Tuesday, August 2, 2011

விஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்

சீமான் என்ற பெயரைக் கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அரசியலில் அவரே மாற்று சக்தியாக வருவார் என்று பலரும் கனவு கண்டனர். நமது தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதிய சீமானும் சீமானும் தாத்தாக்களும் பதிவில் சீமானைப் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை நாம் முன்வைத்தோம். பிறகு சில நாட்கள் கழித்து கவிஞர் தாமரையும் இதே போன்ற கேள்விகளை சீமானிடம் அறிக்கை வாயிலாக எழுப்பினார். ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று திருவாய் மலர்ந்துவிட்டு தேர்தல் பணியில் தீவிரமாய் இறங்கினார் சீமான்.

பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை. தமிழின் முக்கிய இயக்குநராக தம்பி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் தன் முத்திரையை பதித்த சீமான், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தபோதே இவர் தீவிர அரசியலுக்கு திட்டமிடுகிறார் என்பது புரிந்தது. பலநாட்கள் உணர்ச்சி வேகத்தில் பொங்கிப் பொங்கி கட்டியமைத்த புரட்சிவாதி பிம்பத்தில் இப்போது கீறல் விழுந்திருக்கின்றது.

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது முதலில் புகார் கொடுத்தபோது, யாருமே அது பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம் இதே விஜயலட்சுமி ஏற்கனவே இதே புகாரை ஒரு கன்னட நடிகர் மீதும் டிவி நிகழ்ச்சி இயக்குநர் மீதும் சுமத்தி இருந்தது தான். ஏதோவொரு வேகத்தில் நடிக்க வந்துவிட்டு, பின் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள போராடும் நடவடிக்கையா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையா என்று புரியாத விவகாரங்கள் தான் அவை. புலி வருது கதையாக இவர் சீமான் மீது புகார் சொன்னபோது யாரும் விஜயலட்சுமியை நம்பவில்லை.

குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.
விஜயலட்சுமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீமானின் நடவடிக்கைகள் தான் நம் சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன. ஜெ.ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஜெ. ’ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமே இது. இதனை ஒரு அறிக்கை விட்டுப் பாராட்டி இருந்தாலும் போதும். ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.

ஆனாலும் அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம். 

‘ஒரு நல்ல தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி’ என்று ஒரு பக்க அறிக்கையுடன் முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிய அளவில் சீமான் செய்தது ஏன்? ’புரட்சித் தலைவியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.’ என்று அவர் பேசியதைக் கேட்டபோது இவரை நம்பிக் கூடிய அந்த தம்பிமார்கள் மீது பரிதாபமே மிஞ்சியது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்ப தன்னை நம்பி வந்த தம்பிமாரை அடகு வைக்கின்றாரா சீமான் என்பதே இப்போது எழும் சந்தேகம்.

அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி ‘மதுரையில் சீமான் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது 15 நாட்கள் அவருடன் இருந்தேன். இதை போலீஸார் விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பவே ஜெ.வுக்கு பாராட்டு விழா நடத்தினார்’ என்று குற்றம் சுமத்தினார். அவரது வாதம் முழுக்க புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. காவல்துறை அந்த வழக்கை தீவிரப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும். 

தமிழினத்தின் விடியலுக்காகவே பிறந்து வந்த சீமான் ‘சம்ச்சீர்க் கல்வி விஷயத்தில் அதிமுக அரசு சரியாகச் செயல்படுகிறது’ என்று பாராட்டினார். பாராட்டிய இரண்டு நாளில் உயர்நீதிமன்றத்தின் செருப்படி விழுந்தது. தொடர்ந்து உச்சநீதி மன்றமும் செருப்பால் அடித்தது. அதன்பிறகு ’பாராட்டு விழா நடத்தியும் திருப்தி பெறாத சீமான் மீண்டும் ஜெ.வை நேரில் சந்தித்து அதே விஷயத்திற்கு ’நன்றி’ சொல்லிவிட்டு விட்டு வந்திருக்கிறார்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெ.எப்படி இந்த விஷயத்தை முன்னெடுக்கப்போகிறார் என்பதே. தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல். இதற்கு உதாரணமாக ராமராஜன் முதல் வைகோ வரை நிறையப் பேர் உண்டு. அந்த வகையில் அடுத்து கேப்டவுன் வருவார் என்று நாம் எதிர்பார்த்திருந்த வேளையில் தானே முன்வந்து சிக்கியுள்ளார் ‘மாற்று சக்தி’ சீமான். 

சீமானின் மண்டியிடல் ஜெ.வைத் திருப்திப்படுத்தினால், விஜயலட்சுமியின் புகார் கண்டுகொள்ளாமல் விடப்படும். அல்லது முழுக்க சீமானின் டவுசரைக் கழட்டுவதே நல்லது என்று ஜெ. முடிவு செய்தால். சீமான் உள்ளே போக வேண்டி வரலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

108 comments:

  1. பரவாயில்லை பாஸ்..கமெண்ட்லயாவது மழை பெய்யுதே..வருக!

    ReplyDelete
  2. /////தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல்/////முதல்வர் ஜெ : க க க போ !!!!!!

    ReplyDelete
  3. //முதல்வர் ஜெ : க க க போ !!!!!//

    ஹா..ஹா..எவ்ளோ பார்த்திருக்கோம்!

