ஒன்றுமே தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்ததுபோல் கிண்டல் பண்ணுவது ஃபேஸ்புக் போராளிகளுக்குப் புதிதில்லை தான்..
இந்தப் போராளிகளின் தாத்தாக்கள் தான் பயிர் வளர, கண்மாய் மண்ணை அள்ளிக்கொண்டு வந்து வயலில் போட்டார்கள். அதில் என்ன சந்தனமா இருந்தது?
அவர்கள் தான் ஆடு/மாடுகளின் கழிவை பயிருக்குப் போட்டது..
ஊரே குண்டி கழுவிய கண்மாய் நீரை வயலுக்குப் பாய்ச்சியது...
ஒரு ஆண்ட்ராய்ட் ஃபோன் கையில் வந்தால் பழசு எல்லாம் மறந்துவிடுகிறது. அதிலும் சொன்னவன் பிஜேபி என்றால், மூளையே வேலை செய்வதில்லை....ஜெய் ஹிந்த்.
http://www.vikatan.com/news/article.php?aid=46141
--------------------
ஒரு படத்தின் ஆயுளே ஒரு வாரம் தான் என்று இருக்கும் சூழ்நிலையில், ரிலீஸ் ஆகும் படத்தைப் பற்றியே எல்லோரின் கவனமும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது தான் வியாபார தர்மம். உத்தம வில்லன் ரிலீஸ் தேதிக்கு முதல் நாள், பாபநாசம் படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். எந்த மடையன் இதைச் செய்தது என்று தெரியவில்லை.
கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டிவிட்டு, படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் உத்தம வில்லன் தயாரிப்பாளர்கள் போராடிக்கொண்டு இருக்கும்போது இந்த 'ஒட்டுமீசை மாதவன்' ட்ரெய்லர் இப்போ ரொம்ப அவசியமா?
------------------------------
ஒரு நல்ல மனிதரின் திரைக்கதைக்குத் தயாரிப்பாளர் தேவை. நல்ல, தரமான உலக சினிமாவைப் படைக்கும் ஆர்வமுள்ள தயாரிப்பாளர்கள் மட்டும் அணுகவும்.
படத்தின் கதை இது தான் : ஒரு கிராமம். ஹீரோ நல்லவர். ஹீரோயின் பேரழகி. ஆனால் இன்னும் வயசுக்கு வரவில்லை. அதனால் தற்கொலைக்கு முயல்கிறார். அவரைக் காப்பாற்றும் ஹீரோ, தற்கொலை ஒரு தவறான முடிவு என்று விளக்குகிறார். (நீங்கள் அட்வான்ஸ் கொடுத்ததும், அந்த 4 பக்க வசனம் உங்களுக்குத் தரப்படும்!) ஹீரோ துணையுடன், 'ஒன்லி' மெடிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்து, ஹீரோயின் வயசுக்கு வருகிறார். சுபம்!!
விதிர்விதிர்த்துப் போய் அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டீங்களா?...நானும் அப்பிடித்தேன் ஆனேன். ( இந்தக் கதையை யாராவது சுட்டால், அந்த படைப்பாளியே நேரில் வந்து கேஸ் போடுவார், ஜாக்ரதை!)
ஒன்னுமில்லைய்யா..ஊருக்கு ஃபோன் செய்தால், ஒரு படைப்பாளி இந்தக் கதையுடன் புரடியூசர் தேடி அலைவதாகச் சொன்னார்கள். 'செங்கோவி சினிமாவைக் கரைத்துக்குடித்து தொந்தி பெருத்தவர்' என்று யாரோ அவரிடம் தப்பாகச் சொல்லியிருப்பார்கள் போல. 'தம்பிகிட்டேப் பேசணும்..திரைக்கதையைத் தம்பி படிக்கட்டும்..பணமெல்லாம் புரட்டியாச்சு. கொஞ்சம் குறையுது. ஹீரோயின்கூட ரெடி. தம்பியும் கொஞ்சம் போட்டாருன்னா, ஷூட்டிங் ஆரம்பிச்சுடலாம்' என்று தேடுகிறாராம்!!
