Saturday, June 25, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்..25



// சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணனை நீக்குகிறேன். - ... தலைவர் சரத் பேட்டி //
// நான் தான் அடுத்த ... தலைவர் - எர்ணாவூர் நாராயணன் பேட்டி //
... எனும் மணிமேகலைக்காக கடும் போட்டி....முடியல..ஓரமாப் போய் காமெடி பண்ணுங்கய்யா!
-----------------------------------
//“மேசையைத் தட்டலாம்...கமிஷன் வாங்கலாம்... ஊரை அடித்து உலையில் போடலாம்!” - பழ.கருப்பையாவின் விகடன் பேட்டி //
கலைஞரை திருமா திட்டிவிட்டார் என்றதும் உடன்பிறப்புகள் அவர்மேல் பாய்வதைப் புரிந்துகொள்கிறேன். மாண்புமிகு.புரட்சித்தலைவி.அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியைக் குறைசொன்ன அதிமுக எம்.எல்.ஏவான பழ.கருப்பையா மேல் ..க்கள் பாய்வதையும் புரிந்துகொள்கிறேன். ஆனால் அம்மையார் மேல் சிறு துரும்பு பட்டதும், துடித்துப்போய் அலறும் ஊடகங்களின் அறச்சீற்றத்தைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு ஆளும்கட்சி எம்.எல்., வெளிப்படையாக இந்த அரசையும் ஆளும்கட்சிப் பிரமுகர்களையும் குற்றம் சாட்டுகிறார். கட்சியை விட்டு நீக்கப்பட்டதும், மிக நேர்மையாக தன் எம்.எல். பதவியை ராஜினாமா செய்கிறார். அவரை அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு, எப்படியாவது அவர் ஒரு முட்டாள், எதிர்க்கட்சியின் கைக்கூலி என்று நிறுவ நடுநிலை நக்கி ஊடகங்கள் போராடுவது ஏன்?
பழ.கருப்பையா சொன்னகமிசன் - ஊழல்-மேசையைத் தட்டும் ரோபோக்கள்போன்ற பொதுவான குற்றச்சாட்டுகளை விட்டுத்தள்ளுவோம். விகடன் பேட்டியில் துல்லியமாக மூன்று குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவை:
//1. துறைமுகம் தொகுதி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள, உருது முஸ்லிம் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டுத் திடலை, பெரிய நபர் ஒருவர் ஆக்கிரமித்துவைத்திருக்கிறார்.
2. வெலிங்டன் ரீடிங் ரூம்' என்பது, வெள்ளைக் காரர்கள் கட்டிய பாரம்பர்யமான கட்டடம். துறைமுகம் தொகுதியின் மையப் பகுதியில் இருக்கும் அதை, ஒரு பாத்திர வியாபாரி ஆக்கிரமித்துவருகிறார். அவர், அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, லாட்ஜ் கட்ட ஏற்பாடுசெய்கிறார். என் கவனத்துக்கு வந்து அதைத் தடுக்கப் போராடியபோதுதான், அதில் ஒரு மந்திரி உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது
3.முக்கியமாக, என்னுடைய துறைமுகம் தொகுதியில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் பான்பராக், கஞ்சா விநியோகிக்கப்படுகின்றன. எத்தனையோ முறை பலரிடம் முறையிட்டேன். சென்னை கலெக்டரிடம் போனேன். `எங்கே நடக்கிறது?' எனக் கேட்டார். `உங்கள் ஆபீஸுக்குக் கீழேயே நடக்கிறது' என்றேன். அப்படியே நிலைகுலைந்துபோனார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. //
இந்த ஊடகங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை என்ற ஒன்று இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டபெரிய நபர்-பாத்திர வியாபாரி-மந்திரி-கலெக்டர்ஆகியோரை அல்லவா அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டும்? ஏண்டா, ஒருத்தன் திருடு போயிடுச்சுன்னு கம்ப்ளைண்ட் கொடுத்தால், திருடனைப் பிடிப்பீங்களா அல்லது கம்ப்ளைண்ட் கொடுத்தவைப் பிடிப்பீங்களா?
பெரிய நபர்-பாத்திர வியாபாரி-மந்திரி-கலெக்டர்யாருன்னு கண்டுபிடி. அவங்களை முதல்ல கூப்பிடு. கூடவே புகார் சொன்னவரையும் கூப்பிடு. அப்போ வைங்கடா விவாதத்தை. உண்மையிலேயே இந்த சமூகத்தின் மேல் அக்கறை என்று ஏதாவது இருந்தால், ‘குற்றம் நடந்தது என்னன்னு இந்த மூன்று விஷயத்தையும் அலசி நிகழ்ச்சி நடத்துங்கடா.
ஒரு எம்.எல்....மக்கள் பிரதிநிதி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை ஓப்பனா வைக்கிறார். அவர் வைத்த குற்றச்சாட்டை ஆராய்ச்சி செய்வாங்கன்னு பார்த்தால், அவரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க..
ஒன்னே ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது..ஆயிரம் விஜயகாந்த் வந்து துப்பினாலும், நீங்க திருந்தவே மாட்டீங்கடா!

