Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...19சார்..கோபமா, ஆக்ரோசமா எதிரிப்படை நடுநடுங்கற மாதிரிப் பார்க்கிறீங்க..ஆக்சன்.
கட்..கட்..ம், சார், கொஞ்சம் கோபமா, ஆக்ரோசமாப் பாருங்க...ஆக்சன்.
உஸ்ஸ்...கோபமாப் பாருங்க சார்..போதும்....ஆக்சன்.
கட்..கட்..கட்...ஓகே...பரவாயில்லை...நீங்க எப்பவும் போலவே பாருங்க..நாங்க கொடுக்கிற ட்ரெஸ்ஸை மட்டும் போட்டுக்கோங்க..முடியல!
# உர்ர்

--------------------------
ஒருநாள் நல்ல உறக்கத்தில் இருந்தேன்.
ஒரு ஃபோன் வந்தது. ‘ஹலோ..மோடி பேசுறேன்ன்னு சொன்னார்.
மோடிஜி..சொல்லுங்கன்னு கேட்டேன்.
எம் ஒய்ஃபுக்கு கேன்சர்..உடனே ட்ரீட்மெண்ட்டுக்காக போர்ச்சுக்கல் போகணும்ன்னு கேட்டார்.
ஆஹா...என்ன தான் மனைவியை விட்டு சின்ன வயசுலேயே பிரிஞ்சுட்டாலும், உள்ளுக்குள்ள பாசம் இருக்கத்தான்யா செஞ்சுருக்கு..மோடிஜி கிரேட்ன்னு தோணுச்சு.
இதுக்கு ஏன் ஜி என்கிட்டே கேட்கிறீங்க..தாராளமாப் போய்ட்டு வாங்கன்னு யதார்த்தமாச் சொன்னேன்.
காலைல தான்யா தெரியும், அது நரேந்திர மோடி இல்லை..லலித் மோடின்னு...அவ்வ்!

-----------------------------
Jurrasic World (3D) - ஒரு பார்வை
அடேங்கப்பா, எத்தனை டைனோசரு!
வில்லன் டைனோசர் வந்தாலே பயமா இருக்கு.
சுறா மீனு டபக்குன்னு டைனோசரையே முழுங்குனது சூப்பர்ல.
கிளைமாக்ஸ்ல டைனோசருக்கும் டைனோசருக்கும் செம ஃபைட்.
சூப்பரோ சூப்பர்.
- இப்படி எல்லாம் என் ஐந்து வயது மகன் ரசித்துப் பார்க்கும்போது, ’அய்யய்யோ..இது மொக்கைப் படம்ன்னு தெரியாம வந்து சிக்கிட்டமே’-ன்னு நொந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
முதல் பாகத்தில் இருந்த த்ரில், டைனோசரை எதிர்பார்க்க வைத்த திரைக்கதை என எதுவுமே இல்லாமல், சும்மா கிராஃபிக்ஸை வைத்து பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள்.
ஜுராசிக்கில் பார்க்கில் அதிக த்ரில்லை எதிர்பார்க்கும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த, டெரரான டைனோசர் ஒன்று உருவாக்கப்படுகிறது. ஆனால் அது ரசிகர்களுக்கே ஆபத்தாக முடிகிறது. - இது தான் படத்தோட கதை.. அதுமட்டுமில்லை, படம் பார்த்த ஆடியன்ஸோட கதையும் அது தான்!
ஒழுங்கா ரோமியோ-ஜுலியட் போய், ஹன்சிகாவை ரசிச்சிருக்கலாம். சீக்கிரம் வயசுக்கு வாடா, மகனே!!

-----------------------------
// கார்த்திக் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - செய்தி //
தளபதி (நவம்பர்-1991) என்ற மெகா பட்ஜெட் படம் உருவான அதே நேரத்தில் தயாரான படம், அமரன் (ஜனவரி-1992). மார்க்கெட்டிங்கில் புது அத்தியாயத்தையே ஆரம்பித்த படம் என்று அமரனைச் சொல்லலாம்.
