Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...26



-------------------
பொம்பளைகளுக்கு ஆயிரம் கஷ்டம். அதுக்கெல்லாம் சேர்த்து ஆம்பளைக்கு ஒரே ஒரு கஷ்டம்..பொண்டாட்டியையும் அம்மாவையும் பேலன்ஸ் பண்றது!
- மனம் வெறுத்த என் கோவை நண்பர் ஒருவர், பல வருடம் முன்பு ஒரு ஒயின்ஸாப்பில் உதிர்த்த தத்துவம்!
(நண்பர் Guru JI -யின் ஸ்டேடஸில் இந்த ஸ்டில்லைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது! )
-------------------
Movies to Learn Series:
Boogie Nights(1997) (18+)
உலக-ஜட்டி-சினிமா-பால்-மார்க்-தாமஸ்-சூசைட்-ஆண்டர்சன் - ஸ்விம்மிங்-மூர்-கேரக்டர்-ஃபால் - டெவலப்மெண்ட் - கிளைமாக்ஸ்.....அய்யய்யோ!
சொக்கா, எனக்கில்லை..எனக்கில்லை!
smile emoticon
‪#‎MoviestoLearn
----------------------
தமிழ் சினிமாக்களில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை, படங்களின் நீளம். ஐந்து பாடல்கள், ஐந்து சண்டைக்காட்சிகள், ஹீரோ பில்டப் காட்சிகள் என நிரப்பி, படத்தினை மூன்று மணி நேரத்துக்கு இழுத்து இம்சை செய்தார்கள். நம் மக்களுக்கும் நிறைய நேரம் படம் ஓடினால் தான் ஒரு திருப்தி எனும் எண்ணமும் இருந்தது. சமீப காலங்களில் இந்த விஷயத்தில் நல்ல மாற்றம் தெரிகின்றது. சென்ற வருட சூப்பர்ஹிட் படமான பாபநாசத்தில் இரண்டே பாடல்கள் தான்; அவையும் மாண்டேஜ் காட்சிகள். ஆனாலும் யாரும் ஏன் ஐந்து பாடல்கள் இல்லை, ஏன் சண்டைக்காட்சிகள் இல்லை என்று கேட்கவில்லை. படமும் சூப்பர்ஹிட்.
எனவே இப்போது பலரும் இரண்டு மணிநேரத்திற்கு தங்கள் படங்களின் நீளத்தைச் சுருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் இது. பருத்திவீரன், பாகுபலி போன்று நீண்ட கதைகளைக் கொண்ட படங்களை வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு எடுக்கலாம். மற்ற படங்களுக்கு இரண்டு மணி நேரமே அதிகம் தான். பொங்கலுக்கு வெளியான அனைத்து படங்களுமே இரண்டு மணி நேர நீளம் கொண்டவை என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
இதில் இப்போது ஒரு சிக்கல். படங்களின் நீளம் இரண்டு மணி நேரமாகக் குறையும்போது, கதைக்குத் தேவையற்ற காட்சிகளின் நீளம் குறையும் என்று தான் நாம் எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் இந்த படங்களைப் பார்க்கும்போது, ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஹீரோ-ஹீரோயின் காதல் காட்சிகளையும் பாடல்களையும் முக்கால் மணி நேரத்திற்கு ஓட்டுகிறார்கள். டைட்டிலும் சண்டைக்காட்சிகளும் குறைந்தது கால்மணி நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. மீதி இருப்பது, ஒரு மணி நேரம். அதில் தான் கதையே நகர்கிறது. கெத்து படத்தின் லவ் போர்சனுக்கும், அந்த படத்திற்குமே என்ன சம்பந்தம் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
மக்கள் இவற்றை எதிர்பார்ப்பார்கள் எனும் பயம் தான், இப்படிப்பட்ட எக்ஸ்ட்ரா லக்கேஜ் காதல் காட்சிகளுக்கு காரணமாக இருக்க முடியும். அந்த பயமும் நியாயமானது தான். மாற்றம் என்பது கொஞ்சம், கொஞ்சமாக வரும். அதை முதலில் செய்பவர்கள் நஷ்டப்படுவார்கள் என்பதும் சுடும் உண்மை. இருப்பினும், விரைவிலேயே கதைக்குத் தேவையான காட்சிகளை மட்டுமே கொண்டு படங்கள் வர ஆரம்பிக்கும் என்று நம்புவோம்!
------------------
// ஹானஸ்ட் ராஜ்(1994): புலன் விசாரணை என்ற மெகா ஹிட் படத்துக்குப் பிறகு கேப்டன் உச்சத்தில் இருந்தபோது வந்த படம் என்பதைத் தாண்டி இப்படத்தில் வேறொன்றும் விசேஷம் இல்லை. - டைம் பாஸ் விகடன் //
டைம் பாஸ் விகடனில் வந்திருக்கும் இந்த வரிகளைப் பார்த்தபோது, உண்மையிலேயே துக்கம் தொண்டையை அடைத்தது.