    ReplyDelete
  4. piping பற்றி பதிவு எழுதறதா சொல்லி இருந்தீங்க!!! எப்போ எழுத போறீங்க!!!

    ReplyDelete
  5. மன்மதன் லீலைகள் முடிஞ்ச அப்புறம்..புரஃபைல் ஃபோட்டோ பார்த்தேன்..பைப்பிங்லயா இருக்கீங்க?

    ReplyDelete
  6. குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.


    ...... புரியுது....ஆனால், புரியல.....

    ReplyDelete
  7. //
    Chitra said...
    ... புரியுது....ஆனால், புரியல..//

    அது தான்க்கா எல்லாருக்கும் நல்லது!

    ReplyDelete
  8. ///பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு.// நானும் உங்களை போல ஒருவன் தான் , வைக்கோ சீமான் எண்டு தீவிர பக்தனாய் இருந்தனான். ஆனா இப்ப ..????

    ReplyDelete
  9. ///ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். /// ஆமாம் பாஸ் கருணாநிதியை பழித்துவிட்டு அதையே ஜெயாவுக்கு செய்வது ரொம்ப ஓவர் தான்..

    ReplyDelete
  10. கந்தசாமி. said...

    //ஆனா இப்ப ..???//

    என்ன சொல்ல..எப்படிச் சொல்ல..

    ReplyDelete
  11. அப்பிடி அந்த பெண்ணோடு பழகியிருந்தால் ஒத்துக்கொள்வதே சீமானுக்கு அழகு

    ReplyDelete
  12. //கந்தசாமி. said...
    ///ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். /// ஆமாம் பாஸ் கருணாநிதியை பழித்துவிட்டு அதையே ஜெயாவுக்கு செய்வது ரொம்ப ஓவர் தான்.//

    வராத ஆளுக்கு வலுக்கட்டாயமாக பாராட்டு விழா நடத்தியது தான் பெரும் கூத்து.

    ReplyDelete
  13. //கந்தசாமி. said...
    அப்பிடி அந்த பெண்ணோடு பழகியிருந்தால் ஒத்துக்கொள்வதே சீமானுக்கு அழகு//

    மதுரைக்கு வரவழைத்து தங்கியிருந்ததை விஜயலட்சுமி அழுத்தமாகச் சொல்கிறார். சீமானின் நண்பர்களும் எல்லாவற்றையும் அறிவார்கள் என்கிறார். உண்மை சீமானுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  14. அட அட எனக்கு முன்ன நிறைய பேர் வந்துட்டாங்க போலிருக்கே !!!!!!!!!!!

    ReplyDelete
  15. //M.R said...
    அட அட எனக்கு முன்ன நிறைய பேர் வந்துட்டாங்க போலிருக்கே//

    ஆமா பாஸ்..இன்னைக்கு நானே லேட்..நீங்க இன்னும் லேட்.

    ReplyDelete
  16. இன்னும்மா விஜியை மறக்கல நீ....??

    ReplyDelete
  17. //
    தமிழ்வாசி - Prakash said...
    இன்னும்மா விஜியை மறக்கல நீ....??//

    சீமான்கிட்டத் தானே கேட்கிறீங்க?

    ReplyDelete
  18. குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.


    இது பொதுவாகவே உண்மையான ஒத்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் .

    ReplyDelete
  19. தமிழ்வாசி - Prakash said...
    இன்னைக்கு மெது வடை...

    அப்பிடின்னா ?

    ReplyDelete
  20. தமிழ்வாசி - Prakash said...
    இன்னும்மா விஜியை மறக்கல நீ....??//

    சீமான்கிட்டத் தானே கேட்கிறீங்க?>>>>

    ஹா....ஹா....எஸ்கேப் பதில் போடறாப்ல....

    ReplyDelete
  21. //
    M.R said...

    இது பொதுவாகவே உண்மையான ஒத்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் .// ஆமாம் பாஸ்.

    //இன்னைக்கு மெது வடை...

    அப்பிடின்னா ?// பதிவுக்கு லேட்டா , மெதுவா வர்றவங்களுக்கு மெதுவடைன்னு தமிழ்வாசி ஒரு கொள்கை வச்சிருக்கார்!

    ReplyDelete
  22. ஆஹா அப்பிடின்னா எனக்கும் இன்னைக்கு மெது வடை

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ், சீமான் தான் அனல் பறக்கப் பேசுவார் என்றால், அவரைப் பற்றிய பதிவும் அனலாக இருக்கே. இருங்கோ படிப்பம்.

    ReplyDelete
  24. இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.//

    ஸப்பா...இது தேவையா. ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாது என்று சொல்லுவாங்களே, அதுவா இது.

    ReplyDelete
  25. தவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள்.
    அதற்குத் தற்போது சிறந்த உதாரணம்...நம்ம அனல் பறக்கும் பேச்சாளர்.

    ReplyDelete
  26. good post...
    deep analysis ...
    congrats

    ReplyDelete
  27. சீமான் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு
    பொறுத்துதான் பாப்போமே பாஸ்

    ReplyDelete
  28. தமிழ் தமிழ் எனக் குதிக்கும் இந்த ஆள் தமிழச்சிகள் மட்டும் எக்கேடு கெட்டு போகட்டும் என நினைப்பவர். ஏற்கனவே இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.

