஐ தொடர்வோம் இன்றும்...
1996ல் ரஜினி வந்திருந்தால் ஜெயித்திருப்பார். கழகங்களுக்கு நல்ல ஒரு மாற்று சக்தியாக ரஜினியின் கட்சி இருந்திருக்கும் என நினைக்கின்றோம். ஆனால் அது சரிதானா? அரசியல் என்பது ‘ஒன் மேன் ஷோ’ தானா?
அந்த நேரத்தில் ரஜினியின் மூளையாகச் செயல்பட்டவர் துக்ளக் சோ தான். துணைக்கு ’திருச்செந்தூர் முருகனிடமே ஆட்டையைப் போட்ட’ ஆர்.எம்.வீரப்பன் போன்ற நல்லவர்களும் உண்டு. தொடர்ந்து தமிழின விரோதப் போக்கையையும் மனித நேயமற்ற பிராமணீயத்தையும் முன்வைக்கும் சோ போன்றோர் ‘ராஜ குரு’வாக இருந்து நடத்தும் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாகத்தான் உள்ளது. மக்கள் மத்தியில் ரஜினிக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்து மூடியிருப்பார்கள்.
சோவின் பிடியில் இருந்த, என்ன நடக்கிறதென்றே புரியாத அந்தச் சூழ்நிலையில், அரசியலுக்கு வராமல் இருந்ததுதான் ரஜினி தமிழினத்திற்குச் செய்த மிகப் பெரிய நன்மை!
அடிப்படையிலேயே மனித நேயம் கொண்டவராக இருந்ததனாலேயே ரஜினி இப்போது சோ&கோ-விடமிருந்து விலகி இருக்கிறார். அதற்காக ரஜினியின் ரசிகர்கள், ரஜினிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். சோவும் இப்போது ‘இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ எனப் புரிந்து கொண்டு, விஜயகாந்த்தைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நல்ல ஜோடிதான் அது.
கர்நாடகத்தில் ராஜ்குமார் இருந்தவரை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவரை அனுசரித்தே ஆட்சி செய்யும். இல்லையென்றால் அவரது ரசிகர்களின் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்காது. ரஜினியின் தற்போதைய போக்கும் அந்த நிலை நோக்கியே செல்கிறது. ராஜ்குமார் செய்தது மிரட்டல் அரசியல். ரஜினி செய்வது ’பணிவு’ அரசியல்(?).
தற்போதைய நிலையில் ரஜினியின் நிலைப்பாடு ‘கலைஞர்ஜி நல்லவர், ஜெயலலிதாஜி தைரிய லட்சுமி, விஜயகாந்த் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் திறமைசாலி’ என்பது தான். யாரையும் பகைத்துக் கொள்ளவோ எதிர்த்து அரசியல் புரியவோ அவர் தயாராக இல்லை.
அவரும் சந்திக்கின்ற ‘பாராட்டு விழா’ப் பிரச்சினைக்குக் கூட அஜித் போன்றோர் தான் குரல் கொடுக்கின்றனர். இவர் வெளியிலிருந்து ஆதரவு தருகிறார். நடிகர்களைத் திரட்டி நடிகர் சங்கத்தில் ‘அடிக்கடி 4 மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் மூலம் வரும் ஆபத்து உள்ளதால், பாராட்டு விழாவுக்கு அட்லீஸ்ட் நேரக் கட்டுப்பாடு தேவை, ’ என்று ஒரு பணிவான தீர்மானம் நிறைவேற்றக்கூட ரஜினி முயற்சி செய்யாமல் இருப்பதில் இருந்தே அவரது ’மோனநிலையை’ நாம் புரிந்து கொள்ளலாம்.ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக இருப்பதிலேயே அவர் முழு மனத்திருப்தி அடைந்துவிட்டார்.