------------------
அரபியை அலற வைத்த நம்மாளு!
இங்கே நண்பர் ஒருவர் செய்த அலப்பறை...!!
நம்மாள்: ஐயா..
அரபி பாஸ்: என்னய்யா?
நம்மாள்: எனக்கு இன்னைக்கு ஊர்ல குழந்தை பிறந்திருக்கு.
அரபி: சந்தோசம்...சந்தோசம்..வாழ்த்துகள்.
நம்மாள்: சார், ஒரு வாரம் லீவ் வேணும்.
அரபி: நோ..நோ..இப்போ புராஜக்ட் பீக் டைம்..நோ லீவ்.
நம்மாள்: ஐயா, நான் ஊருக்குப் போய் மூணு வருசம் ஆச்சு. இப்போ லீவு கொடுத்தீங்கன்னா, குழந்தையைப் பார்த்த மாதிரியும் இருக்கும், ஊரைப் பார்த்த மாதிரியும் இருக்கும்.
அரபி: என்னாது..???? ஊருக்குப் போய் மூணு வருசம் ஆச்சா? அப்போ குழந்தை?
நம்மாள்: சாஆஆஆர்...மூணு வருசம் முன்னே கல்யாணம் பண்ணிட்டு, பொண்டாட்டியோட இங்க
வந்தேன். அவ கன்சீவ் ஆகி ஆறு மாசம் முன்னே ஊருக்குப் போனா..அதைத் தான் ஐயா அப்படிச்
சொன்னேன்.
அரபி: அட நாசமாப் போறவனே..வெளிய இப்படிச் சொல்லிட்டுத் திரியாதே..போ...போய்த் தொலை!

--------------------------------
// இறுதிச்சுற்று படப்பிடிப்பில் குடித்துவிட்டு ரகளை செய்த மாதவன். விளையாட்டு வினையானது - செய்தி //
ஒரு படத்தின் புரமோசனுக்காக இப்படி அள்ளிவிடுவது வழக்கம் தான். ஆனால் இந்த டிராமா, படத்திற்கு நல்ல பெயர் கொடுக்கும் என்று தோன்றவில்லை.
பொதுவாகவே பாலிவுட் ரசிகர்களுக்கும், நமக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு படத்தின் கெட்டப்பை முதலிலேயே டமாரம் அடிப்பார்கள், பார்ட்டியில் குடித்துவிட்டு அடுத்துக்கொள்வார்கள், திடீரென காதலியை மாற்றிக்கொள்வார்கள். கார் ஏற்றிக் கொன்றால்கூடடீக் ஹை பாய்என்று எடுத்துக்கொள்வார்கள். இங்கே நிலைமை தலைகீழ்.
மிகவும் சென்சிடிவ் ஆன ஆட்கள், நம் மக்கள். கார் ஏற்றிக் கொன்றவன் எல்லாம் அங்கே ஹாயாகப் போக, இங்கே பீப் சாங் பாடியவன் தலைமறைவாகத் திரிவான்.
இன்றைய சூழ்நிலையில் மது அரக்கன் பற்றி கடும் கசப்பும் கொந்தளிப்பும் நிலவும் சூழலில்நடிகர் குடித்தார், ரகளை செய்தார்என்று விளம்பரப்படுத்துவது என்ன மாதிரி புத்திசாலித்தனம் என்பது புரியவில்லை. ஹிந்திவாலாக்களை மனதில் வைத்து இதைச் செய்திருக்கலாம். இங்கே....!
பாலிவுட் நடிகர்கள் மாதிரி சூர்யா விளம்பரங்களில் வந்தபிறகுஅதான் டெய்லி இவரை டிவியில் பார்க்கறோமேஎனும் சலிப்பு மனநிலை நமக்கு வந்துவிட்டது இன்னொரு உதாரணம்!
மேடி ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் நடிப்பதால், இந்த படத்தை கொஞ்சம் எதிர்பார்க்கிறேன். எனவே நல்ல பீலா விட்டு புரமோட் பண்ணும்படி கேட்டுக்கொள்கிறேன்.