'இந்தக் கதையை பல மலையாளப் பிட்டுப்படத்துல எடுத்துட்டாங்களே..இதுகூடத் தெரியாமல் அந்தப் படைப்பாளி இப்படிப் பச்சை மண்ணாக இருக்கிறாரே' என்று நினைக்கும்போதே துக்கம் நவதுவாரங்களையும் அடைத்துவிட்டது.
’இது வயசுக்கு வாராதோரின் பிரச்சினையை உக்கிரமாகப் பேசும் படமாகத் தெரிகிறது. எனவே வயசுக்கு வராத ஒருவர் இதைத் தயாரிப்பது தான் முறையாக இருக்கும் என்று அவரிடம் சொல்லிவிடுங்கள்' என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டேன். அதனால உங்கள்ல யாராவது........!
-----------------------------
கமலஹாசன் எனும் நடிகனின் அடையாளமே மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டு, வித்தியாசமான கேரக்டர்களில் கலக்குவது தான். ஆனால் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் அதையே ‘குழப்பாமல்’ வெற்றிகரமாகச் செய்ய ஆரம்பித்தபின், கமலுக்கான தேவை தீர்ந்துவிட்டது போல் ஒரு மாயை.
அடுத்த தலைமுறை தன் இடத்தில் அமர்ந்தபின், ஒரு திறமையான கலைஞன் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயம் வந்துசேர்ந்துவிடுகிறது. தன் இருப்பை நிலைநாட்டும் ஆவேசத்தை, அந்தக் கட்டாயம் கொடுக்கிறது.
அப்படி கமல் தன் இருப்பை மீண்டும் வெற்றிகரமாக நிலைநாட்டியிருக்கும் படம் தான் உத்தம வில்லன். ‘எவனும் என் பக்கத்தில்கூட வர முடியாது’ என்று ஒரு நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியாகவும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். இப்படி ஒருவரைப் பெற்றது, தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம்!
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்!
------------------------------------
ராஜ தந்திரம் - சினிமா அலசல்
'திருடுவது எப்படி?' எனும் கான்செப்ட்டில் சூது கவ்வும் அடைந்த வெற்றி, மேலும் பலரையும் அத்தகைய நெகடிவ் கான்செப்ட்டில் படங்களை எடுக்கத் தூண்டியது. அப்படி வந்த படங்களில் மூடர்கூடம் மட்டுமே கவனிக்கத்தக்க படமாக இருந்தது, சரபம் மோசமான படமாக அமைந்தது. இப்போது, கவனிக்க வைக்கும் 'இரண்டாம் தர'ப் படமாக ராஜ தந்திரம்.
பைக் எபிசோட்:
சூது கவ்வும் போன்றே எதுபற்றியும் கவலைப்படாமல் திருடுவது/ஏமாற்றுவதைப் பிழைப்பாகக் கொண்ட ஹீரோ & குழு. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க, ஒரு அப்பாவியை ஏமாற்றி பைக் விற்கும் சீன். படத்தின் மிகப்பெரிய, முதல் சறுக்கலே இது தான்.
சூது கவ்வும் மாதிரிப் படம் எடுக்க நினைப்பது தப்பில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஹீரோ கேரக்டரை எப்படி வடிவமைத்திருந்தார்கள், ஏன் திருடனாக இருந்தும் ஹீரோவை ரசித்தோம் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இங்கே சொதப்பியிருக்கிறார்கள்.
சூது கவ்வும் செட்டப் பகுதியை யோசித்தால், நம் நினைவுக்கு உடனே வருவது கடத்திய குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து, பத்திரமாக இறக்கிவிடும் சீன் தான். அது ஒரு புத்திசாலித்தனமான 'Save the Cat'. எம்.ஜி.ஆர், ரஜினி என ஹீரோக்கள் வில்லனாக/ஆன்ட்டி ஹீரோவாக நடித்த படங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால், அந்த கேரக்டர்மேல் நமக்கு சிறுதும் வெறுப்பு வந்துவிடக்கூடாது எனும் கவனத்துடன் அவை வடிவமைக்கப்பட்டிருப்பது புரியும். (உ-ம்: குடியிருந்த கோயில், பில்லா, சதுரங்க வேட்டை).
