Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை

மிழ்சினிமாவில் தற்போதைய ஹாட் டாபிக்காக ஆகியிருப்பது எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றி தான். ஒரு நல்ல படைப்பு கொண்டாடப்படும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இந்தப் படம் அடிப்படையில் விபத்து பற்றிய விழிப்புணர்வுப் படமாக இருப்பினும், தற்போது டிவிடி பார்த்து மட்டுமே ‘நல்ல’ படம் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும் விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இது வந்துள்ளது.
எங்கேயும், எப்போதும் நம்மிடையே கதைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அதைப் பார்க்கத் தேவையெல்லாம் நம் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதலும், நல்ல சினிமா ரசனையுமே. இதற்கு முன் நல்ல படங்களாகக் கொண்டாடப்பட்ட சேது, பருத்துவீரன், சுப்ரமண்யபுரம் வரிசையில் இந்தப் படமும் சேர்வதற்குக் காரணம், நம்மிடம் இருந்தே நமக்கான கதையை இயக்குநர் சரவணன் உருவாக்கியிருப்பது தான்.

ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் பளிச்சிடுகிறது. சென்னைக்கு புதிதாக வரும் பெண்ணின் சந்தேகக் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து மெக்கானிகல் லேத்தில் வேலை பார்ப்போரின் பேச்சுவழக்கு, கம்யூனிஸ்ட்களின் பொதுக்கூட்டம் என இந்தப் படத்தில் காட்டப்படும் அனைத்துக்காட்சிகளும் இது சினிமா அல்ல, வாழ்க்கை என்ற எண்ணத்தை நமக்குள் எளிதில் ஏற்படுத்திவிடுகின்றன.

நான்கு உலகப்பட டிவிடிக்களைப் பார்த்து காட்சிகளை சுட்டுவிட்டு, மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயர் எடுப்பவர்களும், திருட்டைச் சுட்டிக்காட்டினால் இன்ஸ்பிரேஷன் என்று பம்முகிறவர்களும் பார்க்க வேண்டிய படம் எங்கேயும் எப்போதும்.
பேய் வேகத்தில் பறக்கும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யாத ஆட்கள் இருந்துவிட முடியாது. அந்த ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளாவதை செய்தியாக பார்க்காதவர்களும்/படிக்காதவர்களும் இல்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய அட்வைஸான ‘அதி வேகம் ஆபத்து’ என்ற செய்தியை திரைப்படமாக்கவே பெரும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலை சரவணனுக்குத் தந்திருப்பது நீட்டான திரைக்கதை.

சமீபத்தில் வந்தான் வென்றான் படத்தின் காதல் காட்சிகளைப் பார்த்தபோது, பெரும் சலிப்பே வந்தது. அடுத்து வரும் காதல் காட்சிகள் என்ன, வசனம் என்ன என்பதை எளிதில் யூகிக்க முடிந்தது. தமிழ்சினிமா காதலை எல்லா விதத்திலும் காட்டி ஓய்ந்துபோய்விட்டதோ, இனி வித்தியாசமாய்க் காட்ட ஏதுமில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு ஒன்றல்ல இரண்டு பதில்களை இந்தப் படம் சொல்லியுள்ளது.

சென்னை வரும் அப்பாவிப் பெண்ணான அனன்யாவிற்கு வரும் காதல் - திருச்சியில் வாழும் அதிரடிப் பெண்ணான அஞ்சலிக்கு வரும் காதல் என இரண்டு அழகான காதல்கள், பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் காட்டப்படுகின்றன. இதில் நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம், வழக்கமான காதல் வசனங்கள் ஒன்றுகூட இதில் இல்லை.  ‘உனக்காக உயிரைக் கொடுப்பேன்...நீயின்றி நானில்லை...என்னைத் தேடினேன், உனக்குள் கண்டுகொண்டேன்’ போன்ற அச்சுப்பிச்சு டயலாக்களுக்கு இங்கே இடம் இல்லை. அவ்வளவு ஏன், இந்தப் படத்தில் காதல் வசனங்களே இல்லை எனலாம். ஆனால் காதல் மட்டும் வலுவாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பலமே அது தான். திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டு, அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை இது. வசனங்களை நாடாமல், கேரக்டர்களின் அசைவுகளை மட்டுமே வைத்து, காதல் இங்கே சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தை கொஞ்சமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்வது வசனங்கள் தான். மெல்லிய நகைச்சுவை, எதிர்பாராமல் சரக்கென்று திரும்பும் டயலாக்ஸ், அது கொடுக்கும் ஆச்சரியம் என பல நல்ல விஷயங்களை இந்தப் படம் உள்ளடக்கியுள்ளது.

அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம். பேசும் கண்கள், தெனாவட்டான பாவனை, பட் பட்டென்று வந்து விழும் வார்த்தைகள் என கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஹீரோயின் கேரக்டர். சமீபகாலமாக கருங்காலி, மங்காத்தா என தப்பான படம்/கேரக்டரில் வீணாக்கப்பட்ட அஞ்சலியின் திறமை, இதில் முழுதும் வெளிப்படுகிறது. அங்காடித் தெரு பார்த்தபோது, ‘இந்தப் பெண்ணிற்கு இந்த ஒரு படமே போதும், அவர் பெயர் சொல்ல’ என்று தோன்றியது. மீண்டும் அதே உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் வருகிறது. இந்தப் படத்தில் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார் இந்த நல்ல நடிகை.
முதல் காட்சியிலேயே இரு பேருந்துகளும் விபத்துக்குள்ளாவதை தெளிவாகக் காட்டியதால், அடிமனதில் ஒரு பதைபதைப்பு இருந்துகொண்டாயிருக்கிறது. ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும் தான். ஒரு உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகின்றது. இரு பேருந்துகளிலும் வரும் பயணிகளின் வாழ்க்கை படத்திற்குள் குறும்படமாக காட்டப்படுகிறது. 

அந்த கேரக்டரை நாம் உள்வாங்கிய நொடியில், விபத்து நடக்கும் காலத்திற்கு திரைக்கதை வந்து சிதைந்த கனவைக் காட்டுகிறது. மீண்டும் ஃப்ளாஷ்பேக் போய் அடுத்த கனவு, அடுத்த உயிர் என இயக்குநர் சரவணன், தான் ஒரு முக்கியமான படைப்பாளி என்று இந்த ஒரு படத்திலேயே நிரூபித்துள்ளார். வழக்கமாக இந்த மாதிரி விழிப்புணர்சுப் படங்களில் மெசேஜ் கடைசியிலேயே சொல்லப்படும். நாம் எழுந்து ஓடவும் அது வசதியாக இருக்கும். ஆனால் இதில் அந்த உத்தியை மாற்றி, நம் மனதில் அந்த மெசேஜ் பதியும் வண்ணம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நல்ல கதையை படமாக்க முன்வந்த ஏ.ஆர்.முருகதாஸ் -ஃபாக்ஸ் நிறுவனத்திற்கு நிச்சயம் நாம் நன்றி சொல்ல வேண்டும். 

கந்தசாமி படத்தின் தோல்விக்கும் மிஷ்கின் ‘அவரா யோசிச்சு’ எடுத்த அபத்தமான நந்தலாலாவின் தோல்விக்கும் பதிவர்களின் விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்தப்பட்டோரால் குற்றம் சாட்டப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு நம் சக பதிவர்கள் கொடுத்துள்ள ஆதரவையும், உருவாக்கியுள்ள நல்ல மவுத் டாக்கையும் பார்த்தாவது, பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிஸ்கி : இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்............இது திரை விமர்சனம் அல்ல! நல்ல படத்தைப் பற்றி என் வலைப்பூ வாசகர்களுக்கான ஒரு அறிமுகமே இந்தப் பதிவு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

92 comments:

 1. எப்பிடியோ இங்கும் இப்படியான சின்ன பட்ஜட் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை நானும் இந்த படத்தை பார்கதான்போகிறேன்.. படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மாப்பிள..

  ReplyDelete
 2. போட்டோக்களில் அஞ்சலி அழகாய் இருக்கிறாங்கோ.. ஹி ஹி

  ReplyDelete
 3. படத்தை பற்றிய குறிப்புகள் அருமை. அஞ்சலி படங்கள் சூப்பர்

  ReplyDelete
 4. நல்ல படம் என்று ஆவலைத்தூண்டிவிட்டீர்கள் முயற்ச்சிப்போம் படம் பார்க்க!

  ReplyDelete
 5. ஹான்சிஹா போய் இப்போது அஞ்சலிக்கு சங்கம் வைப்போம் என்று சொல்லுறீங்களா ஐயா!

  ReplyDelete
 6. இந்தமாதிரிப் படங்கள் வெற்றியீட்டினால்தான் பஞ்சு டயலாக் ஹீரோக்கள் பம்முவார்கள் !

  ReplyDelete
 7. இந்தமாதிரிப் படங்கள் வெற்றியீட்டினால்தான் பஞ்சு டயலாக் ஹீரோக்கள் பம்முவார்கள் !

  ReplyDelete
 8. அருமையான அலசல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!...

  ReplyDelete
 9. விளக்கமா சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும் அண்ணே! உங்க கருத்துக்கள் அருமை! எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது!

  ReplyDelete
 10. // பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.//

  அற்புதமான பாயின்ட். பதிவர்கள் நல்ல படங்களுக்கு என்றுமே ஒருமித்த ஆதரவை தந்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்று, மைதானம் போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

  ReplyDelete
 11. //இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்..........//
  பட், உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!

