Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...23


இப்போ சந்தோஷமா?
செவனேன்னு இருந்த மனுசனைஅலைபாயுதே மாதிரி எப்போ சார் படமெடுப்பீங்க?’ன்னு நோண்டி, நோண்டி இப்படி ஆக்கிட்டீங்களேய்யா!
இந்த விபரீத விளையாட்டை மணியோட நிறுத்திக்கோங்க. அடுத்து பாரதிராஜாகிட்டே போய்முதல் மரியாதை மாதிரி எப்போ சார் படமெடுப்பீங்க?’ன்னு ஆரம்பிச்சிடாதீங்கய்யா.
அவர் காண்டாகி, பிரபுவையும் கார்த்திகாவையும் வச்சு முதல் மரியாதையை ரீமேக் பண்ணீட்டாருன்னா, தமிழ் இனமே அழிஞ்சிடும்...ஜாக்ரதை!
-----------------------
முதல்பாதி............ஓகே இல்லை, ..........பெஸ்ட்.
இரண்டாம்பாதி...கண்மணி இல்லை, ...சுகாசினி.

தெலுகு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா?...
வீட்டு வேலைக்கு ஆள்தேடி ஒரு தெலுங்கு வேலைக்காரம்மா தான் கிடைச்சாங்க. அவங்க அரைகுறைத் தமிழ்ல பேச, சம்பளம்-வேலை பற்றி எல்லாம் பேசிட்டேன். எல்லாம் ஓகே. இதுவரைக்கும் நல்லாத்தான் போச்சு. கடைசியாநாளைக்கு வந்திடுங்கன்னு சொன்னேன்.
அதுக்கு அவங்கரேப்புக்கு ரண்டின்னு சொல்லிட்டு ஃபோனை வச்சிட்டாங்க. ’ரேப்பா? ரேப்பு லேதுன்னு நான் பதறி மறுக்கமுன்னாடி ஃபோன் கட்.
என்னடா இதுன்னு நான் டரியலாகி உட்கார்ந்திருக்கும்போது, தங்கமணி வந்துஎன்ன, பேசிட்டீங்களா? என்ன சொன்னாங்க?’ன்னு கேட்டாங்க.
அது...அதுவந்து...ரேப்புக்கு ரண்டின்னு சொன்னாங்க’-ன்னு சொன்னேன். ‘..சரி..சரின்னு கேஷுவலா சொல்லிட்டுப் போய்ட்டாங்க.
என்னடா இது..அதிசயமா இருக்கு...விளக்கம் கேட்கலாம், ஆனால் இது புயலுக்கு முந்தின அமைதியா இருந்திட்டால் போச்சே..நாமே வலிய தலையைக் கொடுத்த மாதிரி ஆகிடுமே!
யாராவது சொல்லுங்கய்யா...ரேப்புக்கு ரண்டி-ன்னா என்ன? நீங்க சொல்ற பதில்ல தான் நாளைக்கு நான் வீட்ல இருக்கிறதா, வேணாமான்னே முடிவு பண்ணனும்!

