Saturday, December 11, 2010

உலகக் கடவுள் முருகன்

எனக்குத் தமிழும் நல்வாழ்வும் தந்த முருகனைப்போற்றி, என் முதல் பதிவினை ஆரம்பிக்கின்றேன்.குழுவாய்க் கூடி வாழத் துவங்கிய நம் முன்னோர் தம் தவ வலிமையால் கண்டுணர்ந்தனர் ஒரு மாபெரும் சக்தியை. அது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதையும், இப்புவியில் வாழும் உயிர்களையும் மிக முக்கியமாய் சிவந்த கிரகமான செவ்வாய் கிரகத்தை கட்டுப் படுத்துவதையும் அறிந்தனர். அதனை போர்க்கடவுள் என்றும் உணர்ந்து முருகன் என்று பெயரிட்டு வழிபடத்துவங்கினர்.
                        ஞானம் என்பது ஒரு நிலத்தில் மட்டுமே பூக்கும் பூ அல்ல. அது உலகம் முழுதும் மலர்கின்ற பொதுவான ஒரு விஷயம். முருகன் பற்றிய இதே கருத்தை இவ்வுலகத்தில் வாழ்ந்த வேறு சிலரும் அறிந்திருந்தனர். அதனைக் காண்போம் வாருங்கள்!

 வேதம் உணர்ந்த ஸ்கந்தன்:
நாம் முருகனாய் உணர்ந்த அம்மாபெரும் சக்தியை ஸ்கந்தன் என்று உணர்ந்தனர் வேதம் அறிந்த ஞானிகள். ஸ்கந்தன் / கார்த்திகேயன் ஒரு போர்க்கடவுள் என்பதையும் ‘மங்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்றும் கண்டுகொண்ட வேத மனம் அவரை ‘மங்களேஸ்வரர்’ என வணங்கி நல்வாழ்வு பெற்றது.

சைனீஸ் ஸ்கந்தன் /வே த்வோ (Wei Tuo):
இந்தியாவிலிருந்து சென்ற புத்த மதத்தால் ஞானத்தின் பல்வேறு நிலைகளை கண்டறிந்தனர் சைன தேசத்து ஞானிகள். புத்த மதம் சைனத்து பழங்குடி மதங்களோடு கலந்து அவர்களது ஆதி காலக் கடவுள்கள் சிலரையும் சுவீகரித்துக் கொண்டது. அதில் ஒருவர்தான் ஸ்கந்தன் என்றும் அழைக்கப்படும் போர்க்கடவுள் வே த்வோ.

கிரேக்க அரேஸ் (Ares):
தமிழ் இனத்தினைப் போலவே தொன்மையான நாகரீகமும் பண்பாடும் கொண்டது கிரேக்க இனம். நமது ஞானிகள் முருகனைக் கண்டறியும்போது அவர்களுக்கு மட்டும் இம்மாபெரும் சக்தி தெரியாமல் இருக்குமா என்ன? அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் அரேஸ். கிரேக்கத்துப் போர்க்கடவுள்.

ரோமானிய மார்ஸ் (Mars):
ஆம். செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான மார்ஸ் ரோமானிய போர்க்கடவுளான மார்ஸ்-ஐக் குறிப்பதே. நாம் முருகனை அழைப்பது போன்றே, ரோமனியர் மார்ஸ் தங்களின் மூதாதையர் என்றும் தாங்கள் அவரது சந்ததியினர் என்றும் அழைத்துக்கொண்டனர்.
                            
ரோமனியர் இப்பெயரை ‘எட்ருஷ்கன் (Etruscan)’ இனத்துக் கடவுளான மாரிஸ் (Maris)-இடமிருந்து பெற்றனர். இந்த மாரிஸ்க்கு உள்ள மற்றொரு பெயர் மாரிஸ் ஹஸ்ரன்னா(Maris Husranna). இதன் பொருள் ‘குழந்தை மாரிஸ்’ . நமது ‘பால முருகன்’ ஞாபகம் வருகிறதா? வரத்தான் செய்யும்..எங்கும் நிறைந்த ஞான பண்டிதன் அல்லவா அவன்.