  ReplyDelete
 12. இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்............இது திரை விமர்சனம் அல்ல! நல்ல படத்தைப் பற்றி என் வலைப்பூ வாசகர்களுக்கான ஒரு அறிமுகமே இந்தப் பதிவு.
  //

  இது நல்லாயிருக்கே!

  ReplyDelete
 13. நன்றி அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி மேஞ்சு கொடுத்திருக்கீங்க.நீங்க காசில்லாமல் பார்த்தா என்ன.அதுதான் ஒரு பத்து பேர பார்க்க தூண்டி விட்டுட்டீங்கள.

  ReplyDelete
 14. இனிய காலை வணக்கம் பாஸ்,

  வாழ்க்கையினைப் பற்றி அழகுற எடுத்துரைக்கும் பட விமர்சனத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  நீண்ட காலத்தின் பின்னர் காதல் பற்றிய புதிய பரிணாமத்தைத் தமிழ் சினிமாவில் தந்திருக்கும் இப் படத்தினை நிச்சயம் பார்க்க வேண்டும்,

  இம் முறை விமர்சனத்தைக் கொஞ்சம் ஆராய்ச்சித் தகவல்களோடு இணைத்துத் தந்திருக்கிறீங்க.

  வித்தியாசமான பாணியில் விமர்சனமும் கலக்கலா இருக்கிறது.

  விமர்சனப் பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 15. ஆமாம் நண்பரே படம் பார்த்தேன் ,அதன் பாதிப்புகள் நீண்ட நேரம் மனதில் .

  ஒரு வண்டியை மற்றொரு வண்டி முந்தும் பொழுது அந்த இரண்டையும் தாண்டும் கொடுரம் நிஜத்தில் என் கண் முன்னாடியே நடந்தது .

  மயிரிழையில் ஒரு கார்காரன் தப்பித்தான் ஒரு பேருந்திடமிருந்து ,பிறகு காரை விட்டு இறங்கி சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் விதிர்த்து போய் நின்றான் .

  ReplyDelete
 16. ஓகே பார்த்துடுவோம் :)
  (/\)

  ReplyDelete
 17. கவனக் குறைவால் தனக்கு மட்டுமில்லாமல் எதிரில் கவனமாக வருபவரும் சேர்ந்தல்லவா பாதிக்க படுகிறார்கள் .

  எத்தனை முறை சொன்னாலும் கழுத்தை வளைத்து தொழில் அலைபேசியை வைத்து கொண்டு தான் வாகனம் ஓட்டுகிறார்கள்.

  என்ன செய்வது.

  ReplyDelete
 18. மற்றொரு சம்பவமும் நடந்தது

  பைக்கில் வந்தவன் அலைபேசியில் பேசிக்கொண்டே வந்து நின்று கொண்டிருந்த கம்பி லாரியில் மோதி கம்பி உள்ளே சொருகி விட்டது.

  இது பரவாயில்லை அவனுக்கு மட்டும் பாதிப்பு ,வேறு எங்காவது மோதும் பொழுது மோதப்படுபவரும் பாதிக்க படுகிறார் எனும்பொழுது வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 19. இத்தனை கருத்து எதற்கு என்று கேட்கிறீங்களா அந்த படம் பார்த்த பிறகு என் மனதில் நிறைய நேரம் அதன் பாதிப்பு இருந்தது

  ReplyDelete
 20. நீங்கள் சொன்னது போல் அந்த படத்தில் யாதார்த்தம் அதிகம்.
  படம் நல்லா இருந்தது மற்றபடி இப்பொழுதெல்லாம் சாமி வேசம் போடுபவர் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.அந்த சீன நெருடல் .

  விபத்து நிகழ்ச்சி தத்ரூபம் ,இயக்குனருக்கு பாராட்டு.

  ReplyDelete
 21. வருகிறேன் நண்பரே

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி....உங்கள் விமர்சனத்துக்கு நன்றி!

  ReplyDelete
 24. //நான்கு உலகப்பட டிவிடிக்களைப் பார்த்து காட்சிகளை சுட்டுவிட்டு, மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயர் எடுப்பவர்களும், திருட்டைச் சுட்டிக்காட்டினால் இன்ஸ்பிரேஷன் என்று பம்முகிறவர்களும் பார்க்க வேண்டிய படம் எங்கேயும் எப்போதும்//

  HA HA HA SUPER!!!! :-)

  ReplyDelete
 25. /////எங்கேயும், எப்போதும் நம்மிடையே கதைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அதைப் பார்க்கத் தேவையெல்லாம் நம் சமூகம் பற்றிய அடிப்படைப் புரிதலும், நல்ல சினிமா ரசனையுமே. இதற்கு முன் நல்ல படங்களாகக் கொண்டாடப்பட்ட சேது, பருத்துவீரன், சுப்ரமண்யபுரம் வரிசையில் இந்தப் படமும் சேர்வதற்குக் காரணம், நம்மிடம் இருந்தே நமக்கான கதையை இயக்குநர் சரவணன் உருவாக்கியிருப்பது தான்.////

  செங்கோவி....! நல்ல படங்களை கொண்டாடுவதற்கு நீங்கள் கூறிய இந்தக்காரணங்களே போதுமானது.

