Monday, June 11, 2012

தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு..

எனக்கு தமிழ்வாசியை மிகவும் பிடிக்கும். ‘இலக்கியம் கிலக்கியமெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..ஏதோ மனசுல பட்டதை எழுதறேன்’ என்று வெளிப்படையாகப் பேசுபவர். இந்த விடுமுறையில் வெகுசில நண்பர்களை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன். ஆனாலும் நேரமின்மையால் முடியவில்லை. ஆனாலும் தமிழ்வாசியிடம் முன்பே மதுரை வருவதாக வாக்கு கொடுத்துவிட்டதால் எப்படியும் ஒருநாள் அவரைச் சந்திப்பது என்று முடிவு செய்தேன்.

கோவில்பட்டியில் ஒருநாள் நில விஷயமாக காலை முதல் வேகாத வெயிலில் அலைந்து கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு மேல் வருவதாகச் சொன்ன ஒரு பார்ட்டி, திடீரென்று இன்று வர முடியாது என்று சொல்லிவிட, இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் வராது என உடனே மதுரைக்குப் பஸ் ஏறினேன். காலை முதல் அலைந்ததில் பார்ப்பதற்கு பரதேசி மாதிரி ஆகியிருந்தேன். ஆனாலும் ‘நாம் என்ன தமிழ்வாசியை பொண்ணா பார்க்கப் போறோம்?’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். (இல்லேன்னாலும்..)

பஸ் மதுரையை நெருங்கும்போது தான் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது.  “செங்கோவி, நான் நேத்துப் போட்ட பதிவு படிச்சீங்களா? எப்படி இருந்துச்சு? மூணாவது பாரால நாலாவது வரில அந்தப் பதிவருக்கு ஒரு உள்குத்து வச்சிருந்தேனே, கவனிச்சீங்களா? என்னது கவனிக்கலையா? என்னங்க இது, யாருமே கவனிக்க மாட்டேங்கிறீங்க..அப்புறம் அந்த பெண் பதிவர் பத்தி.................................”-இப்படி தமிழ்வாசியிடம் சேட்டில் மாட்டினாலே நோண்டி நோண்டி கேள்வி கேட்பாரே...’நாம வேற ஒரு வாரமாப் பதிவே படிக்கலியே..என்னெல்லாம் கேட்கப் போறாரோ?..இப்படி திடீர்னு பேக்கு மாதிரிக் கிளம்பிட்டமே’ன்னு யோசிச்சுக்கிட்டே பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய் இறங்குனேன். (ஃபாரின் பதிவர்னா இடையில் திருமங்கலத்தில் இறங்கி பிஸ்ஸி விட்டு கூல் ட்ரிங்ஸ் சாப்பிட்டதையும் டீடெய்லா எழுதணும்னு சொல்றாங்களே, அப்படியாங்க?)

பெரியார் அருகே காத்திருந்த போது தமிழ்வாசி வந்து சேர்ந்தார். பார்ப்பதற்கு அமுல்பேபி போன்று இருந்தார். சிவப்பாக, ஹேண்ட்சமாக இருக்கும் நபர்களையெல்லாம் உத்து உத்துப் பார்த்தார். இனியும் பொறுக்கக்கூடாது என்று அவரைப் பார்த்து கையசைத்தேன். “செங்கோவி” என்றேன்.

ஒரே நேரத்தில் இடியும் மின்னலும் தங்கமணியும் தாக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அதிர்ச்சிக்கு ஆளானார் தமிழ்வாசி. “என்னங்க இது..பார்க்கறதுக்கு எப்படியோ இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி சின்னப்பையனா, யங்கா, யூத்தா இருக்கிறீங்க?” என்ற கேள்வியை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்டார்.

“உங்க சைஸுக்கு ஷகீலாவே சின்னப் பொண்ணாத் தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கரும்புச் சாறு கடைக்கு அழைத்துச் சென்றேன். கரும்புச் சாறு குடிக்கவும் அவர் முகம் இன்னும் அஷ்டகோணலானது.

