வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகளை சந்தித்திருந்தாலும், இணைய வாழ்க்கையில் முதல் இழப்பே பெரும் இழப்பாக அமைந்துவிட்டது.
அண்ணன் ஸ்ரீதரன் சேதுராமன் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியை உள்வாங்கவே எனக்கு அதிக நேரம் எடுத்தது. திடீரென ஃபேஸ்புக்கில் பழக்கம் ஆனோம். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்றுகூட எனக்கு முதலில் தெரியாது.
எந்தவொரு நல்ல சினிமா பார்த்தாலும் உடனே எனக்கு இன்பாக்ஸில் தெரியப்படுத்துவார். ‘இதைப் பற்றி உங்க ஸ்டைலில் எழுதுங்கள். லேட் ஆனாலும் காத்திருக்கிறேன்’ என்பார். ஃபிலிம் நுவார் பற்றியெல்லாம் என்னை எழுத வைத்ததே அவர் தான்.
மதிமுகவின் இணைய தளபதிகளில் ஒருவராக மற்ற இடங்களில் வாள் சுழற்றினாலும், என்னிடம் சினிமா பற்றி மட்டுமே பேசிவந்தார். அண்ணனுக்கு ஒரு இளைப்பாறலாக எனது நட்பு இருந்திருக்கும் என்றால், அதைவிட எனக்கு இப்போது நிம்மதி தருவது வேறில்லை.
அண்ணனை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கும், மதிமுக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
------------------------
'மழை வரும்..வெள்ளம் வரும்’ன்னு தெரிஞ்ச உடனே
பொண்டாட்டி பிள்ளைகளை பத்திரமா ஊருக்கு அனுப்பிட்டு,
‘லீவு போட்டால், வீட்டு
பட்ஜெட் இடிக்குமே’ன்னு
இந்த
அடாத
மழையிலயும் ஆபீஸ்
போய்ட்டு,
திரும்பி வரும்போது ‘இந்நேரம் வீடு
மூழ்கியிருக்கும்’ன்னு
புரிஞ்சுக்கிட்டு,
செகண்ட் ஃப்ளோர்ல இருக்கிற ஃப்ரண்ட் வீட்டுல தஞ்சம்
புகுந்துட்டு,
அங்கேயும் சுற்றிலும் தண்ணி
சூழ்றதைப் பார்த்துட்டு,
’இனிமே இந்த
ஏரியாவை விட்டோ,
சென்னையை விட்டோ
நாமே
நினைச்சாலும் போக
முடியாது’ங்கிற
நிலைமையிலயும்
‘நல்லவேளை..பொண்டாட்டி, பிள்ளைகளை ஊருக்கு அனுப்புனோம்’ன்னு
நினைக்கிறானே..........
அந்த
அப்பாவி ஜந்துவைத் தான்
கண்ணுகளா,
இத்தனை
நாளா
‘ஆணாதிக்கவாதி, ஆணாதிக்கவாதி’ன்னு
திட்டிக்கிட்டு இருந்தீங்க!
------------
நன்றாக
வாழ்ந்துவிட்டு நொடித்துப் போவதை
விடவும் கொடுமையான விஷயம்
வேறு
எதுவும் இல்லை.
எங்கே
கௌரவமாக இருந்தோமோ, அதே
இடத்திலேயே அவமானங்களைச் சந்திப்பது நரகத்திற்குச் சமம்.
லிங்குசாமி தங்கள்
படத்தைப் பார்க்க மாட்டாரா, விநியோகிக்க மாட்டாரா என
சிறுதயாரிப்பாளர்கள்கூட ஏங்கியது ஒரு
காலம்.
இப்போதைய நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.
இந்த
வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமும், லிங்குசாமி தான்.
சீமானின் கதையைச் சுட்டு,
அஞ்சானுக்கு பூஜை
போட்டதில் ஆரம்பித்தது வினை.
சீமான்
பொங்கியெழ, அந்தக்
கதையை
விட்டுவிட்டு அவசர
அவசரமாக எழுதிய
கதை
அஞ்சான். கோடிக்கணக்கான பணத்தை
அதில்
முதலீடு செய்வது, குருட்டு தைரியம் தான்.
அது
இருட்டுக்கு வழி
காட்டியது.
அடுத்து வந்தது,
உத்தம
வில்லன். கமல்
படங்களின் இன்றைய
வணிக
மதிப்பு என்ன
என்பது
பெரும்
கேள்விக்குறி. இருந்தும், கமலை
நம்பி
கோடிக்கணக்கில் வாரியிறைத்தார். இப்போது ‘நாட்டில் நிறைய
உத்தம
வில்லன்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதையா இருங்க’
என்று
மேடையிலேயே லிங்கு
பேசும்
நிலைமை!
இருக்கிற கடன்களை எல்லாம் எப்படியோ சரிக்கட்டி, ரஜினி
முருகனை டிசம்பர்-4ல்
களமிறக்குகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்க
டீம்
என்பதால், நம்பி
போகலாம்..சந்தோசமாக திரும்பி வரலாம்
என்று
நம்புகிறேன்.
பார்ப்போம், ரஜினியும் முருகனும் லிங்குவிற்கு கை
கொடுக்கிறார்களா என்று!
-----------கேள்வி: தமிழ்ப்பட திரைக்கதைகள் ஆன்லைனில் ஃப்ரீயாக(!) கிடைக்குமா?
பதில்: ஆங்கிலப் படங்களின் திரைக்கதைகள், இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கின்றன. ‘தங்கமலை ரகசியமான’ தமிழ் சினிமாவிடம் அப்படி எதிர்பார்க்க முடியாது தான். இருப்பினும்..
யாரோ ஒரு புண்ணியவான் ‘சேது’ திரைப்படத்தின் முழு ஷூட்டிங் ஸ்க்ரிப்படையும் இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறார். அது இங்கே:
http://www.tamilkalanjiyam.com/arts/scripts/sethu/index.html
அடுத்து, ”திரு திரு..துரு துரு” படத்தின் திரைக்கதையும் கிடைக்கிறது.வித்தியாசமாக, வசனத்தை மட்டும் தமிழில் எழுதிவிட்டு, மீதியை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். பார்க்க, சுவார்ஸ்யமாக இருக்கிறது. இதையும் பார்த்துக்கொள்ளுங்கள்:
http://www.scribd.com/…/Thiru-Thiru-Thuru-Thuru-tamil-movie…
இயக்குநர் வசந்தபாலன், ஃபேஸ்புக்கில் அரவான் திரைக்கதையை எழுதிவந்தார். முடித்ததாக ஞாபகம் இல்லை.
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.