-------------------------------------
சென்னை ஏர்போர்ட்டில் 40வது முறையாக விபத்து நடந்துள்ளது. இதுபற்றி நாம் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்ததில், இந்த விபத்துகளுக்கான காரணம் என்ன எனும் அதிர்ச்சித் தகவலைக் கண்டுபிடித்துள்ளோம்.
ஆம், அந்த ஏர்போர்ட் கட்டிடம் அருகே தினமும் 'தட தட தடவென' பலரும் ஃப்ளைட்களை ஓட்டுவதால்தான் இப்படி விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் பலரும் கூடும் கட்டிடத்திற்கு அருகே ஃப்ளைட்டை ஏற்றி, இறக்கி விளையாடுவது படித்த பைலட்களுக்கு கொஞ்சமும் அழகல்ல.
இந்த மத்திய அரசுக்கு கொஞ்சமாவது மக்கள்மேல் அக்கறை இருக்குமென்றால், ஏர்போர்ட் அருகே யாரும் விமானங்களை ஓட்டிச்செல்லக்கூடாது என்று உடனே உத்தரவிட வேண்டும். செய்வார்களா?
--------------------------
சென்னை ஏர்போர்ட்டில் 40வது முறையாக விபத்து நடந்துள்ளது. இதுபற்றி நாம் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்ததில், இந்த விபத்துகளுக்கான காரணம் என்ன எனும் அதிர்ச்சித் தகவலைக் கண்டுபிடித்துள்ளோம்.
ஆம், அந்த ஏர்போர்ட் கட்டிடம் அருகே தினமும் 'தட தட தடவென' பலரும் ஃப்ளைட்களை ஓட்டுவதால்தான் இப்படி விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் பலரும் கூடும் கட்டிடத்திற்கு அருகே ஃப்ளைட்டை ஏற்றி, இறக்கி விளையாடுவது படித்த பைலட்களுக்கு கொஞ்சமும் அழகல்ல.
இந்த மத்திய அரசுக்கு கொஞ்சமாவது மக்கள்மேல் அக்கறை இருக்குமென்றால், ஏர்போர்ட் அருகே யாரும் விமானங்களை ஓட்டிச்செல்லக்கூடாது என்று உடனே உத்தரவிட வேண்டும். செய்வார்களா?
------------------------
கேள்வி: உத்தம வில்லன் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒரு இஸ்லாமிய அமைப்பும் குரல் கொடுத்துள்ளதே?
பதில்: தமிழ் சினிமாவில் சென்டிமென்ட்டிற்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. இந்து அமைப்புகள் எதிர்ப்புக்கு உள்ளான மன்மதன் அம்பு படத்தோட ரிசல்ட் என்னன்னு உங்களுக்கே தெரியும். அதே நேரத்தில் உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம், துப்பாக்கி என இஸ்லாமிய அமைப்புகள் 'வாய்' பட்டாலே வெற்றி தான்.
இப்போது உத்தம வில்லனுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு என்றதுமே 'அய்யய்யோ...நல்ல மனுசனுக வாய் வச்சுட்டாங்களா..இனி விளங்கின மாதிரி தான்' என்று புரடியூசருக்குப் பயம் வந்திருக்கும். எனவே திருஷ்டிப்பரிகாரமாக எங்கேயிருந்தோ ஒரு இஸ்லாமிய அமைப்பைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். நல்ல வாய் ஜெயிக்கிறதா, நாற வாய் ஜெயிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

--------------------------------
'இப்படி நல்ல கேரக்டரா வருதே...மாடர்ன் ட் ரெஸ் போட்டு ஃபாரின்ல டான்ஸ் ஆடுற மாதிரி கேரக்டர் இருந்தால் கொடுங்களேன்' என்று லட்சுமி மேனன் புலம்பியிருக்கிறார்.
முன்பு மாடர்ன் ட்ரெஸ் போட்டு டான்ஸ் மட்டுமே ஆடிய ரூபினி, அமலா, அம்பிகாவிற்கெல்லாம் இந்தத் தலைமுறை ரசிகர்களிடம் எவ்வித மரியாதையும் இல்லை. ஆனால் சாவித்திரி, ரேவதி போன்ற 'நடிகை'கள் காலம் கடந்து இன்னும் கொண்டாடப்படுகிறார்கள். ராதாவிற்கு மரியாதையே முதல் மரியாதையால் தான்.
இதையெல்லாம் யாராவது லட்சுமி மேனனிடம் சொன்னால் நல்லது..அட்லீஸ்ட்நீ அதுக்குச் சரிப்பட்டு வரமேட்டேம்மா!’ என்றாவது சொல்லலாம்!!
---