ஏற்கனவே எனக்கு அந்த ஹீரோவைப் பிடிக்கவில்லை...விஜய் சேதுபதியை விட்டுத்தள்ளுங்கள், சதுரங்க வேட்டை நட்டி அளவுக்குக்கூட ப்ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லை. இப்படி இருக்கும்போது, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும் ஒரு சாமானியன் / அப்பாவியை ஏமாற்றுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய வெற்றிப்படமாக ஆகியிருக்க வேண்டிய ராஜதந்திரம் சொதப்பியது இங்கே தான். அடுத்து பரபரப்பான கோல்டு பிஸ்கட் சீகுவென்ஸ் வரும்வரை,படத்துடன் ஒன்ற முடியாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறோம்.
கோல்டு சீகுவென்ஸ்:
10 லட்ச ரூபாயைத் திருடும் எபிசோடில் திரைக்கதையாசிரியரின் புத்திசாலித்தனம் தெரிந்தது. பையை மாற்ற முயல, அது சொதப்ப, கூடவே ஹீரோயினும் ஏமாற்றப்பட்ட அப்பாவியும் அங்கே வந்து சேர, வில்லன்கள் ஹீரோவைப் புரட்டி எடுக்க, பையில் இருப்பது 10 லட்சம் அல்ல என்று தெரிய வர..செம சீன்.
இந்த முயற்சி அவர்களைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க, படம் அதன்பின் வேகமெடுத்துவிடுகிறது.
ஹீரோயின் - நரேன் எபிசோட்:
ஹீரோயினுக்கு நரேன் வில்லன்..இப்போது ஹீரோவுக்கும் நரேன் வில்லன் என்றாக, செம ட்விஸ்ட்டாக வில்லாதி வில்லன் 'பட்டியல் சேகர்' அறிமுகம் ஆகிறார். ஒரு நகைக்கடை அண்ணாச்சியைப் பார்த்த எஃபக்ட்டை அனாயசமாக மனிதர் கொண்டுவந்துவிடுகிறார். ஹீரோ-ஹீரோயின் -நரேன் என எல்லோருக்கும் பொது எதிரி அவர் தான் என ஆகும்போது, ஹீரோவே நரேனின் திட்டங்களை வில்லனிடம் உளறி வைத்திருப்பது நல்லவொரு கான்ஃப்ளிக்ட்.
நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கியபடியே, சீன்கள் நகர்கின்றன. 'எங்கிட்டுப் போனாலும் கேட் போட்ட' கதையாகப் படம் நகர்வது தான் சுவாரஸ்யம்.
ஜூவல்லரி எபிசோட்:
நம்ப முடியாத விஷயத்தையும் நம்ப்புற மாதிரிச் சொல்வது தான் ஒரு திரைக்கதையாசிரியனின் திறமை. அதை இங்கே ஏ.ஜி.அமித் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். கொள்ளையடிக்கப் போவதை முன்கூட்டியே நகைக்கடை அதிபரான வில்லனுக்குச் சொல்லிவிட்டுச் செய்யும் இரண்டாம்பாதி அதகளம். டைமிங்கை மட்டுமே நம்பி போடப்படும் திட்டம்..ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சொதப்பி விடும் ஆபத்து..இது நமக்குப் புரிந்ததும், சஸ்பென்ஸ் எகிறிவிடுகிறது.
ஒரு கல்...பல மாங்காய்கள்:
ஹீரோ -நரேன் - அய்யர்
கோல்டு பார்ட்டி மணி
பட்டியல் சேகர் - மருமகன்
போலீஸ்
இந்த நான்கு குரூப்பும் செய்யும் செயல்களை ஒரே நேரத்தில் சொல்லியபடி நகர்கிறது படம். பாராட்டப்பட வேண்டிய விஷயம், இவை எங்கேயும் குழப்பாமல் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது. ஏறக்குறைய எல்லோருமே அறிமுகமற்ற நடிகர்கள் தான். ஆனாலும் நாம் குழம்பாமல் இருக்கிறோம் என்றால், அது திரைக்கதை ஆசிரியரின் திறமை தான்.
