Friday, October 11, 2013

தொப்புள்..ஸாரி..நய்யாண்டி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநரும், ஒரு தேசிய விருது பெற்ற நல்ல நடிகனும் இணையும் படம் என்பதால் முதல் நாளே, ஆவலாய் படம் பார்க்கப்போனேன். ஏன், குறுகுறுன்னு பார்க்கறீங்க..ஓகே, பாஸ்..அதான்..அதே தான்..அது இருக்கான்னும் பார்க்கலாமேன்னு........
ஒரு ஊர்ல.....................:
நாற்பது வயதைத் தொட்ட இரு கல்யாணமாகாத அண்ணன்களின் அன்புத்தம்பி தனுஷ்க்கு நஸ்ரியா மேல் காதல். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி நஸ்ஸியை கல்யாணம் செய்துவிட, அண்ணன்கள் கல்யாணம்வரை வீட்டிலேயே வேறு காரணம்கூறி தங்கவைக்கிறார். ஏற்கனவே காய்ந்த மாடுகளான அண்ணன்கள், நஸ்ஸி மேல் கண் வைக்க, தம்பி பதற..............!
 
 உரிச்சா....:

இன்றைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் அல்லது சாபம்,காமெடிப் படங்கள் தான். பசங்க பாண்டியராஜ் போன்ற இயக்குநர்களே கில்லாடித்தனமாக காமெடியில் இறங்கும்போது, சற்குணமும் அதே வேலையில் இறங்கியிருக்கிறார். முன்பொரு முறை ஹாலிவுட் நடிகர் கமலஹாசன் சொன்னது போல, காமெடிப் படம் எடுப்பது என்பது ரொம்ப கஷ்டமான காரியம். அதற்கு உதாரணமாக ஆகிவிட்டது, இந்தப் படம்.

 'மேல பரம்பில் ஆண்வீடு’ எனும் மலையாளப்படத்தின் தழுவல் இந்தப் படம். உண்மையில் கதையைக் கேட்ட யாருமே, காமெடியில் பட்டையைக் கிளப்பும் வாய்ப்புள்ள கதை என்றே நினைப்பார்கள். 

ஆனால் ‘தனுஷ்க்கு நஸ்ரியா மேல் காதல்’ என்பதை விளக்கவே பாதிப்படம் போய்விடுகிறது. இருவரும் சந்தித்து, நண்பர்கள் உதவி, இவர்கள் லவ்வ ஆரம்பிப்பதற்குள், நம்மை தூக்கம் கவ்வி விடுகிறது. நஸ்ஸியை காதலில் விழ வைக்க, தனுஷின் ஐடியாக்கள் காமெடிக்குப் பதில் கடுப்பைக் கிளப்புகின்றன. உதாரணம், பபூன் வேஷத்தில் அவர் வீட்டு முன் பேசி, ஆடும் காட்சி!

ஒரு வழியாக லவ்வாகி, பெண் வீட்டை விட்டு ஓடி வந்து, தனுஷ் வீட்டில் செட்டிலானபிறகே இது ஒரு காமெடிப் படம் என்பதே நமக்கு உறைக்கிறது. ஆனால்,..டூ லேட்!

 நற்குணம் படைத்த சற்குணத்திற்கு, இந்த மாதிரிப் படம் எடுப்பது அழகல்ல!
தனுஷ் :
இப்போது தான் பரத்பாலாவிடம் சிக்கி வெளிவந்த தனுஷ்க்கு, இன்னொரு சோதனை. மாப்பிள்ளை படம் போல் இதுவும் இன்னொரு படம். அவ்வளவே. அடுத்து வெற்றி மாறனின் படத்திலாவது தனுஷ்க்கு நல்ல காலம் பிறக்கட்டும். நல்ல நடிகனை வேஸ்ட் பண்ணாதீங்கய்யா!

 நஸ்ரியா :

நஸ்ஸி, லஸ்ஸி போன்று ஜில்லென்று இருக்கிறார். (தப்பாயிருந்தா மன்னிச்சிருங்கோ கமிசனர் சார்..Please save me, my family, my state, my india & my Kuwait). ஆனால் காமெடிக் காட்சிகளில் வர வேண்டிய டைமிங் ரியாக்சன்ஸ் மிஸ்ஸிங். அவரும் இது ஒரு சீரியஸான படம் என்றே நடித்திருப்பார் போல!