கொம்பன் - ஒரு சிறிய விமர்சனப் பார்வை
ஒரு நல்ல சண்டியர் + ஒரு காமெடியன்
லட்சுமி மேனன்
வில்லன்கள் - அரிவாள்- வெட்டுக்குத்து
அம்மா சென்டிமென்ட்
- இப்படி ஒரு மசாலா எப்போதும் இயக்குநர் முத்தையாவின் பாக்கெட்டில் இருக்கும்போலிருக்கிறது. இதைவைத்து அவர் குட்டிப்புலி சமைக்க ஆரம்பித்து அது குட்டிப்புளியாக ஆன சோகக் கதை நாம் அறிந்ததே. ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்யனாக இதில் அம்மா சென்டிமென்ட்டைத் துக்கிவிட்டு, மாமனார் சென்ட்டிமென்ட்டைக் கலந்தால்...அடடே, நான்வெஜ் கொம்பன் தயார்!
கார்த்தியும் ராஜ்கிரணும் கொடுக்கும் ஸ்க்ரீன் பிரசன்ஸிலேயே இந்த சாதாக்கதை, ஸ்பெஷல் கதையாக ஆகிவிடுகிறது. அதிலும் இருவரும் பேசிக்கொள்ளும் அந்த சென்டிமென்ட் சீன், கிளாசிக். முடிந்தவரை பருத்திவீரன் மேனரிசத்தைத் தவிர்த்துவிட்டு, ஃப்ரெஷாக வருகிறார் கார்த்தி. கூடவே தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதை லட்சுமி மேனனும் சேர்ந்துகொள்ள, ஒரு நல்ல டைம் பாஸ் மூவி பார்த்த ஃபீலிங் எளிதாக வந்துவிடுகிறது. 'கார்த்திக்குத் தேவை கமர்சியல் ஹிட், அது குட்டிப்புளியைவிட பெட்டராக வேண்டும்' என்பதில் மட்டும் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்.
இது ஒரு சண்டியர் கதை என்பதால் ஏகப்பட்ட வெட்டுக்குத்து. இந்த மாதிரிக் கதைகளில் கிளைமாக்ஸிலாவது 'வன்முறை வேண்டாம்'என்று ஒரு மெசேஜ் சொல்வார்கள். இதில் எந்த லஜ்ஜையுமின்றி அதைக்கூடச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். அது தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய குறை.
படம் சூப்பர்ஹிட் என்று தகவல்கள் வருகின்றன. எனவே டாக்டர் கிருஷ்ணசாமி அண்ணாச்சிக்கும் ஒரு இன்னோவா கார் கொடுப்பது தான் நியாயம்!

------------------------------------
சன்டிவியில் தில்லானா மோகனாம்பாள்...
முன்பெல்லாம் வீட்டில் டிவியில் டெக்கும்(கேசட் ப்ளேயர்) இருந்தால், அங்கே கண்டிப்பாக இந்தப் படத்தின் கேஸட் இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்.
பத்மினி சினிமாவிற்கு வந்ததே இந்தப் படத்தில் நடிக்கத்தானோ என்று நான் நினைப்பதுண்டு. பத்மினி தவிர்த்து வேறு யாராலும் இந்தக் கேரக்டரைச் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை.
கோவில்பட்டியில் நாதஸ்வர வித்வான்கள் இருவர் இருந்தனர். அவர்களின் மேனரிசத்தைக் கற்றுத்தேர்ந்தே சிவாஜி இதில் நடித்தார். பின்னாளில் அவர்களின் வீட்டுக் கிரஹப்பிரவேசத்திற்கு சிவாஜி பெருமையுடன் வந்து சிறப்பித்ததாகச் சொல்வார்கள். (மன்னிக்கணும்..அந்த வித்வான்களில் பெயரை அடியேன் மறந்துவிட்டேன்..தெரிந்தவர்கள் சொல்லவும்.)
ஜில்ஜில் மனோரமா, டி.எஸ்.பாலையா, நாகேஷ். நம்பியார் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்த படம்..இத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கும்போதும், கொஞ்சமும் சலிக்கவில்லை. தி கிரேட் மூவி!


கேள்வி: கொம்பன் ரிலீஸ் பிரச்சினைக்குக் காரணம் கலைஞர் குடும்பம் என்கிறார்களே..உண்மையா?
பதில்: அது தெரியலீங்க..ஆனால் ஃபேஸ்புக் ஓப்பன் பண்ண இப்போ ட்ரை பண்ணினால், ஐந்து நிமிடம் சுற்றிவிட்டு இப்போத்தான் ஓப்பன் ஆகுது. இதுக்குக் காரணம் கலைஞர் தான்னு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்...நோ டவுட்.

