Sunday, June 28, 2015

ஹிட்ச்காக் படத்தைச் சுடுவது எப்படி? - Flightplan(2005)

David Fincher என் மனம் கவர்ந்த இயக்குநர். அவர் இயக்கிய Panic Room பார்த்து அசந்துபோனேன். அதிலும் ஹிரோயின் Jodie Foster-ன் நடிப்பு(ம்!!) என்னை கவர்ந்துவிட, அவர் நடித்த மற்ற படங்களைத் தேடியபோது கிடைத்தது தான் இந்த Flightplan. படத்தின் ஒன்லைனைப் படித்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை. நீங்களும் படியுங்கள்:

ஹீரோயின் தன் ஆறு வயது மகளுடன் ஃப்ளைட்டில் ஜெர்மனிய்ல் இருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கிறார். பாதி வழியில் ஃப்ளைட்டில் அவரது மகள் தொலைந்து போகிறாள். அங்கே பயணிக்கும் அனைவருமே ஹீரோயினுடன் யாரும் வரவில்லை' என்று சாதிக்கிறார்கள். எங்கே அந்தக் குழந்தை, ஏன் எல்லோரும் அப்படிச் சொல்கிறார்கள், அவர்கள் சொல்வது உண்மையா?
நமது ஹிட்ச்காக் தொடரில் வந்த The Lady Vanishes (1938) கட்டுரையைப் படித்தவர்களுக்குப் புரிந்திருக்கும், இரண்டு படத்தின் கதையும் ஒன்று தான் என்று. 

ஹீரோயின் ட்ரெய்னில் தனியே பயணிக்கிறார். அங்கே அறிமுகம் ஆகும் ஒரு லேடி, திடீரெனக் காணாமல் போகிறார். ஆனால் அப்படி ஒரு லேடியே பயணிக்கவில்லை, எல்லாம் ஹீரோயினின் கற்பனை என்று எல்லாப் பயணிகளும் சொல்கிறார்கள். ஹீரோ உதவியுடன், ஹீரோயின் உண்மையைக் கண்டுபிடிக்கிறார் - என்பதே ஹிட்ச்காக் படத்தின் ஒன்லைன்.


இணையத்தில் தேடியதில், எங்கேயுமே The Lady Vanishes படத்தின் ரீமேக் என்றோ, இன்ஸ்பிரேசன் என்றோகூட படக்குழு வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. (நமது ஆட்கள் பாஷையில் இது காப்பி!). பிறகு படத்தைப் பார்த்தேன். ஒன்றரைமணி நேரம் நம்மை கட்டிப்போடும் அட்டகாசமான த்ரில்லர் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். படம் பார்க்காதவர்கள் மேலே படிக்காமல், படத்தை இங்கே டவுன்லோடு செய்து பார்க்கவும்:

 https://kat.cr/flightplan-2005-dvdrip-eng-axxo-t215409.html#main

(சப்-டைட்டில் லின்க், கமெண்ட்ஸ் செக்சனுக்குள் இருக்கிறது.)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இப்போது The Lady Vanishes எப்படி திறமையாக Flightplan குழுவினரால் சுடப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். (No offense..It's a good learning!!). படத்தின் முக்கியக்கூறுகளில் இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை இப்போது பார்ப்போம்.

ஜெனர் :

The Lady Vanishes படம், ஒரு ரொமாண்டிக்கல் காமெடி த்ரில்லர் என்று சொல்லலாம். படம் முழுக்க ஒரு கேஷுவல்னெஸ் இருந்துகொண்டே இருக்கும். லேடி காணாமல்போனது சஸ்பென்ஸைக் கூட்டுமே ஒழிய, நம் கவலையைக்க்கூட்டாது.

Flightplan படம் ஒரு சைக்காலஜிக்கல் சஸ்பென்ஸ் த்ரில்லர். குழந்தை காணாமல் போவது என்பது காமெடியான விஷயம் இல்லை. கூடவே ஹீரோயினின் சைக்காலஜி பிரச்சினையும் சேர்ந்துகொள்ள, ஒரு மிஸ்ட்ரி எஃபக்ட் வந்துவிடுகிறது.

ஹீரோயின்:

ஹிட்ச்காக் படத்து ஹீரோயின், ஒரு பணக்காரனுடன் நிச்சயம் ஆனவள். திருமணத்தை நோக்கி, தனியே டிராவல் செய்கிறாள். வழியில் ஹீரோவிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். இறுதியில் லேடியைக் கண்டுபிடித்தபின், ஹீரோவுடன் சேர்கிறாள்.