  எங்கேயும் எப்போதும் நானும் பார்க்கவில்லை. சீக்கிரம் பார்க்க வேண்டும். ஏனெனில், உங்களின் சினிமா அனுபவம் பல நேரங்களின் என்னுடன் ஒத்தே போயிருக்கின்றது.

  ReplyDelete
 26. //காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்.///பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !!!!

  ReplyDelete
 27. படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை..

  அதுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட...

  ReplyDelete
 28. //ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும் தான். ஒரு உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகின்றது//

  படத்தோட மையக்கருவை அழகா இரண்டுவரிகளில் விளக்கிவிட்டீர்கள். இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. விரைவில் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். பாராட்டுக்கள்

  ReplyDelete
 29. ஒரு பாடல் கூட டூயட் என்று சொல்லி வெளிநாட்டுக்கு போய் தயாரிப்பாளருக்கு மொய் வைக்க வில்லை...

  அத்தனை பாட்டுக்களும் மாண்டேஜ் களால் அழகாக செதுக்கியிருக்கிறார்....

  ReplyDelete
 30. நல்லாச்சொல்லி இருக்கீங்க பாஸ்..உண்மையில் இப்படியான படங்கல் தமிழ் சினிமாவில் என்றும் நினைவு கூறப்படவேண்டியவை....

  அஞ்சலி அக்கா உண்மையில்.திறமையான நடிகை...அவரது நடிப்பை..மங்காத்தா,கருங்காலி போன்ற படங்களில் பயன் படுத்தவில்லை....வெறும்னே படுக்கை அறைக்காட்டிகளை காட்டிக்கொண்டு இருந்தார்கள்..நான் லொள்ளுவிட்டாலும்..அவரது ரசிகனாக எனக்கு அவரது நடிப்பை பயன் படுத்தவில்லை என்ற ஆதங்கம்..இப்ப இந்தப்படத்தை கண்டிப்பாக பார்கனும்...

  ReplyDelete
 31. படம் சூப்பர்.
  உங்கள் விமர்சனதுக்கு நன்றி.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 32. கம்பியூட்டர் தரவிறக்க விமர்சன பதிவுக்கு நன்றி ஹிஹி!

  ReplyDelete
 33. படத்தைப்பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது விமர்சனம்.

  ReplyDelete
 34. படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்..

  ReplyDelete
 35. இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தரவிறக்கியே பார்த்தேன்.//// நான் பார்த்ததும் அப்படித் தான்! நீங்கள் கூறியது போல் ஏகப்பட்ட செய்திகள்(அட்வைஸ்)படத்தில் கூறப்படுகின்றது!வன்முறை இல்லாத படம் கூட!

  ReplyDelete
 36. காட்டான் சமூகத்துக்கு,பிரீ பொக்ஸ்(FREE BOX) இல் படம் இருக்கிறது,பார்த்து மகிழவும்!

  ReplyDelete
 37. இந்தப் படம் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. "நெட்"டில் தரவிறக்கியே பார்த்தேன். காசு கொடுத்து பார்க்காதவருக்கு ஒரு படத்தை விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று நான் நம்புவதால்.//// "நெட்"டுக்கு பணம் கட்டுகிறீர்கள் தானே?அப்புறம் எப்படி,இப்படிச் சொல்லலாம்?இப்போது என்ன தான் இலவசமாகக் கிடைக்கிறது,சொல்லுங்கள்?

  ReplyDelete
 38. நல்லாருக்கு!விரசமில்லாத,பொண்டு புள்ளைங்களோட பாக்கக் கூடிய படம்!பாட்டுங்களும் வித்தியாசமா இருக்குது!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 39. \\அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம்.\\ அடப் பாவிங்களா, அந்தம்மாவுக்கு ஓடினதே இந்த இரண்டு படமாத்தான் இருக்கும், ஆயிரம் படம் நடிச்சிட்ட மாதிரி பில்டப்பா...

  ReplyDelete
 40.  Yoga.s.FR said...
  காட்டான் சமூகத்துக்கு,பிரீ பொக்ஸ்(FREE BOX) இல் படம் இருக்கிறது,பார்த்து மகிழவும்!

  September 23, 2011 11:24 AM
  தகவலுக்கு நன்றி அண்ணே இனி ஞாயிறு இரவுதான் படம் பார்பேன்... ஹி ஹி தெரியும்தானே நம்ம ஓட்டம்..!!!

