Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....21'கூஜா எல்லாம் ஹீரோயினா? அந்த பாட்டி இனியும் நடிக்கணுமா?’ன்னு ஃபேஸ்புக்ல பொங்கிட்டு, வாட்ஸ்-அப்ல போய்கூஜா வீடியோ கிடைக்குமா?’ன்னு கேட்டிருக்கே நீ...இதெல்லாம் ஒரு பெரிய மனுசன் பண்ற காரியமா?
----------------------------
எங்கள் கிராமத்துப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால் கோவில்பட்டிக்குத்தான் போக வேண்டும். எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. ஒன்றரை மணி நேரம் நடந்து தான் செல்ல வேண்டும்.
அப்படித்தான் நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்க நடந்து சென்றோம். காலை ஏழு மணிக்கே கிளம்பி நடக்க ஆரம்பிப்போம். இரண்டு கண்மாய், காடுகள், ஓடை என நடந்து, இடையிடையே ரெஸ்ட் எடுத்து, ஸ்கூலை அடையும்போது ஒன்பது மணி ஆகியிருக்கும்.
எனவே பெண் குழந்தைகளை ஆறாம் வகுப்பிற்கு மேல் அனுப்புவது என்பது முடியாத காரியம். காலையில் இரண்டு மணி நேரம் நடந்து, களைப்புடன் ஸ்கூலில் உட்கார்ந்து படித்துவிட்டு, மாலையில் மீண்டும் அதே நடை. வீடு வந்து சேர, ஆறு மணி.
இன்னொரு வழி, ஊரில் இருந்து கிழக்கே அரைமணி நேரம் நடந்தால், மெயின் ரோடு வரும். அங்கே டிரைவரின் மனநிலையைப் பொறுத்து, பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கலாம். இல்லையென்றால், அங்கேயிருந்து இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். எனவே, நேராக கண்மாய்ப்பாதை வழியே நடந்துவிடுவோம்.
இலவச பஸ் பாஸ்கூட வேண்டாம், பஸ் வசதி மட்டும் கொடுங்கள் என்று எத்தனையோ மனு கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதனாலேயே படிக்காமல் நின்ற குழந்தைகள் ஏராளம். படிப்பு மட்டுமல்ல, மருத்துவம், விவசாயப்பொருட்களை விற்பது என எல்லாவற்றுக்குமே இதே போராட்டம் தான்.
அப்படி முடங்கிக் கிடந்த எங்கள் கிராம வாழ்க்கைக்கு ஒளியேற்ற வந்த திட்டம் தான், மினி பஸ் திட்டம். அது வந்தபின் எல்லாமே மாறிப்போனது. பெண் குழந்தைகள்கூட டிகிரி முடித்து, எம்.பி.ஏகூடப் படித்து சென்னைக்கு வேலைக்குப் போனார்கள். ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மினிபஸ் இருந்ததால், அவசரத்திற்கு ஹாஸ்பிடல் போவதென்றாலும் போக முடிந்தது. பெண்கள் வேலைக்காக வெளியூர் செல்வதும் எளிதானது.
இப்படி எத்தனையோ கிராமங்களின் முன்னேற்றத்திற்குக் காரணமான மினிபஸ் திட்டத்தைக் கொண்டுவந்ததாலேயே, கலைஞரை எனக்குப் பிடிக்கும். அவர்மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், என்னைப் போன்ற பட்டிக்காட்டான்கள் படித்து, ஃபாரின் வந்து ஃபேஸ்புக் போராளியாகி, அவரையே விமர்சனம் செய்யும் அளவுக்கு, எங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட காரணத்தாலேயே...I ike him!
‪#‎WhyILikeMK
--------------------------------------
மீடியாக்கள் கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருப்பதைப் பார்த்தால், பற்றிக்கொண்டு வருகிறது..
ஏம்ப்பா, ரஜினி பிறந்தநாள்னா ரஜினி படமா டிவில போடுறீங்க!
