என்னடா இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன், ஆரம்பிச்சுட்டாங்க.
’மலையாளத்தில் ஜார்ஜ் குட்டி என்ற கிறிஸ்துவ கேரக்டரை தமிழில் இந்து கேரக்டராக மாற்ற வேண்டிய அவசியம் ஏன்? கமலின் பூணூலும் துருத்திக்கொண்டு தெரிகிறது’ என்று புர்ச்சியாளர்கள் பொங்குகிறார்களாம்.
1. ஹீரோ ஒரு கேபிள்டிவி ஆபரேட்டர். இரவில் தன் கேபிள்டிவியில் கில்மா படம் ஒளிபரப்பி, கஸ்டமர்களை குஷிப்படுத்துகிறார் என்று வருகிறது. இவர்கள் சொல்கிறபடி ஜார்ஜ் குட்டியாக வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ‘பார்த்தீர்களா பார்ப்பானின் வேலையை..சிறுபான்மையினர் எல்லாம் இப்படி இழிவான வேலை செய்துதான் முன்னுக்கு வருகிறார்கள் என்று காட்டியிருக்கிறார் கமல்’ என்று இதே புர்ச்சி குரூப் பொங்கல், வடை, பாயாசம் வைத்திருக்க மாட்டார்களா?
2. ட்ரெய்லரில் அவர்கள் சர்ச்சுக்குப் போவதுபோல் வந்தால், இன்னொரு ஓசி டிக்கெட் குரூப் ’முதலில் எனக்கு படத்தைக் காட்டு’ என்று கிளம்பி வந்திருக்காதா?
3. பலகோடி முதலீட்டில் சினிமா எடுப்பதில் உள்ள முக்கிய சவாலே, ஆடியன்ஸை படத்துடன் ஒன்ற வைப்பது தான். கேபிள்டிவி நடத்தும் நாடார் என்று சொல்லும்போது, இந்த மண்ணில் நம்மைப் போன்ற ஒருவன் குடும்பத்தில் நடக்கும் கதை என்ற தோற்றம் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படும். மேலும் இது மலையாளப்படம் அல்ல, தமிழ்ப்படம் தான் என்று காட்டவும் அது உதவுகிறது. சலீம் போன்ற படங்களில் கதைப்படியே சிறுபான்மையினர் கேரக்டர் தேவைப்படுகிறது. இங்கே அவசியம் வைத்தாக வேண்டிய காரணம், கதையில் இல்லை.
5. ஜார்ஜ் குட்டி எனும் உண்மையான மனிதனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது என்றால், ஏன் மாற்றினீர்கள் என்று கேட்கலாம். ஜார்ஜ் குட்டியே கற்பனைக் கதாபாத்திரம் தானே?
5. உங்கள் வாதம் சரியென்றால்...த்ரிஷ்யம் கதையே ‘The Devotion of Suspect X’ எனும் ஜப்பானிய நாவலின் கருவைச் சுட்டு உருவானது தான். எனவே ஜப்பானிய ஹீரோ கேரக்டரான இஷிகாமி பெயரை ஏன் மாற்றி, ஜார்ஜ் குட்டி ஆக்கினீர்கள் என்று கேட்பது தானே நியாயம்?
6. த்ரிஷ்யம் ஏற்கனவே கன்னடம், தெலுகு, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அங்கேயும் ஹீரோ கேரக்டர் இந்துவாக ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருக்கும் புர்ச்சியாளர்களுக்கு அது உறுத்தாதபோது, உங்களுக்கு ஏன் ஐயா உறுத்துகிறது?
7. இதுதான் முக்கியமான பாயிண்ட். இதைக் கேட்டதும் புர்ச்சியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து வெட்கித் தலைகுனிவார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
த்ரிஷ்யத்தில் வருவது கிறிஸ்துவக் குடும்பம் என்பதால், ஹீரோயின் மீனா படத்தில் பொட்டு, பூ, மேக்கப் இல்லாமல் நடித்திருப்பார். தமிழில் கௌதமியை அப்படி மேக்கப் இல்லாமல் பார்க்கும் தைரியம் உங்களுக்கு நிஜமாகவே இருக்கிறதா? நீங்கள் ஆயிரம் தலை வாங்கிய கொடூர புர்ச்சியாளராக இருக்கலாம். ஆனாலும் எங்கள் தலைவி கௌதமி அப்படி வந்து நின்றால், நீங்களே பதறி, கதறித் தெறித்து ஓடுவிடுவீர்கள் தானே? உங்களுக்கே அப்படி என்றால், எம்மைப் போன்ற சாமானியர்களின் நிலைமை..?
