Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....24//மார்ச் 9ஆம் தேதி நியூஸ் : செல்போன் கதிர்வீச்சால் உடல் நலனுக்குப் பாதிப்பில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. //
//மார்ச் 28ஆம் தேதி நியூஸ் : பத்திரிக்கைகளில் இந்திய தொலைத்தொடர்புத் துறை விளம்பரம் - கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு வழிமுறைகள்//
என்ன தான்டா சொல்ல வர்றீங்க? ஆமாவா? இல்லையா?
கம்யூனிகேசனை டெவலப் பண்றதுக்குன்னு என்னென்னவோ சாட்டிலைட் அனுப்புறீங்களே, இந்த இழவெடுத்த இரண்டு துறைகளின் கம்யூனிகேசன் கேப்பைப் போக்க ஒரு சாட்டிலைட் அனுப்பக்கூடாதா?


தமிழ்நாட்டின் அவலங்களுள் ஒன்று, தாய்மொழியாம் தமிழைப் படிக்காமலேயே ஒருவன் கல்லூரிப்படிப்பு வரை முடித்துவிட முடியும் என்பது!
பிழைப்புக்காக வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் தமிழர்கள் அங்குள்ள சட்டப்படி அரபு போன்ற அந்தந்த நாட்டு மொழிகளைப் படிக்கத் தயங்குவதில்லை. ஆனால் சொந்த மொழியைப் படிப்பது கௌரவக்குறைவு எனும் முடிவுக்கு எதனாலோ நம் புத்திசாலிகள் வந்தடைந்திருக்கிறார்கள்.
இந்த அவலத்தை நீக்குவதற்காக, அம்மையார் 2003ல் அறிவியல் தமிழ் எனும் பாடத்திட்டத்தினைக் கொண்டுவந்தார். ஆனாலும் ஏனோ து சரிவர நடைமுறைப்படுத்தப்படவிலை.
பின்னர் 2006ல் கலைஞர் 'தமிழ் கற்பதற்கான சட்டம்' கொண்டுவந்தார். அதன்படி வரும் கல்வியாண்டு முதல் ஒன்றாம்வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஒரு கட்டாயப்பாடமாககற்பிக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இது நடைமுறைக்கு வருகிறதென அறிகிறேன். வழக்கம்போல் எதிரிக்கட்சி கொண்டு வந்த திட்டம் என குப்பையில் போடாமல், இதை நடைமுறைப்படுத்தும் அதிமுக அரசிற்கு ஒரு தமிழனாக மனமார்ந்த நன்றிகள்.


//கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.//
யாருடா அவங்க, இவ்ளோ தைரியமா மாமூல் தராமல் கடை போட்டது?
------------------------

சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.
நல்ல படம் என்பதால் வழக்கம்போல் குவைத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்டில் தான் பார்க்க முடிந்தது.
முதல் காட்சியிலேயே கதைக்குள் இழுத்த லாவகம், மூன்று பிரிவுகளாகக் கதை நடந்தாலும் கொஞ்சமும் குழப்பாத திரைக்கதை, பரபரப்பை இறுதிவரை தக்க வைத்த எடிட்டிங் என ஆசம்...ஆசம்.
என்ன ஒன்று...நகுலுக்கு ஜோடியாக ஒரு பையனை நடிக்க வைத்திருக்கிறார்கள், அதுவும் புதுமையாகத்தான் இருந்தது. smile emoticon
இன்னும் படத்தைப் பார்க்காதவர்கள், தாராளமாகப் பார்க்கலாம்.போற போக்கைப் பார்த்தால் வீடியோ ரிலீஸ் ஆகலேன்னா, பிரபல நடிகையாவே ஒத்துக்க மாட்டாங்க போல...
அதுசரி, ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழறதும், பிரபல நடிகைன்னா வீடியோ லீக் ஆகறதும் சகஜம் தானே!


சேரனின் சி2ஹெச் திட்டம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுத்திருக்கிறார். இதற்கான அவரது உழைப்பு நம்மைப் பிரம்மிக்க வைக்கின்றது. இதற்காக சேரனைக் கொண்டாடுகிற அதே நேரத்தில்...
சேரன் எடுத்திருக்கும்ஜேகேஒரு மொக்கைப்படம் என்று சொல்வதில் நம் ஆட்களுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. சீரியலை விட மோசமாக நகர்கிறது படம். இதை டிவியில் பார்க்கவே நிறைய பொறுமை தேவைப்படுகிறதே, இதை தியேட்டரில் எப்படிப் பார்ப்பது?
பாண்டவர்பூமி, ஆட்டோகிராஃப் என அற்புதமான படங்களைக் கொடுத்த கலைஞன் கொடுத்திருக்கும் இன்னொரு மாயக்கண்ணாடி தான் இந்தபடம். அந்நியமான கேரக்டர்கள், சவசவ என நகரும் காட்சியமைப்பு, எடுபடாத சந்தானத்தின் காமெடி, மனோபாலாவை ஊமையாக்கிய அநியாயம் என படம் பொறுமையைச் சோதிக்கிறது.
நமக்குத் தேவை உணர்வுப்பூர்வமாகக் கதை சொன்ன பழைய சேரன் தான், இந்த மாடர்ன் கதை சொல்லி அல்ல!........ சி2ஹெச்சை ஆதரிக்கும் வேகத்தில் ஜேகே-யைப் பாராட்டி, சேரனை ஒழித்துகட்டிவிடாதீர்கள்!
---------------------------------------------------------------------------------
இப்படி இருந்த சித்தார்த் அப்படி ஆகும்போது, அப்படி இருக்கிற நாம் ஏன் இப்படி ஆக முடியாது?????????
நம்பிக்கை தான் சார் வாழ்க்கை!!!
----------------------------------------
கேள்வி: முட்டாளுக்கும் பகுத்தறிவுவாதிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: திருடுவது, பொய் சொல்வது போன்ற கெட்ட காரியங்களை மறைவாகவும், கோவிலுக்குப் போவது போன்ற காரியங்களை வெளிப்படையாகச் செய்பவன் முட்டாள்.
ஊழல், திருடுவது, பொய் சொல்வது, சின்ன வீடு வைத்துக்கொள்வது போன்ற காரியங்களை வெளிப்படையாகவும், கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற காரியங்களை தலையில் முக்காடு போட்டுக்கொண்டு மறைமுகமாகவும் செய்பவனே பகுத்தறிவுவாதி ஆவான்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.