Wednesday, October 2, 2013

மானம்.....மருவாதி தான் முக்கியம்!

என் மகன் நடக்கத் தொடங்கிய புதிதில். என் மாமியார் வீட்டுக்கு கிலி பிடித்தது. பெரும்பாலான நேரங்களில் அவனது கால் விரல்கள், சுருங்கியபடியே இருந்தன. அதாவது நல்ல ஒரு பளிங்குத் தரையில், மிருதுவான பாலைவன மணல் தூசாகப் படிந்திருக்கும்போது, நடக்க நேரிட்டால், எப்படிக் கூசி கால் விரல்களைச் சுருக்குவீர்களோ, அப்படியே அவன் பெரும்பாலான நேரங்களில் வைத்திருந்தான்.

இது ஏதாவது குறைபாடோ என்று பயம் வந்துவிட்டது அவர்களுக்கு. ஆனாலும் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது வெளியூரில் இருந்த நான் ஊருக்கு அவனைப் பார்க்கப் போனேன். வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, மாமனார் தங்கமணியிடம் கண்ணாலேயே ஜாடை காட்டினார். உடனே தங்கமணி என் கால்களைப் பார்த்துவிட்டு முகம் மலர்ந்தார். ’என்னடா இது, கரிகாலன் கால் மாதிரி இருக்கு..இதைப் பார்த்து ஏன் சந்தோசப்படுது?’-ன்னு குழம்பிப் போய்க் கேட்டால், நானும் என் பையன் மாதிரியே கால் விரல்களை சுருக்கியபடியே உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

நமக்கு கூச்ச சுபாவம்னு தெரியும். காலுக்குமா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறகு மொத்தக் குடும்பமுமே பாத தரிசனம் கண்டு, முக்தி அடைந்தார்கள்!

சமீபத்தில் பையன் சின்ன மாமனார் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். நான் மாமனார் வீட்டில் மேல் ரூமில் இருந்தேன். திடீரென மச்சினன் ஓடி வந்து ‘மாமா, காதைக் காட்டுங்க’ என்றான். ஏதாவது ரகசியம் சொல்லப் போகிறானோ என்று காதைக் காட்டினால், ”இன்னொரு காதையும் காட்டுங்க” என்றான். ‘என்னடா இது..மாமனார் வீட்டு சீதனமா கம்மல் ஏதாவது மாட்ட அளவெடுக்கானா?’-ன்னு லாபகரமா யோசிக்கும்போதே “இருக்கு..இருக்கு” என்று கத்தியபடியே சின்ன மாமனார் வீடு நோக்கி ஓடினான்.
‘ம்..இந்த காது தான் முப்பது வருசமா இருக்கே’ன்னு குழம்பிப் போய், தங்கமணியைக் கூப்பிட்டு விபரம் கேட்டேன். “அதுவாங்க..பையனுக்கு காது மடல்ல கட் ஆன மாதிரி இருந்துச்சு. அதான் ஒரு டவுட்ல ‘ஒரிஜினலை’ செக் பண்ணலாம்னு பார்த்தோம். பார்த்தா, அச்சு அசலா அதே மாதிரி கட் உங்களுக்கும். உங்களை ‘கலர்’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கான் பாருங்க!” என்று பதில் வந்தது.

அதைக் கேட்டதும் எனக்கு செம கோபம் வந்துவிட்டது. உடனே கண்டிசனாகச் சொல்லிவிட்டேன் “இங்க பாரு புள்ளை..என்ன ஆனாலும் சரி..நம்ம பையனை ஜட்டி இல்லாம வெளிய அனுப்பிடாத! நமக்கு மானம் மருவாதி தான் முக்கியம்!”

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

 1. அட ச்சீ ..........அத்த பாத்து தானே ஆம்பள புள்ள ன்னு நம்பிட்டாங்க, அப்புறம் இன்னா ??

  ReplyDelete
 2. @Manickam sattanathan காது இருக்குன்னும் முதல்லயே தெரிஞ்சும் ஆராய்ச்சி நடக்கலியா? மச்சினன்கிட்ட ஜாக்ரதையா இருக்கணும் அண்ணாச்சி!

  ReplyDelete
 3. //உங்களை ‘கலர்’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே//

  :-) சூப்பர்ணே!

  ReplyDelete
 4. அடப்பாவி இன்னைக்கு ஜட்டி மேட்டர் இங்கெல்லா ஓடுது ? ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா நமக்கு மானம் மருவாதிதான் முக்கியம், அதுவும் மாமனார் வீடு வேற...அவ்வ்வ்வவ்.....

  ReplyDelete
 5. ////இங்க பாரு புள்ளை..என்ன ஆனாலும் சரி..நம்ம பையனை ஜட்டி இல்லாம வெளிய அனுப்பிடாத! நமக்கு மானம் மருவாதி தான் முக்கியம்!”///

  குட்டியூண்டா இருந்தாலும் செமையா இருக்கு.... நான் மேலுள்ள பகுதியைச் சொன்னன்.

  ReplyDelete
 6. அப்பா...........................எவ்ளோ பெரிய காஆஆஆஆஆல்!!!!!!!!!

  ReplyDelete
 7. டபுளா போட்டுக்காங்க... ஒண்ணை உருவினாலும் இன்னொண்ணு இருக்கும்...

  ReplyDelete
 8. //இங்க பாரு புள்ளை..என்ன ஆனாலும் சரி..நம்ம பையனை ஜட்டி இல்லாம வெளிய அனுப்பிடாத! நமக்கு மானம் மருவாதி தான் முக்கியம்!//

  ஹா..ஹா... ஏன் இடுப்புல ஏதாவது மச்சம் இருக்கா... என் சிறுமூளைக்கு எட்டியது இதுதான்....இல்ல வேற ஏதாவது டபிள் மீனிங் இருக்கா.. :-)))

  ReplyDelete
 9. இதுக்கும் ஒரு விருந்து கிடச்சதா? கொடுத்து வெச்ச மனுசன்யா.....

  ReplyDelete
 10. நான் ஏதோ ரொம்ப சீரியசான விசயமாக இருக்கும் போல என சீரியசாகவே படித்துக்கொண்டு இருந்தால்
  கடைசியில் இப்படி ஒரு நகைச்சுவையா!
  போங்க நண்பரே தங்களுடன் ஒரே நகைச்சுவைதான்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.