சப்புக்கொட்டிக் குடித்தபடியே “என்னாச்சு?” என்றேன்

“நல்லாவே இல்லை” என்றார். ’அடப்பாவி மனுசா..ஒருத்தன் ரசிச்சுக் குடிக்கிறானே..அதுக்காகவாவது சும்மா இருக்கக்கூடாதா’ன்னு நினைச்சுக்கிட்டு “ஓ..ஆமா..கொஞ்சம் டேஸ்ட் கம்மி தான்” என்றேன்.

“புதூர்ல தாங்க நல்லா இருக்கும்.” என்று தன் ஜீகேயைக் காட்டினார்.

“ஓஹோ” என்று சொல்லிவிட்டு மீதி இருப்பதைக் குடிக்க விடுவாரா..மாட்டாரா என்று யோசித்தேன்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா ரெண்டு ஆண்ட்டிங்க கரும்புச்சாறு விக்காங்க..நல்லாவே இருக்காது” என்றார்.

நான் புரியாமல் “ஆண்டிங்களா? ஜீஸா?” என்றேன்.

“ரெண்டும் தான்” என்றார் சோகத்துடன்....ப்ச்..ப்ச்..ஒரு மனுசனுக்குத் தான் எத்தனை கஷ்டம்.

பிறகு நண்பர் என்னை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பைக்கை எடுக்கச் சென்றார். என்ன இடம் என்று திரும்பிப் பார்த்தால்....தங்க ரீகல் தியேட்டர்.

தந்தன..தந்தன..-ன்னு பழைய ஞாபகங்கள் பீறிக்கிட்டு கிளம்புச்சு. சினிமா அறிவை வளர்க்கும்பொருட்டு எத்தனையோ உலகப் படங்களைப் பார்த்த இடமல்லவா அது!

மடோனாவின் பாடி ஆஃப் தெ எவிடன்ஸ் பார்த்ததெல்லாம் நினைவில் வந்தபோது “என்னாங்க..தனியா சிரிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?” என்றார் தமிழ்வாசி.

”ஹி..ஹி..தங்க ரீகல்” என்றேன்.

“பழைய ஞாபகமா? இப்போ நல்ல படங்கள் மட்டும் தாங்க ஓடுது” என்றார்.

‘அடப்பாவிகளா..தங்க ரீகலை இப்படிப் பித்தளை ரீகல் ஆக்கிட்டாங்களே’ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே மதுரையில் கொஞ்ச நேரம் சுற்றினோம். மிக்சரும் அல்வாவும் பார்சல் வாங்கிக் கொடுத்தார் தமிழ்வாசி. கொடுத்துவிட்டு “இது உங்க பையனுக்கு..போற வழியிலேயே எல்லாத்தையும் சாப்ட்றாதீங்க” என்று அட்வைஸ் சொன்னார். 

அதன்பின் மீனாட்சி பவனில் டின்னர் முடித்துவிட்டு (உபயம்:தமிழ்வாசி), கிளம்பினேன். ‘நான் போய்க்கிறேன்’ என்று சொல்லியும் கேட்காமல் ஹெவி டிராஃபிக்கில் அவரே மாட்டுத்தாவணி வரை பைக்கில் கொண்டு வந்து விட்டார்.

பிரியும்போது நெஞ்சு அடைத்து, கண்ணீர் வரவில்லை. ’எப்படியும் வீடு போய்ச் சேரமுன்ன நாலு ஃபோன் பண்ணப்போறாரு..அப்புறம் என்ன..’ என்று நினைத்தபடியே விடைபெற்றேன்.