எம்.ஜி.ஆர்.பிறந்த நாள்னா எம்.ஜி.ஆர் படமாப் போடுறீங்க..
எங்க தலைவி சன்னி லியோன் பிறந்த நாளாம் நேத்து...ஒரு டிவிலகூட அவங்க படத்தைக் காணோம்..படத்தை விடுங்க, ஒரு பிட்டைக்கூடக் காணோம்..என்னா ஊடக தர்மமோ!
ஏதோ, ஃபேஸ்புக் இருக்கறதால இந்த நல்லநாள் பற்றித் தெரிஞ்சுக்க முடிஞ்சது! தலைவி கேக் வெட்டுற அழகைப் பாருங்கய்யா..
தலைவியைப் பார்த்ததும், கேக் கூட ஒரு அடி ஜம்ப் ஆகி தன் உற்சாகத்தை வெளிப்படுத்துவது உலக சினிமா கண்டிராத ஆகச் சிறந்த குறியீடு. ‘கெக்கிலிஸ்பெஷலிஸ்ட்கள் இந்த ஸ்டில்லுக்கு விமர்சனம் எழுதலாம்!
------------------------
படைப்பாளிகள் இரண்டு வகை தான்...
ஒரு ரவுண்ட் வந்ததும், அம்பிகா மாதிரி டொக் ஆகும் ஆட்கள்.
எத்தனை ரவுண்ட் வந்தாலும், குஷ்பூ மாதிரி கும்ம்மென்றே இருப்பவர்கள்.
ஆசான் பாக்கியராஜ் இவ்வளவு சீக்கிரம் அம்பிகா ஆனது பெரும் சோகமே!
நம்மைப் போன்ற பாக்கியராஜ் ரசிகர்கள் பார்க்கக்கூடாத படம், துணை முதல்வர்.
-------------------------
இதுவரை வந்த தீர்ப்புகளுக்கும், வரப்போகும் தீர்ப்புகளுக்கும் இரண்டுநாள் கொந்தளிப்பதும் பிறகு அடுத்த ஆணியை நோக்கி நகர்வதுமாக இருக்கிறோம். கெட்டதிலும் நாம் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கத்தான் செய்யும்.
நம் இந்திய நீதியமைப்பு தன் குடிமக்களுக்கு இதன்மூலம் தொடர்ந்து எதையோ சொல்ல வருவதாகவே நினைக்கிறேன். நாம் தான் தவறான பார்வையில் இருக்கிறோமோ என்று நானா யோசிச்சதில்..
ஒரு சாமானியன் இந்தியாவில் வாழ்வாங்கு வாழ, இந்த ஐந்து விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்:
1. சாமானியனா இருக்காதீங்க..அட்லீஸ்ட் சாமானிய மனநிலையை விட்டு வெளியே வாங்க.
2. கல்வி - பணம் சம்பாதிங்க.
3. அதிகார மையங்களுக்கு நெருக்கமாகுங்கள்
4. பயிண்ட் 2 வால் பாயிண்ட் 3 மூலம் அதிகாரத்தை வசப்படுத்துங்கள்
5 இவற்றைக் கடைப்பிடித்தால் தர்மம் வெல்லும்..சுபிட்சமடைவீர்கள்.
# சூது கவ்வாது

------------------------------
பாட்டி சுட்ட வடையால் ஒரு பரபரப்பு - PART 1
பாட்டி வடை சுட்ட கதை பற்றி தற்கால புரட்சியாளர்களின் கருத்து என்ன என்று கண்டறியப் புறப்பட்டோம். பெண்ணியப் போராளியான அட்டு அம்மையார் என்று அழைக்கப்படும் அஷ்டலட்சுமி அம்மையாரிடம் முதல் பேட்டியை ஆரம்பித்தோம்.
பாட்டி வடை சுட்ட கதை ஒரு ஆணாதீக்க சிந்தனைஎன எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆரம்பித்தார் அம்மையார்.
எப்படிங்க?” என்று கிண்டிவிட்டோம்.
