Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...16Indian movie dances are Imitation of Sex' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
smile emoticon


--------------------------------
பாகுபலி வந்தாலும் வந்தது..நம் ஆட்கள் ஒரு பக்கம் ஷங்கரை கழுவி ஊற்றுகிறார்கள். இன்னொரு பக்கம் செல்வராகவனை உச்சத்தில் ஏற்றுகிறார்கள். திடீரென ஆயிரத்தில் ஒருவன் படம், மிகச்சிறந்த ஃபேண்டஸி ஆகிவிட்டது.
ஒரு படத்தை தமிழன், தெலுங்கன், வன்னியர், கவுண்டர், இந்து, முஸ்லிம் என்ற கண்ணாடி அணிந்து பார்ப்பதைவிட, கறாரான விமர்சனப்பார்வையுடன் அணுகுவதே சரி..
இன்றைய திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் இருந்து.....
---------------------------------------------
இப்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை எடுத்துக்கொள்வோம்.
ஒரு சாமானிய ஹீரோ (கார்த்தி), ஒரு சாகசப்பயணத்தில் வலிய இழுத்துவிடப்படுகிறான்….ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஜெனர்..
பாண்டிய வம்சத்து வழித்தோன்றல்(ரீமாசென்), இன்னும் எஞ்சியிருக்கும் சோழ வம்சத்தை அழிக்கக் கிளம்புகிறாள்..ஒரு பழி வாங்கும் ஃபேண்டஸி ஆக்சன் கதை.
சோழரும் பாண்டியரும் தமிழரின் வரலாற்றுப் பெருமிதங்கள். இந்த அடிப்படை வரலாற்று அறிவு இல்லாமல், இதில் ஒரு தரப்பை வில்லனாக ஆக்கியது மாபெரும் தவறு. சோழரை அழிக்க வந்த, ஒரு குறுநில மன்னர் வம்சம் என்று கதை சொல்லியிருந்தால், சிக்கல் எழுந்திருக்காது.
நாம் ஏற்கனவே ஜெண்டில்மேன் பற்றிய பதிவில் சொன்னபடி, எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் பற்றிய சமூக வரலாற்றுப் பிரக்ஞை இல்லாவிட்டால், இப்படிப் பெரும் சிக்கலில் தான் திரைக்கதை முடியும்.
அடுத்து
இந்தப் படம் உருவான நேரத்தில் ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. எனவே அதையும் கிளைமாக்ஸில் கலந்து, குழப்பினார்கள். அதுவரை பாண்டியர்-சோழர் என்று போனகதை, சிங்களர்-தமிழர் பற்றிய குறியீட்டுக் கதையாக ஆனது. பாண்டிய-சோழர் பிரச்சினையும் ஈழப்பிரச்சினையும் ஒன்றல்ல.
உண்மையில் பார்த்திபன்ஈழத்தமிழர், ரீமாசென்சிங்களர்& இந்தியா, கார்த்திபிரபாகரன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துகொண்டு, திரைக்கதையை ஏகப்பட்ட குறியீடுகளுடன் அமைத்திருந்தால், அட்டகாசமான ஃபேண்டஸியாக வந்திருக்கும்.
அடுத்து….
சரி..இந்தக்கதை ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஃபேண்டஸி என்று வைத்துக்கொள்வோம். திரைக்கதையில் அடுத்து வந்த பிரச்சினை, பெரும்பாலான காட்சிகள் செல்வராகவனின் ஃபேவரிட்செக்ஸுவல் டிராமாஜெனரை ஒத்திருந்தன.
செல்வராகவன் படம் என்றால், செக்ஸ் சீன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். செல்வராகவன் ஜெனர் என்று எதுவும் கிடையாது. செல்வராகவன் முதலில் சொன்ன ‘Coming to Age’ கதைகளுக்கு செக்ஸ் அடிப்படையாக இருந்தது. அதையே ஃபேண்டஸி ஜெனருக்குள் நுழைத்தபோது, குமட்டிவிட்டது.
ஃபேண்டஸி என்பதே சிக்கலான, நம்ப முடியாத ஒரு விஷயத்தை ஆடியன்ஸுக்கு உறுத்தாமல் சொல்வது தான். நம் ஆட்கள் சிலருக்கு ஃபேண்டஸி என்றால், ஹெவியாக அடர்த்தியாக இருக்க வேண்டும் எனும் தவறான எண்ணம் இருக்கிறது. ஆக்சன், அட்வென்ச்சர், லவ், செக்ஸ், ஃபிலிம் நுஆரின் ஏமாற்றம் என எல்லாவற்றையும் கலந்துகட்டி, பிச்சைக்காரன் பாத்திரம்போல் ஆக்கினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
உண்மையில் ஃபேண்டஸி கதைகள் தான் இருப்பதிலேயே சிம்பிளாக இருக்க வேண்டும், நெஞ்சம் மறப்பதில்லை & நான் போல!
---------------------------------------------------------------------------------
முழுதும் படிக்க:
http://sengovi.blogspot.com/2015/07/ii-51.html
திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 51
ஜெனர்மாயக் கதைகள் (Fantasy)

