Monday, March 21, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...3


சினிமா விமர்சனம் எழுதுவது எப்படி என்று ஒரு ஆளுமையிடம் நேற்று கற்றுகொண்டேன். புதிதாக எதைக் கற்றுக்கொண்டாலும், அதை உடனே செயல்படுத்திப் பார்ப்பது என் வழக்கம். எனவே...

தமிழ் சினிமா வரலாற்றிலேயே, தமிழ் சினிமா நுண்ணுணர்வற்று பொருக்காடிப்போனதையும், நேர்மையான உணர்ச்சிகளுக்கு வாய்ப்பில்லாத உள்ளீடற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் உருமாறி இருப்பதையும் தன்னுடைய இருண்ட நகைச்சுவையின் மூலமாகவும் சொன்ன படமாகஅஞ்சான்முக்கியத்துவம் பெறுகிறது. 

அஞ்சான்கதைக்குள் கதைகளாக நான்கு தளங்கள் இவ்வாறு தொடர்ந்து உருவாக்கப்பட்டு அவை ஒன்றோடொன்று உறவாட வைக்கப்படுகின்றன. இவற்றை வரிசைப்படுத்திக்கொள்ளுதல் நமக்குஅஞ்சான்என்ற திரைப்படத்தின் பிரதியின் உள்கட்டுமானங்களை அறிய உதவியாக இருக்கும். அவையாவன:

1.
கிருஷ்ணாவின் கதை
2.
கதையின் நாயகன் ராஜூ எனும் டான் கதை
3.
ராஜூ பாய் மற்றும் சந்துருவின் நட்புக் கதை
4.
படம் பார்த்த ஆடியன்ஸின் சோகக்கதை

மேற்சொன்ன நான்கு தளங்களையும் மிகவும் புத்திசாலித்தனமாக திரைக்கதையாக்கி, படத்தில் கதையே இல்லை எனும் தோற்றத்தைக் கொண்டுவந்ததிலேயே லிங்குசாமியின் வெற்றி, தமிழ் வெகு ஜன சினிமாவைப் பற்றிய கிக்கிலிப் பிக்கிலியாகவும் பரிணமித்திருக்கிறது

காட்ஃபாதர்’, ‘நாயகன்’, ‘தளபதிபோன்றரத்தம் தெறிக்கிறகேங்ஸ்டர் படம் வேண்டும் என்று கேட்கிற ஆடியன்ஸை, இனிமேல் டான் கதையே வேண்டாம் என்று கண்ணீரை மளமளவென்று கொட்டியபடி கதற வைத்திருப்பதன்மூலம், தமிழ் சினிமாவை ஆடியன்ஸை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி ஜாங்குஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்கி ஜாக்குச்சா செய்திருக்கிறார் லிங்குசாமி. 

வன்முறைக் காட்சிகளை அலட்சியமாகவும் இருண்ட நகைச்சுவை நிரம்பியதாகவும் காட்டுவதன் மூலம் நாம் வன்முறைக்கான அருவருப்பை இழந்து உணர்வற்றவர்களாகி தடித்ததோல் சமூகமாய் மாறிவிட்டோம் என்று உணர்த்துவது க்வெண்டின் டேரெண்டினோ பாணி. ஆனால் ராஜு பாய் ஒவ்வொருவராக கொல்லும்போது, ஆடியன்ஸ் அலறுகிறார்கள். தடித்த தோல் சமூகத்தை வன்முறைக்கு எதிரான காந்திய சமூகமாக ஆக்கி, தகிப்பும் தடவலும் கெங்கையுமாக உருட்டித் திரட்டியது தான் லிங்குவின் சாதனை.

சூர்யா குரலில் கொண்டுவந்திருக்கும் பிசிறும் கரகரப்பும் கேலியும் நம் காலத்து சினிமாப் பாடல்களை கேலி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது உள்ளங்கைக் கைரேகை மட்டுமல்லாது பூமத்திய ரேகையும்கூட. 

படத்தின் முக்கிய நீரோட்டமான கிண்டலும் பகடியும் (இரண்டும் ஒன்னு தானோ?) இரண்டாம் பாதியிலும் தொடர்வதால் படத்தின் நீதி துலக்கம் பெறுகிறது. ’இன்னொரு பாட்ஷாஎன்று சூர்யாவை ஏமாற்றி எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் ஆடியன்ஸுக்கு முதலில் கோபத்தை ஏற்படுத்தினாலும், கலாய்ப்பதற்கென்றே அமைக்கப்பட்ட காட்சிகள் சிரிப்பினையே மேலும் உண்டாக்குகின்றன. 

ராஜூ நாய்...ராஜூ பாய் போலோஎன்ற வசனத்தின் மூலம், ஹீரோவை நாய் என்று பாராட்டும் புதிய உத்தியை கையாண்டிருக்கிறார் இயக்குநர். நன்றியுள்ள ஜீவனான நாய், இதுவரை தமிழ் சினிமாவில் கேலிப்பொருளாகவும் ஆபத்தான விலங்காகவுமே காட்சிப் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. முதன் முதலாக, ஹீரோவை நாய் என்று விளித்ததன் மூலம், இந்தப் படம் ஹீரோக்களை நோக்கி கொட்டப்பட்ட கிச்சடி என்றால் அது மிகைநுணுக்க மெய்கிறக்கம் அல்ல.

அபாரமான திரைக்கதை, தொழில்நுட்ப லாவகம், திறமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், உழைப்பு எல்லாம் இருந்தும்அஞ்சான்வெறும் கேலிப்படமாக மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அது சமந்தாவின் உணர்ச்சிகளை பின்பாதியில் கையாள முயற்சி எடுத்திருக்குமேயானால் நல்லதொரு கலைப்படமாய் உருண்டு திரண்டிருக்கும். அந்த அரிய வாய்ப்பினை தவற விட்டுவிட்டார் லிங்குசாமி.

