Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...6



ஒவ்வொரு குடும்பத்திலும், வாக்கப்பட்டு வர்ற பொண்ணுங்க குத்திக்காட்டறதுக்குன்னே நமக்கு சில குடும்ப ரகசியங்கள்(!) இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் இது!
சுமாராக நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு....
எங்கள் ஊர் எட்டயபுரம் ஜமீன் ஆளுகைக்குள் இருந்தது. ‘எட்டப்பர்என்பது எட்டயபுரம் ஜமீனின் குடும்பப் பெயர். ஜமீன் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தாலும் கடைசியில்எட்டப்பர்என்பதையும் சேர்த்துக்கொள்வார்கள். எட்டயபுரம் ஜமீனுக்கு உட்பட்ட பகுதிகளில்எட்டுஎன்று அப்போது பொதுவெளியில் எண்ண மாட்டார்கள். ராசா பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட மாதிரி ஆகிவிடுமல்லவா? நெல் அளக்கும்போதெல்லாம், அஞ்சு...ஆறு..ஏழு..லாபம்...ஒன்பதுஎன்று தான் அளப்பார்களாம். அவ்வளவு விசுவாசம், மரியாதை!
ஆனாலும் ஊரில் சில சண்டித்தனமான ஆட்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்கள் தான் என் பாட்டனார்கள். அவர்களுக்கு இது உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருநாள் ராஜா எங்கள் பகுதிக்கு நகர்வலம் வந்து சேர்ந்தாராம். .பி.எஸ்.ரேஞ்சுக்கு என் பாட்டனார்கள் இறங்கி, ராஜாவுக்குத் தேவையான உதவிகளை செய்து தந்தார்களாம். மனம் மகிழ்ந்து போன ராஜாஉமக்கு என்ன வேண்டும்?’என்று கேட்டாராம். அதற்காகவே காத்திருந்த மாதிரி பாட்டனார்கள் போட்டார்கள் ஒரு பிட்டு: “தர்மபிரபுவே! உங்கள் பெயர் மட்டும் போதும். அரசன் விஷ்ணு அம்சம் இல்லையா? எங்கள் பிள்ளைகளுக்கு வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும்.”
ராஜாவும் மனம் குளிர்ந்து போய், தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்துவிட்டாராம். அப்புறம் என்ன, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டது. பிறகு ராஜாவோ அல்லது படைவீரர்களோ இல்லாத சமயமாகப் பார்த்து, தன் பிள்ளைகளைஏலெ, எட்டு..இங்க வாலே!...அடேய் எட்டு, என்னடா செய்றே?’என்று கூப்பிட்டு சந்தோசமாக வாழ்ந்தார்களாம். ‘எப்பூடி, ராசா பேரையே வச்சோம்லஎன்று அப்படி ஒரு பெருமிதம். எங்கள் வம்சத்தை லிஸ்ட் போட்டால், ஏகப்பட்டஎட்டுகள்வருகிறார்கள்!.
புதிதாக எங்கள் குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வரும் பெண்களிடம் இதேராசா பெயர்பெருமையை மீசை முறுக்கிச் சொல்வார்கள். அதற்குஅட கூறுகெட்ட மனுசா! ராசா என்ன வேணும்னு கேட்டால் ஒரு நூறு ஏக்கரை வாங்கிப்போட்டாலாவது பிரயோசனம். இந்த வெட்டிப்பெருமையை வச்சுக்கிட்டு என்னய்யா செய்ய?’என்று குமட்டிலேயே குத்து விழும். அடுத்து வாக்கப்பட்டு வரும் பெண்களிடம், முந்தைய பெண்களேபெருமைக் கதையைச் சொல்லி மூட்டிவிடுவார்கள், மண்டகப்படி நடக்கும். ஆனாலும் என் அப்பா காலம்வரைஎட்டப்பன்என்று பெயர் வைக்கும் பழக்கம் தொடர்ந்தது!
இதற்கெல்லாம் ஆப்பு வைத்தது, வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் தான்! ‘எட்டப்பன் என்றால் காட்டிக்கொடுப்பவன்எனும் அர்த்தத்தை அந்தப் படம் கொடுத்துவிட, ஒருவழியாக அடுத்த தலைமுறையில் வந்த எங்கள் பெயர் தப்பியது. என் வீட்டுக்காரம்மாவிடம் இருந்து நானும் தப்பித்தேன்; இல்லையென்றால்.................!!

--------------------------
இந்த வாரம் வெளியாகியிருக்கும்அழகுக் குட்டி செல்லம்பரவலாக நல்ல பாராட்டுகளை வாங்கியிருக்கிறது.
