Wednesday, October 30, 2013

தீபாவளியைக் கொண்டாடலாமா?

இந்த சுதந்திர நாட்டுல நிம்மதியா ஒரு பண்டிகை கொண்டாட முடியலை.அந்நிய எலும்புத்துண்டுக்கு குரைக்கிற நாய்கள், இந்த வருடமும் ஆரம்பித்துவிட்டது. நரகாசுரன் தமிழனாம்..அவனை ஆரிய(!) சக்திகள் கொன்னதைப் போய்க் கொண்டாடுறீங்களே பதர்களா என்று வழக்கம்போல் வாங்கியகாசுக்கு கூவ ஆரம்பித்துவிட்டார்கள்.
 
நம்ம மரமண்டைக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம் தான்..ஆனாலும் புராணத்துல சொல்லியிருக்கிற மேட்டரைப் புரிஞ்சிக்கிட்டுத்தான் இந்த பகுத்தறிவுவியாதிகள் பேசுதான்னு குழப்பமா இருக்கு.
 
விஷ்ணு தன்னோட வராக அவதாரத்துல பூமாதேவிகூட லவ்ஸ் ஆகுறாரு..அதுக்கு கைமேல பலனா நரகாசுரன் பிறக்கிறாரு..அப்பாலிக்கா இப்போதைய அஸ்ஸாம் ஏரியாவுல, அப்போதைய தமிழன் ஒரு ராஜ்ஜியத்தையே அமைக்குறாரு..பவர் கைக்கு வந்தா, நம்மாளுக பவர் ஸ்டாரைவிட ஓவரா ஆடுவாங்களே..அதனாலாவரு ஆட்டம் ஓவராப் போகுது.
 
ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு! மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.
 
புராணத்தோட இன்னொரு வெர்சன் என்ன சொல்லுதுன்னா, விஷ்ணுவோட இன்னொரு அவதாரத்தால தான் 'சன்'ன்னுக்குச் சாவுன்னு தெரிஞ்ச மம்மி, 'நோ..நோ..சன்னை என்னைத் தவிர எவனும் காலி பண்ணக்கூடாது'ன்னு வரம் வாங்கிக்குது. எப்படியோ, மம்மியால தான் சாவுன்னு மட்டும் கன்ஃபார்ம் ஆகுது. பூமாதேவி வேற, சோ கள்ளக்காதலால் மகனின் தலையில் கல்லைப் போட்ட தாய்-ன்னு நியூஸ் வர சான்ஸே இல்லைன்னு நம்ம நரகாசுக்கும் நிம்மதி!
 
புராணத்துல ஒரு ட்ராபிக் ராமசாமி உண்டு..யாராவது ஓவரா ஆடுனா, விஷ்ணு/சிவன்கிட்ட மனு கொடுக்கிறது அவர் வழக்கம். அவரு பேரு இந்திரன். அவரே ஒரு குஜால் பேர்வழிதான்னாலும், நரகாசு ஆட்டம் தாங்காம, விஷ்ணுகிட்டப் போய் கம்ளைண்ட் பண்ணுதாரு. 'டி.எஸ்.பியா புரமோசன் வரட்டும், பார்த்துக்கிறேங்கிறேங்கிற மாதிரி அவரும் 'கிருஷ்ண அவதாரம் எடுக்கும்போது கவனிச்சுக்கிறேன், அந்தப்பயல'ன்னு சொல்லி அனுப்புதாரு.
 
 
வின்டோஸ் புது வெர்சன் இறங்குற மாதிரி, விஷ்ணு-பூமாதேவி கப்புள்ஸ், கிருஷ்ணா-சத்யபாமாவா 'யாதவ' ஜாதில அவதரிக்கிறாங்க. இப்போ இந்திரலோக லேடீஸ்லாம் புது மம்மிகிட்ட  வந்து நரகாசு ஆட்டத்தைச் சொல்ல, மம்மி காண்டாகிடுது. வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, அவனைத் தூக்குய்யான்னு சொல்லிடுது. கடவுளே ஆனாலும் கணவன்னு ஆனப்புறம் எதிர்த்துப் பேச முடியுமா?
 