பஸ் ஏறியபிறகே தமிழ்வாசியிடம் கேட்க நினைத்த முக்கியமான அந்தக் கேள்வியை கேட்க மறந்தது ஞாபகம் வந்தது. கொஞ்சநாள் முன்பு, ஜவ்வுமிட்டாய் பற்றி அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். கமெண்ட்டில் ‘ஜவ்வுமிட்டாயை எவ்வளவு தூரத்திற்கு பிய்யாமல் இழுக்கலாம்?’ என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு மனுசன் பதில் சொல்லவில்லை. எனவே நேரிலாவது இதற்கு பதில் வாங்கி விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மறந்துவிட்டேன்..ச்சே..
எனவே தமிழ்வாசி அவர்கள் இங்கே கமெண்ட்டில் அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு : கண்டேன் செங்கோவியை! (தமிழ்வாசியின் பதிவை அவசியம் படித்துப் பயன்பெறுங்கள்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

 1. அண்ணே மதுரைக்கு வந்துட்டு இந்த தம்பிய பாக்காம போயிட்டீங்களே

  ReplyDelete
 2. என்னை பார்த்திருந்தால்......படு பயங்கர உலக இலக்கியம்????!!!!!!!???
  படைத்து......

  ம்ம்ம்ம்ம்ம்......ஹும்........
  நீங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.....

  ReplyDelete
 3. நல்ல சந்திப்பு...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வணக்கம்,செங்கோவி!நல்லாருந்திச்சு,கரும்புச் சாறு இல்ல பகிர்வு!!!////கண்டேன் செங்கோவியை அப்புடீங்கிற பதிவு படிச்சா ............................. சரி வேணாம்,விட்டுடலாம்!ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 5. மாம்ஸ் மதுரை உலா பிரகாஸ் கூடவா !ம்ம் நானும் சந்திக்க ஆசை. உங்க இருவரையும் ஒரு நாள் பார்ப்போம்!`ம்

  ReplyDelete
 6. மேலதிக விவரங்களுக்கு : கண்டேன் செங்கோவியை! (தமிழ்வாசியின் பதிவை அவசியம் படித்துப் பயன்பெறுங்கள்)///

  அட...இப்படி எஸ்கேப் ஆயிட்டாரே

  ReplyDelete
 7. ‘ஜவ்வுமிட்டாயை எவ்வளவு தூரத்திற்கு பிய்யாமல் இழுக்கலாம்?’ என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு மனுசன் பதில் சொல்லவில்லை. எனவே நேரிலாவது இதற்கு பதில் வாங்கி விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மறந்துவிட்டேன்..ச்சே..///

  இது கூட தெரியாதா? ஜவ்மிட்டாய் பிய்யுற வரை இழுக்கலாம். ஹே...ஹே...

  ReplyDelete
 8. பிரியும்போது நெஞ்சு அடைத்து, கண்ணீர் வரவில்லை. ’எப்படியும் வீடு போய்ச் சேரமுன்ன நாலு ஃபோன் பண்ணப்போறாரு..அப்புறம் என்ன..’ என்று நினைத்தபடியே விடைபெற்றேன்.///

  பாசம் ரொம்ப வழுக்குது மாம்ஸ்.

  ReplyDelete
 9. மிக்சரும் அல்வாவும் பார்சல் வாங்கிக் கொடுத்தார் தமிழ்வாசி. கொடுத்துவிட்டு “இது உங்க பையனுக்கு..போற வழியிலேயே எல்லாத்தையும் சாப்ட்றாதீங்க” என்று அட்வைஸ் சொன்னார். //

  நீங்க சொல்றத பாத்தா வழியில பாதி அல்வாவை முழுங்கின மாதிரி தெரியுதே.

  ReplyDelete
 10. “செங்கோவி, நான் நேத்துப் போட்ட பதிவு படிச்சீங்களா? எப்படி இருந்துச்சு? மூணாவது பாரால நாலாவது வரில அந்தப் பதிவருக்கு ஒரு உள்குத்து வச்சிருந்தேனே, கவனிச்சீங்களா? என்னது கவனிக்கலையா? என்னங்க இது, யாருமே கவனிக்க மாட்டேங்கிறீங்க..அப்புறம் அந்த பெண் பதிவர் பத்தி.................................”
  இதெல்லாம் நான் கேக்கனும்னு நெனச்சு மறந்து போனது... பிளேட்டை திருப்பிடிங்களே...

  ReplyDelete
 11. சப்புக்கொட்டிக் குடித்தபடியே “என்னாச்சு?” என்றேன்

  “நல்லாவே இல்லை” என்றார்.///

  இதுக்கே சப்பு கொட்டி குடிச்சிங்களா?