ரஜினி வெளிப்படையாக ‘நான் அரசியலுக்கு வரப்போவதில்லை’என அறிவித்துவிடலாம். (ஒருமுறை எங்கோ சொன்னார், யாரும் கண்டுகொள்ளவில்லை, குமுதத்தைத் தவிர!) ஆனால் அதற்குத் தடையாக இருப்பது, முன்பு அவர் படங்களில் ‘யாரோ எழுதிக் கொடுத்துப் பேசிய’ லேட்டஸ்ட்டா வருவேன் போன்ற பஞ்ச் டயலாக்குகள் தான். புலி வலைப் பிடித்த கதையாக அந்த வசனங்களைப் பொய் என்று சொல்லவும் முடியவில்லை, உண்மையாக ஆக்கவும் முடியவில்லை.
இப்போது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ரஜினி உணர்த்தியிருப்பது’ நான் யாருக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன், என்னையும் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க’என்பதுதான். கழகங்களின் நிலையும் ரஜினி ’ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமல் இருந்தாலே போதும்’ என்பது தான்.
விடு ஜூட்! |
நாமும் இனி ரஜினி வந்து தமிழகத்தை ரட்சிப்பார் என்றெல்லாம் கனவு காண்பதையும், அவரை ‘வா.. தலீவா..வா’ என டார்ச்சர் செய்வதையும் விடுத்து, அவரை தொடர்ந்து சந்திரமுகி, எந்திரன் போன்ற நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க விடுவோம்.
டிஸ்கி: நொந்து போன, புண்பட்ட மனங்களுக்கு: அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
சொல்லி இருக்கீங்க நல்லா!(ஹிந்தி பாதிப்பு!)
ReplyDeleteயாரும் அவரு வந்து ரட்சிப்பாருன்னு நெனைக்கல...........
வந்திருந்தா நல்லா இருந்து இருக்குமோன்னு தான் நெனச்சாங்க.................
இன்னைக்கும் அவரு போல இன்னொரு entertainer சினிமா உலகத்துக்கும் மக்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்ல.
என்னைப்பொருத்த வரைக்கும் அந்த மனுசன சீண்டாம, உசுப்பேத்தாம இருக்குறது நல்லது!
>>>’திருச்செந்தூர் முருகனிடமே ஆட்டையைப் போட்ட’ ஆர்.எம்.வீரப்பன் போன்ற நல்லவர்களும் உண்டு.
ReplyDeleteஇதென்ன புதுசா இருக்கு?
>>>தற்போதைய நிலையில் ரஜினியின் நிலைப்பாடு ‘கலைஞர்ஜி நல்லவர், ஜெயலலிதாஜி தைரிய லட்சுமி, விஜயகாந்த் இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் திறமைசாலி’ என்பது தான். யாரையும் பகைத்துக் கொள்ளவோ எதிர்த்து அரசியல் புரியவோ அவர் தயாராக இல்லை.
ReplyDeleteகாரணம் அடிப்படையில் ரஜினி வம்பு எதுக்கு என ஒதுங்குபவர்
>>>நாமும் இனி ரஜினி வந்து தமிழகத்தை ரட்சிப்பார் என்றெல்லாம் கனவு காண்பதையும், அவரை ‘வா.. தலீவா..வா’ என டார்ச்சர் செய்வதையும் விடுத்து, அவரை தொடர்ந்து சந்திரமுகி, எந்திரன் போன்ற நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க விடுவோம்.
ReplyDeleteகரெக்ட்
சி.பி.செந்தில்குமார் said... [Reply]
ReplyDelete>>>’திருச்செந்தூர் முருகனிடமே ஆட்டையைப் போட்ட’ ஆர்.எம்.வீரப்பன் போன்ற நல்லவர்களும் உண்டு.