கிருஷ்ணர் பீகார்ல இருந்து படையெடுத்து அஸ்ஸாம் போயி, ஃபைட் பண்றாரு. விதின்னு ஒன்னு இருக்கும்போது நைனாவால என்ன செய்ய முடியும்? சோ, கிருஷ்ணரையே சாச்சுப்புடுதான் நரகாசு. அவ்வளவு தான், மம்மிக்கு வந்துச்சே கோவம்..'என் புருசனை அடிக்கிற ரைட்ஸு என்னைத் தவிர எவனுக்கும் இல்லைடா ங்கொய்யால'ன்னு ஒரே போடு, நரகாசு காலி!
 
அப்படி மண்டையைப் போடும்போது தான் நரகாசுக்கே மேட்டர் எல்லாம் புரியுது.அதனால எல்லாரும் என் ஆட்டத்தை படிப்பினையா வச்சு, இதை மறந்திடாம இருக்கும்படியா வருசாவருசம் கொண்டாடுடுங்கன்னு கேட்டுக்கிடுதாரு. ஆக்சுவலா தீபாவளிங்கிறது அஞ்சுநாள் பண்டிகைய இருந்து, மூணுநாளா ஆகி, இப்போ ஒருநாளா நிக்குது. அதுல முதநாள் மட்டும்தான் நரகாசுக்கு!
 
ஒகே..இப்போ இந்த பகுத்தறிவுக் கும்பலுக்கு ஏன் ***ல எரியுதுன்னு பார்ப்போம். அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'நரகாசு ஒரு தமிழ்மன்னன்..ஒரு தமிழனோட ராஜ்ஜியத்தை அழிச்சதைப் போய்க் கொண்டாடுறீங்களே, இது நியாயமா?' ன்னு.
 
முதல்லயே சொன்ன மாதிரி நமக்குப் பகுத்தறிவெல்லாம் கிடையாது. 'படிச்சிருக்கோம், உழைக்கத்தெம்பிருக்கு..நமக்கு எதுக்கு நக்கிப் பொழைக்கிற பொழப்பு'ன்னு பகுத்தறிவுப்பக்கம் நான் போறதே இல்லை. பகுத்தறிவில்லாத கூமுட்டையான நமக்குத் தோணுறது இது தான்..

1. அஸ்ஸாம் அப்போ தமிழ்நாடாத்தான் இருந்துச்சு...நரகாசுரன் தமிழந்தான்னே வச்சிக்குவோம். அப்போ அந்த தமிழனோட அப்பா-அம்மா யாரு? அவங்களும் தமிழங்க தானே? அட்லீஸ்ட் விஷ்ணுவோ அல்லது பூமாதேவியோ தமிழாத்தானே இருக்கணும்? இப்படி விஷ்ணுவைஅல்லது பூமாதேவியை தமிழராக் காட்டுன புராணத்தை, ஆக்சுவலி நாம பாரட்டத்தானே செய்யணும்? நியாயத்துக்கு தமிழனுக்காக பொங்குறவங்க, அந்த தமிழனைப் பெத்த தமிழர்களை வணங்கலாமே!
 
2. மூதாதையர் வழிபாடுங்கிறது நம்ம கலாச்சாரத்துலயே இருக்கிற விஷயம். நம்ம தாத்தா நரகாசுரர்(!), நம்மகிட்ட வேண்டி இதை ஒரு விழாவாக் கொண்டாடுங்கன்னு சொன்னப்புறம், உங்களை மாதிரி மூஞ்சைத் தொங்கப்போட்டுக்கிட்டிருந்தா, அவர் ஆவி ஃபீல் பண்ணாது? தாத்தா செத்தன்னிக்கே குத்தாட்டம் போடற இனம்யா நாங்க.

3. திராவிடம்-ஆரியம் பேசுற/ஆராய்கிற பலரும் ஒத்துக்கிட்டவிஷயம், யாதவ ஜாதிங்கிறது திராவிடத்தைச் சேர்ந்தது! அப்போ ஒரு திராவிட மன்னன் கிருஷ்ணனால, தமிழன் நரகாசுரன் கொல்லப்பட்டானா? நாம் தமிழர் இயக்கம் மாதிரி சில ப்யூர் தமிழ்வாதிங்க, பகுத்தறிவுவாதிகளின் திராவிடக்கொள்கையால தான் தமிழன் வீழ்ந்தான்னு சொல்றாங்களே..அது அப்போ நரகாசுரன் பீரியடுலேயே ஸ்டார்ட் ஆகிடுச்சா?..ஓ, அதனால தான் இந்தப் பண்டிகை பேரைக் கேட்டாலே எரியுதா பிரதர்ஸ்!