  ReplyDelete
 41. நாம ஒரே அலைவரிசைலத்தான் இருக்கோம் போல.ஹி ஹி

  ReplyDelete
 42. காட்டான் said...
  // எப்பிடியோ இங்கும் இப்படியான சின்ன பட்ஜட் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை நானும் இந்த படத்தை பார்கதான்போகிறேன்..//

  பாருங்கள் மாம்ஸ்.

  //போட்டோக்களில் அஞ்சலி அழகாய் இருக்கிறாங்கோ.. ஹி ஹி //

  ஃபோட்டோவில் மட்டுமா? எப்பவுமே அஞ்சலி அழகு தான் மாம்ஸ்.

  ReplyDelete
 43. // தமிழ்வாசி - Prakash said...
  படத்தை பற்றிய குறிப்புகள் அருமை. அஞ்சலி படங்கள் சூப்பர் //

  சூப்பர்..இப்பவாவது தெரியுதா அஞ்சலிகிட்ட பெருசா நடிப்புத் திறமை இருக்குன்னு?

  ReplyDelete
 44. // தனிமரம் said...
  ஹான்சிஹா போய் இப்போது அஞ்சலிக்கு சங்கம் வைப்போம் என்று சொல்லுறீங்களா ஐயா! //

  அஞ்சலி போய்த்தான் ஹன்சி வந்தார்..இருப்பினும் அஞ்சல் மன்றமும் ஒரு பக்கம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது; பத்மினி மன்றம் போல!

  ReplyDelete
 45. // மாய உலகம் said...
  அருமையான அலசல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!...//

  நன்றி மாயா.

  ReplyDelete
 46. // Powder Star - Dr. ஐடியாமணி said...
  விளக்கமா சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும் அண்ணே! உங்க கருத்துக்கள் அருமை! எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது! //

  பவர் ஸ்டாரா?..இந்த ஆள் அட்டகாசம் தாங்க முடியலியே..

  ReplyDelete
 47. // ! சிவகுமார் ! said...
  அற்புதமான பாயின்ட். பதிவர்கள் நல்ல படங்களுக்கு என்றுமே ஒருமித்த ஆதரவை தந்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்று, மைதானம் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். //

  ஆமாம் சிவா. சும்மா ஏதாவது படத்தை சுட்டு எடுத்ததை சுட்டிக்காட்டினால், நம்மைக் குறை சொல்கிறார்கள்.

  ReplyDelete
 48. // FOOD said...
  பட், உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு! //

  உங்களுக்கும் ஹமாம் பிடிக்குமா சார்..

  ReplyDelete
 49. // KANA VARO said...
  இது நல்லாயிருக்கே! //

  ரைட்டு.

  ReplyDelete
 50. // chinnapiyan said...
  நன்றி அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி மேஞ்சு கொடுத்திருக்கீங்க.நீங்க காசில்லாமல் பார்த்தா என்ன.அதுதான் ஒரு பத்து பேர பார்க்க தூண்டி விட்டுட்டீங்கள.//

  ஆறுதலுக்கும் பாராட்டுக்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 51. // நிரூபன் said...
  இனிய காலை வணக்கம் பாஸ்,

  இம் முறை விமர்சனத்தைக் கொஞ்சம் ஆராய்ச்சித் தகவல்களோடு இணைத்துத் தந்திருக்கிறீங்க...வித்தியாசமான பாணியில் விமர்சனமும் கலக்கலா இருக்கிறது. //

  வணக்கம் நிரூ..வழக்கமான விமர்சனமா இருக்கக்கூடாதுன்னு, சும்மா என் கருத்தை மட்டும் சொல்லியிருக்கேன்.

  ReplyDelete
 52. // siva said...
  ஓகே பார்த்துடுவோம் :)//

  ரைட்டு, பார்த்திடுங்க.

  ReplyDelete
 53. // M.R said...
  நீங்கள் சொன்னது போல் அந்த படத்தில் யாதார்த்தம் அதிகம்.
  படம் நல்லா இருந்தது மற்றபடி இப்பொழுதெல்லாம் சாமி வேசம் போடுபவர் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.அந்த சீன நெருடல் ...விபத்து நிகழ்ச்சி தத்ரூபம் ,இயக்குனருக்கு பாராட்டு.//

  அது ஒரு சின்ன சீன், சும்மா காமெடிக்காக வைத்தது தானே..

  விபத்துக்காட்சியை இவ்வளவு டீடெய்லாக யாரும் காட்டியதில்லை..அந்தக் காட்சியில் நல்ல உழைப்பு!

  ReplyDelete
 54. // sontha sarakku said...
  நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி....உங்கள் விமர்சனத்துக்கு நன்றி!//

  நன்றி.