இதென்ன புதுசா இருக்கு?////
அண்ணே இந்தக்கதை உங்களுக்கு தெரியாதா? முருகன் கையிலேர்ந்த தங்க வேலை வீரப்பன் ஆட்டை போட்டுட்டாருன்னு கலைஞர் நடைபயனமேல்லாம் போனாருன்னே....இப்ப அதே ஆர்.எம்.வீ. கலைஞர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உக்கார்ந்து இருக்காரு
@விக்கி உலகம்://என்னைப்பொருத்த வரைக்கும் அந்த மனுசன சீண்டாம, உசுப்பேத்தாம இருக்குறது நல்லது// கரெக்ட் விக்கி!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்://இதென்ன புதுசா இருக்கு?// என்ன சார் நீங்க..செந்தில்னு திருச்செந்தூர் பேர் வச்சுக்கிட்டு, இப்படிக் கேட்கலாமா..
ReplyDelete@ரஹீம் கஸாலி:விளக்கத்திற்கு நன்றீ கஸாலி!
ReplyDelete?/அண்ணே இந்தக்கதை உங்களுக்கு தெரியாதா? முருகன் கையிலேர்ந்த தங்க வேலை வீரப்பன் ஆட்டை போட்டுட்டாருன்னு கலைஞர் நடைபயனமேல்லாம் போனாருன்னே....இப்ப அதே ஆர்.எம்.வீ. கலைஞர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உக்கார்ந்து இருக்காரு //
ReplyDeleteஅப்படியா செங்கோவி...இது எனக்கு தெரியாதே...சூடு சுரணை இல்லாதவங்க தான் அரசியலில் இருக்க முடியும்னு தெளிவா விளக்குரிங்க...:)))
தம்பி வா தலைமையேற்க வான்னு நாவலரை(பிற்காலத்தில் உதிர்ந்த மயிர் என்று ஜெயாவால் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனை) அண்ணா அழைத்ததுபோல்....ஒவ்விரு தேர்தலின் போதும் தலைவா வா தலைமையேற்க வான்னு ரசிகர்கள் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்...ரஜினி வாயை திறப்பதில்லை.அவ்வப்போது வாய்ஸ் கொடுப்பதை தவிர......தேர்தல் வழி திருடர்கள் வழியென்று நினைத்து விட்டாரோ என்னவோ....
ReplyDeleteஇந்த முறை ரஜினி வாய்ஸ் கொடுக்காமல் இருப்பதே அவரது மரியாதையை நிலைக்கச் செய்யும். போன முறை அவர் செய்தது எல்லாருக்கும் தெரியும்... பேரை கெடுத்துக் கொள்ளாமல் தீபிகாவுடன் டூயட் பாடுவதில் கவனம் செலுத்தட்டும்.
ReplyDeleteதெரியாத நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்
ReplyDelete//அரசியல் என்பது ‘ஒன் மேன் ஷோ’ தானா?//தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. அண்ணாதுரை காலத்திலிருந்து எம்ஜியார் இறக்கும் வரை யார் முதல்வராக இருந்தாலும் நம்பர் இரண்டு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த நெடுஞ்செழியன், தனித்துப் போட்டியிட்டு டெப்பாசிட் இழந்தார், அதே தொகுதியில் நின்ற எஸ்.வீ.சேகர் டெபாசிட் பெற்றார். எம்ஜியாருடன் இருந்த ஜாம்பவான்கள் பண்ரூட்டி, ஆரெம்வீ, நெடுஞ்செழியன் என்று எல்லோரும் அட்ரஸ் இல்லாமல் போனார்கள், மற்றும் சிலர் மீண்டும் ஜெயளிதாவுடனோ, கருனாநிதியுடனோ போய் ஒட்டிக் கொண்டு காலம் தள்ளுகின்றனர். இன்றைக்கும் தி.மு.கா வில் ரொம்ப நாளாக சிறப்பாகச் செயல் பட்டுவரும் அன்பழகன் கருனாநிதிக்கப்புரமும் அதே சோம்பு தூக்கி வேலையைத்தான் செய்ய முடியும், மீறி தனிக் கட்சி, தனித்துப் போட்டி என்று போனால் டெபாசிட் கூட மிஞ்சாது. இந்த முறையை உருவாக்கிய புண்ணியவான், கருணாநிதி. தனது கட்சியில் வேறு யாரையும் வளரவிடாமல் தட்டி வைத்தவர், அதை எதிர்த்து எம்ஜியார் மேலே வந்தார். இன்றைக்கும் தமிழக அரசியல் ஒன் மேன் ஷோதான். ஒரு கட்சிக்கு ஒரே ஆள், அந்த ஆளுக்காகத்தான் ஓட்டு விழும், அந்த ஆள் போனால் மற்றவர்களை யார் என்றே மக்களுக்குத் தெரியாது, அவர்கள் எத்தனை வருடம், எந்த பதவியில் இருந்திருந்தாலும் சரி.