  ReplyDelete
 12. அருமை.
  வாழ்த்துகள் திரு செங்கோவி.
  வாழ்த்துகள் பிரகாஷ்.

  ReplyDelete
 13. மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரு ஆடுகள் சந்தித்த போது பேசமுடியவில்லையே....................................!

  ReplyDelete
 14. //வீடு சுரேஸ்குமார் said...
  மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரு ஆடுகள் சந்தித்த போது பேசமுடியவில்லையே....................................!//

  ஆடு என்னைக்கு தல பேசி இருக்கு?

  ReplyDelete
 15. வளைச்சு வளைச்சு ஊர் முழுவதும் சுத்திகிட்டு தான் ஊர் பொய் சேர்ந்து இருக்க போல

  ReplyDelete
 16. //// ஆனாலும் ‘நாம் என்ன தமிழ்வாசியை பொண்ணா பார்க்கப் போறோம்?’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். (இல்லேன்னாலும்..)///////

  இல்லேன்னா என்ன ஒரு பவர்ஸ்டார் மாதிரியோ, சாம் ஆண்டர்சன் மாதிரியோ இருந்திருப்பீங்க........... அதானே?

  ReplyDelete
 17. /////இப்படி தமிழ்வாசியிடம் சேட்டில் மாட்டினாலே நோண்டி நோண்டி கேள்வி கேட்பாரே...’நாம வேற ஒரு வாரமாப் பதிவே படிக்கலியே..என்னெல்லாம் கேட்கப் போறாரோ?///////

  அப்போ தமிழ்வாசிய பார்க்கனும்னா ஒருவாரம் உக்காந்து எல்லா பதிவையும் படிச்சு மனப்பாடம் பண்ணிட்டுத்தான் போகனுமா? விட்டா அதுல பரீட்சை வேற வெச்சிடுவார் போல இருக்கே?

  ReplyDelete
 18. /////சிவப்பாக, ஹேண்ட்சமாக இருக்கும் நபர்களையெல்லாம் உத்து உத்துப் பார்த்தார். ///////

  யாரோ ரொம்ப தவறான தகவல் கொடுத்திட்டாங்க போல, பாவம்!

  ReplyDelete
 19. ///// இரவு வானம் said...
  //வீடு சுரேஸ்குமார் said...
  மந்தையில் இருந்து பிரிந்து சென்ற இரு ஆடுகள் சந்தித்த போது பேசமுடியவில்லையே....................................!//

  ஆடு என்னைக்கு தல பேசி இருக்கு?/////////

  யோவ் போன மாசம் என்னான்னு கேளுய்யா.......... !

  ReplyDelete
 20. /////“என்னங்க இது..பார்க்கறதுக்கு எப்படியோ இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி சின்னப்பையனா, யங்கா, யூத்தா இருக்கிறீங்க?” என்ற கேள்வியை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்டார்.//////

  அப்படியே ஆப்போசிட்டா கேட்டிருப்பார்னு நினைக்கிறேன், கரெக்ட்டா?

  ReplyDelete
 21. ///“ரெண்டும் தான்” என்றார் சோகத்துடன்....ப்ச்..ப்ச்..ஒரு மனுசனுக்குத் தான் எத்தனை கஷ்டம்.//////

  ஜூச வாங்கி ரோட்ல போற பிகர்களை பாத்துட்டே குடிக்க சொல்லுங்க........

  ReplyDelete
 22. ///மடோனாவின் பாடி ஆஃப் தெ எவிடன்ஸ் பார்த்ததெல்லாம் நினைவில் வந்தபோது //////

  சிராக்கோ இங்கதானே பார்த்தீங்க?

  ReplyDelete
 23. ///அதன்பின் மீனாட்சி பவனில் டின்னர் முடித்துவிட்டு /////

  என்ன மெனுன்னு சொல்லலியே?