---
ஹலோ...
யார்னா இருக்குறீங்களா?
அமைதியா இருக்கு..ரொம்ப ரொம்ப பயமா இருக்கு..தாங்க முடியல.
ஏம்பேரு செங்கோவி..பதிவர் செங்கோவி.
பதிவர் செங்கோவி ஃபேமிலியை ஊருக்கு அனுப்பிட்டு சந்தோசமா படம் பார்த்துக்கிட்டு இருந்தாரு..
பேயப்படம்..அதுவும் தமிழ்ப்படம் தானேன்ன்னு டிமாண்ட்டி காலனியைப் பார்க்க ஆரம்பிச்சாரு...இப்போ பயம்மா இருக்கு..
இப்படியா படம் எடுக்கிறது...
கதவு க்றீச்சுன்னு கத்துது..எங்கேயோ தண்ணி ப்ளட் மாதிரி ஒழுகினேகீது..காஞ்சனாவையே சுத்தி நாலுபேரை வச்சிக்கினு பார்ப்போமே..நமக்கு இது தேவையா?
யப்பா..டைரக்டர்ரு...இப்படி டர்ர் ஆக்கிட்டயேப்பா..
ஹலோ..
யார்னா இருக்கிறீங்களா..........ஊஊஊஊ!
# டிமாண்டி காலனி
----------------------
தேர்தல்ங்கிற பேர்ல ஓட்டு வாங்க நீங்க அடிச்ச கூத்தைக்கூட மன்னிப்பேன்டா..ஆனால் அதையும் காலையில் இருந்து உட்கார்ந்து எண்ணியிருக்கீங்களே, அந்த சின்சியாரிட்டியை மன்னிக்கவே மாட்டேன்டா!
-----------
ஒருவழியாக இணையப் போராளிகள் நடிகர் சிவகுமாரை ஃபேஸ்புக்கை விட்டு விரட்டிவிட்டார்கள்.
அவர் தீரன் சின்னமலை பற்றி ஒரு ஸ்டேடஸ் போட்டாராம்.
தீரன் சின்னமலை ஒரு கவுண்டர்.
சிவக்குமாரும் ஒரு கவுண்டர்.
எனவே, சிவக்குமார் ஒரு ஜாதி வெறியர் என்று போராளிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
இதனால் அறியப்படும் நீதி:
பூலித்தேவன், கட்டபொம்மன், வாஞ்சிநாதன், காமராஜர், அம்பேத்கர், தமிழ்த்தாத்தா வா.வே.சா.அய்யர் போன்றோரைப் பற்றி பாராட்டி எழுதும் முன்பு, அவர்கள் உங்கள் ஜாதியா என்று பார்த்துக்கொள்ளவும்.
என்னதான் நீங்கள் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் (அகரம் பவுண்டேசன் போன்று) பல உதவிகள் செய்திருந்தாலும், ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களைப் பெற்றிருந்தாலும், சுயஜாதியில் பிறந்த நல்லவர்களைப் பாராட்டினால்............நீங்கள் ஒரு ஜாதி வெறியரே!!!
----------------------------------
எப்போதெல்லாம் ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அதை குவைத்தில் ரிலீஸ் செய்யாமல் கவிழ்த்துவிடுகிறார்கள்.
இந்த வாரம் வெளியாகும் மூன்று படங்களில் ‘இன்று நேற்று நாளை’ படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தேன். படத்தின் விளம்பரங்களிலேயே பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். ‘டைம் டிராவல்’ எனும் கான்செப்ட்டே கவனத்தை ஈர்த்தது.
ஆனால் என்ன செய்ய...படம் இங்கே ரிலீஸ் ஆகவில்லை.
கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பொதுவாக நான் எதிர்பார்க்கும் படம் இங்கே ரிலீஸ் ஆகவில்லை என்றால் படம் சூப்பர்ஹிட் ஆகும். உதாரணம், பிசாசு. அந்தவகையில் ரிலீஸ் ஆகாதது சந்தோசம் தான். smile emoticon
நண்பர்கள் பார்த்துவிட்டுச் சொல்லவும்.
-----------------------
திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது, நமக்கு உள்ள சவால், வித்தியாசமான கான்செப்ட் கிடைப்பது தான்.
ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்(மெமண்டோ-கஜினி)
ஏர்வாடி ( சேது)
இருவர் காதலித்தார்கள்..சேர்ந்தார்கள் அல்லது சேரவில்லை என்பது தான் எல்லா காதல் படங்களின் கதையும். ஆனால் சேதுவில் ஏர்வாடி மேட்டர் நுழைக்கப்பட்டதும். ஒரு உணர்ச்சிகரமான காவியமாக ஆகிவிட்டது.