    விசயலட்சுமி விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஈழதமிழச்சிக்கு வாழ்வு தர இருப்பதாய் சொன்னவர் அதுக்கு பிறகு மூச்சுவிட்டதாக தெரியவில்லை

    ReplyDelete
  29. தமிழ் தமிழ் எனக் குதிக்கும் இந்த ஆள் தமிழச்சிகள் மட்டும் எக்கேடு கெட்டு போகட்டும் என நினைப்பவர். ஏற்கனவே இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.

    விசயலட்சுமி விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஈழதமிழச்சிக்கு வாழ்வு தர இருப்பதாய் சொன்னவர் அதுக்கு பிறகு மூச்சுவிட்டதாக தெரியவில்லை

    ReplyDelete
  30. //பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை.//

    சீமான் மீது ஆரம்பத்தில் எனக்கும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அது படிப்படியாக குறைந்து இப்போது முற்றிலுமாக இல்லாது போய்விட்டது. அரசியல்வாதிகள் எல்லோருமே அரசியலுக்கு வந்த பின்னர்தான் தமிழ் உணர்வை கையில் எடுப்பார்கள். ஆனால் சீமான் அரசியலுக்கு வரமுன்னமே ஆரம்பித்துவிட்டார். கெட்டிக்காரன்

    ReplyDelete
  31. விஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..

    ReplyDelete
  32. மாப்ள நிழல் நிஜமாகிவிடுமோ என்ற கவலை போல தெரிகிறது!

    ReplyDelete
  33. following....

    waiting for the verdict.....

    ReplyDelete
  34. சீமான்கிட்டே இத நான் எதிர்பார்க்கல பாஸ்!!

    ReplyDelete
  35. //அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.//

    சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த அங்கதம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  36. ஜெயாவை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை அரசு சார்பில் வெளியிடும்போது சீமான் மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டார்..இதிலிருந்து தெரியவில்லை? ஜெயாவின் மனநிலை?

    ReplyDelete
  37. செங்கோவி...எனக்கு இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் பண்றவங்களையே பிடிக்காது...வை கோ ..சீமான் இருவரையும் சேர்த்து...

    i will give him the benefit of doubt till proven guilty on personal things...

    கொஞ்ச நாளா நல்லா எழுதிறீங்க...நிறையவும் கூட...வாழ்த்துக்கள்..No pressure...

    ReplyDelete
  38. @ரியாஸ் அஹமது //good post...
    deep analysis ...
    congrats//

    நன்றி..நன்றி..நன்றி!

    ReplyDelete
  39. அப்போ ஈழத்துத்தாய், ஈழத்து அண்ணன் வரிசையில் ஈழத்து அண்ணி விஜயலட்சுமியும் இணைந்து கொள்வாரா?

    ReplyDelete
  40. @"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //சீமான் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு
    பொறுத்துதான் பாப்போமே பாஸ்// ஓகே, பாருங்க துஷ்யந்த்.

    ReplyDelete
  41. @thenali //இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.//

    ஆமாம் தெனாலி, இப்போது ஞாபகம் வருகிறது...அந்தப் பெண் இவர் மீதும் புகார் சொன்னார்.

    ReplyDelete
  42. @மதுரன் //ஆனால் சீமான் அரசியலுக்கு வரமுன்னமே ஆரம்பித்துவிட்டார். கெட்டிக்காரன்// அவர் ஒருவேளை சின்சியராகவே இருந்திருக்கலாம்..இப்போது பிரச்சினை வந்தபின் அம்மா காலடியில் விழுந்திருக்கலாம்.

    ReplyDelete
  43. @ஆர்.கே.சதீஷ்குமார் //விஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..// இந்த மாதிரி வழக்குகள் அப்படித் தான் ஆகும். நாம் கவலைப்படுவது வழக்கு பற்றியல்ல. சீமானின் நேர்மை/தைரியம் பற்றி!

    ReplyDelete
  44. @விக்கியுலகம் //நிழல் நிஜமாகிவிடுமோ என்ற கவலை போல தெரிகிறது!// ஆகாதுல்ல பாஸ்?

    ReplyDelete
  45. @Rathi //waiting for the verdict....// நாமும் அப்படியே..கருத்துக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  46. @மைந்தன் சிவா //சீமான்கிட்டே இத நான் எதிர்பார்க்கல பாஸ்!!// நான் இன்னும் எதிர்பார்த்தேன் சிவா.

    ReplyDelete
  47. @வைகை //ஜெயாவை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை அரசு சார்பில் வெளியிடும்போது சீமான் மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டார்..இதிலிருந்து தெரியவில்லை? ஜெயாவின் மனநிலை?// ஃபோட்டோவில்கூட ஒன்றாக இருக்க விரும்பாதவரை சீமான் தொழுவது ஏன்..ஏன்..ஏன்..

    ReplyDelete
  48. @Ayesha S //Attagasam... Good post// பாராட்டுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  49. @Reverie //கொஞ்ச நாளா நல்லா எழுதிறீங்க.// கொஞ்ச நாளாவா?....ரைட்டு.

    ReplyDelete
  50. இவர்மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.. பார்க்கலாம் என்ன தான் இவரின் உண்மையான முகம் என்று......