4. கிராமத்துல சில கிழவிங்க இருக்கும். பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல விஷேசம்னா என்னத்தையாவது புலம்பித் திட்டிக்கிட்டே திரியும்ங்க..முடிஞ்சா சண்டையும் இழுப்பாங்க..அதுகளுக்கு விவரம் அவ்வளவு தான்...பகுத்தறிவுக்குமா? பிடிக்கலைன்னா மூடிக்கிட்டு இருக்கலாமேய்யா!
 
5. எந்த ஒரு விஷயமானாலும் நாங்க நல்லதையே பார்க்கும்போது, அது எப்படிய்யா அதுல இருக்கிற/இல்லாத குறைகள் மட்டும் அவங்களுக்குத் தெரியுது..இந்த மனநோய்க்குப் பேரு என்ன?

எது எப்படியோ, நம்ம தாத்தா திவசத்தை விஷேசமாக் கொண்டாட வேண்டியது நம்ம கடமை..வெடிங்கய்யா பட்டாசை!
 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...பரவும் தீபஒளி, எல்லார் வாழ்விலும் இருளை அகற்றட்டும்!
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

 1. சடையார் தெரியும்,பிடிக்கும் ரொம்ப , ஆனா நீரு எழுதினது சடையார் இல்லே , சடயருக்கு தாத்தா.இந்த மாதிரி எழுதி தான் அந்த "அறிவாளிகளின் "வயித்ரிச்சல கொட்டிக்கனும் .ஜமாய் ராஜா.எங்கிருந்தாய் நீ இத்தனை நாள்?

  ReplyDelete


 2. முன்பு ஒரே ஒரு பகுத்தறிவு கும்பல்தான் இருந்தது. தற்போது ஊருக்கு ஓன்று கிளம்பியிருக்கிறது போல... நரகாசுரன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்பதே விவாதத்தில் இருக்கும் போது அவன் தமிழன் என்று சொல்வதுதான் பகுத்தறிவு போல.. அப்படியானால் இந்த பகுத்தறிவாதிகள் நரகாசுரன் இருந்ததை ஒத்துக் கொள்கிறார்களா... ?

  எனக்கு இது மட்டும் புரியவில்லை. பகுத்தறிவு என்பது தான் பகுத்தாய்வது. மற்றவர்களின் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பது அல்ல. சமகாலப் பகுத்தறிவாதிகளின் தொல்லைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.. :-))))

  இந்தியர்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு ஆன்மீக ,புராண பின்புலக்கதைகள் இருக்கும். அதேவேளையில் அதற்கு நம் மரபு சார்ந்த பாரம்பரிய பின்புலமும் இருக்கும். இதில் நாத்திகத்தை நுழைக்காமல் ஒருமைப்பாட்டுக்காகவாவது இந்த பண்டிகைகளைக் கொண்டாடலாம்... நீங்க சொன்ன புராணக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் போலி பகுத்தறிவாதிகளின் தலையில் நச்சென்று குட்டியது போல் இருந்தது...

  செம போஸ்ட் பாஸ்...

  ReplyDelete
 3. கடேசி டிஸ்கிக்கு நன்றி!நீங்களும்,தீபாவளியை வெடி கொளுத்தாமல்(சட்டப்படி குற்றம்,குவைத்ல)விரதமிருந்து கொண்டாட வாழ்த்துக்கள்!!!///இதப் படிச்சாவது,திருந்துதுங்களா பாக்கலாம்!

  ReplyDelete
 4. //Manickam sattanathan said...
  ஜமாய் ராஜா.எங்கிருந்தாய் நீ இத்தனை நாள்?//

  நான் இங்க தான்ணே ரொம்ப நாளா இருக்கேன், நீங்க தான் இப்ப வந்திருக்கீங்க!

  ReplyDelete
 5. Manimaran said...

  //முன்பு ஒரே ஒரு பகுத்தறிவு கும்பல்தான் இருந்தது. தற்போது ஊருக்கு ஓன்று கிளம்பியிருக்கிறது போல...//
  இந்த கும்பலைப் பற்றி தனியே பதிவிடவேண்டும்யா.

  //நரகாசுரன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்பதே விவாதத்தில் இருக்கும் போது அவன் தமிழன் என்று சொல்வதுதான் பகுத்தறிவு போல.. //

  இப்படில்லாம் கிடுக்கிப்பிடி போட்டீருன்னா, உம்மை இந்துத்வான்னு திட்டிட்டு, எஸ்கேப் ஆகிடுவாங்க.