நஸ்ஸி ஒரு கண்ணியமான பெண் என்பதால், தனுஷைக் கட்டிப் பிடிக்கிறார், முத்தம் கொடுக்கிறார், முன்னாலே பாடலில் ஒரிஜினல் தொப்புளைக் காட்டுகிறார், கொஞ்சம் கிளிவேஜ் காட்டுகிறார், முழங்காலுக்கு மேல் பாவாடை பறக்க ஆடுகிறார்....மற்றபடி குடும்ப கௌரவத்தை கெடுக்கும்விதமாக ஏதும் செய்து விடவில்லை.

ராஜா ராணி படத்தில் நஸ்ஸியை உறுத்தலின்றி ரசிக்க முடிந்தது. ஆனால் இதில் ‘இவ்ளோ பண்ணிட்டுத்தான் அந்த ஆட்டமா?’ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. எதற்கு அப்படி வம்பு செய்தது, சீப் பப்ளிசிட்டி தானா என்றும் புரியவில்லை. சிம்பால ஹன்சி போச்சு, இந்த வம்பால நஸ்ஸி போச்சு..போச்சு, எல்லாம் போச்சு!
 
காமெடியன்ஸ் :

சூரி பிரதான காமெடியனாக வந்தாலும், சாரி பாஸ்! சூரியை விட இமான் அண்ணாச்சி அதிகமாக சிரிக்க வைக்கிறார். இவர்களை விட சத்யனும், சத்யனை விட சுமனும் கலக்குகிறார்கள். தொப்பையை மறைக்க மூச்சை இழுத்துப் பிடிப்பதும், பட்டன் தெரிப்பதும், தேவதை வந்துவிட்டாள் பாடலும் அருமை. கிளைமாக்ஸில் வரும் ராஜபார்ட் ரங்கதுரை பாடல், இன்னும் செம காமெடி.

நஸ்ஸி கர்ப்பமாக, அப்பா நடராஜன் அண்ணன்களை அடிக்க அவர்களோ ‘தெரியாதுப்பா..தம்பியைவும் கேளுங்க’ என்று சொல்லவும் நடராஜன் ‘அவன் ஒரு பச்சை மண்ணுடா’ என்று சொல்லுமிடத்தில் தியேட்டரில் கரகோஷம்!
 
ஒரிஜினல்!
 நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- பாதிப் படம்வரை அந்த அதையும் தாண்டிப் புனிதமான காதல், மொக்கைத்தனமாக டெவலப் ஆவது

- இன்னைக்கு காமெடிப் படம் தான் ஓடுது, அதனால நம்மளும் எடுத்துற வேண்டியது தான் என்று துணிந்து இறங்கியிருப்பது

- பாடல் காட்சிகளில் நஸ்ஸியின் காஸ்ட்யூம். (மகா மட்டம்)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- தனுஷ்
- ஜிப்ரானின் ஹிட் பாடல்கள்
- சுமன், சத்யன் காமெடிப் போர்சன்

பார்க்கலாமா? :
கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

  1. இந்தக் கதைல பல படங்கள் வந்த ஞாபகம்.....

    ReplyDelete
  2. /////இன்றைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் அல்லது சாபம்,காமெடிப் படங்கள் தான். /////

    காமெடிப்படம்னு சொல்லி எடுக்கிற படங்கள்னு சொல்லுங்க.... ராஸ்கல்ஸ் படமா எடுக்கிறானுங்க...!

    ReplyDelete
  3. ////ஒரு வழியாக லவ்வாகி, பெண் வீட்டை விட்டு ஓடி வந்து, தனுஷ் வீட்டில் செட்டிலானபிறகே இது ஒரு காமெடிப் படம் என்பதே நமக்கு உறைக்கிறது. ஆனால்,..டூ லேட்!
    /////

    அதான் காமெடி படம்னு தெரிஞ்சிடுச்சில்ல, அப்படியே அடுத்த ஷோவுக்கு போய் மறுக்கா பாத்திருக்கனும்.....

    ReplyDelete
  4. ////நல்ல நடிகனை வேஸ்ட் பண்ணாதீங்கய்யா!///

    நல்லவேள சைக்கோ கேரக்டர் கொடுக்கலேன்னு நெனச்சி சந்தோசப்படும்யா....

    ReplyDelete
  5. கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை///
    செம காமெடிய்யா. வாய்விட்டு சிரித்தேன். செங்கோவி டச்.

