Friday, February 28, 2014

தெகிடி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
படப்பெயரைப் பார்த்தால் தமிழ் மாதிரியே தெரியவில்லை. நடிகர்கள் யாரும் மனம் கவரும் ஆட்கள் இல்லை. ஆனாலும் நாளைய இயக்குநர்-2ல் முதல் பரிசு வென்ற ரமேஷ் இயக்கிய படம் என்பதாலும் த்ரில்லர் படம் என்பதாலும் சி.வி.குமாரின் தயாரிப்பு(ரிலீஸ்) என்பதாலும் துணிந்து போனேன். 
ஒரு ஊர்ல..:
எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு ஒரு டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். இவரும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன க்ளையண்ட் யார்? என ஹீரோ துப்பறிவதே கதை.

உரிச்சா....:
ஒரு துப்பறியும் படத்திற்கே உரிய நீட்டான திரைக்கதை. அமைதியாக ஆரம்பித்து, முதல் கொலை விழுந்தது முதல் பரபரப்பாகச் செல்கிறது. அதிக நடிகர் கூட்டம் இல்லாமல், முக்கிய பாத்திரத்தில் ஏழு பேர் மற்றும் துணைப்பாத்திரங்களாக இன்னும் ஏழுபேர் என சுருக்கமாக ஆட்களை நடிக்க வைத்திருப்பதே படத்திற்கு க்ரிப்பைக் கொடுக்கிறது.

ஹீரோ அசோக் செல்வனுக்கு முதல் வேலைக்கான ஆஃபர் வர, சென்னை வருகிறார். அவர் வேலையில் சேரும் டிடெக்டிவ் நிறுவனத்தின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் பாலிசியை மீறுகிறார். அதுவரைக்கும் சாதாரணமாகச் செல்லும்படம், அதன்பின் நடக்கும் சம்பவங்களால் சூடு பிடிக்கிறது.

கொஞ்சம் நடிகர்கள் தான் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட், அருமை. 
ஒரு ஹாலிவுட் பட ஸ்டைலில் நகரும் படத்தில் மிஸ் ஆவது, பரபரப்பான ஆக்சன் சீகுவென்ஸ் தான். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது. அதனால் தான் முதல்பாதியிலும் இரண்டாம்பாதியிலும் செமயான ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங்கை ஹாலிவுட்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் அது இல்லாததால், ஹீரோ பெரிதாக ஒன்றுமே செய்யவில்லையோ என்று தோன்றிவிடுகிறது. வெறும் மைண்ட் கேம், படிக்க நன்றாக இருக்கலாம், விஷுவலுக்கு அது மட்டும் போதாதே!

இன்னொரு குறை, ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர். பிறகு இயக்குநர் சுதாரித்து தனி ரூட்டில் ஹீரோவை துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது அருமை.

அசோக் செல்வன்:
வில்லாவுக்கு அடுத்து தனி ஹீரோவாக இவருக்கு இரண்டாவது படம். அசோக் செல்வனுக்கு வில்லாவில் அடித்த பேய் இன்னும் தெளியவில்லை போல. எப்போதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஏ செண்டருக்கு இது போதும். பி அண்ட் சி செண்டரை ரீச் செய்ய வேண்டும் என்றால், இன்னும் இறங்கி அடிக்கணும் பாஸ்!

ஜனனி அய்யர்:
அவன் இவனில் நடித்து பின்னர் காணாமல் போன ஜனனிக்கு இது நல்ல ஒரு ரீ எண்ட்ரி. அவருக்கு ப்ளஸ்ஸே கண்கள்(மட்டும்?) தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். அவருக்குத் தெரியாமலேயே ஹீரோ அவரைக் காப்பாற்ற முயல்வதால், த்ரில் ஏரியாவுக்குள் அவருக்கு பெரிதாக வேலையில்லை. காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார். 
 
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- சுரத்தேயில்லாத ஹீரோ கேரக்டர்
- பாடல்கள், (நல்லவேளை டூயட் இல்லை!)
- பேசியே துப்பறிந்து முடித்தது..கும்மாங்குத்து மிஸ்ஸிங்
- சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். உதாரணமாக...இரண்டாம்கட்ட வில்லனின் ஒரிஜினல் பெயர் பூர்ண சந்திரன். சடகோபன் என்ற பெயரில் ஹீரோவை ஏமாற்றுகிறார். ஆனால் அவர் பற்றிய நியூஸ் வந்த பேப்பரில் பொய்ப் பெயரையே போட்டிருப்பது!
- முக்கியமாக, படத்தின் பெயர். சூதாட்டம் என்று அர்த்தமாம்..முடியல!..உங்க தமிழ் +டேக்ஸ் ஆர்வத்தை நாங்க பாராட்டறோம். ஆனாலும் இந்த மாதிரி பேரைக் கேட்டாலே நம்மாளுக தெறிச்சு ஓடிடுவாங்க பாஸ். 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நீட்டான திரைக்கதை..வெல்டன் ரமேஷ்.
- காளி நடித்திருக்கும் நண்பன் கேரக்டர். வில்லாவிலேயே கவனிக்க வைத்தவர். இதில் நண்பன்+காமெடியனாக புரமோசன். சீக்கிரமே தமிழில் முக்கியமான நடிகராக ஆவார். நல்ல நடிப்பு.
- பிண்ணனி இசை
- ’பண்ணையார்’ ஜெயப்ரகாஷின் நடிப்பு
- சஸ்பென்ஸை கடைசிவரை மெயிண்டெய்ன் செய்தது
- இரண்டு மணிநேரத்தில் படத்தை முடித்தது