 நார்டிக் டைர் (Tyr):
நார்வே தேசத்து மக்களின் பழங்குடிக் கடவுளான டைர் ஒரு போர்க்கடவுளே. இவரது பெயரிலிருந்துதான் செவ்வாய்க்கிழமையை ஆங்கிலத்தில் குறிக்கும் Tuesday பெறப்பட்டது.

குஷைட் முரிக் (Murik):
ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா மற்றும் நூபியாவை உள்ளடக்கிய நாடாக ஆதியில் விளங்கிய குஷைட்(Cushite) தேச மக்களின் போர்க்கடவுளின் பெயர் ‘முரிக்’. ஏறக்குறைய முருகா! ஆச்சரியம் தான் அல்லவா? தற்பொழுது அழிந்து போய்விட்ட குஷைட் இன மக்களில் சிலர் மட்டும் கென்யாவில் வசித்து வருகின்றனர் முரிக் பக்தியுடன்!

முருகன் எல்லா தேசங்களிலும் போர்க்கடவுள் என்றும் செவ்வாய் கிரக அதிபதி என்றும் தவத்தில் சிறந்த ஞானிகளால் பாமர மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளான்.
தமிழிலும் ‘செவ்வாய் அதிபதியானதால் முருகன் சேந்தன் ( சிவந்த நிறத்தை உடையவன்) என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டான்; இல்லையேல் திராவிட வேலனுக்கேது சிவந்த நிறம்?

இத்தகு சிறப்பு வாய்ந்த முருகனை தமிழ்க் கடவுள் என்று மட்டும் சொல்லாது உலகக் கடவுள் என்றும் சொல்லலாம்தானே?

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

28 comments:

 1. எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்.

  கேபிள் சங்கர்

  ReplyDelete
 2. ஆகா..முதல் வருகையே கேபிளாரா..தங்கள் வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி..--செங்கோவி

  ReplyDelete
 3. பக்தி பதிவுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள் , வாழ்த்துகள்

  ReplyDelete
 4. //பக்தி பதிவுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள் , வாழ்த்துகள்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராவணரே..அசோகவனத்தில் எல்லொரையும் கேட்டதாகச் சொல்லவும்.

  ReplyDelete
 5. வாருங்கள் நண்பரே, முதல் பதிவே பக்திபரவசமாக இருக்கிறதே

  ReplyDelete
 6. //முதல் பதிவே பக்திபரவசமாக இருக்கிறதே//
  முதல் பதிவு என்பதால் தான் நண்பரே!..வருகைக்கு நன்றி இரவு வானம்!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்! எனக்கும் முருகக் கடவுள்தான் இஷ்டதெய்வம்.

  ReplyDelete
 8. @தெய்வசுகந்தி

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நண்பரே....


  முருகக்கடவுள் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு.
  வாழ்கவளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 10. @வேலன்.
  முருகன் ஆசி பற்றி ‘வேலனே’ வந்து சொல்லும்போது மறுக்க முடியுமா?..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. //எனக்குத் தமிழும் நல்வாழ்வும் தந்த முருகனைப்போற்றி, என் முதல் பதிவினை ஆரம்பிக்கின்றேன்//

  நமது தமிழ்க்கடவுளின் ஆசியுடன் பதிவைத் தொடங்கியிருக்கிறீர்கள் அருமை,

  உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
  உங்கள்.மாணவன்

  ReplyDelete
 12. @மாணவன்: தங்கள் வாழ்த்துக்கு நன்றி மாணவன்..முருகனருள் முன்னிற்கட்டும்

  ReplyDelete
 13. உங்கள் வலைப்பதிவுக்கு முதன் முறையாக வருகிறோம். முகப்பு அருமையாக வடிவமைத்துள்ளீர்கள். வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..

  வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..
  பழனி பதிவாழ் பாலகுமாரன் துணை நிற்க்கட்டும்.

  ReplyDelete
 14. //நமது தமிழ்க்கடவுளின் ஆசியுடன் பதிவைத் தொடங்கியிருக்கிறீர்கள் அருமை,//

  ReplyDelete
 15. @பாரத்... பாரதி... ://உங்கள் வலைப்பதிவுக்கு முதன் முறையாக வருகிறோம். முகப்பு அருமையாக வடிவமைத்துள்ளீர்கள்.//..தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி..பாரதி பிறந்த நாளில் தொடங்கிய பதிவிற்கு பாரத்-பாரதியின் பின்னூட்டம்!! நல்ல பொருத்தம்..

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்!

  வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. @சே.குமார்..'மனசு’ நிறைந்த வாழ்த்துக்கு நன்றி..நண்பரே!

  ReplyDelete
 18. நல்ல பத்திரிகையாளர் என்ற உணர்வு முதல் பதிவிலேயே தோன்றுகிறது.படங்க‌ளும், திருமால் ம‌ருகனின் உலகமயமான முகத்தை சொற்சித்திரமாக வடித்த தங்க‌ள் ஆக்க‌ம் எனக்குப் படிக்க ஊக்கம் அளிக்கிறது.ஆர்வத்துடன் பல நல்ல‌ பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  வாழ்க!வளர்க!

  ReplyDelete
 19. @kmr.krishnan: ஐயா, தாங்கள் வந்து, படித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..வகுப்பறையில் உங்கள் கமெண்ட்களை விரும்பிப் படித்திருக்கின்றேன்..தங்கள் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 20. A very nice impressive first blog...All the best... Keep posting nice blogs like this...

  ReplyDelete
 21. @santhosh : ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 22. "ஆவுரித்துத் தின்றுலலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரத்தார்க் அன்பராயின் கண்டீர் நாம் வணங்கும் கடவுளவரே"
  இக்கூற்றுக்கமைய முருகன் அன்பன்; முருகனன்பற் அன்பன்.

  இது வரை கணபதியைத் தான் உலகக் கடவுள் என அறிந்திருந்தேன். ஆனால் நம் முருகனும்
  உலகக் கடவுள் என அறிந்து மகிழ்வே!
  உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்கள் என உணர்த்தும்...தத்துவமோ! இது.

  மேலும்.
  //முருகன் சேந்தன் ( சிவந்த நிறத்தை உடையவன்) என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டான்; இல்லையேல் திராவிட வேலனுக்கேது சிவந்த நிறம்? //

  திராவிடக் கடவுள் கறுப்பா? தென்னாடுடைய சிவன் -கறுப்பரா?.... "பனித்த சடை பவளம் போல் மேனி"
  நீலகண்டர்...கழுத்தே நீலம்...உடல் செம்மை
  ஆகவே திராவிடரும் கறுப்பில்லை. திராவிடத் தெய்வங்களும் கறுப்பில்லை.
  கிருஸ்ணர்; இராமர் தான் கறுத்த நிறத்தவர்.

  ReplyDelete
 23. யோசிக்க வைக்கும் அருமையான பின்னூட்டம்..தங்கள் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 24. அன்பின் செங்கோவி - முருகப் பெருமானை வணங்கித் துவக்கப்பட்ட வலைப்பூவா - வாழ்க வளமுடன் - ஜெனிஃபர் வரைக்கும் வந்தாச்சு - எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. @cheena (சீனா)ஐயாவின் கிண்டலுக்கு நன்றி.

  ReplyDelete
 26. இறைவனுக்கு பல பெயர்கள் உண்டு, அதில் அழகு என்ற பெயரும் அடங்கும், ஆனால் காணாத கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று உருவம் வரைவது தவறு, அதை இறைவனை சிறுமைப்படுத்தும் செயல்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.