ReplyDelete//ஆனால் அதற்குத் தடையாக இருப்பது, முன்பு அவர் படங்களில் ‘யாரோ எழுதிக் கொடுத்துப் பேசிய’ லேட்டஸ்ட்டா வருவேன் போன்ற பஞ்ச் டயலாக்குகள் தான். //"நான் பேசிய பன்ச் டயலாக் எல்லாம் அந்தந்த படத்தின் இயக்குனர் எழுதிக் கொடுத்தது, அதை நான் பேசி நடித்தேன், மற்றபடி அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கெல்லாம் நீங்களாக அர்த்தம் கற்ப்பித்துக் கொண்டு சீரியாசாக இருந்தது உங்கள் தப்பு".- இப்படியெல்லாம் குசேலன் படத்தின் அசோக் குமார் பேசிவிட்டார். ஆனால், ரசிகக் கண்மணிகள் கலாட்ட பன்னியதால் அதை வேறு வழியில்லாமல் நீக்க வேண்டியதாயிற்று.
ReplyDelete//புலி வலைப் பிடித்த கதையாக அந்த வசனங்களைப் பொய் என்று சொல்லவும் முடியவில்லை, உண்மையாக ஆக்கவும் முடியவில்லை.// சூப்பர், கையை மூடியே வைத்திருக்க வேண்டும், திறந்து கான்பித்துவிட்டால் அட ஒண்ணுமில்ல சீ.. என்றாகி விடும். அப்புறம் ரசிகன் எப்படி கட்டவுட்டு வைப்பன், அதுக்கு பாலூற்றுவான், தேங்காய் பழம் வைத்து கர்ப்பூரம் காட்டுவான், காவடி எடுப்பன், அழகு குத்துவான், அதிகாலையில் எழுந்து புனித நீராடி மக்கள் போகும் ரோட்டில் அங்க பிரதட்சிணம் பண்ணி திரையரங்குக்கு வந்து மங்களம் பாடுவான்? இதெல்லாம் நின்னு போகுமே!! இந்த தொலைக் காட்சி சீரியல்களில் தொடரும்.. என்று வரும் போது சஸ்பென்ஸ் ஆகவே விடுவார்கள். இல்லையென்றால் சுவராஸ்யம் போய் விடும். அதைத்தான் இவர் செய்து கொண்டிருக்கிறார். இப்போ இல்லையென்றும் சொல்ல முடியாது, வந்து சமாளிப்பதற்கும் சாமர்த்தியம் கிடையாது, இவரின் புலிவாலைப் பிடித்த கதைதான். ஒரே வழி, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்கும் போதெல்லாம் வானத்தை நோக்கி சுட்டு விரலை கான்பிச்சுகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். அங்க என்ன இருக்கு? குருவியோ காகாயோ பறந்து கிட்டு இருக்கும்!!