  ReplyDelete
 55. // ஜீ... said...
  //நான்கு உலகப்பட டிவிடிக்களைப் பார்த்து காட்சிகளை சுட்டுவிட்டு, மிகச் சிறந்த படைப்பாளி என்று பெயர் எடுப்பவர்களும், திருட்டைச் சுட்டிக்காட்டினால் இன்ஸ்பிரேஷன் என்று பம்முகிறவர்களும் பார்க்க வேண்டிய படம் எங்கேயும் எப்போதும்//

  HA HA HA SUPER!!!! :-) //

  தம்பிக்கு அவங்க மேல எப்பவும் ஒரு கண்ணு தான்!

  ReplyDelete
 56. // மருதமூரான். said...

  செங்கோவி....! நல்ல படங்களை கொண்டாடுவதற்கு நீங்கள் கூறிய இந்தக்காரணங்களே போதுமானது...எங்கேயும் எப்போதும் நானும் பார்க்கவில்லை. சீக்கிரம் பார்க்க வேண்டும். ஏனெனில், உங்களின் சினிமா அனுபவம் பல நேரங்களின் என்னுடன் ஒத்தே போயிருக்கின்றது.//

  நன்றி நண்பரே..நிச்சயம் உங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். பிரச்சார நெடி சிறிதும் இல்லாமல் ஒரு விழிப்புணர்வுப் படம்.

  ReplyDelete
 57. // • » мσнαη « • said...
  படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை..அதுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட...//

  நெட்டில் பார்த்த எனக்கே அப்படி இருக்கு..தியேட்டர்ல பார்த்தவங்களுக்கு கண்டிப்பா...............

  ReplyDelete
 58. // கடம்பவன குயில் said...
  படத்தோட மையக்கருவை அழகா இரண்டுவரிகளில் விளக்கிவிட்டீர்கள். இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. விரைவில் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். பாராட்டுக்கள் //

  நன்றி சகோ. நிச்சயம் பாருங்கள். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல படம்.

  ReplyDelete
 59. // • » мσнαη « • said...
  ஒரு பாடல் கூட டூயட் என்று சொல்லி வெளிநாட்டுக்கு போய் தயாரிப்பாளருக்கு மொய் வைக்க வில்லை...அத்தனை பாட்டுக்களும் மாண்டேஜ் களால் அழகாக செதுக்கியிருக்கிறார்....//

  ஆமாம், பாடல்காஅட்சிகளில் படமும் நகர்வது அழகு.

  ReplyDelete
 60. // K.s.s.Rajh said...
  அஞ்சலி அக்கா உண்மையில்.திறமையான நடிகை...அவரது நடிப்பை..மங்காத்தா,கருங்காலி போன்ற படங்களில் பயன் படுத்தவில்லை....வெறும்னே படுக்கை அறைக்காட்டிகளை காட்டிக்கொண்டு இருந்தார்கள்..நான் லொள்ளுவிட்டாலும்..அவரது ரசிகனாக எனக்கு அவரது நடிப்பை பயன் படுத்தவில்லை என்ற ஆதங்கம்..இப்ப இந்தப்படத்தை கண்டிப்பாக பார்கனும்...//

  இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.

  ReplyDelete
 61. // Kannan said...
  படம் சூப்பர்...உங்கள் விமர்சனதுக்கு நன்றி. //

  நன்றி...கண்ணன் !

  ReplyDelete
 62. // விக்கியுலகம் said...
  கம்பியூட்டர் தரவிறக்க விமர்சன பதிவுக்கு நன்றி ஹிஹி! //

  ஹே..ஹே..இது விமர்சனம் அல்ல!

  ReplyDelete
 63. // Uma said...
  படத்தைப்பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது விமர்சனம். //

  பாருங்கள் சகோ...நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

  ReplyDelete
 64. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்..//

  தூண்டியாச்சுல்ல..இனி ஒரு நிமிசம் தாமதிக்கக்கூடாது, போய்ப் பாருங்க ரமேஷ்.

  ReplyDelete
 65. Yoga.s.FR said...
  //நான் பார்த்ததும் அப்படித் தான்! //

  நெட்டில் பார்த்திட்டுத் தான் பார்த்திட்டனே-ன்னு மிரட்டுனீங்களா..

  //நீங்கள் கூறியது போல் ஏகப்பட்ட செய்திகள்(அட்வைஸ்)படத்தில் கூறப்படுகின்றது!வன்முறை இல்லாத படம் கூட! //

  ஆமாம், ஒரு ஃபைட் சீன் வைக்க சான்ஸ் இருந்தும் வைக்காதது படத்தின் மேல் மரியாதையை கூட்டியது.

  //நெட்"டுக்கு பணம் கட்டுகிறீர்கள் தானே?அப்புறம் எப்படி,இப்படிச் சொல்லலாம்?இப்போது என்ன தான் இலவசமாகக் கிடைக்கிறது,சொல்லுங்கள்?//

  தலைவரே..எப்படி இப்படில்லாம்....முடியலை..