  ReplyDelete
 24. /////N.Mani vannan said...
  அண்ணே மதுரைக்கு வந்துட்டு இந்த தம்பிய பாக்காம போயிட்டீங்களே///////

  யோவ் ஏன்யா அப்பாய்ண்ட்மெண்ட்டு வாங்கலை? அப்பாய்ண்ட்மெண்ட் இல்லாம அண்ணன் யார்கிட்டேயும் போன்ல கூட பேசமாட்டாரு தெரியும்ல? சரி சரி, அடுத்த வருச மீட்டிங்குக்காவது இப்பவே அப்பாய்ண்ட்மெண்ட்டு வாங்கி வைக்கிற வழிய பாருங்க.......

  ReplyDelete
 25. செங்கோவி, நானும் madonna வின் Body of Evidence படத்தை மதுரை தங்க ரீகலில் தான் பார்த்தேன். பழைய ஞாபங்களை கிளறி விட்டீர்கள்.

  ReplyDelete
 26. எதுக்குய்யா திருமங்கலத்தில் இறங்காம போனீர் ஹி ஹி....

  ReplyDelete
 27. @இம்சைஅரசன் பாபு.. நான் மதுரைக்கு வரலேன்னா தீக்குளிப்பேன்னு தமிழ்வாசி மிரட்டிட்டார்ணே!

  ReplyDelete
 28. தம்பீ, திடீர்னு வந்ததால சொல்ல முடியலை..அடுத்த வருசம் கண்டிப்பா மீட் பண்ணுவோம்.

  ReplyDelete
 29. //Yoga.S. said...
  கண்டேன் செங்கோவியை அப்புடீங்கிற பதிவு படிச்சா ............................. சரி வேணாம்,விட்டுடலாம்!ஹி!ஹி!ஹி!!!!//
  நான் ‘நீரும் நெருப்பும்’ எம்.ஜி.ஆர் மாதிரி இருப்பேன்னு தெரிஞ்சுக்கலாமா ஐயா?

  ReplyDelete
 30. //வீடு சுரேஸ்குமார் said...//

  முதல் ஃபோட்டோல உங்களை கட் பண்ணிட்டேன்யா..சாரி..இல்லேன்னா தமிழ்வாசியை யாரும் பார்க்க மாட்டாங்கல்ல?

  ReplyDelete
 31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// ஆனாலும் ‘நாம் என்ன தமிழ்வாசியை பொண்ணா பார்க்கப் போறோம்?’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். (இல்லேன்னாலும்..)///////

  இல்லேன்னா என்ன ஒரு பவர்ஸ்டார் மாதிரியோ, சாம் ஆண்டர்சன் மாதிரியோ இருந்திருப்பீங்க........... அதானே?//


  ச்சே..இதுக்குத்தான்யா பதிவர்களையே சந்திக்கிறதில்லை..புட்டுப்புட்டு வச்சிருக்காங்களே!

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////N.Mani vannan said...
  அண்ணே மதுரைக்கு வந்துட்டு இந்த தம்பிய பாக்காம போயிட்டீங்களே///////

  யோவ் ஏன்யா அப்பாய்ண்ட்மெண்ட்டு வாங்கலை? அப்பாய்ண்ட்மெண்ட் இல்லாம அண்ணன் யார்கிட்டேயும் போன்ல கூட பேசமாட்டாரு தெரியும்ல? சரி சரி, அடுத்த வருச மீட்டிங்குக்காவது இப்பவே அப்பாய்ண்ட்மெண்ட்டு வாங்கி வைக்கிற வழிய பாருங்க.......//

  அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாச்சுண்ணே!

  ReplyDelete
 33. //அமுதா கிருஷ்ணா said...
  paavam andha tamilvasi........//

  அவரா பாவம்?..ஏன்க்கா நீங்க வேற....

  ReplyDelete
 34. //தமிழன் said...
  செங்கோவி, நானும் madonna வின் Body of Evidence படத்தை மதுரை தங்க ரீகலில் தான் பார்த்தேன். பழைய ஞாபங்களை கிளறி விட்டீர்கள்.//

  கிளறிட்டனா..ஆத்தீ..இது ஆபத்துல்ல!