புலன் விசாரணை படம் வந்தது 1990ஆம் ஆண்டு. படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தாண்டு வெளியான விஜயகாந்த்தின் மற்ற படங்கள் ஓடாவிட்டாலும், அடுத்து வந்த கேப்டன் பிரபாகரன்(1991) அவரை ஏழைகளின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அடுத்து வந்த மாநகர காவல்(1991) படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜயகாந்தின் திரைவாழ்க்கையில் இந்த காலகட்டத்தை பொற்கலாம் என்றே சொல்லலாம். மாநகர காவலை அடுத்து வந்தது, சின்னக் கவுண்டர்(1992). அந்த படத்தின் வெற்றியைப் பற்றி, சொல்லத் தேவையில்லை.
தொடர்ந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்த விஜயகாந்த்திற்கு, அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் சோதனைக்காலம் ஆகின. விஜய் போன்ற அடுத்த தலைமுறைரசிகன்களை இறக்க, விஜயகாந்த்-பிரபு போன்ற முந்தைய தலைமுறை ஆட்டம் காணத் தொடங்கியது.
பரதன்(1992)-ல் ஆரம்பித்து காவியத் தலைவன், கோவில்காளை, ஏழை ஜாதி, சக்கரைத் தேவன், எங்க முதலாளி(1993) என எல்லாமே தோல்விப்படங்கள் தான். வெற்றிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விஜயகாந்த் தலையைப் பிய்த்துக்கொண்ட காலகட்டம் அது. ஹீரோயினைக் கொத்துபுரோட்டா போடும் ரசிகன் - செந்தூரப்பாண்டி போன்ற படங்களின் வெற்றியும் அவர்களின் சகவாசமும் கேப்டனையும் கொத்துப்புரோட்டா பாணிக்குத் தூண்டின. அப்படி உருவான படம் தான், ஹானஸ்ட் ராஜ். அதே நேரத்தில் உருவான சேதுபதி ஐபிஎஸ்ஸிலும் மீனாவை நடைசாத்த வைத்தார்கள்.
விஜயகாந்த்திற்கு தாய்க்குலங்களில் ஆதரவு எப்போதும் உண்டு. எனவே அவரது படங்களில் கவர்ச்சி என்பது எல்லை தாண்டாமலே இருக்கும். கோவில்காளைக்கே எதிர்ப்பு வந்தது. ஆனாலும் வேறு வழியின்றி, ஆம்னி எனும் ஆம்லெட்டை கொத்துப்பரோட்டா போட்டார்கள். ஹானஸ்ட் ராஜும், சேதுபதி ஐபிஎஸ்ஸும் ஹிட் ஆகின. மீண்டும் அவர் தலையெடுத்தார்.
விகடன் சொல்வது போல், உச்சத்தில் இருந்தபோது அவர் இதைச் செய்யவில்லை. வீழ்ச்சியை நிறுத்தவே, ஹானஸ்ட் ராஜ் வந்தது. எனவே டைம் பாஸ் பார்ட்டிகள், நல்ல ஸ்டில் தேடுவதில் மட்டுமே முழு எனர்ஜியையும் வேஸ்ட் செய்யாமல், கொஞ்சம் தகவல்களையும் தேடிப்பார்க்கலாம்!

---------------
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..!
நாங்க எப்பவுமே பையனைபடி, படிஎன்று டார்ச்சர் செய்யும் ஆளில்லை. ரேங்க் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை. ‘ஃபெயில் ஆகாமல் படி.போதும்என்பது தான் பொதுவான மனநிலை. நாம் இப்படி இருந்தாலும், விதி விடுமா?
குவைத்தில் இந்தியப் பள்ளிகள் மிகவும் குறைவு. எல்.கே.ஜி. அட்மிசனுக்கே குழந்தைகள் தேர்வு எழுதி, இண்டர்வியூவும் க்ளியர் செய்ய வேண்டும். எல்.கே.ஜிக்கே ப்படி என்றால், இடையில் யூ.கே.ஜி / முதல் வகுப்புகளில் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பு.
நான் என் பையனை யூ.கே.ஜி.படிக்கும்போது தான் இங்கே அழைத்துவந்தேன். எனவே எங்கும் சீட் கிடைக்காமல், யூ.கே.ஜி.வரை உள்ள ஒரு ப்ளே ஸ்கூலில் சேர்த்தோம். இப்போது முதல் வகுப்புக்காக மறுபடியும் வேட்டையை ஆரம்பித்தோம்.
எல்லா ஸ்கூலிலில் விரட்டி விட, ஒரே ஒரு ஸ்கூலில் மட்டும் இந்த மாதம் வரச்சொன்னார்கள். சென்ற வியாழக்கிழமை போனால், ஞாயிற்றுக்கிழமை எண்ட்ரன்ஸ் எக்ஸாம்(!), அதை க்ளியர் செய்தால் தான் சீட் என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு நாளில் பையனை தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஃபேமிலியை ஊருக்குத் தான் அனுப்பி வைக்க வேண்டும் எனும் நிலைமை.