    ReplyDelete
  51. விஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..

    பொறுத்துப் பார்ப்போமே...

    ReplyDelete
  52. ஒரு முழுமையான.360 டிகிரி அலசல்!

    ReplyDelete
  53. விஜய லட்சுமி இருப்பாய் நெருப்பாய் ஹி ஹி கஷ்டம்.....

    ReplyDelete
  54. பாஸ்!விஜயலட்சுமி சீமானுடனான உறவைப் பொதுவுக்கு கொண்டுவந்தது மிகவும் தவறு.அதை விட தவறு பொதுவுக்கு கொண்டுவந்து அம்பலப்படுத்தி விட்டு தன்னை கல்யாணம் செய்து கொள் என்று ப்ளாக்மெயில் மாதிரியான செயல்கள்.சம்பிரதாய திருமணங்களே கூட விவாகரத்து நிலைக்குப் போகும் போது காதல் என்ற நிலையென்று வைத்துக்கொண்டால் கூட சீமானுக்கு விருப்பமில்லாத நிலையில் கட்டாயத்திருமணம் இல்லற வாழ்க்கைக்கு இனிமையாக இருக்காது...இதில் ஜெ தலையிட்டு விஜயலட்சுமிக்கு சாதகமாக நடந்துகொண்டால் கூட.மனைவி,இரண்டாம் மனைவி,துணைவி என்பவர்களே அரசியலில் வலம் வரும்போது சீமானின் தனி வாழ்க்கையையும்,அரசியல் களத்தையும் தனித்தனியே நோக்குவது நல்லது.

    ReplyDelete
  55. நீங்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கிறது.

    ReplyDelete
  56. "சீமான் ஜெ'வை சந்தித்த புகைப்படத்தை எந்த பத்திரிகையும் வெளியிட வேண்டாம்" என தமிழக அரசின் செய்திப்பிரிவே வேண்டுகோள் விடுத்ததாக ஜூவி செய்தி வெளியிட்டுள்ளது.

    ReplyDelete
  57. சாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.

    ReplyDelete
  58. //Carfire said...
    இவர்மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.. //

    உண்மை தான் நண்பரே.

    ReplyDelete
  59. // சே.குமார் said...
    பொறுத்துப் பார்ப்போமே...//

    எவ்வளவோ பொறுத்து விட்டோம்..இதையும் பொறுப்போம்.

    ReplyDelete
  60. //சென்னை பித்தன் said...
    ஒரு முழுமையான.360 டிகிரி அலசல்! //

    நன்றி சார்.

    ReplyDelete
  61. // FOOD said...
    கஷ்டந்தான். // மாட்டிக்காம கமெண்ட் போடுறது எப்படின்னு கத்துக்க உங்ககிட்ட டியூசனுக்கு வரலாமா சார்?

    ReplyDelete
  62. // MANO நாஞ்சில் மனோ said...
    விஜய லட்சுமி இருப்பாய் நெருப்பாய் ஹி ஹி// அண்ணன் ஸ்டைலே தனி.

    ReplyDelete
  63. ராஜ நடராஜன் said...
    //விஜயலட்சுமி சீமானுடனான உறவைப் பொதுவுக்கு கொண்டுவந்தது மிகவும் தவறு.//

    ’திருமணம் கிடையாது..ஒன்லி லிவ்விங் டுகெதர் மட்டும் தான்’ என்று சீமான் சொல்லி வாழ்ந்திருந்தால் தப்பில்லை தான். திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு, மூன்று வருடம் காதலித்த நபர் கைவிடும்போது ஒரு பெண் செய்ய வேண்டியது என்னன்னும் சொல்லுங்களேன்..

    //மனைவி,இரண்டாம் மனைவி,துணைவி என்பவர்களே அரசியலில் வலம் வரும்போது சீமானின் தனி வாழ்க்கையையும்,அரசியல் களத்தையும் தனித்தனியே நோக்குவது நல்லது.//

    இதில் பதிவில் சொன்ன அடிப்படை விஷயத்தைத் தவற விடுகிறீர்கள். பல தார தலைவர்கள் போன்றே சீமானும் ‘ஆமாம்..அப்படித்தான்’ என்று இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தால் பரவாயில்லை. அப்படி ஏதும் நடக்கவேயில்லை என்பதும் அளவுக்கு மீறிய சரண்டரும் தான் இப்போது பிரச்சினை.

    எங்கள் ஏரியாவில் திடீரென ஒரு ஜாதித் தலைவர் முளைத்து வருவார். உணர்ச்சி வேகமாகப் பேசுவார். நம் மக்களும் அவர் பின்னே திரள்வர். ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் திமுக/அதிமுகவிடம் அவர்களை அடகு வைத்துவிட்டு, எம்.எல்.ஏ சீட்/கல்லூரி தொடங்க பெர்மிசன்/பொட்டி - இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கிவிட்டு ஒதுங்கி விடுவர்.

    இப்போது சீமானும் ’இன நலனுக்காக’ தன்னை நம்பி வந்தோரை ஜெ.விடம் அடகு வைக்கிறாரா என்பதே பிரச்சினை.’ இது என் தனிப்பட்ட விஷயம்..இது தான் உண்மை’ என்று அவர் வெளிப்படையாக ஒத்துகொண்டால் நமக்கும் திருப்தியே.