பழி வாங்குதல் கதைகளை நூற்றுக்கணக்கில் பார்த்துவிட்டோம். அதில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் சேர்ந்ததும், செம த்ரில்லர் மூவி கிடைத்தது.
எல்லாப் படங்களிலுமே வித்தியாசமான கான்செப்ட் (என்று படக்குழு நம்பும்) ஒரு விஷயம் இருந்தே தீரும். இல்லையென்றால், கதை அரதப்பழசாகத் தெரியும்.
எனவே கான்செப்ட் பிடிப்பது ஒரு சவால். அது சிக்கிவிட்டால், அதைச் சுற்றி கேரக்டர்களையும் சம்பவங்களையும் அடுக்கிவிட முடியும். ஒரு நல்ல திரைக்கதை ஆரம்பிக்கும் புள்ளியே இது தான்.
மாசு(!) படத்திற்கும், அதன் ஒரிஜினல் படங்களாக சொல்லப்பட்ட படத்திற்கும் ஆதிமூலம், சிக்ஸ்த் சென்ஸ் படம் தான். ’இறந்தவர்கள் கண்ணுக்குத் தெரிந்தால்..ஹீரோவின் உதவியை அவர்கள் நாடினால்?’ எனும் புதுமையான பேய் கான்செப்ட்டுடன் வந்து, சிக்ஸ்த் சென்ஸ் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் இத்தகைய படங்கள் ஓடுவதற்குக் காரணம், கான்செப்ட் மட்டுமே அல்ல. அந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது மேட்டர். கஜினி ஓடியதற்கும், தாண்டவன் ஃப்ளாப் ஆனதிற்கும் அது தான் காரணம்.
கான்செப்ட் என்பது நல்ல ஒரு செட்டப்பைக் கொடுக்கும். அதை அடுத்து சுவராஸ்யமாக ஆக்குவது, கதை சொல்லும் விதமும் கதையின் முடிவும்.
மாசு படத்தைப் பொறுத்தவரை இடைவேளைவரை படம் அட்டகாசம். அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அரதப்பழசான பழிவாங்கும் டெம்ப்ளேட்டில் படம் சிக்கிக்கொள்கிறது. இத்தகைய கதைகளில் ஃப்ளாஷ்பேக்கும் புதுமையாக இருக்க வேண்டும். 1980களில் வருவது போன்ற ஃப்ளாஷ்பேக்கும் கிளைமாக்ஸும் கொடுமை.
அப்பா சூர்யாவின் கெட்டப் கலக்கலாக இருந்தது. சூர்யா போன்ற திறமையான நடிகர், மாஸ் ஹீரோ ஆசையை விட்டுவிட்டு நல்ல படங்களில் நடிப்பது நல்லது.
நல்ல கான்செப்ட் கிடைத்தும் சொதப்பிய தாண்டவம், விஷாலின் நான் சிகப்பு மனிதன் வரிசையில் உளுந்தூர்ப்பேட்டை நாய்க்குக் கிடைத்த பிரியாணி, இந்த மாசு!
-------------------------------------
காதலுக்கு மரியாதை வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியிருந்த நேரம். இன்றைக்கு பேய் போன்று, அன்று காதல் படங்களாக வெளிவந்த நேரம். அப்போது விஜய் கொடுத்த பேட்டியில் ‘ஆக்சன் ஹீரோ ஆவது தான் லட்சியம்’ என்று சொன்னார். எங்கள் கிராமத்தில் ‘என்னய்யா இவன்..லவ் படத்தை விட்டுட்டு ஆக்சனுக்குப் போறேங்கிறான்?’என்று பேசிக்கொண்டோம்.
ஆனால் விஜய்யிடம் ஒரு தெளிவான தொலைநோக்குத் திட்டம் இருந்தது. காதல் படங்களில் நடித்தால், சுரேஷ்-ரகுமான் போன்று சப்பையாக ஆக்கிவிடுவார்கள் என்ற புரிதலும் இருந்தது. ’இவன் எல்லாம் சூப்பர் ஹீரோவா?’என்று அப்போது பேசினார்கள். இப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அன்று விஜய் இருந்த லெவல் வேறு, இன்று இருக்கும் லெவல் வேறு.
