Monday, June 11, 2012

முருக வேட்டை_12


காலையில் காலிங் பெல் சத்தம் கேட்டு, கவிதா கதவைத் திறந்தாள். கருப்புச் சட்டையுடன் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளே இல்லையென்பதில் தீவிரமாக இருப்பவர்கள்.

கவிதாவைப் பார்த்ததும் சிரித்தபடியே “வணக்கம்” என்றார்கள்.

கவிதா “வாங்க ஐயப்ப சாமீகளா...என்ன மீட்டிங்கா? ஊர்வலமா?’ என்றாள்.

“மீட்டிங் தான்க்கா..சார் இல்லியா?” என்றான் ஒருவன்.

“குளிச்சுக்கிட்டிருக்காங்க..டொனேசன் தானே?’ என்றாள்.

“ஆமா” என்றான் அசட்டுச் சிரிப்புடன்.

“உள்ளே வந்து உட்காருங்க” என்று சொல்லிவிட்டு கவிதா உள்ளே போய் பணம் எடுத்து வந்தாள். 

“நன்றி” என்றபடியே வாங்கிக்கொண்டார்கள்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை மீட்டிங். எங்க கட்சித்தலைவரே வர்றார்..நீங்க வர மாட்டீங்க..சாரையாவது வரச்சொல்லுங்க” என்று சொன்னபடி கிளம்பினார்கள்.

“நான் சொல்லாமலே அவர் வந்திடுவார்..கவலைப்படாதீங்க” என்றபடியே அவர்களை வழியனுப்பி வைத்தாள் கவிதா.

சரவணன் சிறிது நேரம் கழித்து வந்து “யாரு?” என்றான்.

“உங்க கூட்டாளிங்க..பகுத்தறிவாதிங்க..வர்ற சண்டே ஏதோ மீட்டிங்காம்..டொனேசன் வாங்கிட்டுப் போறாங்க.” என்றாள்.

”ஆங்..அன்னிக்கே வழில பார்த்துச் சொன்னாங்க..சரி, லேட் ஆகிடுச்சு..நான் கிளம்பறேன்” என்ரான்.

கவிதா “எங்கே?’ என்றாள்.

சரவணன் ஆச்சரியத்துடன் “இதென்ன கேள்வி? ஆபீசுக்குத் தான்” என்றான்.

அவள் சிரித்தபடி “ஓ..ஓகே..ஓகே” என்றாள்.மறுநாள் ஆபீஸ் வந்ததும், அகிலா முதல் வேலையாக கவிதாவிற்குப் போன் செய்தாள்.

“ஹலோ”

“கவிதா..மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தெ டே..ஹேப்பி பர்த்டே “

“தேங்க்ஸ்க்கா”
”அப்புறம், மூணு மாசம் முடிஞ்சிடுச்சு இல்லியா?”

”ஆமாக்கா..முதல் மூணு மாசம் ரொம்ப கேஃபுல்லா இருக்கணும்னு சொன்னீங்களே..”

“ஹா.ஹா..ஆமா, இனிமே ஒரே எஞ்சாய்மெண்ட் தானா?”

கவிதா சிரித்தாள். “அய்யோ..அக்கா நான் அதைச் சொல்லலைக்கா..என்ன இப்படில்லாம் பேசறீங்க?” 
“பேசுனா என்ன தப்பு? யாராவது பேசித் தானே ஆகணும்? நிதானமா, பார்த்து நடந்துக்கணும் சரியா?”

“அய்யோ, அந்தப் பேச்சை விடுங்கக்கா” என்றாள் கவிதா வெட்கத்துடன்.

“சீரியசாத் தான்டி சொல்றேன்...இப்போ சந்தோசமா இருக்கிறது நல்லது..அது சுகப்பிரசவத்துக்கும் ஹெல்ப் பண்ணும், புரியுதா?’ என்றாள் அகிலா.

கவிதா சிரிப்புடன் “ம்” என்றாள்.

“அப்புறம் டாக்டர் மூணு மாசத்துக்கு ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கச் சொன்னாருல்ல? இனிமே அது தேவையான்னு டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..அது குழந்தையோட நரம்பு வளர்ச்சிக்கு நல்லது..ஹே, குழந்தைங்கவும் தான் ஞாப்கம் வருது. கருவுக்கு கை, கால், முகம் எல்லாம் வளர்ந்து பார்க்கறதுக்கு இப்போத் தான் குழந்தை மாதிரி இருக்கும், தெரியுமா? “

“ஓ..அப்படியா?”