    மேலும் ’மாற்று சக்தி’ என்று எண்ணி மதி மயங்கியோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கவேண்டும் என்பதும் இந்தப் பதிவின் நோக்கம்.

    ReplyDelete
  64. // DRபாலா said...
    நீங்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கிறது. // எனக்கே குழப்பம் தான் பாஸ்.

    ReplyDelete
  65. // அருள் said...
    "சீமான் ஜெ'வை சந்தித்த புகைப்படத்தை எந்த பத்திரிகையும் வெளியிட வேண்டாம்" என தமிழக அரசின் செய்திப்பிரிவே வேண்டுகோள் விடுத்ததாக ஜூவி செய்தி வெளியிட்டுள்ளது.//

    ஆமாம் சார்..அது தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

    ReplyDelete
  66. // mohan said...
    வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  67. // Amutha Krishna said...
    சாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.//

    இனி அவர்கள் ஒன்றாக வாழ முடியாது தான். அது நம் பிரச்சினையும் அல்ல.

    ReplyDelete
  68. நீங்க மறுமொழி என்ன சொன்னீங்கன்னு பார்க்க மீண்டும் வந்தேன்.நீங்க சீமானின் நிலையிலிருந்து பார்க்கிறீர்கள்.விஜயலட்சுமியின் நிலையிலிருந்தால் எது சரி என்று கருத்து சொன்னேன்.சீமானின் நிலையிலிருந்து பார்த்தால் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்திலும் சராசரியாக பொது உலகில் நடமாடும் ஒருவன் எப்படி நடந்துகொள்வானோ அதே மாதிரிதான் சீமானும் நடந்து கொண்டுள்ளார்.

    பில்கிளிண்டன்,லெவன்ஸ்கி நினைப்பு வந்து போகிறது:)

    ReplyDelete
  69. //// Amutha Krishna said...
    சாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.//

    இனி அவர்கள் ஒன்றாக வாழ முடியாது தான். அது நம் பிரச்சினையும் அல்ல. //

    கடைய விட்டு போகலாம்ன்னு வெளியேறும் வினாடியில் கண்ணில் பட்டது.

    இது சறுக்கலான வாதம் பாஸ்!பிரச்சினையின் மையப்புள்ளியே இதுதானே!ஒன்றாக வாழ முடியாத பட்சத்தில் அப்ப விஜயலட்சுமி செய்வது ப்ளாக்மெயில்தானே?

    ReplyDelete
  70. நண்பா தலைப்பை பார்த்ததும் ஏதோ குண்டக்க மண்டக்க பதிவோன்னு வந்தேன். சே நம்ம புத்தி ஏந்தான் இப்படி போகுதோ?

    ReplyDelete
  71. வரலாறு ...மாற்ற நினைத்த மாற்று சக்தி.. அம்பேல் தானுங்கோ, சீமானின் மோகம் நு நானே ஒரு கட்டுரை எழுதிட்டு இருக்கேன் நண்பரே விரைவில் அனுப்புகின்றேன்,
    நன்றி சித்ரவேல் artsvelu@gmail.com
    http://chithiran-vel.blogspot.com/

    ReplyDelete
  72. விஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்? திரு ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  73. // ராஜ நடராஜன் said...

    இது சறுக்கலான வாதம் பாஸ்!பிரச்சினையின் மையப்புள்ளியே இதுதானே!ஒன்றாக வாழ முடியாத பட்சத்தில் அப்ப விஜயலட்சுமி செய்வது ப்ளாக்மெயில்தானே? //

    விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையிலான பிரச்சினையின் மையப்புள்ளி அது தான். ஆனால் நம் பதிவின் மையப்புள்ளி அது அல்ல. விஜயலட்சுமியின் முழுதாக நம்பத்தக்கவர் அல்ல எனும்போது அந்த விஷயத்தில் ஏதேனும் நிலைப்பாடு எடுப்பது தவறாகவே முடியும்.

    ‘எப்படியும் அவருடன் வாழ வேண்டும்’ என்பதோ அல்லது ‘இவரை நம்பி நாம்தான் கெட்டோம், மற்றவராவது தப்பிக்கட்டும்’ என்பதோ அல்லது பணம் பறிக்கும் செய்கையோ எதுவாக இருந்தாலும் அதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அவர்கள் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பது பற்றிய கவலையும் நமக்கு இல்லை. நமது கவனம் சீமான் இதனை தனிப்பட்ட பிரச்சினையாக முடித்துக்கொள்ளாமல், இயக்கத்தை அடகு வைக்கிறாரா, தொண்டர்களின் நம்பிக்கையை சிதைக்கிறாரா என்பதே.

    ReplyDelete
  74. //பாலா said...
    நண்பா தலைப்பை பார்த்ததும் ஏதோ குண்டக்க மண்டக்க பதிவோன்னு வந்தேன். சே நம்ம புத்தி ஏந்தான் இப்படி போகுதோ?//

    நானா யோசிச்சேன்னு நினைச்சீங்களா?

    ReplyDelete
  75. //சித்ரவேல் - சித்திரன் said...
    வரலாறு ...மாற்ற நினைத்த மாற்று சக்தி.. அம்பேல் தானுங்கோ, சீமானின் மோகம் நு நானே ஒரு கட்டுரை எழுதிட்டு இருக்கேன்//

    எழுதிவிட்டுச் சொல்லுங்கள் நண்பரே.