  ReplyDelete
 66. // Jayadev Das said...
  \\அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம்.\\ அடப் பாவிங்களா, அந்தம்மாவுக்கு ஓடினதே இந்த இரண்டு படமாத்தான் இருக்கும், ஆயிரம் படம் நடிச்சிட்ட மாதிரி பில்டப்பா...//

  ஐயா, 100 படத்தில் சும்மா ஊறுகாய் மாதிரி வந்துட்டுப் போறதை விட, இது பரவாயில்லை..

  எங்க அஞ்சலிக்குட்டி ஒரு படம் நடிச்சா, ஆயிரம் படம் நடிச்ச மாதிரி தான்!!!!

  ReplyDelete
 67. // சி.பி.செந்தில்குமார் said...
  நாம ஒரே அலைவரிசைலத்தான் இருக்கோம் போல.ஹி ஹி //

  ஹி..ஹி..ஆமாம் சிபி..சினிமா விஷயத்தில் அப்படித் தான்..அதுவும் கில்மா பட விஷயத்தில் கன்ஃபார்ம்!!

  ReplyDelete
 68. செங்கோவி ........தலைவரே..எப்படி இப்படில்லாம்....முடியலை.. ////இதுக்கே இப்புடி சலிச்சுகிட்டா எப்புடி......................!

  ReplyDelete
 69. மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதிகமான விபத்துக்கள் எமக்கு நன்றாக தெரிந்த பாதையில்தான் நடக்கின்றது..!!?? நாங்க இந்த பாதை நமக்கு"தண்ணி" பட்ட பாதைதானேன்னு கவலையீனமாக ஓடுவதால்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றது...!!!!!!

  ReplyDelete
 70. //Yoga.s.FR said...
  செங்கோவி ........தலைவரே..எப்படி இப்படில்லாம்....முடியலை.. ////இதுக்கே இப்புடி சலிச்சுகிட்டா எப்புடி......................!//

  ஓ, அப்போ இன்னும் இருக்கா..ரைட்டு.

  ReplyDelete
 71. //காட்டான் said...
  மாப்பிள ஒன்றை கவனித்தீர்களா அதிகமான விபத்துக்கள் எமக்கு நன்றாக தெரிந்த பாதையில்தான் நடக்கின்றது..!!?? நாங்க இந்த பாதை நமக்கு"தண்ணி" பட்ட பாதைதானேன்னு கவலையீனமாக ஓடுவதால்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றது...!!!!!!//

  ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.

  ReplyDelete
 72. ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.///இங்கே ஊதச் சொல்லுவார்கள்!அது போக,சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு படிக்கும் போதே இந்த விடயம் (தெரிஞ்ச பாதை)அறிவுறுத்தப்படுகிறது.

  ReplyDelete
 73. செங்கோவி said..."எங்க" அஞ்சலிக்குட்டி ஒரு படம் நடிச்சா, ஆயிரம் படம் நடிச்ச மாதிரி தான்!!!!////ரைட்டு.

  ReplyDelete
 74. படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விமர்சனம்!மன்னிக்கவும்!அறிமுகம்!

  ReplyDelete
 75. சூப்பர் விமர்சனம் வாழ்த்துக்கள் மக்கா...!!

  ReplyDelete
 76. ஆமா மாம்ஸ், தெரிஞ்ச பாதைன்னா நம்ம கவனம் பாதையில் இருப்பதில்லை..அந்த ‘தண்ணி’ பட்ட பாடு அனுபவம் எனக்குக் கிடையாது மாம்ஸ்..நல்ல பையனை கெடுக்காதீங்க.///இங்கே ஊதச் சொல்லுவார்கள்!அது போக,சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு படிக்கும் போதே இந்த விடயம் (தெரிஞ்ச பாதை)அறிவுறுத்தப்படுகிறது.

  September 23, 2011 3:31 PM
  ஆமாண்ண நானே எவ்வளவோ நீண்ட தூரபயணம் போயிருக்கேன் ஆனா எனக்கு நடந்த மிகபெரிய இரண்டு விபத்துக்களும் வீட்டில் இருந்து 15கிலோமீற்றருக்குள்ளதான் நடந்தது இரண்டு மாட்டு வண்டிகளும் குப்பை அள்ளுபவனிடம் கொடுத்துவிட்டு இன்சூரன்காரங்களிட்ட அலைஞ்ச அலைச்சல் இருக்கே...!!!!!)))))

  ஆனா ""தண்ணி"பட்ட பாடெல்லாம் நான் ஓடுவதில்ல..!!!!??  சிவலயன தொழுவத்தில கட்டிபோட்டுத்தான்க அதெல்லாம்..ஹி ஹி ஹி

  ReplyDelete
 77. சூப்பர் விமர்சனம் ..சரி அறிமுகம்...

  ReplyDelete
 78. அஞ்சலி நடிச்ச படம் வேற, அண்ணன் விமர்சனத்துல ஸ்பெசலா கலக்கி இருப்பாரு, படிச்சிட்டு வாரேன்....