  // நீங்க சொன்ன புராணக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயம் போலி பகுத்தறிவாதிகளின் தலையில் நச்சென்று குட்டியது போல் இருந்தது...//

  அவங்க செருப்பையே எடுத்து, அவங்க மூஞ்சிலேயே போடறதுங்கிற டெக்னிக்ல இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது!

  ReplyDelete
 6. //Subramaniam Yogarasa said...
  கடேசி டிஸ்கிக்கு நன்றி!நீங்களும்,தீபாவளியை வெடி கொளுத்தாமல்(சட்டப்படி குற்றம்,குவைத்ல)விரதமிருந்து கொண்டாட வாழ்த்துக்கள்!!!///

  இங்கே மத்தாப்பூ கொளுத்திக் கொண்டாடுவோம் ஐயா..ஆனாலும் பேச்சுலர்களுக்கு(!) மத்தாப்பூ இல்லை!

  ReplyDelete
 7. //ஆனாலும் தமிழன் நரகாசு புத்திசாலி. அதனால பிரம்மாவை குடையாக்குடைஞ்சு ஒரு வரம் வாங்கிடுதாரு, என்னன்னா மம்மியைத் தவிர வேற யாரலயும் தனக்கு சாவு வரக்கூடாதுன்னு! மம்மின்னா பூமாதேவி, 'அய்யய்யோ..கொல்றாங்களே' புகழ் மம்மி இல்லை.//

  இத எழுதினதுக்காகவே உமக்கு நம்ம டுபாக்கூர் யுனிவர் சிட்டி நம்ம செங்கோவிக்கு "சிறப்பு டாக்குடரு" பட்டம் கொடுக்க முடிவு.

  ReplyDelete
 8. பண்டிகை என்றாலே பகுத்தறிவு வாதிகளுக்கு வந்துவிடுகிறது ஜுரம்!செம நெத்தியடி பதிவு! கலக்குங்கபாஸ்!

  ReplyDelete
 9. எல்லார் மனதிலும் இருளை அகற்றட்டும்... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. //s suresh said...
  பண்டிகை என்றாலே பகுத்தறிவு வாதிகளுக்கு வந்துவிடுகிறது ஜுரம்!செம நெத்தியடி பதிவு! கலக்குங்கபாஸ்!//

  வருகைக்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 11. //திண்டுக்கல் தனபாலன் said...
  எல்லார் மனதிலும் இருளை அகற்றட்டும்... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...//

  நன்றி தனபாலன்.

  ReplyDelete
 12. பிரமாதம்! தெளிவான வாதங்கள்!

  ReplyDelete
 13. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு டூபாக்கூர் வெடி வெடிப்பாக்க நாம் தான் கண்டுக்காம சந்தோஸமாக வெடிப்போம் ஹாப்பி தீபாவளி :))

  ReplyDelete
 14. மூன்கூடிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 15. நண்பரே மிகுந்த மகிழ்ச்சி.தங்களுடன் நானும் வாழ்கிறேன் என்ற சந்தோசம்.
  காலையில் இதனை படிக்கும்போது மனது நிறைந்தது.
  அதெப்படி சார் புராணத்துடன் நிகழ்காலத்தையும் இணைத்து ஒரு அற்புதமாக பதிவு.டிராபிக் ராமசாமி,விண்டோஸ் பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்.
  இது போன்ற பதிவுகளை அடிக்கடி தாருங்கள்.இணைய பயணம் எனக்கு தற்போதுதான் பயனுள்ளதாகத் தெரிகிறது.
  தங்களது எழுத்து நடையில் சரஸ்வதி
  வாசம் செய்கிறாள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 16. //bandhu said...
  பிரமாதம்! தெளிவான வாதங்கள்! //

  நன்றி...நன்றி.

  ReplyDelete

 17. //தனிமரம்said...
  மூன்கூடிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா!//

  நன்றி நேசரே..தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. // sanjan bala said...
  தங்களது எழுத்து நடையில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். //

  எல்லாம் அவள் அருள் சார்.

  ReplyDelete
 19. கடவுள் மனிதனாக பிறக்கவேண்டிய அவசியம் என்ன என்று விளக்கமுடியுமா? சகோதரா?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.