இந்த படத்தினை நான் எதிர்பார்த்திருந்தேன்; ஆனால் இங்கே ரிலீஸ் ஆகவில்லை. எதிர்பார்ப்பிற்குக் காரணம், ‘நஞ்சு புரம்’.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம், நஞ்சு புரம். தமிழில் ஒரு வித்தியாசமான முயற்சி எனலாம். தற்செயலாக டிவியில், அதுவும் ஹிந்தியில்(!) இதைப் பார்க்க நேர்ந்தது. பிடித்துப் போய், தேடி தமிழில் பார்த்தேன்.
பிறகு தான் அந்தப் படத்தின் இயக்குநர் சார்லஸ்வார்த்தைகள்எனும் அவரது ப்ளாக்கில் சினிமா பற்றி தீவிரமாக எழுதிவருவதை அறிந்தேன். நஞ்சுண்டபுரம் கமர்சியலாகத் தோல்வியடைய, நீண்ட போராட்டத்திற்குப் பின் இப்போதுஅழகுக் குட்டி செல்லத்துடன் வந்திருக்கிறார்.
நஞ்சுபுரம் போன்றே இதுவும் வித்தியாசமான, நல்ல படம் என்று அறிகிறேன். நண்பர்கள் மிஸ் பண்ண வேண்டாம்!
----------------
புது வருடத்தை ஒரு நல்ல படத்துடன் ஆரம்பித்தால், அந்த வருடம் பார்க்கிற படங்கள் எல்லாம் ஆஹா, ஓஹோவென இருக்கும்என்ற நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போனதால், இந்த வருடத்தை ஒரு காவியத்துடன் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது.
வீராசாமி, சகாப்தம் எல்லாம் பலமுறை(!) பார்த்தாயிற்றே எனும் கவலையோடு இருந்தபோது தான் இந்த திருட்டு ரயில் சிக்கியது.
ஆஹா..என்ன ஒரு படம், என்ன ஒரு படம். அதிலும் ஹீரோ ரக்ஷன், நம் சின்ன கேப்டனுக்கு சரியான சவால் என்றால் மிகையில்லை. காதல், கோபம், சோகம், காமெடி என அனைத்தையும் ஜென் நிலையில் ஒரே மாதிரி எக்ஸ்பிரசனில் ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்வது ஆசம், ஆசம்!
அப்பாவி பவர் ஸ்டாரோ, நாஞ்சில் சம்பத்தோ கிடைத்தால் குமுறு குமுறு எனக் குமுறும் போராளிகள், இந்த ஹீரோவை இன்னும் விட்டுவைத்திருப்பது ஆச்சரியம் தான். ஒருவேளை, பெரிய இடம் என்பதால் பம்மி விட்டர்களோ!
அஞ்சான் போன்ற காவியங்கள் எல்லாம் உடலையும் மனதையும் ரணகளமாக்குபவை. ஒருமுறைக்கு மேல் உடம்பு தாங்காது. ஆனால் வீராச்சாமி-சகாப்தம்-திருட்டு ரயில் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் குதூகலக் காவியங்கள்.
படக்குழுவிற்கு எமது ஆழ்ந்த நன்றிகள்!
----------
அண்ணே, தமிழன்னா யாருண்ணே?
அடேய், படம் பார்க்கும்போது பாட்டு சீன் வந்தால்ச்சே..பாட்டா போட்டு கொல்றாங்கப்பான்னு பாட்டை ஃபார்வர்ட் பண்ணி ஓட்டிட்டு, அதே பாட்டை சன் மியூசிக்கில் -ன்னு பார்க்கறவன் தான் தமிழன்!
-------------
பென் டிரைவ்வில் பாடல்களை ஏற்றி, காரில் போட்டால் எந்தப் பாடலாக இருந்தாலும் ஒரு மாதம் தான் தாங்கும். பிறகு சலித்துவிடும். அப்புறம் அடுத்த செட் பாடல்களைத் தேட வேண்டும்.
ஆனால் கேட்க ஆரம்பித்த நாளில் இருந்து, இன்னும் அலுக்காத பாடல்தொட்டால் தொடரும்படத்தில் வந்தபாஸு..பாஸுதான். இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கொஞ்சமும் போரடிக்கவேயில்லை.
அந்தோணிதாசனை ஜாஸ் பாட வைத்தது தான் பாடலின் சிறப்பு. இந்த ரகளையான மெட்டைப் போட்ட பி.சி.சிவன் இப்போது வேறு படம் செய்கிறாரா என்று தெரியவில்லை.