பார்க்கலாமா? :

த்ரில்லர் பட விரும்பிகள், பார்க்கலாம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

  1. உங்க விமர்சனத்துகாக தான் இவ்வளவு நேரமா உட்கார்ந்திருந்தேன்.. ஒரு முறை போய் பார்க்கலாமா பாஸ் ?

    ReplyDelete
  2. ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் .. பார்க்காலையா நீங்க..

    ReplyDelete
  3. ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர் போகலாம்னு தோணுது. எல்லாம் உங்க ரிவ்யூ நம்பித்தான் அண்ணே..!! நாளைக்கு போயிட்டு வந்து மிச்சத்த பேசிக்குவம்.. :) ;)

    ReplyDelete
  4. பாடல்கள் ஏன் மைனஸ்,, ரெண்டு மூணு பாட்டு நல்லாயிருக்கே கேட்க, படத்தில் விண்மீன் விதையாய், யார் எழுதியதோ பாடல்கள் இல்லையா?

    ReplyDelete
  5. @கோவை ஆவி ரொம்ப எதிர்பார்க்காமல் போங்க, ஆவி.

    ReplyDelete
  6. //கோவை ஆவி said...
    ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் .. பார்க்காலையா நீங்க..//

    ஹி..ஹி..அவர் எங்க லிஸ்ட்ல இல்லாததால தெரியலை.

    ReplyDelete
  7. //Andichamy G said...
    ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர் போகலாம்னு தோணுது. எல்லாம் உங்க ரிவ்யூ நம்பித்தான் அண்ணே..!! நாளைக்கு போயிட்டு வந்து மிச்சத்த பேசிக்குவம்.. :) ;)//

    ரைட்டு..ஹாலிவுட் படம் பார்க்குற உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை!

    ReplyDelete
  8. //கோவை ஆவி said...
    பாடல்கள் ஏன் மைனஸ்,, ரெண்டு மூணு பாட்டு நல்லாயிருக்கே கேட்க, படத்தில் விண்மீன் விதையாய், யார் எழுதியதோ பாடல்கள் இல்லையா?//

    தியேட்டர்ல தான் முதல்முறை கேட்டேன். அவ்வளவா ஈர்க்கலை. மேலும், இந்த படத்துக்கு பாட்டு தேவையில்லை.

    ReplyDelete
  9. பண்ணையாரும் பத்மினியும், இது கதிர்வேலன் காதல், புலி வால், பிரம்மன் ,ஆகா கல்யாணம் ,
    wolf of wall street , இப்ப தெகிடி. ஒரு மாசத்துல ஒரு மனுசன் இவ்ளோ படத்தையா பாக்கறது.

    சென்சார் போர்டு ல வேல பார்கறீங்களா இல்ல தியேட்டர் ஆபரேடரா இருக்கீங்களா ?

    ReplyDelete
  10. @வானரம் . நான் எழுதுனதை வச்சு சொல்றீங்களா..இன்னும் இருக்கு, சொல்லவா?

    Dial M for Murder
    Shadow of Doubt
    The man who knew too much
    Psycho
    The birds
    The 39 steps
    There is end
    8mm
    Star wars
    Jaw

    சோ, இன்னுமா உனக்கு பைத்தியம் பிடிக்கலைன்னு தான் நீங்க கேட்கணும்!

    ReplyDelete
  11. @வானரம் . யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் தவிர வேற எங்கேயும் உங்க கமெண்ட் பார்க்கலை. அதனால மத்தவங்க நானே எனக்கு உண்டாக்கிக்கிட்ட ஃபேக் ஐடின்னு நினைச்சுடப் போறாங்கய்யா..ஏதாவது க்ளூ கொடுக்கலாம்ல?

    ReplyDelete
  12. சரியாய் இறங்கி அடிக்கலேன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...

    ReplyDelete
  13. பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...

    ReplyDelete
  14. குமாரு படத்துக்கு செம ப்ரோமோஷன் கொடுக்குராப்புல.. பலரும் இந்த படத்தை பார்க்குரதகு ஆர்வமா இருக்காங்களே...