ReplyDelete//தொடர்ந்து தமிழின விரோதப் போக்கையையும் மனித நேயமற்ற பிராமணீயத்தையும் முன்வைக்கும் சோ// இந்த ஆள் எம்ஜியார் இருந்தபோது இவரது துக்ளக் பத்திரிகையில் ஜெயலலிதாவின் பெயரையோ, போட்டோவையோ போட்டாவே மாட்டார். கார்டூனை கூட முகம் தெரியும் வகையில் போட்டதில்லை. பெயரை கொ.ப.செ. என்று போடுவார். இன்று ஜெ. தமிழகத்தில் இருக்க வேண்டிய ஆள் இல்லை, அகில இந்திய அளவில் நாட்டை ஆள வேண்டியவர் என்கிறார். இன்னொன்று, காஞ்சி மடத்துக் காரர்களை ஜெ. உள்ளே தள்ளியபோது, தமிழகத்தில் வழக்கு நடந்தால் நீதி கிடைக்காது என்று சொன்ன இந்த மனிதர் ஜெ வைப் பற்றி எந்த கண்டன அறிக்கையும் கடைசிவரை விடவேயில்லை. ஜெ. வைப் பார்த்தால், எப்போ எந்தப் பக்கம் பல்டியடிப்பார், யார் காலை எப்போது வாரிவிடுவார், யார் மீது "என்னிடம் முறை தவறி நடந்தார்" என்ற பழியை போடுவார் என்று முற்றிலுமான unpredictable ஆக நடந்து கொள்கிறார். வெற்றி பெற்றால் என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள், எனக்குக் கிடைத்த வெற்றி என்கிறார், தோற்றால் கள்ள வோட்டு போட்டார்கள், தேர்தல் கமிஷனே தில்லு முல்லு பண்ணிவிட்டது மறு தேர்தல் நடத்து என்கிறார். கூட்டணிக் கட்சியினர் உட்பட யாரையும் மதிப்பதில்லை. ஆனால் இவருடைய தோழி சசிகலா சொல்வது அத்தனைக்கும் செவி சாய்க்கிறார். [வளர்ப்பு மகன் திருமணம், கண்ணகி சிலை அகற்றல், மாநிலம் முழுவது சொத்து வாங்கிப் போட்டுக் கொள்ள அனுமதி....] இவரை சோ உயர்த்திப் பேசுவதைப் பார்த்தல் பார்ப்பனியம் தான் காரணமா என்று நினைக்கத் தோன்றுகிறது.
ReplyDeleteஅரசியலுக்குள் இறங்கும் தைரியம் ரஜனியிடம் இல்லை. வாய்ச்சொல்லில் வீரரடி
ReplyDeleteசிறப்பான உண்மையான நிலை
ReplyDelete//சோவின் பிடியில் இருந்த, என்ன நடக்கிறதென்றே புரியாத அந்தச் சூழ்நிலையில், அரசியலுக்கு வராமல் இருந்ததுதான் ரஜினி தமிழினத்திற்குச் செய்த மிகப் பெரிய நன்மை!//
ReplyDeleteஅப்பாடா தப்பிச்சது தமிழ்நாடு....
@ஆனந்தி..: அந்தக் கதை நிறையப் பேருக்குத் தெரியாது போலிருக்கே...
ReplyDelete@ரஹீம் கஸாலி: அவர் என்ன நினைக்காருன்னுதான் யாருக்கும் புரிய மாட்டேங்குதே கஸாலி!
ReplyDelete@சே.குமார்: //தீபிகாவுடன் டூயட் பாடுவதில் கவனம் செலுத்தட்டும்.// கரெக்ட் பாஸ்.
ReplyDelete@இரவு வானம்: நிஜமாவே உங்களுக்குத் தெரியாதா..
ReplyDelete@Jayadev Das://தமிழக அரசியல் ஒன் மேன் ஷோதான்// உண்மைதான் சார்!
ReplyDelete@Jayadev Das: //சோ உயர்த்திப் பேசுவதைப் பார்த்தல் பார்ப்பனியம் தான் காரணமா என்று நினைக்கத் தோன்றுகிறது.// வேறென்ன காரணம்..அவங்க பொழப்பைக் கரெக்டாப் பார்க்காங்க..அவ்வளவு தான்!
ReplyDelete@வந்தியத்தேவன்://வாய்ச்சொல்லில் வீரரடி
ReplyDelete// அதுவும் இல்லையேன்னு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கோம்..நீங்க வேற வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சுறீங்க!