திருஷ்டி-2:
படத்தின் ஆரம்ப பைக் எபிசோட் போன்றே சொதப்பலான இன்னொரு விஷயம், கிளைமாக்ஸ். ஹீரோ திடீரெனத் திருந்துவது ஒரு கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை அந்த தங்க பிஸ்கட்களை போலீஸிடம் ஒப்படைப்பது. அவை கவர்ன்மென்ட் சொத்து அல்ல..கடத்தல்காரர்களின் சொத்து. அவற்றை ஹீரோ போன்ற ஒரு கேரக்டர் தானே எடுத்துக்கொள்வது தான் பொருத்தமாக இருந்திருக்கும். பிட்டுப்படங்களில் வருவது போல், கிளைமாக்ஸில் குத்து குப்புசாமி திடீரென கருத்து கந்தசாமி ஆவது சகிக்கவில்லை.
இதையெல்லாம்விடப் பெருங்கொடுமை, ஆம்வே போன்ற எம்.எல்.எம்மை தீர்வாகப் படம் முன்வைப்பது. எல்லா கோல்மால்களையும் மூட்டை கட்டும் ஹீரோ, இந்த சதுரங்க வேட்டையை நல்வழியென சீரியஸாக நம்புவது என்ன லாஜிக் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் ஆரம்ப செட்டப் போர்சனையும் கிளைமாக்ஸ் போர்சனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், பாராட்டப்பட வேண்டிய படம்...ராஜ தந்திரம்.
நன்றி : இந்த படத்தைப் பரிந்துரைத்த நண்பர் வினையூக்கி செல்வாவிற்கு!
---
ஹீரோக்கள் தான் பொதுவாக பெர்ஃபார்மன்ஸில் கலக்குவார்கள். ஆனாலும் அதிசயமாக காமெடியன்கள் சைடு கேப்பில் சிக்ஸர் அடித்துவிடுவதுண்டு; உதாரணம் திருவிளையாடல் தருமி நாகேஷ்.
அந்த வகையில் சமீபத்திய சிக்ஸர், விஜயகாந்தின் நேற்றைய அதிரடி ஆக்சன். கோமாவில் இருந்து விழித்து எழுந்தவர் போல், தமிழகத்தின் ஐந்து தலையாய பிரச்சினைகளைக் கையில் எடுத்தார். ஒரு ரவுண்டு வந்தார், மோடியுடன் இன்று ஷூட்டிங் ஓவர்...கிளைமாக்ஸில் ஃபைட் உடன்!
இதைச் செய்திருக்க வேண்டியது, 'உண்மையான' எதிர்க்கட்சியான திமுக தான். சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் நடத்தினால் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அந்த வகையில் கேப்டனின் பெர்ஃபார்மன்ஸ் பாராட்டத்தக்கது. இதைச் செய்திருக்க வேண்டிய கலைஞரிடம் நாம் கேட்க விரும்புவது, ஒன்றே ஒன்று தான்: 'டொக் ஆகிட்டீங்களா தல?'.
----------------------------
//முதன் முறையாக மெட்ரோ ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி- செய்தி//
யோவ்...இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுய்யா...வாழ்க்கையில் இப்போத்தான் ட்ரெயினையே பார்த்த மாதிரி என்னா ஒரு பில்டப்பு.
'ஓ..ஜிகுஜிகுன்னு ஓடும்ன்னு சொல்வாங்களே..ட்ரெய்னு..அது இதானா?'ன்னு மோடி கேட்டிருப்பாரே? அதையும் நியூஸ்ல போட்டுத்தொலைக்க வேண்டியது தானே?
------------------------------------
’இனிமே சினிமால கவர்ச்சி காட்ட மாட்டேன்’னு சொன்ன நடிகைகிட்ட, ‘அப்போ வாட்ஸப்லயாவது காட்டுவீங்களா?’ன்னு கேட்டிருக்கே...இதெல்லாம் நல்லா இல்லை ஆமா!