தளபதியின் மார்க்கெட்டிற்கு இணையாக, அமரன் படஸ்டில்களுடன் பேக்குகள், டி-ஷர்ட்ஸ், தொப்பிகள் என அமர்க்களப்படுத்தினார்கள்.
படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக, ராஜேஸ்வரின் புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங், ஸ்டைலிஷான ஸ்டில்கள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளௌ உண்டாக்கியது அமரன். ‘வெத்தல போட்ட ஷோக்குலபாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால், நிச்சயமாக இல்லை. 1992-ல் வெளியான படம் அட்டர் ஃப்ளாது ஆனது. நல்ல மேக்கிங், கார்த்திக்கின் அருமையான நடிப்பு எல்லாம் இருந்தும் சொதப்பலான கதை-திரைக்கதையால் படம் ஊத்தி மூடிக்கொண்டது.
மார்க்கெட்டிங்+ மேக்கிங் காரணமாக, இன்றும் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அது ஒரு நல்ல படம் எனும் கருத்தே இருந்து வருகிறது. அமரன் 2 பற்றிச் செய்தி வெளியிட்ட அனைவரும், அமரன் படம் சூப்பர்ஹிட் ஆனது போன்றே எழுதுவது சிரிப்பை வரவழைத்தாலும், ராஜேஸ்வருக்குக் கிடைத்த வெற்றி அது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
எப்படியோ, அமரன் போன்று சொதப்பாமல் இந்தப் படத்திலாவது நல்ல திரைக்கதையுடன் வந்து வெற்றி பெற வாழ்த்துகள்.
--------------
த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் 'மீனா கேரக்டரில் நடிக்கப்போவது கௌதமியா?' என்று நான் மனமுடைந்து போனது நீங்கள் அறிந்ததே! நான் ஒரு மீனா ரசிகன் என்பதே அதற்குக் காரணம் என சிலர் அபாண்டமாக புரளி கிளப்பி வருகிறார்கள். ஆனால் அதையும்தாண்டி, டெக்னிகலாக இரண்டு பிரச்சினைகள் கௌதமி தேர்வில் இருக்கின்றன.
த்ரிஷ்யம் படத்தின் அதிமுக்கியமான காட்சி, அந்த கொலை நடக்கும் காட்சி. வில்லன் ஹீரோயினின் டீன் ஏஜ் மகளை மிரட்டிக் கற்பழிக்க முயலும்போது, ஹீரோயின் 'அவளை விட்டுவிடு..என்னை எடுத்துக்கொள்' என்கிறார். வில்லனும் இந்த டீலிங்கிற்கு ஒத்துக்கொள்கிறார். அடுத்து வில்லன் கொல்லப்படுகிறான்.
இந்த முக்கியமான சீனில் மீனாவிற்குப் பதில் கௌதமி நடிக்கும்போது வரும் இரண்டு பிரச்சினைகள்:
1. கமல் -கௌதமி ஜோடி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, குருதிப்புனல் என்ற அட்டகாசமான படம் தான். அதில் 'லபக்கோ அமுக்' கிஸ் சீனுக்கு அடுத்து நம் நினைவில் நிற்பது, 'அவளை விட்டுடு..என்னை எடுத்துக்கோ' என கௌதமி அழைக்கும் சீன் தான். ஏறக்குறைய இதே சீன் தான் பாபநாசம் படத்திலும் வரப்போகிறது. எனவே ஒரு சராசரி ரசிகனுக்கு மீண்டும் அதே சீனைப் பார்ப்பது சலிப்பையே தரும். 'என்னய்யா இது..இந்தம்மாவுக்கு இதே வேலையாப் போச்சு' என்ற புலம்பல் வருமா, வராதா? படத்தின் முக்கியமான சீனை, சப்பை சீனாக இது ஆக்கி விடாதா?