@MANO நாஞ்சில் மனோ: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete//நாமும் இனி ரஜினி வந்து தமிழகத்தை ரட்சிப்பார் என்றெல்லாம் கனவு காண்பதையும், அவரை ‘வா.. தலீவா..வா’ என டார்ச்சர் செய்வதையும் விடுத்து, அவரை தொடர்ந்து சந்திரமுகி, எந்திரன் போன்ற நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க விடுவோம்.//
ReplyDeleteyes!
/
பதிவில் கொஞ்சம் காரம் கலந்திருக்கிறீர்கள்.. முடிவு நல்லா
ReplyDeleteயதார்த்தமாக இருந்தது. அவரு தொழிலை அவரு பாக்கட்டும்..
//இந்த முறை ரஜினி வாய்ஸ் கொடுக்காமல் இருப்பதே அவரது மரியாதையை நிலைக்கச் செய்யும். போன முறை அவர் செய்தது எல்லாருக்கும் தெரியும்... பேரை கெடுத்துக் கொள்ளாமல் தீபிகாவுடன் டூயட் பாடுவதில் கவனம் செலுத்தட்டும்.//
ReplyDelete@middleclassmadhavi: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
ReplyDelete@பாரத்... பாரதி...: //பதிவில் கொஞ்சம் காரம் கலந்திருக்கிறீர்கள்// எதுவும் திணிக்கப்படவில்லையே பாரதி..
ReplyDelete//கழகங்களின் நிலையும் ரஜினி ’ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமல் இருந்தாலே போதும்’ என்பது தான்//
ReplyDeleteTrue! :-)
//நாமும் இனி ரஜினி வந்து தமிழகத்தை ரட்சிப்பார் என்றெல்லாம் கனவு காண்பதையும், அவரை ‘வா.. தலீவா..வா’ என டார்ச்சர் செய்வதையும் விடுத்து, அவரை தொடர்ந்து சந்திரமுகி, எந்திரன் போன்ற நல்ல கமர்சியல் படங்களைக் கொடுக்க விடுவோம்//
கரெக்ட் தலீவா!! :-)
ரஜினி அரசியலுக்கு நான் வருவேன் என்று என்னைக்கும் சொன்னதில்லை. அப்படி நினைத்திருக்கவும் முடியாது. இது குறித்த மக்கள் கருத்தும் தவறானது. ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு ஏற்படுத்தப் பட்ட ட்ராபிக் ஜாம் தான் இந்த நிலைமைக்கு கொண்டு போய் விட்டுள்ளது. மற்றபடி, அவருக்கு அரசியல் பண்ணத் தெரியாது, பிடிப்பதும் இல்லை, அவர், நன்றாக ஸ்டைல் பண்ணும் ஒரு திறமையான நடிகர்.பொதுவில் நல்ல மனிதன்.
ReplyDeleteதுக்ளக் 50 வருட விழா வில் ஒருவர் கேள்வி கேட்டார் சோ அவர்களிடம்... 1996 இல் ADMK ஊழலுக்காக .. இனி தமிழ்நாட்டை இந்த ஆட்சி மறுபடி வந்தால் ஆண்டவனாலயும் காபத முயத்யாதுன்னு கொதிச்சார் .. இப்ப நடகுரதையும் பார்த்துட்டு இருக்கார் .. ஆனா வாய துறக்க மாட்டேன்குறார் ? அப்படீன்னு கேள்வி கேட்டார் .. அதுக்கு சோ பதில் - ரஜினி பயபடுற அளவுக்கு இன்னும் தி மு க போகல. இத பத்தி என்ன சொல்லுறீங்க?