#முடியல!
கேள்வி: ஒரு படத்திற்கு அடிப்படை, திரைக்கதை தானே? அப்புறம் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்குநரின் படைப்பாக மட்டும் முன்னிறுத்துகிறார்கள்? 

பதில்: திரைப்படம் என்பது இயக்குநரின் மீடியம் தான். ஒரு திரைக்கதை பொதுவாக இயக்குநராலேயே இறுதிவடிவம் பெறுகிறத. உதாரணமாக ஹிட்ச்காக் திரைக்கதை ஆசிரியர் இல்லை. ஆனால் அவரது எல்லாப் படங்களிலும் அவரின் தாக்கத்தை உணர முடியும். ஒவ்வொரு சீனையும் அவர் விவாதித்தே இறுதிவடிவம் கொடுத்தார். திரைக்கதை என்பது 50% மட்டுமே பலனளிக்கும் விஷயம். மீதி 50% சொதப்பினால், படம் ஊற்றிக்கொள்ளும். படத்தினை நாம் விஷுவலாகத் தான் அதிகம் புரிந்துகொள்கிறோம். பாயிண்ட் ஆஃப் வியூ, ஷாட் டைப், காஸ்ட்யூம், நடிகர் செலக்சன், அவர்களின் நடிப்பு, லைட்டிங் என எல்லாவற்றையும் தீர்மானிப்பது இயக்குநர் தான். 

குப்ரிக், ஸ்கார்சோசி, ஹிட்ச்காக், ஸ்பீல்பெர்க் நான்கு பேருமே வெவ்வேறு ஸ்டைலை உடையவர்கள். தமிழில் மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் போன்றோரைச் சொல்லலாம். இவர்களிடம் ஒரே திரைக்கதையைக் கொடுத்தாலும், ஆர்ட்டிஸ்ட்+டெக்னிசியன் செலக்சன் மாறுபடும். நடிகர்களின் நடிப்பு மாறுபடும். ஷாட் வைக்கும் விதம் வேறுபடும். பாரதிராஜா உருவாக்கும் உணர்ச்சி வேறு, ஷங்கர் உருவாக்குவது வேறு. திரைக்கதை என்பது ப்ளூ பிரிண்ட் மாதிரி. அது தான் ஃபவுண்டேசன். ஆனால் அதன் மேல் என்ன மாதிரிக் கட்டிடம் வரும் என்பது, இயக்குநரின் கையில் தான் உள்ளது.

ஒரு கேரக்டர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லும்போது, க்ளோசப் ஷாட் வைக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. பெரும்பாலானோர் அதைத் தான் ஃபாலோ செய்வார்கள். ஆனால் மணிரத்னம் அதை அநாயசமாக மீறுவார். ஹரியாக இருந்தால், அந்த கேரக்டர் வாயிலேயே கேமிரா வைத்து, டடாங்..டடாங் என்று மியூசிக் போட்டு, ஏறக்குறைய நம்மை அடித்துச் சொல்வார். திரைக்கதையில் வரும் அந்த வசனம் முக்கியமானது, அது ஆடியன்ஸ் மனதில் பதிய வேண்டும் என்பது கூடத் தெரியாமல் இயக்குபவர்களும் உண்டு. அப்போது திரைக்கதை அடிபட்டுப் போய்விடும். எனவே பேப்பரில் இருப்பதை காட்சியாக்கி, நம் மனதிற்குள் படத்தினை இறக்குவது என்பது டைரக்டரின் சாதனை தான்.

இன்னும் சொல்வதென்றால், மணிரத்னம் பற்றி இவ்வளவு எழுதியிருக்கும்போது, ஸ்டில்லில் ஐஸ்வர்யா ராயை ஃபோகஸ் செய்யக்கூடாது!

நானும் சினிமா மாணவன் தான். ஒரு ஷாட் எப்படி, ஏன், எவ்வளவு நேரம் வைப்பது என்பதையே இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். தெரிந்ததைச் சொன்னேன். கேள்விக்கு நன்றி. (கமெண்ட்டில் பெரியவர்கள் இன்னும் விளக்கலாம்.)

#
தட் நாங்களும் ஆளுமை தான் மொமண்ட்

-------------------------------------------

பர்த் சர்டிஃபிகேட்டைப் பார்த்தால், பதினைஞ்சு வயசு.

ஆளைப்பார்த்தால் இருபத்தஞ்சு வயசு.

குரலைக் கேட்டால் நாப்பத்தஞ்சு வயசு.

மிஸ்டர் பிரம்மா, வாட் இஸ் திஸ்? என்ன வேலை பார்த்து வச்சிருக்கீரு


#லட்சுமி மேனன்
----------------------------------

தமிழ் எழுத, படிக்கத் தெரிந்த எல்லாருக்குமே இரண்டு கனவுகள் இருக்கும்.

1.
விகடன், குமுதம் போன்ற அச்சு ஊடகங்களில் தன் எழுத்துக்களைக் காண்பது

2.
சினிமாத் திரையில் விஷுவலாக தன் எழுத்துக்களைக் காண்பது.

அதில் முதல் கனவு இன்று நனவாகியிருக்கிறது. இந்த வார ஆனந்த விகடனில், ஹாலிவு நடிகர் ராபின் வில்லியம்ஸ் பற்றி நான் எழுதியஉலகம் இழந்த ரஷ்ய டாக்டர்எனும் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

உண்மையில் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. விகடன் குழுமத்திற்கும், விகடன் பொறுப்பாசிரியருக்கும் நன்றி.

அப்புறம், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய ராபின் வில்லியம்ஸுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.