----------------
மக்கழே...
விக்ரம் படப் பாடலில் வரும் கீழ்க்கண்ட வரிகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இது விக்ரம் படத்திற்காக, சுஜாதா உருவாக்கிய மொழி என்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். கொஞ்சம் யோசித்தால், கண்டுபிடித்துவிடலாம்.....இப்போ, விடை தருவார் யாரோ??
//பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
ஹஸ்போடோமி மஸ்படோமியா
ப்லிம்பசூமியா

துக்கச்சாமியா

ப்லிம்பசூமியா

துக்கச்சாமியா

பூபாரு சுப்பப்பாரு ஹூலியாயி காரக்காரு
ஹுக்கட்டோமி

ஹுக்கட்டோமி

ஷோ மி பாமி பிலிங்கட்டோமி
பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
ஹஸ்போடோமி மஸ்படோமியா//

--------------------------
ஊருல ஜாதி/மதக்கலவரத்தை தூண்டறவன்லாம் கிளம்பி ஃபேஸ்புக்கிற்கு வந்திட்டாங்க போல..
THALA FANS GUESS WHO? - என்று அஜித்தின் வீரம் படத்தை வைத்து, அடுத்த ரகளைக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திறமையாக அம்பேத்கர் படத்தை மறைத்துவிட்டு...!
உங்க அரிப்புக்கு அந்த நல்ல மனுஷனை ஏண்டா இழுக்குறீங்க?
---------------------------
நாலு வயசு பசங்களுக்கு, சாராயத்தை ஊத்திக் கொடுக்கிறானுங்க...
பள்ளி மாணவி, மப்புல ரோட்டுல ரகளை பண்ணுறா..
பள்ளி மாணவன் பஸ் ஸ்டாண்ட்ல விழுந்து கிடக்கிறான்..
ஒரு தாய், குடிபோதையில குழந்தையை தெருவில விட்டுட்டுப் போறா...
லட்சக்கணக்கான குடிநோயாளிகள் லிவர் பேஷண்டா ஆகறதைப் பற்றிக் கவலைப்படாத ஆளும்கட்சி, தன் தலைமையோட லிவருக்கு என்ன ஆச்சுன்னு பதறுது..
என்ன செஞ்சாவது ஆட்சிக்கு வரணும்ன்னு துடிக்கிற எதிர்க்கட்சிக்குநாங்க ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டுவருவோம்ன்னு சொல்ல துப்பில்லை..
கொஞ்சம் மனசாட்சி உள்ளவன்லாம் மதுவுக்கு எதிரா கொதிச்சுக்கிட்டு இருக்கிறான்.
இந்த சூழ்நிலையில ஒரு முட்டாப்பய கூட்டம், ஒரு படத்து டீசரை வெளியிட்டிருக்கு. சிரிப்புக்காட்டறதா நினைச்சுக்கிட்டு, ரெண்டு அரைலூசுங்க தண்ணியடிக்கிறானுக..மேலே சொன்ன மதுக்கொடுமை வீடியோக்கள் தான் ஞாபகம் வருதேயொழிய, சிரிப்பு என்பது சுத்தமாக வரவில்லை.
படத்துப் பேரு, ஒரு விஸ்கி பிராண்ட் பெயராம். அதை என் வாழ்க்கையில் ஓரிருமுறை தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது பள்ளி மணவர்கள் உட்பட எல்லோருக்கும் அந்தப்பெயரைப் பிரபலப்படுத்தப்போகிறார்கள் இந்த அயோக்கிய படக்குழுவினர்.
இதெல்லாம் ஒரு பொழைப்பு....த்தூ!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.