---------------------
இன்று குவைத் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் பாடகர் ஸ்ரீனிவாஸ் குழுவினரின் இசை மழை.
பல அற்புதமான பாடல்களால் நெஞ்சை நெகிழ வைத்தார். ஆப்பிள் பெண்ணேவில் ஆரம்பித்து ஊலலல்லாவில் முடித்தார். அவர் மேடைக்கு வந்தபோது, தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. அவரது அருமையான குரலுக்கு நம் மக்கள் கொடுத்த பாராட்டு அது!
அவருடன் அவரது மகள் சரண்யா இணைந்து பாடினார். சில படங்களில் தான் அவர் பாடியிருந்தாலும், ’காற்றில் என் கீதம்பாடியபோது அனைவரும் மெய் மறந்தனர். நம் மொட்டைக்கும் ஜானகியம்மாவுக்கும் சேர்த்து கைதட்டி மகிழ்ந்தோம்.
கூடவே, பயங்கர உற்சாகத்துடன் ஆடிப்பாடி அரங்கத்தை விழிப்புடன் இருக்க வைத்தவர் ரெனைனா. அவர் பாடியகோடான கோடி(சரோஜா)’ என் ஆல்டைம் ஃபேவரிட். அதையும் ஆடிப் பாடினார்.
கோட்-சூட் போட்ட திருவள்ளுவர் கோலத்தில் வந்திருந்தசூப்பர் சிங்கர்சந்தோஷ், பல துள்ளல் பாடல்களைப் பாடினார். கோகுல் & ஜூ ஜூ செய்த காமெடிகள் செம; குறிப்பாக ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் வைத்து கோகுல் செய்த காமெடி தான் டாப்!
சிறப்பு விருந்தினராக நடிகை ரோஹிணி வந்திருந்தார். சென்னை வெள்ளத்தின்போது இளைய தலைமுறை துடிப்புடன் செயல்பட்டதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். பாகுபலி அனுபவங்களையும், அவர் இயக்கத்தில் உருவாகும்அப்பாவின் மீசைபட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும், ராஜாவின் இசை அளவிற்கு நம்மை மயக்குவது வேறில்லை. ராஜா பாடல்களைப் பாடியபோதெல்லாம், நல்ல வரவேற்பு!
மொத்தத்தில், இதுவொரு பொன் மாலைப் பொழுது!
(சிறப்பு ஆடியன்ஸாக(!) என்னை அழைத்த Chithu Durai அக்காவிற்கும் தம்பி Raj Narayanan -க்கும் கோடான கோடி நன்றிகள்)

-------------------------------
என்ன தான் உலகசினிமா, யதார்த்த சினிமா என்று ஜல்லியடித்தாலும் சினிமா என்பது முதலில் ஒரு பொழுதுபோக்கு ஊடகம். பொழுதுபோக்கிற்கு கேரண்டி தரும் படங்களை, மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
இந்த பொங்கலுக்கு அப்படி வந்திருக்கும் படமாக, ரஜினி முருகன் ஆகியிருக்கிறது. எல்லாப் பக்கமும் சூப்பர் ஹிட் எனும் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. பெரும் சிக்கலில் இருந்த லிங்குசாமிக்கு, இந்த வெற்றி ஆறுதலைக் கொடுத்திருக்கும்.
குழந்தைகளையும் பெண்களையும் கவரும் விதத்தில் படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் அமைந்திருந்தது. அவை கொடுத்த நம்பிக்கையை படமும் காப்பாற்றி இருக்கிறது.
ஆனாலும் ..-ம், ரஜினி முருகனும் கரகாட்டக்காரன் கேட்டகிரி படங்கள் தான். அடுத்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால், சிவகார்த்திகேயனும் இன்னொரு ராமராஜனாக முடிந்துபோகலாம். அடுத்த இளைய தளபதி என்று கிடைத்திருக்கும் பெயரை, காப்பாற்றுவார் என்று நம்புவோம்.
இங்கே ரிலீஸ் செய்யாமல் விட்டுவிட்டார்கள். என் பையன் தினமும்ஏன் ரஜினி முருகன் வரலை?’ என்று கேட்டு உயிரை எடுக்கிறான். ரஜினி முருகனை விட்டுவிட்டு, தாரை தப்பட்டையை ரிலீஸ் செய்த புண்ணியவானை தேடிக்கொண்டிருக்கிறேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.