  ReplyDelete
 79. /////அஞ்சலிக்கு அங்காடித் தெரு வரிசையில் இன்னொரு மைல்கல் இந்தப் படம். பேசும் கண்கள், தெனாவட்டான பாவனை, பட் பட்டென்று வந்து விழும் வார்த்தைகள் என கொஞ்சமும் சினிமாத்தனமில்லாத ஹீரோயின் கேரக்டர். /////

  நான் சொல்லல....?

  ReplyDelete
 80. ////// விமர்சனங்கள் முக்கியக் காரணம் என்று சம்பந்தப்பட்டோரால் குற்றம் சாட்டப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு நம் சக பதிவர்கள் கொடுத்துள்ள ஆதரவையும், உருவாக்கியுள்ள நல்ல மவுத் டாக்கையும் பார்த்தாவது, பதிவுலகம் நல்ல படங்களை ஒருபோதும் விலக்காது என்பதை நம் சினிமா நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  /////////

  அதானே?

  ReplyDelete
 81. திருப்தியான விமர்சனம்.. இல்ல இல்ல பட அறிமுகம்.... !

  ReplyDelete
 82. "எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல?

  ReplyDelete
 83. //// Yoga.s.FR said...
  "எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல?////

  அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?

  ReplyDelete
 84. நீ...............................................ண்ட காலத்துக்கப்புறம் ஒன்றிப் பார்த்த அருமையான காவியம்,"எங்கேயும் எப்போதும்".சலிப்பே இல்லாது கதையைக் கொண்டு போயிருக்கும் விதம்,நறுக்குத் தெறித்த வசனங்கள்,குத்தாட்டமில்லாப் பாடல்கள் என்று.......................அருமை!

  ReplyDelete
 85. பன்னிக்குட்டி ராம்சாமி said...அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?///வெளிய பரவால்ல,ஆத்துல உருட்டுக்கட்ட உருளாம இருக்கணும்,கடவுள வேண்டிக்கலாம்!ஸ்டார்ட்....ஒன்,டூ,திரி,......

  ReplyDelete
 86. //கோகுல் said...
  படத்துக்கேற்ற மாதிரி அசத்தலான விமர்சனம்!மன்னிக்கவும்!அறிமுகம்! //

  IlayaDhasan said...
  படம் நல்லா இருந்த்சுங்க.

  சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

  MANO நாஞ்சில் மனோ said...
  சூப்பர் விமர்சனம் வாழ்த்துக்கள் மக்கா...!!

  சே.குமார் said...
  அருமையான அலசல்.

  ரெவெரி said...
  சூப்பர் விமர்சனம் ..சரி அறிமுகம்...//

  நன்றி நண்பர்களே!

  ReplyDelete
 87. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  // அஞ்சலி நடிச்ச படம் வேற, அண்ணன் விமர்சனத்துல ஸ்பெசலா கலக்கி இருப்பாரு, படிச்சிட்டு வாரேன்....//

  நியாயத்துக்கு அஞ்சலிக்குட்டிக்குன்னு தனிப்பதிவே போடணும்ணே!

  // நான் சொல்லல....? //

  ஆமா, பெருமை தான்!

  // திருப்தியான விமர்சனம்.. இல்ல இல்ல பட அறிமுகம்.... ! //

  அண்ணன் கரெக்ட் பண்ணிட்டாரு!

  ReplyDelete
 88. //Yoga.s.FR said...
  "எங்க" அஞ்சலிக்குட்டி அப்புடீன்னு சொல்லியிருக்காரே,பாக்கலை?அப்புறம்,அஞ்சலி அக்கா அப்புடீன்னு ஒருத்தரு கமெண்டு போட,§§§§§இப்பத்தான் அஞ்சலிக்குட்டி பத்தி கரெக்டா கமெண்ட் போட்டிருக்கீங்க..நன்றி.§§§§அப்புடின்னிருக்காரு,கவனிக்கல? //

  ஆமா பன்னியார் பச்சப்புள்ள..நீங்க வேற எடுத்துக்கொடுங்க.

  //பன்னிக்குட்டி ராம்சாமி said...அந்தளவுக்கு போய்ட்டாரோ...? இதுல எத்தன தல உருள போகுதோ...?///வெளிய பரவால்ல,ஆத்துல உருட்டுக்கட்ட உருளாம இருக்கணும்,கடவுள வேண்டிக்கலாம்!ஸ்டார்ட்....ஒன்,டூ,திரி,......//

  நீங்க அப்படி வேண்டிக்கிட்ட மாதிரி தெரியலியே!

  ReplyDelete
 89. செங்கோவி .......நீங்க அப்படி வேண்டிக்கிட்ட மாதிரி தெரியலியே! ///அப்புடியா?அப்போ வுழுந்துடுச்சா?அச்சச்சோ!சாரி,கடவுளுக்கு கேக்கல போல!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.