குட்டிப்புலி ஒரு ஆவரேஜ் மூவி. எனவே அந்தப் படத்தின் இயக்குநரின் கொம்பன் மேல் சற்று சந்தேகம் இருந்தது. ஆனால் எப்போது டாக்டர் களத்தில் குதித்தாரோ அப்போதே படம் ஹிட் தான் என்று உறுதியாகிவிட்டது. இதுவரை வந்துள்ள விமர்சனங்களும் பாசிடிவ்வாகவே வந்துள்ளன. ஞானவேல்ராஜாவின் கண்ணீர், ஆனந்தக்கண்ணீர் ஆகியிருக்கிறது.
சண்டியர்படத்தை எதிர்த்தபோது டாக்டர் கிருஷ்ணசாமி சொன்ன காரணம், தேவர்மகனை எடுத்த கமலின் படம் என்பதால் இதை எதிர்க்கிறோம். அதில் சற்று நியாயம் இருந்தது. தென்மாவட்டங்களில் தேவர்மகன படத்தினால் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன. எனவே ஒருவரின் முந்தைய நடவடிக்கையை வைத்து, சந்தேகத்தின்பேரில் சண்டியரை எதிர்த்ததை 1% அளவிற்காவது நியாயம் இருந்தது. வேறு ஒருவர் அதே பெயரில் படம் எடுத்ததை டாக்டர் எதிர்க்காததற்கும் இந்தகமல் ஃபேக்டர்தான் காரணம் என்று சொல்லலாம்.
அப்படியென்றால் டாக்டர், கொம்பனுக்கும் கார்த்தியின் முந்தைய வரலாற்றை திரும்பிப் பார்த்திருக்க வேண்டும் இல்லையா? ஒரு தலித் கேரக்டரில் தலித் அரசியல் பேசிய ஹீரோ கார்த்தி தவிர்த்து யாராவது இங்கே உண்டா? சுட்டகதையாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை துவங்கி வைத்த படம் மெட்ராஸ். அதனால் தான் நான் உட்பட பலரும் அந்தப் படத்தை கைதட்டி வரவேற்றோம். நான் புரிந்துகொண்டவரைவரை, அதில் வரும் வில்லன் தலித் அல்லாத வேறுஜாதியைச் சேர்ந்தவர். (கொம்பன் படத்தில் வில்லனாக தேவர் ஜாதியைச் சேர்ந்தவரைத் தான் காட்டியிருக்கிறார்கள்!) இருப்பினும், பெரும்பாலான மக்களால் வரவெற்கப்பட்ட படம் அது. நியாயத்திற்கு டாக்டர் அப்போதே கார்த்திக்கு ஒரு பாராட்டு விழா எடுத்திருக்க வேண்டும். (மெட்ராஸ் இயக்குநர்வேறு ஜாதிபோட்டி தலித் என்பதால், டாக்டர் அதைக் கண்டுகொள்ளவில்லையோ??)
மெட்ராஸ் படத்தினை நாங்கள் எல்லாம் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, மூச்சுக்கூட விடாத டாக்டர் இப்போது பொங்கி வருவது ஏன்? சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், தன் இருப்பைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?’ என்று பல கேள்விகள் வரிசைகட்டி வருகின்றன. (https://www.facebook.com/spp.bhaskaran/posts/886298591434923)
இதில் வேடிக்கை என்னவென்றால்.........நியாயத்திற்கு இந்தப் படத்தை தேவர் சாதியினர் தான் எதிர்க்க வேண்டும். தமிழ்சினிமாவில் இன்னும் காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கப்படும் ஒரே ஜாதி, தேவர் ஜாதி தான். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்கள் லிஸ்ட் போட்டாலும், சிறந்த நடிகர்கள் லிஸ்ட் போட்டாலும் தேவர்சாதியினரைத் தவிர்க்க முடியாது. அந்த ஜாதியில் பலரும் படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஆனாலும் தமிழ்சினிமா தங்களை இப்படித் தொடர்ந்துதரக்குறைப்புசெய்தே காட்டுகிறதே எனும் சுரணைகூட இல்லாமல், ‘சூப்பரப்புஎன்று மீசையை முறுக்கியபடி இத்தகைய படங்களை வரவேற்கிறார்கள்.
இத்தகைய படங்களைப் பார்க்கும் தன் ஜாதிக் குழந்தைகள் மனதில் இது எத்தகைய விஷவிதையை ஊன்றும் என்றுகூட யோசிக்காமல், இத்தகைய படங்கள் தங்களை கற்காலத்திலேயே இருக்க வைப்பவை என்றுகூட உணராமல் தேவர்சாதியினர் இருப்பதைப் பார்க்கும்போது.................அட்லீஸ்ட் டாக்டராவது இதை எதிர்க்கிறாரே என்று தான் நாம் ஆறுதல் அடைய வேண்டும்!!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.