அன்றைய பிரபல பத்திரிக்கையில் ஆரம்பித்து இன்றைய ஃபேஸ்புக்வரை, எத்தனை விமர்சனம் வந்தாலும் விஜய் கில்லி மாதிரி இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறார். நேற்றுக்கூட ஒரு நண்பர் ‘விஜய்யை ஏன் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்?’என்று கேட்டிருந்தார். மக்கள் முட்டாள்கள் அல்ல என்று பதில் சொல்லியிருந்தேன்.
விஜய்யின் வளர்ச்சிக்கு உதவிய சில விஷயங்கள்:
1. பக்கத்து வீட்டுப்பையன் போன்ற சராசரி லுக். இது பல ‘மன்மத ராசா’க்களை அவர் பக்கம் கொண்டுவந்தது.
2. கமர்சியல் ஹீரோவுக்குத் தேவையான நடனத் திறமை
3. தன் நடிப்பு எல்லை அறிந்து, அதிகம் நடிக்கத் தேவையில்லாத கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பது
4. ரஜினி போன்றே பி & சி ஏரியாவைக் கவரும் அம்சங்களை படத்தில் வைப்பது
5. ஆக்சனும் காமெடியும் ஒருங்கே வருவது ஒரு வரம். அது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. எம்.ஜி.ஆர் & ரஜினியின் வெற்றிக்குக் காரணமே, அது தான். விஜய்க்கு அது அட்டகாசமாக வருகிறது. ஒரு மாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஹீரோவாக அவர் ஜெயிக்க முக்கியக் காரணமே இது தான்!
ஹேப்பி பர்த் டே விஜய்.
---------------------------------------
பொதுவாக ஒரு நாட்டில், அந்த நாட்டை இழிவுபடுத்தும் விஷயங்களைச் செய்ய எதிர்ப்பு கிளம்பும். இந்தியா போன்ற விசித்திர பூமியில் நம் நாட்டின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றான யோகா தினம் கொண்டாடுவதற்குக்கூட விளக்கத்திற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது.
1990கள்வரை இந்தியா என்றால் இரண்டு சித்திரங்கள் தான் வெளிநாட்டினர் மத்தியில். ஒன்று, இந்தியா ஒரு ஆன்மீக பூமி. இரண்டாவது, இந்தியா ஒரு பாம்பாட்டி நாடு. ஐ.டி.துறை வளர்ச்சி அடைந்து, அமெரிக்காக்காரன் வேலைக்கு நாம் உலை வைத்தபின்னரே, இது பாம்பாட்டி நாடு அல்ல என்று அவர்கள் உணர்ந்தார்கள்.
கடந்த பத்து வருட காங்கிரஸ் ஆட்சியில், வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு அதளபாதாளத்திற்கு இறங்கியது நிஜம். இந்தியன் எம்பசிகள்கூட, வெளிநாடுவாழ் இந்தியர்களை கேவலமாக நடத்திய காலம் அது.
இந்த உலகிற்கு இந்தியா எத்தனையோ கொடைகளைக் கொடுத்துள்ளது. இன்றைய வல்லரசுகள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்திலேயே வான சாஸ்திரம், தியானம், யோகா, திருக்கிறள் போன்ற நீதிநூல்கள் என ஆன்மீகரீதியில் செழித்து விளங்கிய பூமி இது. ஆனால் அதைப் பெருமையாக வெளியில் சொல்லக்கூட கூசும் அரசியல்வியாதிகளால் அவை கண்டுகொள்ளப்பட்டதே இல்லை.
உலக அரங்கில் இந்தியாவின் இமேஜை உயர்த்த, மோடி எடுத்த சிறப்பான முயற்சி, இந்த சர்வதேச யோகா தினம். ஐ.நா.சபையும் இதை ஏற்றுக்கொண்டது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
குவைத், துபாய் உள்ளிட்ட நம் நட்பு இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இதை வரவேற்ற நிலையில், நம்மூர் மதச்சார்பின்மைவாதிகள் இதிலும் பிரிவினையைத் தூண்டினார்கள். 2ஜி திருடன் முதல் புண்ணாக்குத் திருடன்வரை ஆதாய அரசியலில் இறங்கினார்கள். இந்தக் கண்றாவியை எல்லாம் தாண்டித்தான், நம் நாட்டின் கௌரவத்தை மத்திய அரசு உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறது.
கேப்டனை இதற்காக பலரும் ஓட்டுவதைப் பார்க்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு இந்திய அரசியல் கட்சியாக தன் கடமைடை தேமுதிக சரியாகச் செய்திருக்கிறது. அவருக்கு எம் வந்தனங்கள்.
ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவிக்கக் காரணமான பிரதமர் மோடிக்கும், மத்திய அரசிற்கும் நன்றிகள் பல கோடி!
-------------------------------------
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.