ReplyDeleteதுக்ளக் 50 வருட விழா வில் ஒருவர் கேள்வி கேட்டார் சோ அவர்களிடம்... 1996 இல் ADMK ஊழலுக்காக .. இனி தமிழ்நாட்டை இந்த ஆட்சி மறுபடி வந்தால் ஆண்டவனாலயும் காபத முயத்யாதுன்னு கொதிச்சார் .. இப்ப நடகுரதையும் பார்த்துட்டு இருக்கார் .. ஆனா வாய துறக்க மாட்டேன்குறார் ? அப்படீன்னு கேள்வி கேட்டார் .. அதுக்கு சோ பதில் - ரஜினி பயபடுற அளவுக்கு இன்னும் தி மு க போகல. இத பத்தி என்ன சொல்லுறீங்க?
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteஉண்மை.. இங்குள்ள தமிழர்கள் பலர் இன்னும் பார்ப்பானிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாங்கிய அடியும் ஆப்பும் பத்தாது என்று சொல்லி பார்பனியம் எங்கே என்று புன்னகை மன்னனாக கேட்டு கொண்டு உள்ளனர். சிதம்பரத்தில் தமிழ் வேண்டுமா , சமஸ்கிருதம் வேண்டுமா என்று மட்டும் கேட்டு நீங்கள் தெளிவாகலாம்.
@ஆகாயமனிதன்..://ரஜினி அரசியலுக்கு நான் வருவேன் என்று என்னைக்கும் சொன்னதில்லை// அவர் வெளில சொல்லவில்லை...ஆனால் தன் படங்களில் வந்த ’வருவேன்’ டயலாக் தன்னை மீறி வந்ததாக ரஜினி சொல்ல முடியாதே பாஸ்..சொன்னாலும் நாம ஒத்துக்க முடியாது! அவருக்கு அப்போது ஆசை வந்திருக்கலாம்..பிறகு நிதர்சனம் புரிந்திருக்கலாம்.
ReplyDelete@Guna: சோ வஞ்சப் புகழ்ச்சியாக அப்படிச் சொன்னார்.ஒரே செண்டன்ஸில் திமுக, ரஜினி என இரு விக்கட்டை வீழ்த்தினார்..சோவின் வார்த்தை விளையாட்டு நாம் அறிந்ததே! (ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி பத்தாதா..தலைவர் பொங்கியெழ இன்னுமா அடிக்கணும்!)
ReplyDelete@ssk:தங்கள் வருகைக்கும் தெளிவான கருத்துக்கும் நன்றி சார்..’பார்ப்பனீயம் பிராமணர்களிடம் மட்டுமா இருக்கிறது..!
ReplyDelete@ஜீ...: தலீவா-க்கு நன்றி ஜீ!
ReplyDelete//திருச்செந்தூர் முருகனிடமே ஆட்டையைப் போட்ட’ ஆர்.எம்.வீரப்பன்//
ReplyDelete******
இதெல்லாம் நெம்ப பழய மேட்டரு தல.. இத கேள்விப்பட்ட “நம்ம பாராட்டு விழா ஸ்பெஷலிஸ்ட் தல” கூட ஆர்.எம்.வி.ய எதிர்த்து நடைப்பயணம்லாம் போனாரு... இப்போ, ஆர்.எம்.வி. அதே “தல”யின் இதயத்தில் இடம் பிடித்து அமர்ந்து இருக்கிறார்....
@R.Gopi: நெம்ப பழய மேட்டர்ங்கிறதால தான், அவங்க மற்ந்துட்டாங்க போல!
ReplyDeleteஓகே.. ஓகே.. லூஸ்ல விடுங்க.. தலைவர் இந்தத் தடவையும் தேர்தலப்போ எங்கயாவது எஸ்கேப்பாயிருவாரு. ஆனால் கரீக்ட்டா ஓட்டுப் போடுற அன்னிக்கு ஓடி வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிடுவார்..! அதுவே போதும்..!
ReplyDelete@உண்மைத்தமிழன்:என்ன அதிசயம்..நம்ம கடைப்பக்கம் அண்ணாச்சி வந்திருக்கீங்க..வருக..வருக..
ReplyDelete