Flightplan படத்தில் அப்படியே உல்டா. அவள் கணவன் சிலநாட்களுக்கு முன்பு தான் இறந்திருக்கிறான். அவனின் இறுதிச்சடங்கை அமெரிக்காவில் செய்ய, குழந்தையுடன் பயணிக்கிறாள். குழந்தை காணாமல் போகிறது. இறுதியில் குழந்தையுடன் சேர்கிறாள்.

மெயின் கேரக்டர்கள்:

இரண்டு பெண் கேரக்டர்கள் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர் தொலைந்து போகிறார். இரண்டு படங்களிலுமே இது உண்டு. ஹிட்ச்காக் படத்தில் இரண்டாவது கேரக்டர், ஒரு வயதான பாட்டி. இதில் ஹீரோயினின் குழந்தை. காணாமல் போனது யாரோ ஒரு லேடி என்பதைவிட, தன் குழந்தை எனும்போது ஹீரோயின் கேரக்டருடனும் கவலையுடனும் Flightplan-ல் நாம் நன்றாக இன்வால்வ் ஆகமுடிகிறது. ஹிட்ச்காக் படத்தை பாப்கார்ன் கொறித்துக்கொண்டே பார்த்துவிட முடியும்.

சஸ்பென்ஸ்:
மெயின் கேரக்டர் சொல்வதை யாரும் நம்புவதில்லை. நமக்கு உண்மை தெரியும். அதனால் சஸ்பென்ஸ் எகிறுகிறது. இரண்டு படத்திலும் இது சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். ஹிட்ச்காக் படத்தில் ஹீரோ கேரக்டர் மட்டும் ஹீரோயினை நம்புவார். Flightplan-ல் யாரும் நம்புவதில்லை, நமக்குத் தெரியாத அந்த வில்லன் கும்பலைத் தவிர!

சைக்காலஜி:

ஹிட்ச்காக் படத்தில், லேடியைக் கொல்ல முயலும்போது ஹீரோயினுக்கு தலையில் அடிபடும். ’அதனால் தான் யாரோ ஒரு லேடி உடன் வந்ததாக ஹீரோயின் நினைக்கிறார்’ என்று எல்லோரும் சொல்வார்கள். ஹீரோயினுக்கே ஒரு ஸ்டேஜில் தன்மீது சந்தேகம் வந்துவிடும்.

Flightplan-ல் அதே கதை தான். வில்லன்கள் ஹீரோயினின் புருசனைக் கொன்றுவிடுகிறார்கள். அந்த அதிர்ச்சியில் இருக்கும் ஹீரோயின்னு, சைக்காலஜிக்கலாக பிரச்சினை இருக்கிறது. அதனால்தான் உடன் குழந்தை வந்ததாக நினைக்கிறார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஹீரோயினும் ஒரு நிமிடம் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார்.

வில்லன்களால் ஹீரோயினுக்கு உண்டாக்கப்பட்ட சைக்காலஜிக்கல் பிராப்ளம் என்பது இரண்டு படத்திலும் மெயிண்டெய்ன் ஆகிறது!


ஹீரோ:
ஹிட்ச்காக் படத்தில் ஹீரோ ஹீரோயினை நம்புவார். Flightplan-ல் ஹீரோ நம்புவதில்லை. ஆனாலும் கடமை காரணமாக உதவ முன்வருகிறார். 

சைக்காலஜி டாக்டர்:

இரண்டு படத்திலுமே ஒரு சைக்காலஜி டாக்டர் கேரக்டர் வருகிறது. வந்து, ஹீரோயின் நினைப்பது வெறும் மாயையே என்று ஹீரோயினை நம்ப வைக்கிறது.

அரசியல்:

ஹிட்ச்காக் படம் வந்தபோது, உலகநாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. ஜெர்மனியை வில்லனாக ஹிட்ச்காக் படம் குறிக்கும்.

11-செப்டம்பர் 2001 நிகழ்வுக்குப் பிறகு விமானப் பயணம் என்பதே ஆபத்தானதாக கருதப்பட்டது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடுக்கிவிடப்பட்டது. எனவே சந்தேகத்திற்கு இடமான இரண்டு அரபு கேரக்டர்கள் Flightplan-ல் வரும்.


