Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....15Movies to Learn:
நிலப்புரபுத்துவ காலகட்டத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வேலை என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தியா மட்டுமல்லாது, ஆப்பிரிக்கா, ஜப்பான் என உலகத்தின் பல பகுதிகளிலும் இது வழக்கத்தில் இருந்தது. மன்னராட்சியும் அதைத் தொடர்ந்த காலனி ஆட்சியும் முடிவுற்றபோது, புதிய ஜனநாயகம் மலர்ந்தது. வேலைவாய்ப்பு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாக ஆனது. எனவே ஜாதிப்புத்தி என்பதும் மெல்ல பொருளிழந்து போனது.
மாறிவிட்ட காலத்தைப் புரிந்துகொள்ளாமல், பழங்கால பெருமை/சிறுமையிலேயே தங்கிவிட்ட மனங்கள் பல இங்குண்டு. இனி அவற்றுக்கு எவ்விதப் பொருளில்லை. அவற்றைக் கைவிட்டு, புதிய காலகட்டத்திற்கு ஏற்ப நகர்வது காலத்தின் கட்டாயம்.
இதைப் பற்றிப் பேசிய படங்களில் இரு படங்கள் உலக அளவில் முக்கியமானவை. ஒன்று, செவன் சாமுராய். இரண்டாவது தேவர் மகன். தொழில் சார்ந்த வாழ்க்கை முறையை உடைத்துக்கொண்டு, மனித இனம் மேலே எழ வேண்டிய அவசியம் பற்றி இருபடங்களும் பேசின. செவன் சாமுராயை விட, தேவர் மகன் வெளிப்படையாகவே இவ்விஷயத்தை விவாதித்தது.
அப்புறம் ஏன் தேவர் ஜாதிவெறிப் படம் என்று சிலரால் தேவர் மகன் திட்டப்படுகிறது என்கிறீர்களா? ஏனென்றால்...........
செவன் சாமுராயும் அப்படித்தான் சிலரால் திட்டப்பட்டது. தனது சாமுராய் ஜாதிப்பெருமையைக் காட்ட, அகிரா குரோசோவா இப்படத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அப்படம், தனக்கான மரியாதையைப் பெற்று சிம்மாசனத்தில் அமர்ந்தது.
இந்தப் படங்களில் பேசப்படும் விஷயம், ஏதோ ஒரு ஜாதிக்கானது இல்லை. ஒவ்வொரு ஜாதிக்காரனும் தேவையற்ற ஜாதியின் பிடியில் இருந்து விடுபடுவது பற்றி இவை பேசுகின்றன. அது புரிந்தால், இவை ஏன் உலக சினிமாக்கள் என்பதும் புரிந்துவிடும்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய மூன்றையும் கற்றுத்தேர, இந்தப் படங்கள் உதவும்.
‪#‎MoviestoLearn

-----------------------------------------------------------------------
Movies to Learn Series - 2
தைரியம், தில்லு, எதையும் தாங்கும் உறுதி இருக்கிறவர்களுக்கு மட்டும் இந்தப் படம்...
சைக்காலஜிக்கலா உங்களை இந்தப் படம் பாதிக்கலாம், ஜாக்கிரதை.
ஒன்லைன் என்னன்னா.....
ஒரு கப்பல் பயணத்தில் ஹீரோ செமயான ஃபிகர் ஒன்னைப் பார்க்கிறான். அதை உஷார் பண்ணலாம்ன்னு நினைக்கும்போது, ஒரு பக்கவாதம் வந்த ஆசாமி, குறுக்கே வர்றார்.
தம்பீ, நாந்தான் அவ புருசன்..நீ நினைக்கிறது நியாயம் தான்!(). ஆனால் அதுக்கு முன்ன என் கதையைக் கேளு..முழுசாக் கதை கேட்டால், அவ உனக்குத்தான்’-ன்னு ஒரு டீல் போடுறாரு.
என்னடா இது, கதை கேட்டா கட்டை கிடைக்குமான்னு ஹீரோவும் நாமும் கதை கேட்க ஆரம்பிக்கிறோம்.
அந்தக் கதை ஹீரோவை மட்டுமில்லை, நம்மையும் உலுக்கிப் போடுது...வேண்டாம், வேண்டாம்ன்னு ஹீரோவும் நாமும் கதறினாலும், கதை தொடர்கிறது...............!!
If you understand the movie, it's a world cinema.
Otherwise, it's an erotic movie.
Both way, you are benefited. smile emoticon
‪#‎MoviestoLearn