2. வில்லன் டீன் ஏஜ் பெண்ணை விட்டு விட்டு, கும்தலக்கடி கும்ம்மென்று இருக்கும் மீனா ஆண்ட்டி அழைப்பை ஏற்றுக்கொள்வது லாஜிக். ஆனால் குமரியை விட்டுவிட்டு கிழவியிடம் போனான் என்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? நீங்களோ அல்லது நானோ அந்த இடத்தில் இருந்தால், அழைத்த பாட்டியிடம் 'நான் தொட்டால், நீ செத்திருவே!' என்று தானே சொல்லியிருப்போம்.
என் கவலை சரி தானே, நியாயமாரே?

---------------------------
பாராளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி இணையத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதினாலோ, பணம் வசூலித்தாலோ பத்து வருட சிறைத்தண்டனை என்று.
உண்மையில் தன் நாடும், நாட்டுமக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணும் நல்ல ஆட்சியாளர்கள் இருப்பதாலேயே இப்படி ஒரு அருமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது..கோடான கோடி நன்றிகள்!
அப்புறம்...இப்படி சட்டம் வந்திருப்பது மதச்சார்பற்ற இந்தியாவில் அல்ல..இஸ்லாமிய நாடான குவைத்தில். அதுக்கு ஏன்யா இந்த ஸ்டில்லுன்னு கேட்கிறீங்களா..சும்மா, லுல்லுல்லாயி!!
----------------
// நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது- செய்தி //
இந்தியாவில் அதிக அளவில் வெப்பநிலை பதிவாவது டெல்லி பகுதியில் தான். ஆனால் இப்போது அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது ஆந்திரா, ஒடிசா போன்ற தென்மாவட்டங்களில். காரணம், போதிய விழிப்புணர்வின்மை.
நான் முன்பு டெல்லியில் வேலைக்குச் சேர்ந்தபோது, எனக்குத் தரப்பட்ட முதல் அறிவுரை 'காலை 10 மணி முதல் மாலை நான்கு மணிவரை வெளியே செல்ல வேண்டாம்' என்பதே. வெயிலின் உக்கிரம் அதிகம் என்பதால், உடல் டீ-ஹைட் ரேட்' ஆகி மயக்கமும் மரணமும் சம்பவிக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
பின்பு அரபு தேசத்திற்கு வேலைக்கு வந்தபோது, ஜீன் - ஜிலை-ஆகஸ்ட் மாதங்களில் தொழிலாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வது தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்தேன். (ஆம், இப்போது தடை அமுலில் இருக்கிறது.)
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதும், அதைப் பற்றி எவ்வித ஆய்வும் இல்லாமல் நாம் கடந்து செல்வதும் என்னவகையான சொரணை என்று தெரியவில்லை.
ஒரு செந்தில்(?) காமெடியில் கிணற்றின் அருகே நின்று ’99, 99’ என்று எண்ணிக்கொண்டு இருப்பார். ஒருவன் அருகே சென்றுஎன்னது 99?’ என்று கேட்டதும், அவனைக் கிணற்றுக்குள் தள்ளி விட்டுவிட்டு ‘100, 100’ என்று சொல்ல ஆரம்பிப்பார். அதேபோன்று நம் அரசாங்கங்களும் ஒவ்வொரு வருடமும் சாவுக்கணக்கை எண்ணிக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய, இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வருவது போல் தெரியவில்லை.
கோடைகாலத்தில் நேரடியாக சூரிய ஒளியின்கீழ் வேலை செய்வது/இருப்பது ஆபத்தானது. முடிந்தவரை அதைத் தவிர்க்கப் பாருங்கள். முடிந்தால், வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள முடியுமா என்றும் பாருங்கள்.
மழையைக்கூட உடனே உணர்ந்து விலகி விடுவோம். ஆனால் வெயில் என்பது ஸ்லோ-பாய்சன் போன்றது. எச்சரிக்கையாக இருங்கள்.
 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.