    ReplyDelete
  76. // Amudhavan said...
    விஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்? திரு ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.//

    அவர் எப்பவும் தெளிவாத் தான் இருப்பார் சார்..இன்னைக்கு ஏனோ விஜயலட்சுமியின் பாயிண்ட் ஆஃப் வியூவிலேயே நிற்கிறார். அதைப் பற்றி நாம் விவாதிக்க ஒன்றும் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    ReplyDelete
  77. >>குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.

    அடேங்கப்பா.. அண்னன் சினிமாவுக்கெ வசனம் எழுதப்போலாம்.. கலக்கல் லைன்ஸ்

    ReplyDelete
  78. செங்கோவி...!

    இனியவளே, தம்பி படங்களை எடுத்த சீமானை எனக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பின்னால் ஈழத்தமிழர்களுக்கான போராடிய சீமானையும் பிடித்திருந்தது. ஆனால், அதற்குப் பின்னால் ஈழத்தமிழர்களை வைத்தே அரசியல் செய்ய முயல்கின்ற சீமானைத்தான் எனக்கு பிடிக்கவேயில்லை. தன்னை தலைவனாக முன்னிறுத்துகிற போது, பலருக்கு இயல்பாகவே அதிகார ஆசை வந்துவிடுகிறது. இதற்கு சீமானும் விதிவிலக்கல்ல.

    மிக எளிய நடையில் அரசியல் பேசுகிறீர்கள் பாஸ். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. அண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்......

    ReplyDelete
  80. //சி.பி.செந்தில்குமார் said...
    அடேங்கப்பா.. அண்னன் சினிமாவுக்கெ வசனம் எழுதப்போலாம்.. கலக்கல் லைன்ஸ்
    //

    சிபி, இன்னைக்குக் குசும்பு முடிஞ்சதா..போலாம் ரைட்!

    ReplyDelete
  81. //மருதமூரான். said...
    மிக எளிய நடையில் அரசியல் பேசுகிறீர்கள் பாஸ். வாழ்த்துக்கள். // நன்றி..நன்றி.

    ReplyDelete
  82. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்..//

    எப்படிண்ணே இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்போட இருக்கீங்க?

    ReplyDelete
  83. ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்..//

    எப்படிண்ணே இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்போட இருக்கீங்க?
    ///////

    விஜயலட்சுமிய ரொம்ப புடிக்கும்ணே, ஆனா இந்தாளு முந்திக்கிட்டாப்புல..... சரி விடுங்க.....!

    ReplyDelete
  84. //Amudhavan said... [Reply]

    விஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்? திரு ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.
    //

    அமுதவன் சார்!இருவரின் தனிப்பட்ட விவகாரம் பிரச்சினையில்லையென்றால் சீமானின் சமூகம் சார்ந்த பிரச்சினையென்றாலும் சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் என்ன குற்றம் இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை.பொடாவில் போன வை.கோவே ஜெ யின் ஆதரவு எடுக்கும் பொழுது தற்போதைய ஜெ யின் நிலையில் சீமான் பாராட்டு நிலை தப்பே இல்லையென்றே நினைக்கின்றேன்.ஜெ தவிர்த்த அரசியல் நிலை நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் கருணாநிதியை விட ஜெயலலிதாவின் தற்போதைய மாற்றங்களை மாற்றாள் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என அண்ணா புது வசனம் சொல்லலாம்தானே:)டெல்லிக்கு வெட்டிக்கடிதம் எழுதி தனது தமிழ் உணர்வைக் காட்டுவதை விட அகதிமுகாம்களில் வாழ்பவர்களுக்கும் ஓய்வூதியம் என சிறு தொகையாவது அளிப்பது சிறப்பல்லவா?இந்த மாறுதலுக்கு சீமான் ஜெயை பாராட்டுவதில் என்ன தவறு சொல்ல முடியும்?இங்கே காந்தியே விமர்சனத்துக்குள்ளாகும் போது சீமானுக்கெல்லாம் புனித பிம்பம் காண்பது எனக்கு சரியாகப்படவில்லை.பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி!அதென்ன விஜயலட்சுமியின் எழுச்சி:)

    ReplyDelete
  85. @ராஜ நடராஜன்

    ////பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி!அதென்ன விஜயலட்சுமியின் எழுச்சி:)///////

    உண்மை தான்..... இது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது..

    ReplyDelete
  86. ராஜ நடராஜன் said...

    //சீமானின் சமூகம் சார்ந்த பிரச்சினையென்றாலும் சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் என்ன குற்றம் இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை.//

    திமுகவே நேற்று ஈழப் படுகொலைக்கு நியாயம் கேட்கும்போது, சீமான் போன்றோரின் ஈழ ஆதரவு நிலைப்பாடு குற்றம் என்று யாரும் சொல்ல முடியாது, நாமும் அப்படிச் சொல்லவில்லை. ஈழப் பிரச்சினைக்காகவும் இன உணர்வினாலும் சீமானின் பின்னால் திரண்ட கூட்டத்தை தனது சொந்தப் பிரச்சினையைத் தீர்க்க காவு கொடுக்கிறாரா? சீமானே மாற்றுசக்தி என்று எண்ணியோர் ஜெ.துதியை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதே நம் வினா.

