Sunday, December 19, 2010

அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

டிஸ்கி : கதையல்ல நிஜம்.


நள்ளிரவில் திருநெல்வெலி பஸ் ஸ்டாண்டில் நானும் என் அதிரடிக்கார மச்சானும் நின்றிருந்தோம். மச்சான் விட்ட ஏப்பத்தில் பீர் வாசம் தெரிந்தது. கூட்டமேயில்லா மதுரை பஸ் வர ஏறி அமர்ந்தோம்.
பஸ் கிளம்பி திருநெல்வேலியை தாண்டியவுடன், பீர் தன் வேலையை காட்டியது. ஏய் மாப்ளே, ஒண்ணுக்கு முட்டுதுலேஎன அலறினார் அதிரடிக்கார மச்சான். இந்த கருமத்தை குடிக்காதீரும்னா கேட்டீரா? செத்த நெரம் பொறுத்துக்கோரும்என்றேன்.


இதை எப்படிலே பொறுக்க முடியும்?" என புலம்பினார் மச்சான்.

பஸ் வேகம் பிடித்தது. அடுத்து 10 நிமிடம் பொறுத்துப் பார்த்த மச்சான் மறுபடி அலறினார். ஏலே மாப்ளே, கண்டக்டர் கிட்டே அடுத்து பஸ் எங்கன நிக்கும்னு கேளுலே


மெதுவாக நடந்து டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த தடித்த, மீசைக்கார கண்டக்டரிடம்,”அடுத்த ஸ்டாப் எப்போ வரும் அண்ணாச்சி?” என்றேன்.


அடுத்த ஸ்டாப்பு கோவில்பட்டி, அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கேஎன்றார் கண்டக்டர்.


என்னது ஒருமணி நேரமா?..செத்தேன் நான்..மாப்ளே, போர்க்களத்துலயோ நோயிலயோ செத்தா பரவாயில்ல..இதுல செத்தா நம்ம பயக வம்ச வம்சமா பேசி  நாறடிச்சிருவாங்கலேமச்சான் கதறினார்.

அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா தோன்றியது.

மச்சான், சிப்ஸ் பாக்கட் ஒன்னு மிச்சம் இருக்கில்லெ..அதை எடுத்து சிப்ஸை கீழ கொட்டுங்க

கொட்டீட்டு?”

அதுல அடிச்சு, தூரப்போட்டுருங்க


மச்சான் முகத்தில் பல்பு எறிந்தது. சூப்பர் ஐடியாலே, திரும்பிக்கோலேஎன்றபடி காரியத்தில் இறங்கினார்.


வளைந்து, நெளிந்து பலவித சர்க்கஸ் வித்தைகளை காட்டியபடி சிந்தாமல் சிதறாமல் பாக்கட்டை நிரப்பினார்.


ஜன்னலைத் திறந்து, முகம் கொள்ளா சிரிப்புடன் வெளியே எறிந்தார்..அவர் எறிவதற்கும் பஸ் ஒரு வளைவில் திரும்பவும் சரியாக இருந்தது. திரும்பிய பஸ்ஸை, டிரைவர் சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினார்.


மாப்ளே, டிரைவர்மேல கண்டு பட்டுடிச்சாபேயறைந்த முகத்துடன் மச்சான் கேட்டார். 

மீசைக்கார கண்டக்டர் எழுந்து எங்களை நோக்கி வந்தவர், தன் பருத்த கையை என் எதிரில் இருந்த சீட் கம்பிமேல் போட்டபடியே சொன்னார்:
பஸ் அஞ்சு நிமிசம் நிக்கும்..ஒன்னுக்கு கின்னுக்கு போறவங்க போய்ட்டு வந்துருங்கமறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. @பாரத்... பாரதி...: என்னாச்சு பாரதி..இது ஒன்னும் அடல்ட் கண்டெண்ட் இல்லையே...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 4. @இரவு வானம்: வாழ்த்துக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 5. இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஏற்படும் அவஸ்தையை நன்றாக நகைச் சுவையாக எழுதியுள்ளீர்கள்.10 வயதுக்குள் உள்ள‌ குழந்தைகளைப் பேருந்தில் அழைத்துச் சென்றால் மறக்காமல் வாந்தியைப் பிடிக்கக் கைவசம் பாலிதீன் பைகள் ஐந்தாவது கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  கோவை அய்யாமுத்து என்ற மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் த‌ன் கதையைப் புத்தகமாக எழுதியுள்ளார்.அதில் பிற்காலத்தில் மிகவும் பிரபலமான தமிழகத் தலைவருடன் வடநாடு ரயில் பயண அநுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார்.மேல் பர்த்தில் படுத்து இருந்த தலைவர், காலை ஆறுமணிக்கு அய்யாமுத்துவை எழுப்பி"தம்பி! இந்த கூஜாவைக் கொட்டிவிட்டு, நன்கு கழுவி விட்டு காப்பி வாங்கி வா!" என்றாரம். அய்யாமுத்து கூஜாவைக் கவிழ்த்தினால் அத்தனையும் மூத்திரமாம்.குளிப்பது, சுத்தபததம், மடி ஆச்சாரங்களைப் பற்றி
  மூட நம்பிக்கை என்று பேசிய அத்தலைவ‌ரின் வாழைப்பழ சோம்பேரித்தனம்
  பிரசித்தம்தான்.ஆனால் இரவு முழுக்க பெரிய கூஜா நிறைய மூத்திரம் பெய்து, கூட வந்தவரின் கையில் கொடுத்துக் கொட்டச்சொல்லி, அதே கூஜாவில் காப்பியும் வாங்கச் சொன்ன அவருடை உலக மஹா சோம்பேரித்தனத்தைப் படித்துப் "புல்லரித்துப்போனேன்"

  ReplyDelete
 6. @kmr.krishnan: ஐயா, நான் ஃபோர் அடித்தால் நீங்க சிக்ஸர் அடிக்கிறீங்களே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.