பெட்டி:

வில்லனின் கையாள்களான ஒரு மேஜிக் குழு ஹிட்ச்காக் படத்தில் பயணம் செய்யும். ஒரு மேஜிஷியனை ஹீரோ அடித்து, மேஜிக் பெட்டியில் அடைத்துவைப்பார். அதன்மேல் உட்கார்ந்து ஹீரோவும், ஹீரோயினும் பேசுவார்கள். ஒரு சவப்பெட்டி மேல் உட்கார்ந்திருப்பது போல்  தோன்றும்.

Flightplan-ல் சவப்பெட்டிக்கு முக்கிய இடம் உண்டு. வில்லன் & ஹீரோயின் சந்திப்பு, அதை மையமாக வைத்தே நடக்கும்.

லேடி/குழந்தை:

ஹிட்ச்காக் படத்தில் வரும் லேடி, அப்பாவி போல் தெரிந்தாலும் அவரிடம் ஒரு சீக்ரெட் இருக்கும். அவர் அப்பாவி அல்ல.

Flightplan-ல் குழந்தை ஒரு அப்பாவி. குழந்தை சம்பந்தப்பட்ட ஒரு பொருளில் தான் சீக்ரெட் இருக்கிறது.

லாஜிக் & MacGuffin:

ஹிட்ச்காக் படத்தில் வரும் MacGuffin லாஜிக்குடன் இருக்கும்.

Flightplan சறுக்கியது இங்கே தான். வில்லன் யார், அவர்களின் திட்டம் என்ன என்று நமக்குப் புரியும்போது லாஜிக் அடிவாங்குகிறது.  வில்லன்களின் திட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். குருட்டு அதிர்ஷ்டத்தில் தான் அந்தத் திட்டம் வெற்றிபெற முடியும். (ஆனாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் படத்தை ரசிக்க முடிகிறது.)

ஹிட்ச்காக் படத்தில் லேடி பயணிப்பதை  சிலர் பார்த்திருப்பார்கள். ஆனாலும் சொந்தப்பிரச்சினை காரணமாக சொல்லத்தயங்குவார்கள். உதாரணம், ஒரு லாயர் தன் வைப்பாட்டியுடன்/கள்ளக்காதலியுடன் பயணம் செய்வார். எனவே இதில் இன்வால்வ் ஆவது தனக்குச் சிக்கல் என ஒதுங்கிக்கொள்வார்...அது லாஜிக்!

Flightplan-ல் யாருமே அந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை என்று வருகிறது. கிளைமாக்ஸில் ஒரு பையன் மட்டும் ‘நான் சொன்னேன்ல’ என்று ஒரு டயலாக். ஏர்போர்ட் சிசிடிவி, ஃப்ளைட்டில் ஏறும்போது கிழிக்கப்படும் கேட்பாஸின் ஒரு பகுதி என பல சாட்சிகள் இருந்தும், திரைக்கதையில் அதைக் கண்டுகொள்ளாமல் கதைவிட்டிருப்பார்கள்.

நேரடித் தொடர்பு:


ஹிட்ச்காக் படத்தில் வரும் லேடி ஃப்ராய், தன் பெயரை ட்ரெய்ன் விண்டோ கண்ணாடியில் எழுதுவார். காணாமல் போனபின், அவர் பயணம் செய்தார் என்று குழம்பிய ஹீரோயின் மீண்டும் நம்ப, அது உதவும்.

Flightplan-ல் அந்த சீன் அப்படியே சுடப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல ஆத்மா யூ-டியூப்பில் அந்த சீன்களை எடுத்துப் போட்டிருக்கிறார். அது இங்கே:



ஹாலிவுட் படங்களில் ‘Hitchcockian Movies' என்றே ஒரு ஜெனர் உண்டு. Mission Impossible, Jamesbond Movies, The Fugitive என பல படங்கள் இந்த ஜெனரில் வந்திருக்கின்றன. அவையெல்லாமே ஹிட்ச்காக்கின் திரைக்கதை மற்றும் விஷுவல் ட்ரீட்மெண்டை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. 

இந்த மாதிரிப் படங்களைப் பற்றி அவ்வப்போது எழுதி, வெள்ளையா இருக்கிறவன் காப்பி அடிக்க மாட்டான் என்று நம்புகிறவர்களுக்கு வேப்பிலை அடிக்கலாமா என்று யோசிக்கிறேன். :)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. FLIGHT PLAN க்கு லிங்க் கொடுத்த மாதிரி ,
    அப்படியே JODIE FASTER க்கும் ஒரு லிங்க் கொடுத்தா நல்லா இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. எங்கே இருந்துய்யா இப்படி எல்லாம் கிளம்பி வர்றீங்க..

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.