    ReplyDelete
  6. ///கொஞ்சம் கிளிவேஜ் காட்டுகிறார் (இருப்பதே....!!)//////

    இதாவது ஒரிஜினலாய்யா......?

    ReplyDelete
  7. யோவ் அதென்னய்யா ஹாலிவுட் நடிகர் கமல். இப்படில்லாம் சொல்லிட்டு இருந்தே அப்புறம் கமல் இந்தியாவுலேருந்து வெளியாகி குவைத்ல உன் அபார்ட்மென்டுக்கு அடுத்த அபார்ட்மென்ட்ல குடியேறிடுவாரு

    ReplyDelete
  8. உமக்கு நஸ்ரியாவை பார்த்தால் நையாண்டியா தெரியுதா? பாவம் அந்த பொண்ணு ஐ சப்போர்ட் நஸ்ரியா. ஹி.ஹிம்ஹி

    ReplyDelete
  9. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்தக் கதைல பல படங்கள் வந்த ஞாபகம்.....//

    மலையாளத்துலயா?

    ReplyDelete
  10. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    /////இன்றைய தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் அல்லது சாபம்,காமெடிப் படங்கள் தான். /////

    காமெடிப்படம்னு சொல்லி எடுக்கிற படங்கள்னு சொல்லுங்க.... ராஸ்கல்ஸ் படமா எடுக்கிறானுங்க...!//

    அவங்களும் என்னமோ ட்ரை பண்றாங்க..சட்டில இருந்தாத் தானே?

    ReplyDelete
  11. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அதான் காமெடி படம்னு தெரிஞ்சிடுச்சில்ல, அப்படியே அடுத்த ஷோவுக்கு போய் மறுக்கா பாத்திருக்கனும்.....//

    யோவ், மனுசனாய்யா நீரு?..இன்னும் வலிக்குதுன்னு அழுதுக்கிட்டிருக்கேன்..

    ReplyDelete
  12. //
    Blogger ரஹீம் கஸாலி said...

    கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை///
    செம காமெடிய்யா. வாய்விட்டு சிரித்தேன். செங்கோவி டச். //

    நல்ல படம் எடுக்கிறவன்லாம் நாறிப்போய்க் கிடக்கான்..இவங்க தொப்புள் பிரச்சினையை வச்சே பப்ளிசிட்டி ஏத்துறானுங்க!

    ReplyDelete
  13. //ரஹீம் கஸாலி said...

    யோவ் அதென்னய்யா ஹாலிவுட் நடிகர் கமல். இப்படில்லாம் சொல்லிட்டு இருந்தே அப்புறம் கமல் இந்தியாவுலேருந்து வெளியாகி குவைத்ல உன் அபார்ட்மென்டுக்கு அடுத்த அபார்ட்மென்ட்ல குடியேறிடுவாரு//

    இல்லைய்யா..உள்ளூர் ஆளுன்னு சொன்னா யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்க, அதான்!

    ReplyDelete
  14. ஆஹா நஸ்ரியா செய்தி கேட்டே பார்க்க ஆவல் இல்லை இனி உங்கள் விமர்சனம் பார்த்த பின் ஏனே 15 ஈரோ வேஸ்ட்!ம்ம்

    ReplyDelete
  15. //// பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///கொஞ்சம் கிளிவேஜ் காட்டுகிறார் (இருப்பதே....!!)//////

    இதாவது ஒரிஜினலாய்யா......?//

    அது அசந்த நேரத்துல ஆட்டையைப் போட்டது!

    ReplyDelete
  16. //ரஹீம் கஸாலி said...

    உமக்கு நஸ்ரியாவை பார்த்தால் நையாண்டியா தெரியுதா? பாவம் அந்த பொண்ணு ஐ சப்போர்ட் நஸ்ரியா. ஹி.ஹிம்ஹி//

    யோவ், நீரு சப்போர்ட் பண்ற அளவுக்கு அங்க ஒன்னும் பெருசா திறமை இல்லைய்யா!

    ReplyDelete
  17. //தனிமரம் said...

    ஆஹா நஸ்ரியா செய்தி கேட்டே பார்க்க ஆவல் இல்லை இனி உங்கள் விமர்சனம் பார்த்த பின் ஏனே 15 ஈரோ வேஸ்ட்!ம்ம் //

    நேசரே, ஏதோ ஆன்மீக உலா போவதாகச் சொன்னீர்..இங்கே நஸ்ஸி தொப்புளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்? உலா என்னாச்சு?