    இதில் வைகோ-திமுக என எல்லோரையும் இழுத்து சீமானின் நடவடிக்கையை நியாயப்படுத்துவது முனைவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்த வாதத்தை திமுக/மதிமுககாரனிடம் வைக்கலாம். நம்மிடையே இந்த ஒப்பீடுக்கான தேவை என்ன சார்?


    //தற்போதைய ஜெ யின் நிலையில் சீமான் பாராட்டு நிலை தப்பே இல்லையென்றே நினைக்கின்றேன்.// பாராட்ட ஒரு அறிக்கை போதாதா? ஒரு பாராட்டு விழாவும் நடத்தி, அது போதாதென்று நேரிலும் சந்தித்து ‘நன்றி’ கூறும் அளவிற்கு சீமானுக்கு என்ன பிரச்சினை?

    //பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி!அதென்ன விஜயலட்சுமியின் எழுச்சி:) //

    மணிவண்ணனின் மகன் மீது ஒரு பெண் ஏறக்குறைய இதே போன்ற புகாரினை, இதே போன்று புகைப்படத்துடன் கூறியபோது, அந்தப் பெண்ணைக் கடுமையாக மிரட்டி ஒடுக்கியவர் சீமான். அப்படிப்பட்டவர் மீதே ஒரு பெண் புகார் கூறுவது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குப் புரியவில்லையா? ஆளும் அரசும் ஆதரவாக இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குறியதே. தெளிவாக மதுரையில் அவர் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது, என்னை ஃபோன் போட்டு வரவழைத்து ஹோட்டலில் வைத்து குடித்தனம் நடத்தினார்..போலீசார் போய் விசாரித்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் விஜயலட்சுமி. இதை எதுகை மோனையுடன் எழுச்சி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? வேறு ஏதேனும் நல்ல வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்..மாற்றிக் கொள்கிறேன். அதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    ReplyDelete
  87. // Carfire said...

    ////பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி!அதென்ன விஜயலட்சுமியின் எழுச்சி:)///////

    உண்மை தான்..... இது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது..//

    நீங்களும் ஏன்யா இப்படிப் பேசுறீங்க..அப்படி நெருடலாக இருந்தால் அதற்கு எனது முந்தைய பதிவுகள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். அப்படியாயின் அது என் தவறே. ..வேற ஏதாவது எதிர்பார்த்து ஏமாந்திருந்தால்..சாரி பாஸ்..எனக்கு நிஜமாகவே விஜயலட்சுமியைப் பிடிக்காதுன்னும் அது ஏன்னும் உங்களுக்குத் தெரியும் தானே.

    ReplyDelete
  88. //மாலதி said...
    mmm.........//

    ரைட்டு!

    ReplyDelete
  89. விஜயலட்சுமி வெளியிட்ட போட்டோ கிராபிக்ஸ் தான். சீமானின் வலது கை தெளிவாக தெரியும்பொழுது இடது கை மசமசவென்று உள்ளது. சீமான் முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் விஜயலட்சுமி முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

    ReplyDelete
  90. //rpguru said... [Reply]
    விஜயலட்சுமி வெளியிட்ட போட்டோ கிராபிக்ஸ் தான். சீமானின் வலது கை தெளிவாக தெரியும்பொழுது இடது கை மசமசவென்று உள்ளது. சீமான் முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் விஜயலட்சுமி முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் வித்தியாசம் உள்ளது.//

    ஆமாம் பாஸ்...அந்த ஃபோட்டோல சீமான் கருப்ப்பா இருக்காரு..விஜி செவப்ப்பா இருக்கு..ஒரே ஃபோட்டோ..ஒரே கேமரா..ஆனா ஒரு ஆளு கருப்பா தெரியுது, இன்னொரு ஆளு செவப்பா தெரியுது..இதுல இருந்தே தெரியலை அந்த ஃபோட்டோ கிராஃபிக்ஸ் தான்னு!

    விஜி இன்னொரு ஃபோட்டோவும் ரிலீஸ் பண்ணுச்சு..அதுல விஜி அம்மா சீமானுக்கு கேக் ஊட்டி விடும்..நம்ம ஆளுகளுக்குப் பயந்து தான்யா அந்த ஃபோட்டோவைப் போடலை..அதைப் பார்த்தா இன்னும் என்னெல்லாம் சொல்வீகளோ..நினைக்கவே பயங்கரமா இருக்கே..

    நானும் எவ்ளோ நேரம் தான் சீரியஸா இருக்கிற மாதிரியே நடிக்கிறது?

    ReplyDelete
  91. @கவி அழகன் //சுப்பர் போஸ்// சுப்பர் கமெண்ட்...சூப்பர் போஸா? எதுய்யா? எனக்கே தெரியாம ஏதாவது அப்லோடு ஆயிடுச்சா?

    ReplyDelete
  92. finale u trying to say semaan bad guy. (ok )i am good person because .i am write a blog every day. eating food, sleeping with my wife only. this is things really help Tamil.i think u not accept the semaan because he is christian .