குழந்தைகளுக்கு நாம என்ன சார் சொல்லித் தர்றோம்? பாட்டி வடை சுட்டாள்ன்னு..ஏன், பாட்டி தான் சுடணுமா? தாத்தா சுடக்கூடாதா? இந்தக் கதை மூலம்ஒரு பெண் என்பவள் சமைப்பதற்கென்றே படைக்கப்பட்ட ஜந்துஎன்று சின்ன வயசிலேயே குழந்தைகள் மனசில் பதிய வைக்கிறோம் சார். எத்தனை வருசம் சார் பாட்டியே சுட்டுக்கிட்டு இருக்கும்? பாவம் இல்லையா? கொஞ்சம் மனிதாபிமானம் உள்ள சமூகம் என்றால் பாட்டிக்கு இந்நேரம் வி.ஆர்.எஸ்.கொடுத்திருக்க வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கியவர், ‘என்னைப் போராளியாக ஆக்கியதே அந்தக் கதை தான் சார்என்று அடுத்த குண்டைப் போட்டார்.
எப்படி..எப்படி?” என்று ஆவலானோம்.
நானும் குழந்தையா இருக்கறச்சே, அதே கதையைத் தான் கேட்டேன். அப்பவே அதைத் தட்டிக்கேட்டேன் சார். அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரை கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். பொண்ணு பார்க்க வர்றவங்ககிட்ட படிச்சிருக்கிறயா? கார் இருக்கான்னு எல்லாம் நான் கேட்கறதேயில்லை சார். நான் கேட்கிற ஒரே கேள்வி, வடை சுடத் தெரியுமா? தான்.”
இன்னுமா வர்றாங்க?” என்றோம் ஆச்சரியத்துடன்.
ஆங்...எப்பவாவது...”என்று சைலண்ட் மோடுக்குப் போனவர், வெகுண்டெழுந்து ஆரம்பித்தார். “ தெரியலை சார்..ஒருத்தனுக்கும் வடை சுடத் தெரியலை சார். ஆனால் எல்லாருக்கும் பாட்டி வடை சுட்ட கதை மட்டும் தெரிஞ்சிருக்கு. அதனால் தான் சொல்றேன், அந்தக் கதையை தடை பண்ணனும்.”
நீங்க சொல்றதும் நியாயம் தான் மேடம்என்றோம்.
சற்று நேரம் மௌனமாக இருந்தவர்,” அப்புறம், உங்களுக்கு வடை சுடத் தெரியுமா?” என்றார்.
பதிலே சொல்லாமல் தலைதெறிக்க ஓடி எஸ்கேப் ஆனோம்!

-----------------------------------
இணையம் என்பது மக்களின் சக்தி வாய்ந்த ஊடகம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் உணர ஆரம்பித்திருக்கும் தருணம் இது. அதன் அடையாளம் தான் சுகாசினியின் உளறலும், உத்தம வில்லன் படமும்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்வதைவிட, மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை (இமேஜை) உருவாக்கவே ஊடகங்கள் இதுவரை பயன்பட்டன; பிரபலங்களால் பயன்படுத்தப்பட்டன.
ஒரு மொக்கைப் படத்தைக்கூட முன்பு அவர்களால் ஓட வைக்க முடிந்தது, போலி அறிவுஜீவிகளை நம் சமூக அடையாளமாக முன்னிறுத்த முடிந்தது. அந்த மாதிரி நாடகங்கள் எல்லாம் முடியும் நேரம் இது.
உத்தம வில்லனைப் பார்க்கும்போது, இணையத்தின் சக்தியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். கமலஹாசன் திறமை சாலி என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் அவர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று நாம் நினைப்பதை, அவரிடம் சொல்ல ஊடகங்களுக்கு தைரியம் இல்லை. இணையம் வந்தபின், அவை பொதுவில் வைக்கப்பட்டன.
குறிப்பாக இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மேல் இணையத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டன:
1. அவர் ஒரு காப்பி மன்னன். காப்பி அடிக்காமல் அவரால் நல்ல படம் தரவே முடியாது.