    அப்புறம் எனகென்னமோ அந்த வானரம் பேஸ்புக் இலியாசா இருக்குமோன்னு ஒரு டவுட்டு, யாரவது க்ரிமினாலஜி படிச்சவுங்கள கேட்டு பார்க்கலாம்...

    ReplyDelete

  15. "யோவ் வானரம், யாருய்யா நீரு? என் ப்ளாக் தவிர வேற எங்கேயும் உங்க கமெண்ட் பார்க்கலை"




    http://realsanthanamfanz.blogspot.in/2014/02/blog-post_6658.html

    ReplyDelete
  16. நன்றே சொன்னீர்கள்,விமர்சனம்!நன்றி.///பார்க்கலாமா? :த்ரில்லர் பட விரும்பிகள், பார்க்கலாம்.///பார்ப்போம்!

    ReplyDelete
  17. கோவை ஆவி said...ஜனனி அய்யர் அவன் இவன் படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் .. பார்க்காலையா நீங்க..//செங்கோவி said... ஹி..ஹி..அவர் எங்க லிஸ்ட்ல இல்லாததால தெரியலை.///ஹ!ஹ!!ஹா!!!எங்க 'லிஸ்ட்' ல............ஹி!ஹி!!ஹீ!!!ஹன்சி தான் மொதல்ல!

    ReplyDelete
  18. மொ.ராசு (Real Santhanam Fanz)

    "அப்புறம் எனகென்னமோ அந்த வானரம் பேஸ்புக் இலியாசா இருக்குமோன்னு ஒரு டவுட்டு"

    நான் பேஸ்புக் ல இல்லிங்கோ.

    "யாரவது க்ரிமினாலஜி படிச்சவுங்கள கேட்டு பார்க்கலாம்"

    ஜுவாலஜி படிச்சவங்கள கேட்டு பார்க்கவும்



    ReplyDelete
  19. படம் பார்த்த பிறகு, உங்க விமர்சனம் படித்தேன்.. அந்த ஆக்சன் சீக்வென்ஸ் மிஸ்ஸிங், மற்றும் லாஜிக் ஓட்டைகள் எல்லாம் சரியா எழுதியிருக்கீங்க.. ஜெய்பரகாஷ் கருத்தை தவிர எல்லாத்தையும் ஒத்துக்கறேன்.. அந்தாளு செம்மம போரு..

    ReplyDelete
  20. "சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  21. //திண்டுக்கல் தனபாலன் said...
    சரியாய் இறங்கி அடிக்கலேன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...//

    ஆமா, பார்க்கலாம்ஜி.

    ReplyDelete
  22. // ஸ்கூல் பையன் said...
    பாக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்...//

    வைத்தீஸ்வரன் கோவில் போய். ஓலைச்சுவடி பார்த்து முடிவு பண்ணுவோமா?

    ReplyDelete
  23. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    குமாரு படத்துக்கு செம ப்ரோமோஷன் கொடுக்குராப்புல.. பலரும் இந்த படத்தை பார்க்குரதகு ஆர்வமா இருக்காங்களே... //

    ஏ செண்டர்ல பார்ப்பாங்க மொக்கை.

    ReplyDelete
  24. //கோவை ஆவி said...
    படம் பார்த்த பிறகு, உங்க விமர்சனம் படித்தேன்.. அந்த ஆக்சன் சீக்வென்ஸ் மிஸ்ஸிங், மற்றும் லாஜிக் ஓட்டைகள் எல்லாம் சரியா எழுதியிருக்கீங்க.. ஜெய்பரகாஷ் கருத்தை தவிர எல்லாத்தையும் ஒத்துக்கறேன்.. அந்தாளு செம்மம போரு..//

    நன்றி ஆவி அவர்களே..பாடல்களை முதலிலேயே கேட்காமல் போனது இன்னொரு மிஸ்டேக்.

    ReplyDelete
  25. //Subramaniam Yogarasa said...
    "சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.//

    அது கன்னடப் படம்ன்னு நினைக்கிறேன்.முடிந்தால்.....!

    ReplyDelete
  26. நேத்துத் தான் பாக்கக் கெடைச்சுது!அருமை.ரெண்டு மணி நேரம் அசையாம உக்காந்து பாத்த படம்னா இதான்.தியேட்டர்ல பாத்தவங்க கூட,இண்டர்வெலுக்கு எந்திரிச்சு பாத்-ரூம் போயிருப்பாங்க!ஆனா நான்,எந்திரிக்கவே இல்ல!

    ReplyDelete
  27. குட் ரெவிஎவ்......

    ReplyDelete
  28. அடடா பாக்குறேன்...விமர்சனத்துக்கு நன்றிங்க்...

    ReplyDelete
  29. படத்தின் முடிவில் "புருசோத்தமன் வைபவ்" ஏன் கதைநாயகனைத் தொடர்புகொள்கிறார்?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.