  ReplyDelete
 35. //MANO நாஞ்சில் மனோ said...
  எதுக்குய்யா திருமங்கலத்தில் இறங்காம போனீர் ஹி ஹி....//

  அண்ணே, திருமங்கலத்துல இறங்குனேன்..போனேன்..ஆனா அதை டீடெய்லா எழுதலை..அப்புறம் உங்களை காப்பி அடிச்சுட்டேன்னு சொல்லிருவாங்கள்ல?

  ReplyDelete
 36. //////செங்கோவி said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  எதுக்குய்யா திருமங்கலத்தில் இறங்காம போனீர் ஹி ஹி....//

  அண்ணே, திருமங்கலத்துல இறங்குனேன்..போனேன்..ஆனா அதை டீடெய்லா எழுதலை..அப்புறம் உங்களை காப்பி அடிச்சுட்டேன்னு சொல்லிருவாங்கள்ல?///////////////

  அது என்னய்யா எல்லாரும் திருமங்கலத்துல இறங்கி “போயி”ருக்கீங்க? அங்க பதிவர்களுக்குன்னு இலவச கழிப்பறை எதுவும் கட்டி விட்டிருக்காங்களா?

  ReplyDelete
 37. //Rathnavel Natarajan said...
  அருமை.
  வாழ்த்துகள் திரு செங்கோவி.
  வாழ்த்துகள் பிரகாஷ்.

  June 12, 2012 6:27 AM
  திண்டுக்கல் தனபாலன் said...
  "இனிமையான சந்திப்பு ! வாழ்த்துக்கள் !"//

  வாழ்த்தா? மதுரையில நாங்க என்ன கல்யாணமா பண்ணிக்கிட்டோம்?..ஏங்க பீதியைக் கிளப்புறீங்க?

  ReplyDelete
 38. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  எதுக்குய்யா திருமங்கலத்தில் இறங்காம போனீர் ஹி ஹி....//

  அண்ணே, திருமங்கலத்துல இறங்குனேன்..போனேன்..ஆனா அதை டீடெய்லா எழுதலை..அப்புறம் உங்களை காப்பி அடிச்சுட்டேன்னு சொல்லிருவாங்கள்ல?///////////////

  அது என்னய்யா எல்லாரும் திருமங்கலத்துல இறங்கி “போயி”ருக்கீங்க? அங்க பதிவர்களுக்குன்னு இலவச கழிப்பறை எதுவும் கட்டி விட்டிருக்காங்களா?//


  என்னமோ தெரியலை..அந்த மண்ணை மிதிச்சாலே பீறிக்கிட்டு வருதுண்ணே!நீங்களும் ஒருதடவை ’போய்ட்டு’ வாங்கண்ணே!

  ReplyDelete
 39. ////////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  எதுக்குய்யா திருமங்கலத்தில் இறங்காம போனீர் ஹி ஹி....//

  அண்ணே, திருமங்கலத்துல இறங்குனேன்..போனேன்..ஆனா அதை டீடெய்லா எழுதலை..அப்புறம் உங்களை காப்பி அடிச்சுட்டேன்னு சொல்லிருவாங்கள்ல?///////////////

  அது என்னய்யா எல்லாரும் திருமங்கலத்துல இறங்கி “போயி”ருக்கீங்க? அங்க பதிவர்களுக்குன்னு இலவச கழிப்பறை எதுவும் கட்டி விட்டிருக்காங்களா?//


  என்னமோ தெரியலை..அந்த மண்ணை மிதிச்சாலே பீறிக்கிட்டு வருதுண்ணே!நீங்களும் ஒருதடவை ’போய்ட்டு’ வாங்கண்ணே!/////////////

  ஒலகத்துலேயே போறதுக்காக பஸ் புடிச்சி ஒரு ஊருக்கு போறது நானாத்தான் இருக்கும், இருந்தாலும் பதிவர்களோட நன்மைக்காக போறேன்யா....... ரெண்டு போட்டி சாப்பாடு சாப்புட்டு போறேன்....

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.