Thursday, December 16, 2010

ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

ஆ.ராசாவாக இருந்தவர் ஆ! ராசாவாக ஆனதால் கடுப்பான எதிர்க்கட்சிகள் ராசாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமெனக் கேட்டும், காங்கிரஸ் மறுத்துவிட்டது. ஆகவே அவர்களையும் உங்களையும் குஷிப்படுத்த நானே மன்மோகன் சிங்கைத் தலைவராகப் போட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவைக் கூட்டிவிட்டேன்..இனி விசாரணை ஆரம்பம்..


மன்மோகன் சிங்: மிஸ்டர் ராசா..நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்?

ராசா: ஏலம் விடச் சொன்னீங்க. 
சிங்: எவ்வளவுக்கு விடச் சொன்னேன்?
ராசா: 1,80,000 கோடிக்கு.
சிங்: விட்டீங்களா
ராசா: விட்டனே!
சிங்: ஏலம் எடுத்தவங்க பணத்தைக் குடுத்தாங்களா?
ராசா: கொடுத்தாங்க.
சிங்: சரி, அதுல 10,000 கோடி இங்க இருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் சார் இது.

அத்வானி: ப்ச்..இவர் சரிப்பட்டு வர மாட்டாருங்க..பேசாம இவருக்கு சுன்னத் பண்ணி குஜராத்ல விட்டுடுவோம்ங்க. மத்ததை நண்பர் மோடி பார்த்துக்கிடுவார்..

சோனியா:(வருகிறார்): என்ன இங்க சத்தம்..என்ன இங்க சத்தம்..
ராகுல்: மம்மி..சிங் ராசாகிட்ட ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடச்சொன்னராம்..ராசாவும் விட்டுட்டு 10,000 கோடியைக் கொண்டுவந்திருக்காரு..மீதி எங்கேன்னு கேட்டா அதான் இதுங்கிறார்..ஹா..ஹா..
சோனியா: மை சன். இப்பவும் இளிப்பா..எதைத் தான் நீ சீரியஸா எடுத்துக்கப் போறியோ..உன்னையெல்லாம் வச்சு...சரி..சரி..மிஸ்டர் ராசா, சிங் உங்ககிட்ட என்ன சொன்னாரு?
ராசா: ஏலம் விடச் சொன்னாரு..
சோனியா: விட்டீங்களா?
ராசா: விட்டேனே.
சோனியா: எவ்வளவுக்கு விட்டீங்க?
ராசா: 1.80,000 கோடிக்கு.
சோனியா: சரி..அதுல 10,000 கோடி இங்கயிருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் மேடம் இது..
சிங்: ஏய்..நான் சத்தமாப் பேசி நானே கேட்ட்தில்லை..என்னைப் பேச வச்சுடாதே..
ராகுல்: சிங்ஜி..பஞ்ச் டயலாக் சூப்பர்..ஹா..ஹா..

பிரகாஷ் காரத்: ராசா, அடிச்ச காசை நீங்க ஏதாவது சின்ன வீட்டுக்குக் கொடுத்தாக் கூட நாங்க விட்டிருப்போம்..ஆனா தேர்தலப்போ அதுல ஒரு பிட்டை மக்களுக்கு கொடுத்து எங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்களே..அதுதான் எங்களைக் கடுப்பேத்துது..

மைத்ரேயன்: ஊழல் விசாரணைக்கு தலைவரா சிங்கைப் போட்ட்து தப்புங்க..எங்க அம்மாவைப் போட்டிருக்கணும்..கடந்த 10 வருஷத்துல பல ஊழல் வழக்குகளைக் கண்டவர் எங்க புரட்சித் தலைவி!
ப்ரணாப் முகர்ஜி: என்னமோ அவர் ஜட்ஜா இருந்து பார்த்த மாதிரி சொல்றாங்களே..இவங்களுக்கு மனச் சாட்சியே கிடையாதா..
மைத்ரேயன்: ஆகவே, ராசாவை டெலிஃபோனில் விசாரணை பண்ண எங்க அம்மா தயாரா இருக்காங்க..மேலும் இந்த ராசாவும் ஃபோன்லதான் உண்மையைப் பேசுவார்..நேர்ல உண்மை பேசி இவருக்குப் பழக்கமிருக்கான்னே சந்தேகம்தான்.
சிங்: நோ..நோ..அதெல்லாம் அனுமதிக்க முடியாது.
மைத்ரேயன்: அப்போ, நீங்க அம்மாகிட்ட பேசுங்க..
சிங்: அய்யோ!..வேணாம்..வேணாம்..ராசாவே பேசட்டும்.