“ஆமா..இப்போ வாமிட்டும் குறைஞ்சிடுச்சுல்ல?”

“எங்கே குறைஞ்சிருக்கு...!”

“குறையும்..குறையும்..இனிமே நீ கொஞ்சம் கொஞ்சமா வாக்கிங் போகலாம்..எதுக்கும் டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..ரொம்ப நேரம் நிற்கவும் வேண்டாம், நடக்கவும் வேண்டாம். ரொம்ப நேரம் நின்ன, நடந்தா கருப்பைக்குப் போற ரத்த ஓட்டம் குறையும்..பார்த்துக்கோ”

“சரிக்கா”

“சரி, உன் பர்த் டே-க்கு என்ன ப்ளான்?”

“ப்ளான்லாம் ஒன்னுமில்லைக்கா”

“சரவணன் எங்கேயும் கூட்டிட்டுப் போகலையா?”

“அவருக்கு ஞாபகம் இருந்தாத் தானே கூட்டிட்டுப் போறதுக்கு?”

“என்னது உன் பர்த் டே ஞாபகம் இல்லியா?”

“ஆமா..அவர் காலைலயே ஆபீசுக்கு கிளம்பிப் போய்ட்டாரு..வந்திருப்பாரே, பார்க்கலியா?”

“கவனிக்கலை..சரி, நான் அனுப்பி வைக்கிறேன்”

“இருக்கட்டும்க்கா..பார்த்துக்கலாம்”

“நீ சும்மா இரு..” என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தவள் இண்டர்காமில் சரவணனைக் கூப்பிட்டாள்.

"குட் மார்னிங் சரவணன்”

“மார்னிங் மேம்”

”சரவணன், இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் நாள்..என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்”

சரவணன் தன் டேபிளில் இருந்த காலண்டரைப் பார்த்தான்..அக்டோபர் 24..இன்னிக்கு என்ன..ஓ, மை காட்!

“மேம், கவி பர்த் டே”

“மறந்தாச்சா?”

“ஆமா..ஏதோ ஞாபகத்துல...”

“நேத்துப் பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க..உங்ககிட்ட ஃப்ரான்க்கா பேசலாங்கிறதால தான் அப்படிப் பேசுனேன்..முதல்ல கிளம்புங்க”

“ஓகே, மேம்”

”ச்சே..எப்படி மறந்தோம்..’ என்று யோசித்தபடியே மறுபடியும் காலண்டரைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

10-24-2010------ செவ்வாய்க்கிழமை.

10-24-செவ்வாய்..மார்ஸ்!

MARS-1024 ஞாபகத்தில் வந்தது. 

அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

(வேட்டை.....தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

 1. அப்ப யார்தான் கொலையாளி செங்கோவி சார் கவிதாவா!ம்ம்

  ReplyDelete
 2. பாண்டியன் தலை ஆஹா!ம்ம் தொடருங்கோ! ஆவலுடன்!

  ReplyDelete
 3. வணக்கம்,செங்கோவி!அன்பாக் கேப்பாங்க,அச்சுறுத்திக் கேப்பாங்க,சொல்லிடாதீங்க செங்கோவி,ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
 4. @Yoga.S.

  ம்ஹூம்..சொல்ல மாட்டேன்..நேசருக்கு நீங்களும் சொல்லிடாதீங்க ஐயா.

  ReplyDelete
 5. போனவாட்டி டிவிஸ்ட்டு திரும்பிடுச்சின்ன உடனே அண்ணன் கோவமாகிட்டாரு போல......... பொங்கிட்டாரு........!

  ReplyDelete
 6. செங்கோவி said... [Reply] @Yoga.S. ம்ஹூம்..சொல்ல மாட்டேன்..நேசருக்கு நீங்களும் சொல்லிடாதீங்க ஐயா.///நானா?ஊஹும்!மூளையைக் குடைஞ்சு கண்டு புடிக்கட்டும்,ஹ!ஹ!ஹா!!!!

  ReplyDelete
 7. அய்யய்யோ என்னாது திடீர்னு ஷாக் குடுக்கிறீங்க?

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.