    ReplyDelete
  18. நன்றி!!!மிகவும் ரசனையுடனும்,எதிர்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்புடனும் சென்ற உங்களுக்கு,'அவலாவது' (ஆயுத பூஜை வேறு!)கிடைத்ததே என்று சந்தோஷப்படுங்கள்!!!படுங்கள்!படுங்கள்!!படுங்கள்!!!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  19. தனுஷுக்காக பார்க்கலாம்...
    வேற என்ன பொழுது போக்கு இருக்கு... இதையும் பார்த்துட வேண்டியதுதான்....

    ReplyDelete
  20. //Subramaniam Yogarasa said...

    நன்றி!!!மிகவும் ரசனையுடனும்,எதிர்பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்புடனும் சென்ற உங்களுக்கு,'அவலாவது' (ஆயுத பூஜை வேறு!)கிடைத்ததே என்று சந்தோஷப்படுங்கள்!!!படுங்கள்!படுங்கள்!!படுங்கள்!!!ஹ!ஹ!!ஹா!!!//

    ஹா..ஹா..ஹா!

    ReplyDelete
  21. ///கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!///

    இதுதான் ஒரிஜினல் ‘நையாண்டி’.

    ReplyDelete
  22. முன்பொரு முறை ஹாலிவுட் நடிகர் கமலஹாசன் //
    No comments

    சுமன், சத்யன் //
    Boss, athu SRIMAN

    ReplyDelete
  23. பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!//

    பக்கத்து தியேட்டரில் புல்லுக்கட்டு முத்தம்மாதான் ஓடுது. நான் என்ன செய்ய?

    ReplyDelete
  24. ///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!//

    பக்கத்து தியேட்டரில் புல்லுக்கட்டு முத்தம்மாதான் ஓடுது. நான் என்ன செய்ய?/////

    அததான் ஏற்கனவே 12 தடவ பாத்திருப்பியே..... இப்போ 13 தடவையா போய் பாரு... பரவால்ல

    ReplyDelete
  25. //சே. குமார் said... [Reply]

    தனுஷுக்காக பார்க்கலாம்...
    வேற என்ன பொழுது போக்கு இருக்கு... இதையும் பார்த்துட வேண்டியதுதான்....
    //

    வேற வழியில்லைன்னா கிணத்துல விழாலாம், தப்பில்லை!

    ReplyDelete
  26. //திண்டுக்கல் தனபாலன் said...

    முடிவில் சொன்னது சரி...!//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  27. //KANA VARO said...

    சுமன், சத்யன்.....Boss, athu SRIMAN//

    அட ஆமால்ல..பார்த்தீங்களா படம் எந்தளவுக்கு என்னை கன்ஃபியூஸ் பண்ணிடுச்சுன்னு!

    ReplyDelete
  28. //உலக சினிமா ரசிகன் said...

    ///கண்டிப்பாக பாருங்கள் - பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!///

    இதுதான் ஒரிஜினல் ‘நையாண்டி’.//

    நீங்க பேஸ்புக்ல சொல்லியிருந்தீங்களே சார், அதை விடவா?

    ReplyDelete
  29. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பக்கத்து தியேட்டரில் ஓடும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை!//

    பக்கத்து தியேட்டரில் புல்லுக்கட்டு முத்தம்மாதான் ஓடுது. நான் என்ன செய்ய?//

    யோவ், அதான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல, திருந்தும்யா...எல்லாரும் நம்மளை மாதிரியே வர்றாங்களே!

    ReplyDelete
  30. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அததான் ஏற்கனவே 12 தடவ பாத்திருப்பியே..... இப்போ 13 தடவையா போய் பாரு... பரவால்ல//

    அந்த அடி வாங்குன சொம்பையா 12 தடவை பார்த்தாரு?

    ReplyDelete
  31. இதுதான் ஒரிஜினல் தொப்புளா... ப்பூ இம்புட்டுத்தான...இதை வச்சி பம்பரம் ,கோலி கூட ஆடமுடியாதே... நான் ஏதோ நமீதாவையும் சகிலாவையும் பீல்ட விட்டே தொரத்துற மாதிரி இருக்கும்னு நெனைச்சிகிட்டு இருக்கேன்.. :-)

    ReplyDelete
  32. அதொண்ணும் அவ்ளோ 'ஆழம்' கிடையாதுங்க!Manimaran!!!

    ReplyDelete
  33. நல்ல விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  34. நல்ல விமர்சனம். நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.