(மைத்ரேயன் சேரிலிருந்து எழுந்து, இடுப்புக்கு மேலே உடம்பை முன்பக்கமாக 30 டிகிரி வளைத்து, முழங்காலுக்கு மேல்பகுதியை 30டிகிரி பின்னால் வளைத்து நின்றுகொண்டு செல்போனில் கால் பண்ணுகிறார்)

மம்தா பானர்ஜி: என்னங்க பண்றார்?

டி.ஆர்.பாலு: இதுக்குப் பேரு கொக்காசனம்’..அதிமுக காரங்க அந்தம்மாகிட்ட பேசறதுக்குன்னே கண்டுபிடிச்சது..இவங்க கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு..

மைத்ரேயன்:(போனில்)..அம்மா..ஆமாங்கம்மா....குடுக்கிறென்மா..ராசா, இந்தாங்க.

அம்மா: என்ன ராசா, விசாரணை அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களா?

ராசா: ஆங்!...ஆமாம்மா..ரொம்பப் படுத்தறாங்க..

அம்மா: பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்..அது புரியாத சின்னப் பசங்க அவங்க..

ராசா: கரெக்டாச் சொன்னீங்கம்மா.

அம்மா: இந்த ஊழல், பணம், கோடி இதெல்லாம் விடுங்க..6 கோடித் தமிழர்கள் மனசை அரிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு விசயத்தை உங்க கிட்டே இப்போ கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும்.

ராசா: கேளுங்கம்மா..சொல்றேன்.

அம்மா: நீங்க அவரைக் கரெக்ட் பண்ணீட்டீங்களா?..இன்னும் இல்லையா?

ராசா: அம்மாஆஆஆஆ!.. சொல்லால் அடித்த சுந்தரி..மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி...பட்ட காயத்துக்கு மருந்தென்னடி....


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

 1. //இதுக்குப் பேரு ‘கொக்காசனம்’..அதிமுக காரங்க அந்தம்மாகிட்ட பேசறதுக்குன்னே கண்டுபிடிச்சது..//

  ReplyDelete
 2. //மை சன். இப்பவும் இளிப்பா..எதைத் தான் நீ சீரியஸா எடுத்துக்கப் போறியோ..உன்னையெல்லான் வச்சு..//

  ReplyDelete
 3. கமெண்ட் எண்ணிக்கையைக் கூட்ட இப்படியெல்லாம் வழி இருக்கா?..அதுசரி, இன்று ஸ்கூல் இல்லையா?

  ReplyDelete
 4. @Baski..: வந்து சிரித்ததற்கு நன்றி பாஸ்கி சார்!

  ReplyDelete
 5. சிரிச்சி சிரிச்சி தாங்க முடியலிங்க, செம காமெடி, இப்படியே கண்டினியூ பண்ணுங்க சீக்கிரமே பிரபல பதிவர் ஆகிடலாம், ஓட்டும் போட்டாச்சி

  ReplyDelete
 6. @இரவு வானம்:ஓட்டு போட்டதுக்கு செக் அனுப்பியிருக்கேன் கோவிந்தா கொரியர் மூலமா..வாங்கிக்கோங்க நைட் ஸ்கை!

  ReplyDelete
 7. ப்ளீஸ் கொரியர் நம்பர் சொல்லுங்க

  ReplyDelete
 8. @இரவு வானம்: 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999.

  ReplyDelete
 9. வாழபழம் காமெடி தோத்துச்சுபோங்க . (மைன்ட் ; எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் )

  ReplyDelete
 10. மைத்ரேயன்: ஊழல் விசாரணைக்கு தலைவரா சிங்கைப் போட்ட்து தப்புங்க..எங்க அம்மாவைப் போட்டிருக்கணும்..கடந்த 10 வருஷத்துல பல ஊழல் வழக்குகளைக் கண்டவர் எங்க புரட்சித் தலைவி!