கேபிள் சங்கர் & கார்க்கி பாவாவின் சமூக அக்கறையுள்ள வரிகள், சலிக்காத மெட்டு & வித்தியாசமான குரல் என எல்லாம் நன்றாக அமைந்ததால், என்னைப் பொறுத்தவரை இந்த வருடத்தின் சிறந்த பாடல் இது தான்!
அப்புறம், இன்றைக்கு துப்பு மேட்டர் தான் ஹாட் டாபிக் போலும். ‘நியூஸெல்லாம் ஸ்கேமு தானே..போச்சு நம்ம காசு, காசுஎன்று அன்றைக்கே இந்த கவிஞர்கள் துப்பி..ச்சே, செப்பினார்கள் என்பதை சபையில் பதிவு செய்து விடைபெறுகிறேன்!
----------------
ஸ்டில்லைப் பார்த்த கைப்பிள்ளைக்கே ஹார்ட்-அட்டாக்குன்னா, க்ளோசப்புல பார்த்த சசிக்குமார் உயிரோட இருப்பார்ன்னா நினைக்கிறே???
---------
கேள்வி: நல்ல கண்ணுவை விட்டுவிட்டு, இளைஞர்கள் சகாயத்தை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஐயா.நல்லகண்ணு யார் என்று தெரியாததால் தான்!
---------------
சிம்பு மீதான வன்மத்திற்குக் காரணம், பீப் பாடல் அல்ல. இதுவரை அவர் செய்துவந்தநல்லகாரியங்கள் தான்.
இதே மாதிரி, இன்னொரு தாய் சிம்புவுடன் பேசும் ஆடியோ யூ-டியூபில் வெளியானதே...அப்போதே இப்படி துடித்திருக்கலாம். டூ லேட்!
சட்டப்படியும், நியாயப்படியும் சிம்புவை பீப் பாடல் விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. அரெஸ்ட் செய்து, வெள்ளத்தில் வீடிழந்து தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் கொடுப்பது(!) தான் ப்ளான்.
ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நாம் கம்முன்னு இருக்க வேண்டிய விஷயம் இது. அதுசரி, இரண்டு நாதாரிகள் அடித்துக்கொள்ளும்போது, அங்கே நமக்கென்ன வேலை!
இருப்பினும், ஒரு தாயாக இவர் படும் வேதனைக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
https://www.youtube.com/watch?v=eOySIgclNME
---------
ஓட்டுப்பொறுக்கிகள்கூட காணாமல் போன நிலையில், படகில் சென்று மக்களுக்கு உதவிய ஒரு மனிதன்...
தன் ஆயிரமாவது படவிழாவைக்கூடஇந்த சூழலில் வேண்டாம்என்று சொல்லும் ஒரு மனிதன்..
வெள்ளமீட்பில் பங்கேற்ற ஆயிரம்பேருக்கு, நான்குமணி நேரம் நின்று தானே கையெழுத்திட்டு சர்டிஃபிகேட் வழங்கிவிட்டு வெளியே வரும்போது,
பீப் சாங் பற்றி பீப்தனமாகக் கேள்விகேட்டால், கொஞ்சவா செய்வார்?
வெள்ளப்படுகொலையில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப இந்த பீப் சாங் பயன்படும் சூழலில், இளையராஜாவின் கோபத்திற்கு ஒரு சல்யூட்!
வெல்டன் மொட்டை பாஸ்!
-----------
இன்றைக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரளா நண்பன் கேட்ட கேள்வி இது.என்னால் பதில் சொல்ல முடியவில்லை :
சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் ஏரி நிரம்பியிருக்கு. உடைஞ்சிருமோங்கிற நிலைமை வந்திருக்கு. அப்போக்கூட உங்க அதிகாரிகளும், மந்திரியும் சொந்தமா யோசிக்கக்கூட முடியாமல், ஆணைக்காக வெயிட் பண்ணி, ஒரு ஊரையே...அதுவும் உங்க தலைநகரையே அழிச்சிருக்கீங்க. சொந்த மக்களையே கொன்னிருக்கீங்க.
உங்களை நம்பி எப்படி முல்லைப்பெரியாறு அணையை விடறது? சொந்த ஊருக்கே ஆபத்து எனும்போது செயல்படாத அரசு, அடுத்த ஸ்டேட்டான எங்க மக்களுக்காக கவலைப்படுமா? நாளைக்கு எங்க இடுக்கு மாவட்டத்தையே இதே மாதிரி அழிக்க மாட்டீங்கன்னு எப்படி நம்பறது? எங்க பயம் நியாயமா, இல்லையா?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.