    ReplyDelete
  93. @firewolf எனக்கு முதலில் புரியாத விஷயம், ஒரு தமிழ் பதிவர் ஏன் இப்படி கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுகிறார் என்பது..சரி, எனக்குப் புரிந்த அளவில் பதில் சொல்கிறேன்:

    ////finale u trying to say semaan bad guy. (ok )// டபுள் ஓகே.

    //i am good person because .i am write a blog every day. eating food, sleeping with my wife only. this is things really help Tamil.// பதிவரான நீங்களும் நானும் மற்ர எல்லாத் தமிழரும் இப்படி இருந்துட்டா, தமிழர்களுக்கு அதுவே பேருதவி இல்லையா?...இல்லே மனைவியல்லாத பெண்ணுடன் படுத்தால் தமிழ்/தமிழர்களுக்கு உதவி பண்ணும்னு அண்ணன்மார் யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?

    //i think u not accept the semaan because he is christian .// சீமான் ஒரு கிறிஸ்துவர் என்று எனக்குத் தெரியாது நண்பரே..சீமான் பகுத்தறிவு வாதம் பேசியபோதெல்லாம் ‘சைமன்’ என்று சொல்லப்பட்டார். பதிலுக்கு சீமான் அதை மறுத்து ‘தான் ஒரு கிறிஸ்துவன் இல்லை’ என்றே சொல்லி வந்தார்..சீமானின் தம்பியான நீங்களே முன்வந்து ‘அவர் ஒரு கிறிஸ்துவர்’ என்று சொல்லும்போது, அது உண்மையாகவே இருக்கக்கூடும்..அப்படியென்றால் அந்த விஷயத்திலும் சீமான் பொய் தான் பேசினாரா? அடக்கடவுளே..!

    யாரையாவது விமர்சித்தால் அவரது ஜாதி,மதத்துக்காரர்கள் இதே வாதத்தையே முன்வைக்கிறீர்கள்..கேட்டுக் கேட்டு சலித்துவிட்டது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாஸ்.

    தயவுசெய்து தமிழில் பின்னூட்டம் போட முயற்சி செய்யுங்களேன்.

    ReplyDelete
  94. அவரது வீறு கொண்ட பேச்சில் உண்மை இருந்தது... இதெல்லாம் ஏதோ சூழ்ச்சி வலை போல் தோன்றுகிறது...

    ReplyDelete
  95. \\தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல்.\\ தலைவனாகும் தகுதிகள் ஒருத்தருக்கு இருந்தால், எவ்வளவு அமுக்கினாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தலைவனாவார் செங்கோவி. இதற்க்கு நல்ல உதாரணம் எம்ஜியார், கருணாநிதி என்னென்னவோ குள்ளநரி வேலைகளையெல்லாம் செய்து பார்த்தார், அவர் தலைவராவதை தடுக்க முடிந்ததா? இவர்கள் அமுங்கிப் போகிறார்கள் என்றால் தலைவனாகும் தகுதி அவர்களிடத்தில் இல்லை என்றுதான் அர்த்தம். [எனக்கென்னவோ இந்த சீமான் ஒரு ஜெனியூன் ஆள் மாதிரி தெரியவில்லை, சும்மா சீன் போடுற மாதிரிதான் அவரோட பேச்சும் நடவடிக்கையும் இருக்கு.]

    ReplyDelete
  96. அருமையான கண்ணோட்டம்!

    ReplyDelete
  97. You are right Senkovi.
    Watch this....
    http://www.youtube.com/watch?v=z6vG7_OkjzQ

    ஆனா ஒன்னு மட்டும் இன்னும் மாரவில்லைன்னு நினைக்கிறேன் சென்கோவி. அவரு எண்ண சொன்ன;உம பய மக்கா கைதட்டிகிட்டு இருகான்கள்.

    ReplyDelete
  98. You are right Senkovi.
    Watch this....
    http://www.youtube.com/watch?v=z6vG7_OkjzQ

    ஆனா ஒன்னு மட்டும் இன்னும் மாரவில்லைன்னு நினைக்கிறேன் சென்கோவி. அவரு எண்ண சொன்ன;உம பய மக்கா கைதட்டிகிட்டு இருகான்கள்.

    ReplyDelete
  99. நீங்கள் பதிவு பண்ணின புகை படத்தில் இருந்து, சீமான் அந்த பெண் உடன் குடும்பம் நடத்தினர் என்று எங்கு அதரம் இருக்கிறது.... அந்த புகைபடத்தை பர்தேலே தெரிகிறது.... முன்பாக திட்டம் இட்டு எடுக்கப்பட்ட புகழ் படம் என்று, மட்டும் இல்லாமல் அந்த அறை இல் 4 மனிதர்கள் இருக்கிறார்கள்..

    ReplyDelete
  100. @Reverie
    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போராடுறவங்க எல்லாரும் முடிகிட்டு போய்றன்னுமா எல்லாரும் என்ன சொல்லுங்கள் முதலில்?????

    ReplyDelete
  101. இந்த உலகில் தவறு செய்யாதவன் என்று எவரும் இல்லை???? ////பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை.////// ஈழ மக்களுகாக சீமான் அவர்கள் 5 முறை கைது செய்ய பட்டு சிறை இல் அடைக்க பட்டவர்..... இப்படி பட்ட போராளிகளை இவளவு தரம் தாழ்த்தி பதிவு செய்ய வேண்டாம் முதலில்.....

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.