2. அவர் படத்தில், மற்ற கேரக்டர்களை எல்லாம் டம்மி ஆக்கிவிடுவார். காதலா காதலா, பஞ்சதந்திரம் என இதற்குப் பல உதாரணங்கள்.
முதலில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த ஊடகங்களும், வேறு வழியே இல்லாமல் இந்த மக்கள் கருத்தை எழுத வேண்டிவந்தது. விகடன் ஒரு பேட்டியில் நேராடியாகவே இதைப் பற்றிக் கேட்டது. (சோஷியல் மீடியாவில் இப்படிச் சொல்றாங்களே-எனும் பாதுகாப்புக் கவசத்துடன்!)
அதற்கெல்லாம் பதிலாகத்தான் உத்தமவில்லனைப் பார்க்கிறேன். ஒரு சாமானியப்பெண்ணாக அறிமுகம் ஆகும் ஊர்வசிகூட, பின்னர் வரும் காட்சிகளில் நடிப்பில் பின்னுகிறார். பார்வதி மேனன் கமலை முதல்முறை சந்திக்கும் காட்சியில், இயல்பான நடிப்பு என்றால் என்ன என்று காட்டுகிறார். மகனாக வரும் அந்தப் பையன், நம் கண்களை குளமாக்குகிறான். உத்தமன் வரும் காட்சிகளில் நாசரே அதிகம் ஸ்கோர் செய்கிறார். எல்லோரும் அவரவர் பங்கைச் சரியாகச் செய்ய வழிவிட்டு நிற்கிறார் கமல். அந்தக் கதையில் யாமினி கேர்க்டரும், ஆண்ட்ரியா கேரக்டரும் கமலை விட உயர்ந்து நிற்கிறார்கள்.
இதுவரை இந்தப் படம் ஹாலிவுட்/கொரியா/உலக சினிமாவின் காப்பி எனும் குற்றச்சாட்டு எழவில்லை. ஒன்லைன்கூட எதனுடனும் ஒத்துப்போகாமல் தனித்து நிற்கிறது. சோஷியல் மீட்யாவின் பவர் உணர்ந்து, அதற்கு கமல் சொல்லியிருக்கும் பதில் தான் உத்தம வில்லன்.
மவுஸ் ஆட்டிகளுக்கு என்ன தெரியும்?’ என்றெல்லாம் குதிக்காமல், இது தான் உண்மையான மக்கள் குரல் எனும் விழிப்புணர்வு தமிழ் சினிமா ஜாம்பவான்களுக்கு வந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
நமக்கு எவ்வளவு செய்தாலும் போதாதே...கமலஹாசனுக்கு மேலும் இரண்டு வேண்டுகோள்கள்:
1. சிங்கார வேலனில் வரும்போட்டு வைத்த காதல் திட்டம்பாடல் மற்றும் அபூர்வ சகோதரர்களில் வந்தராஜா கையை வச்சாபாடல் எல்லாம் முதலில் எஸ்.பி.பி பாடி, திருப்தி வராமல் உச்சஸ்தாயி ஸ்பெஷலிஸ்ட்டான நீங்கள் பாடினீர்கள். ரசிக்க வந்தது. அந்த மாதிரியான பாடல்களை மட்டும் நீங்கள் பாடினால் போதுமே...எல்லாப் பாட்டையும் நீங்களே பாடி..முடியல!
2. பூஜா ஆண்ட்டி இனியும் வேணுமா? உங்களைத் தவிர யாருமே அந்தம்மாக்கு சான்ஸ் தர ரெடியா இல்லை, பார்த்தீங்களா? நாங்களும் எத்தனை படத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? இதில் இன்னொரு ஆபத்து வேறு வந்து சேர்ந்திருக்கிறது. ’எல்லோரையும்பேலன்ஸ் செய்ய, அடுத்து கௌதமியை வேறு ஹீரோயின் ஆக்கியிருக்கிறீர்கள். ஏன் இந்தக் கொலைவெறி பாஸ்?
-------------------
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.