தீவிர அஹிம்சாவாதியான தங்கமணிஅவன் செலக்ட் ஆகும் முன்னாடி ஃபேஸ்புக் பக்கம் போனீங்கன்னா, லேப்டாப்பை உடைச்சுடுவேன்என்று மென்மையாக சொல்லிவிட்டார். இரண்டு நாள் பையனுடன் மல்லுக்கட்டி, நேற்று டெஸ்ட் எழுதி, இன்று தான் ரிசல்ட் சொன்னார்கள். வெற்றி..வெற்றி!
இன்றைக்குத் தான் நிம்மதியாக இருக்கிறது. காலேஜ் ஃபைனல் இயர் எக்ஸாமுக்குக்கூட நான் இந்தப் பாடு படலியே...கடைசியில் என்னையும் புலம்ப வச்சிட்டாங்களேய்யா!


------------------
// வயிற்றுவலியை தீர்ப்பதாகக்கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர் கைது - செய்தி //
முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்..வயிற்றுவலியை பிரசவ வலியால் தான் எடுக்கணும்னு நினைச்சிருட்டாரு போல...யேசப்பா, இந்த பாவியை மன்னியும்!

-------------------
படம் நல்லா இருக்குன்னு விமர்சனம் போடுறாம்பாரு, அவனை நம்பலாம்!
படம் நல்லா இல்லேன்னு விமர்சனம் போடுறாம்பாரு, அவனையும் நம்பலாம்!
ஆனால், ஒரு படத்துல ஒர்க் பண்ணவங்களை Tag பண்ணி விமர்சனம் போடுறாம்பாரு, அவனை மட்டும் நம்பிடாதே...பூட்ட கேஸாயிடுவே!
-------------
லட்சுமி ராமகிருஷ்ணன் விகடன் பேட்டி!
கேள்வி: “மூன்று படங்கள் இயக்கி முடிச்சிட்டீங்க. ஒரு இயக்குநரா என்ன கத்துக்கிட்டீங்க?”
பதில்: “சினிமாவுல கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு....அப்புறம் இயக்குநர் வெற்றிமாறன் ‘Save the cat’னு ஒரு புக் கொடுத்து, ‘இந்த புக்கைப் படிங்க. சினிமாவையே வேறவிதமா பார்ப்பீங்கனு சொன்னார். அவர் சொன்னது ரொம்ப கரெக்ட்.”
மூணு படம் பண்ண அப்புறம் தான் இந்த புக்கையே வாங்குறீங்களா... மை காட்!
----------------------
ஆஸ்கார் நாயகன்னு சொன்னோம்..ரஹ்மான்ஆஸ்கார் நாயகன்ஆகிட்டாரு..
உலக நாயகன்னு சொன்னோம்..தனுஷ் இப்போஉலக நாயகன்ஆகிட்டாரு..
நல்ல ராசிக்காரரு....So sad!
‪#‎சுள்ளானின் ஹாலிவுட் பிரவேசம்.
----------------------
இ்றுதிச்சுற்றும் இசையும்
ஒரு படத்தை எளிதாக நடத்திச் செல்வதாக, உணர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக வருவது திரைப்பட இசையும் நல்ல பாடல்களும். இறுதிச்சுற்று பார்த்தபோது, படத்தின் பெரும் பலம் இசை என்று தோன்றியது. குறிப்பாக, பாடல்கள். கதையை சீம்லெஸ்ஸாக நகர்த்தும் மாண்டேஜ் பாடல்கள் படத்தின் தரத்தை மேலும் ஒருபடி உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும். வழக்கமான ஓப்பனிங், டூயட் எல்லாம் என்னால் போட முடியாதுஎன்றே சந்தோஷ் நாராயணன் சொல்லிவந்திருக்கிறார். இறுதிச்சுற்று பார்த்துவிட்டு, அவரது முந்தைய படங்களை யோசித்துப் பார்த்தால், கதையை நகர்த்தும் பாடல்களாகவே அவர் போட்டிருப்பதை உணர முடிந்தது.
குறிப்பாகமாமா டவுசர் கிழிஞ்சுச்சேபாடலைக் கேட்டபோது, ஒரு டிஸ்கொதே டான்ஸை எதிர்பார்த்தேன். ஆனால் அது படத்தில் கச்சிதமாக, பிண்ணனியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இயக்குநர்களுக்கு இப்படிப்பட்ட இசை கிடைப்பது பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில், (என்னைப் பொறுத்தவரை) சந்தோஷ் இசையில் ஒரு பெரும் குறையை நான் உணர்கிறேன். ஒரு படம் வந்து சென்றபின், அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கத் தோன்றுவதே இல்லை. சூது கவ்வும், 36 வயதினிலே என எல்லாவற்றையுமே படம் வரும்வரை கொண்டாடுவிட்டு, பிறகு மீண்டும் கேட்கவே அலர்ஜியாக உணர்கிறேன். .ஆர்.ராஹ்மான், இமான் பாடல்களை கொஞ்சம் கேப் விட்டால், மீண்டும் கேட்கலாம். ஆனால் சந்தோஷின் பாடல்கள் அப்படி இல்லை.
அதற்குக் காரணம்.....முதல் பாராவில் சொன்ன விஷயமாக இருக்குமோ? பிண்ணனி இசையைத் தான் பாடல்களாகப் போடுகிறாரோ?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.