-----------------------------
வடை போச்சே-2:
பண்ணையாரும் பத்மினியும் காமெடியன் கேரக்டர்:
http://sengovi.blogspot.com/2011/08/blog-post_12.html
- இது மாதிரி நாங்க விட்ட வடைகள் ஏராளம்..ஏராளம். அதனால்தான் சின்ன விஷயத்தையெல்லாம் பிடிச்சுக்கிட்டு ‘காப்பி..காப்பி’ என்று கத்தினால் சிரித்துவிட்டுப் போய்விடுவது!
#ஒத்த சிந்தனை
----------------------------
கேள்வி: ‘ஓகே கண்மணி’யும் காப்பி தானா?
பதில்: ’Hollywood movies with same stories' எனும் டாபிக்கை வேறொரு காரணத்திற்காக சில மாதங்களுக்கு முன் தேடியபோது ‘Firends with benifits' படமும் 'No Strings Attached' படம் பற்றிப் படிக்க நேர்ந்தது.
ஆனாலும் இருபடங்களையும் இன்னும் பார்க்கவில்லை. எனவே பார்க்காமல் ‘ஓகே கண்மணி’யை Firends with benifits-ன் காப்பி என்று சொல்ல விரும்பவில்லை. ஒன்லைன் மட்டும் ஒத்துப்போவதை நான் காப்பி என்று எடுத்துக்கொள்வதில்லை. அப்படிப் பார்த்தால், Firends with benifits படமே No Strings Attached-ன் காப்பி தான்!
ஒரு கதை உருவாகும் வழிகளில் ஒன்று, நாம் வாழ்க்கையில் பார்க்கும் கேரக்டர்கள். ஒரு வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால், அதற்கு நேரெதிரான இன்னொரு கேரக்டரை உருவாக்கினால் கான்ஃப்ளிக்ட் வந்துவிடும். பிறகு, திரைக்கதையில் புகுந்து விளையாடிவிடலாம்.
அல்சைமரால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணி. அவளுக்கு ஒரு அன்பான கணவன். காதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் தம்பதி. - இதற்கு நேரெதிராக, காதல் என்றால் என்னவென்றே அறியாமல் இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பும் இன்னொரு ஜோடி - கான்ஃப்ளிக்ட்- ஒன்லைன் கிடைத்துவிட்டது.
மேலே உள்ள பாராவில் இருப்பது, ஓகே கண்மணியின் கதை என்று நீங்கள் நினைக்கலாம். அது ஒரு நாவலுக்காக நான் வைத்திருந்த ஒன்லைன். இந்த மாதிரி விஷயங்களை எங்காவது எழுதி வைத்துவிடுவது என் வழக்கம். மறந்துவிடும்/முன்னாடியே யோசிச்சேன்னு புலம்ப உதவும் என்பதால். எனவே....ஆதாரம்:
http://sengovi.blogspot.com/2011/02/blog-post_12.html
சினிமாவில் பெரும் பிரச்சினை, ஒருவர் நினைத்திருக்கும் ஒன்லைனை இன்னொருவரால் யோசித்துவிட முடியும். மணி ‘சாரும்’ இப்படி ஒரு தம்பதிகளைப் பார்த்திருக்கலாம். கான்ஃப்ளிக்ட் யோசிக்கும்போது ‘லிவிங் டுகெதர்’ சிக்கியிருக்கலாம். இதே ஒன்லைனை இன்னும் எத்தனை உதவி இயக்குநர்கள் வைத்திருந்தார்களோ தெரியாது.
Friends with benifits படத்திலும் ஒரு அல்சைமர் கேரக்டர் வருகிறது என்பது தான் உதைக்கிறது. ஆனாலும் இந்த ஒன்லைனைப் பிடிப்பது ஒன்றும் கஷ்டமான விஷயம் கிடையாது; வெள்ளைக்காரனைவிட நம்மால் இதை அதிக இடங்களில் பார்க்க முடியும்.
எனவே சந்தேகத்தின் பலனை மணி ‘சாருக்கு’ அளித்து, அவரை விடுதலை செய்கிறேன்.
http://sengovi.blogspot.com/2011/02/blog-post_12.html
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.