  ....ha,ha,ha,ha.... செம!

  ReplyDelete
 11. @நா.மணிவண்ணன்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..நடப்பதைத் தானே பாஸ் சொல்லியிருக்கேன்!

  ReplyDelete
 12. @Chitra: பதிவுலகையே சிரிக்க வைக்கும் அக்காவையே சிரிக்க வச்சுட்டேன்..வெற்றி! வெற்றி!

  ReplyDelete
 13. (மைத்ரேயன் சேரிலிருந்து எழுந்து, இடுப்புக்கு மேலே உடம்பை முன்பக்கமாக 30 டிகிரி வளைத்து, முழங்காலுக்கு மேல்பகுதியை 30டிகிரி பின்னால் வளைத்து நின்றுகொண்டு செல்போனில் கால் பண்ணுகிறார்)///அத்தோட போன ஒரு அடி தூரத்துல வச்சு பேசுவாருங்கோ............... குட்

  ReplyDelete
 14. @மங்குனி அமைச்சர்: வாங்க அமைச்சரே!..அடடா அதை வுட்டுட்டனே..அமைச்சர் என்பதால் அதிமுக அமைச்சர்களைப் பற்றி கரைத்துக் குடித்திருக்கிறீர் போலிருக்கிறதே..நன்றி!

  ReplyDelete
 15. //டி.ஆர்.பாலு: இதுக்குப் பேரு ‘கொக்காசனம்’..அதிமுக காரங்க அந்தம்மாகிட்ட பேசறதுக்குன்னே கண்டுபிடிச்சது..இவங்க கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு//
  ha ha super! :-)

  ReplyDelete
 16. @ஜீ...: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜீ!

  ReplyDelete
 17. //அம்மா: நீங்க ‘அவரை’க் கரெக்ட் பண்ணீட்டீங்களா?..இன்னும் இல்லையா?

  ராசா: அம்மாஆஆஆஆ!.. சொல்லால் அடித்த சுந்தரி..மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி...பட்ட காயத்துக்கு மருந்தென்னடி....//

  “சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சுடலாம்... நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்கே முறையிடலாம்”

  செம்ம கலக்கல்....தொடருங்கள்....

  ReplyDelete
 18. ஹா ஹா ஹா
  வேறே என்ன பண்ணுறது
  சிரிச்சுத் தான் தொலைக்க
  வேண்டிருக்கிறது, இவனுகளை தேர்ந்தெடுத்த
  பாவத்தை

  ReplyDelete
 19. @மாணவன்: //“சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சுடலாம்... நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்கே முறையிடலாம்” //...மற்றொரு பொருத்தமான பாடல்..சூப்பர்..

  ReplyDelete
 20. @சிவகுமாரன்: கரெக்டா சொன்னீங்க சார்..வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 21. அம்மா: இந்த ஊழல், பணம், கோடி இதெல்லாம் விடுங்க..6 கோடித் தமிழர்கள் மனசை அரிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு விசயத்தை உங்க கிட்டே இப்போ கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும்.

  ராசா: கேளுங்கம்மா..சொல்றேன்.

  அம்மா: நீங்க அவரைக் கரெக்ட் பண்ணீட்டீங்களா?..இன்னும் இல்லையா?.....Excellent.....You are the first who hit the right spot....!!! Ha ha..ha...ha...

  ReplyDelete
 22. @Chanஹா..ஹாவிற்கு நன்றி சான்..நீங்க ஜாக்கிசான் சொந்தக்காரரா...

  ReplyDelete
 23. குழம்பை ருசிச்சு சாப்பிட்ட எல்லா பயல்களையும் விட்டுவிட்டு கூலிக்கு கசாப்பு போட்ட ராசாவை ஏம்பா இந்த வாரு வாருறீங்க?

  ReplyDelete
 24. @Jayadev Dasஅண்ணன் ராசா தானே சமையல் செஞ்சது..ரெசிப்பி கொடுத்தவங்களை கடைசில போட்டுத் தாக்குனமே..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.