Saturday, March 12, 2016

க...க...க...போ!


PTA இயக்கிய The Master படத்தினை நேற்று இரவு பார்த்தேன். அதற்குரிய மனநிலையுடன் பார்த்தால், அதுவொரு அருமையான படம்.
’அதற்குரிய மனநிலை’ என்றால்...

பொதுவாக நமது படங்கள் எல்லாமே Plot Driven வகைகள் தான். இயல்பு வாழ்க்கையில் இருப்பார்கள். ஏதோவொன்று நடக்கும். அது வாழ்க்கையைப் புரட்டிப்போடும். அதில் இருந்து மீண்டுவருவார்கள். மீண்டும், எதிர்சக்தி அவர்களை கீழே இழுத்துப்போடும். இறுதியாக வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில், குறிப்பிடும்படியான சம்பவங்களுடன், கதையில் சில விஷயங்கள் நடக்கும்.

இன்னொருவகை, Character Driven..சில கேரக்டர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களைப் பதிவு செய்வது தான் இவ்வகைப் படங்களின் நோக்கம். கீ இன்சிடெண்ட், ஆல் இஸ் லாஸ்ட், லொட்டுலொசுக்கு இல்லாமல், அமைதியான ஆறுபோல் வாழ்க்கையின் போக்கிலேயே போய் ‘இங்கே, இப்படி நடந்தது’ என்று சொல்பவை இவ்வகைப் படங்கள்.

சில சுவாரஸ்யமான சம்பவங்களும், (சில படங்களில்) ஃபீல் குட் உணர்வும் தான் கமர்சியல் அம்சங்கள். சராசரி ரசிகன், இரண்டு தூக்கம் போட்டு எழுந்தாலும் கதை அதே இடத்தில் தான் நிற்கும். ஒன்றும் ஆகிவிடாது.
நேற்று ’The Master’ பார்த்தேன். கூடவே தங்கமணியும் அமர்ந்திருந்தார். அரைமணி நேரத்தில் வெறுத்துப்போய், ‘போய்யா..நீயும் உன் உலக சினிமாவும்’ என்று திட்டிவிட்டுப் போய்விட்டார். ஆனாலும் விதி வலியது அல்லவா?

இன்று ஒரு படத்திற்குப் போனோம். அதே ’The Master’வகைப் படம். படம் ஆரம்பித்து, ஒருமணி நேரம் கழித்து தியேட்டரில் ஒரு குரல் ‘என்ன இது, ஒன்னுமே நடக்கலை?’. படம் ஸ்மூத்தாகப் போகிறது. சில அற்புதமான தருணங்கள், சிரிக்க வைக்கும் சில காட்சிகள், ஹீரோ-ஹீரோயின் இருவரின் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் என எல்லாம் இருந்தும், ’Nothing happens' ஃபீலிங் தான் பலருக்கும்.

நான் படத்தினை எஞ்சாய் செய்து பார்த்தேன். கிளைமாக்ஸில்கூட ஒன்றும் நடக்காது என்று The Master புண்ணியத்தில் புரிந்துபோய்விட்டது. எனவே Plot-ஐ எதிர்பார்க்காமல், சம்பவங்களை ரசித்துப் பார்த்தேன். தங்கமணி உள்ளிட்ட ஆடியன்ஸ் தான் பொறுமையிழந்து போனார்கள். கமர்சியல் சினிமாவில் இது புதிய முயற்சி என்பதால் பாராட்டலாம்.

அந்த படத்தின் இயக்குநருக்கு விமர்சனம் பிடிக்காது. எனவே.....பார்க்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.