நான் காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படித்த சமயம். ஒருநாள் ஹாஸ்டலில் இரவு தூங்கினேன்.
மறுநாள் எழுந்தேன். வெயில் ஓரளவு ஏறியிருந்தது. லீவ் நாளில் காலை பத்து மணிவரை தான் மெஸ் திறந்திருக்கும்.எனவே அவசரமாகக் கிளம்பி, தட்டை கையில் எடுத்துக்கொண்டு மெஸ்ஸை நோக்கிக் கிளம்பினேன். கிரவுண்ட் ஃப்ளோரில் எதிரே வந்த ஒரு நண்பர்எங்கே போறே?’ என்றார்.
மெஸ்ஸுக்குஎன்றேன்.
திறந்திருக்கா?’ என்றார்.
ஏன், பத்து மணி ஆகிடுச்சா?’ என்றேன்.
அவ்ளோ தான்..அவர்மச்சி..இங்க ஒரு பலியாடு மாட்டியிருக்கு, வாங்கன்னு ஊரையே கூட்டிவிட்டார். ‘ஏன்..என்னாச்சு?’ன்னு நான் மலங்க, மலங்க தூக்கக் கலக்கத்தில் முழித்துக்கொண்டு நிற்கிறேன்.
பிறகு ஒரு நல்ல உள்ளம் சொன்னது : ‘செங்கோவி, மணி இப்போ சாயந்திரம் அஞ்சு!!!’.
..அஞ்சா?...அப்போ லஞ்ச்சும் போச்சா?
------- ஃப்ளாஷ்பேக் ஓவர் ------------
இன்னைக்கு காலையில் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸை சந்தித்தேன். அதில் ஒருவர்ஏண்டா, ஈவ்னிங் மீட் பண்ணியிருக்கலாம்ல?’ என்றார்.
அதற்கு நான்நோ..நோ..ஈவ்னிங் எனக்கு வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. உங்களுக்கு என்னால காலையில் மட்டும் தான்...’ன்னு தான் சொல்லியிருக்கேன்.
அவன் செம காண்டாகிடேய்...என்ன பண்றதுன்னு தெரியாமல் ஒருநாளைக்கு 16 மணிநேரம் தூங்குன வெட்டிப்பய, இன்னைக்கு அப்பாயிண்ட்மெண்ட் பத்திப் பேசறயா? இதெல்லாம் கேட்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்துன்னு சுவரில் முட்டிக்கொண்டார்.
இது மாதிரி எரியும் நெருப்பில் எண்ணெயை பக்குவமாக ஊற்றும் இன்னொரு ஃப்ரெண்ட்அப்படில்லாம் பேசாதப்பா..நம்ம செங்கோவி ஒருநாளைக்கு சண்டிவில பேட்டி தரப்போறான்..நீயும் பார்க்கப் போறே?’ன்னு ஊற்றிவிட்டார்.
அவ்ளோ தான்..’டேய்..அதை மட்டும் பார்த்தேன்..என் வீடா இருந்தாலும் சரி..வேற யார் வீடா இருந்தாலும் சரி..அந்த டிவியை அப்படியே தூக்கிப்போட்டு உடைச்சிடுவேண்டான்னு ஒரு ருத்ரதாண்டவம்.
எவ்ளோ வருசம் ஆனாலும், அந்தக் கொலைவெறியை எப்படித்தான் மெயிண்டெய்ன் செய்யறாங்களோ!!!!!!
‪#‎இனிய சந்திப்பு
----------------------------------
மணிரத்னம் என்ற அருமையான இயக்குநர் நாசமானதற்குக் காரணம், தமிழுக்கும் ஹிந்திக்கும் பொதுவான படம் எடுக்க ஆரம்பித்தது தான்.
தமிழுக்கும் பொருந்தாமல், ஹிந்திக்கும் பொருந்தாமல் புதுவிதமான ஜந்துவாக அந்தப் படங்கள் வெளிவந்தன.
இப்போது சூர்யாவும் அதே போன்ற தவறைச் செய்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆந்திராவில் சூர்யாவிற்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே தமிழ் ஆடியன்ஸிற்கு மட்டுமல்லாது ஆந்திர ஆடியன்ஸையும் கவரும் விஷயங்கள், தன் படங்களில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
சூர்யாவிற்குப் பெயர் வாங்கித்தந்த படங்கள் மசாலாப் படங்கள் அல்ல. கஜினி, பிதாமகன் என ஒரு நல்ல நடிகராக அவர் நடித்துத்தான் நம் மனதில் இடம்பிடித்தார். இப்போது ஆந்திர மசாலா ஹீரோவாக அவர் நடிக்கும்போது, நமக்கு ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. (கார்த்தியும் இந்த ஆந்திர மோகத்தால் தான் வீழ்ந்தார்!)
மணிரத்னமானாலும் சூர்யாவானாலும் தமிழ்சினிமா தான் அவர்களின் அடையாளம். இங்கே தோற்றுவிட்டார்கள் என்றால், அதன்பின் எங்கேயும் மதிப்பு இருக்காது.
எனவே அஞ்சான், மாஸ் என தடுமாறாமல், மீண்டும் நல்ல கதையம்சங்கள் உள்ள படங்களில் சூர்யா நடிக்க வேண்டும் என்பதே அவரிடம் நாம் வைக்கும் பிறந்தநாள் கோரிக்கை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா.

----------------------------

அப்பாடி நானும் மனுசன் தான்னு ப்ரூஃப் பண்ணிட்டேன்.
ஆமாய்யா, பாகுபலி பார்த்துட்டேன்!!
ஹாலிவுட் தரத்தில் ஒரு படம். .வா. புரடியூசர் கிடைத்துவிட்டார் என்று தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்காமல், கதைக்குத் தேவையான பிரம்மாண்டம். ஒவ்வொரு காட்சியையும் இழைத்து எடுத்திருக்கிறார்கள். அந்த அருவியும் ஒரு கேரக்டராகவே வந்து, நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.
பாகுபலி கேரக்டர் வந்த கொஞ்சநேரத்திற்கு படம் ஸ்லோ ஆனாலும் கிளைமாக்ஸ் யுத்தகளத்தில் பட்டையைக் கிளப்பிவிடுகிறார்கள். பிரபாஸைப் பார்த்துவிட்டு பாகுபலி என்று எல்லோரும் மிரளும்போதுபாட்ஷாஞாபகம் வந்தது..செம பில்டப்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் என எல்லோரின் நடிப்புக்கும் நல்ல தீனி. பாடல்காட்சிகளில், குறிப்பாக முதல் பாடலில் தமன்னா கொள்ளை அழகு.
இங்கே தெலுங்கு வெர்சன் தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கும் தரத்துடன் வந்திருக்கிறது பாகுபலி.
அடுத்து, அனுஷ்கா வெர்சனை எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.