Wednesday, March 2, 2011

இந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க?

இப்போ கொஞ்ச நாளா ஆண்களும் பெண்களும் கலந்து பழகுற சூழ்நிலை படிக்கும் இடங்களிலும், அலுவலகங்களிலும் நிலவுகிறது. ஆனாலும் ஆண்-பெண் இடையேயான உறவுச் சிக்கல் முழுசா தீர்ந்து விட்டதுன்னு சொல்ல முடியலை..அது சம்பந்தமான என்னோட அனுபவம் இங்கே..
எதிர்ல நாந்தானுங்கோ!
நான் அமெரிக்காவில் பணிபுரிந்த பொழுது (தம்பி, இந்த விளம்பரத்தை எப்ப நிறுத்துவ?), எங்கள் ஆஃபீஸில் நிறையப் பெண்கள் வேலை செய்தார்கள். சில இந்தியப் பெண்களும் உண்டு. ஒரு சில மாதங்களிலேயே அந்த வெள்ளைக்காரப் பெண்களுக்கும் நம்ம ஊர்ப் பெண்களுக்கும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். அட, கலர் இல்லீங்க. வேற ஏதோ..

கொஞ்சநாள் உற்று(!)க் கவனித்தபின் விஷயம் பிடிபட்டது.பொதுவாக இந்தப் பெண்கள் எங்க டேபிளுக்கு வருவதே நாங்கள் போட்ட டிராயிங்கில் டவுட் கேட்கவோ அல்லது அந்த டிராயிங்கே தப்புன்னு எங்க மேல வீசியெறியவோதான்(ஹி..ஹி). அமெரிக்கப் பெண்கள் வந்து டெக்னிகல் விஷயங்களைப் பேசும்போது, நாம் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அவர்கள் பாட்டுக்கு வருவார்கள், வந்த உடனே டிராயிங்கைப் பற்றிப் பேச ஆரம்பிப்பர். டிஸ்கசன் முடிஞ்சதும் தேங்க்ஸ்-ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. 
பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் க்ளிக்கவும்
ஆனால் இந்த இந்தியப் பெண்கள் இருக்காங்களே...வரும்போதே ஏதோ ஒருவிதத்தில் ‘நான் பொம்பள..ஞாபகம் வச்சிக்கோ’ என உணர்த்துவார்கள். சேலை கட்டியிருந்தால் முந்தானையை இழுத்து விடுவது, சால்-ஐ சரி செய்வது, ஒரு தினுசாக முழிப்பது என ஏதாவது ஒன்று நடக்கும். பிறகு அந்த டெக்னிகல் டிஸ்கஷன் முழுதும் நாங்கள் மிகவும் ஜாக்கிரதையாக அவர்களுடன் பேசிக்கொண்டிருப்போம். ஏன் அமெரிக்கப்பெண்களிடம் உள்ள ஃப்ரீனெஸ், நம் இந்தியப்பெண்களிடம் இல்லையென பலநாள் யோசிச்சிருக்கேன். பதில் கிடைக்கவேயில்லை.(ஆறும் அது ஆழம் இல்ல..)

அப்போதுதான் புதிதாக இந்தியாவிலிருந்து சுபா என்ற பெண் வந்து சேர்ந்தார். அவருக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் உண்டு. பாவம், கம்பெனி திடீரென டெபுடேசனில் அவரை 3 மாதத்திற்கு மட்டும் அனுப்பி வைத்திருந்தார்கள். நான் அமெரிக்காவில் அந்தப் பெண்ணை விட சீனியர் சிட்டிசன்(!)என்பதால், அதற்கு வரும் டவுட்களை எல்லாம் தீர்த்து வைத்து, தீர்த்துவைத்து, நண்பர்கள் ஆனோம்.
இந்தியாப் பொண்ணு தாங்கோ..
ஆனாலும் சுபாவிடமும் அதே பிரச்சினை...என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் ஆம்பிளங்ககிட்ட பேசுற மாதிரியே பெண்களிடமும் பேசுவேன். (அதான் அரேஞ்சுடு மேரேஜ் பண்ண வேண்டியதாப் போச்சு!) எனவே தைரியமாக மேலே சொன்ன டவுட்டை ஒரு நாள் சுபாவிடமே கேட்டுவிட்டேன்.

அந்தப் பொண்ணு ஒரு நிமிஷம் அமைதியா இருந்துச்சு. அப்புறமா ரொம்பத் தெளிவான ஆங்கிலத்துல இப்படிச் சொல்லுச்சு:

நான் அமெரிக்கன் ஆம்பிளைங்கிட்ட ஏதாவது டிஸ்கஷனுக்குப் போனா, அவங்க சகஜமா இன்னொரு ஆண்கிட்ட பேசுறமாதிரியே பேசி டிஸ்கஸ் பண்றாங்க. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. ஆனால் இந்த இந்திய ஆண்கள் இருக்கும் ஏரியாவிற்குள் நுழைந்தால் முதலில் அவர்கள் பார்ப்பது எனது ****களைத் தான். அப்புறமாத்தான் நிமிர்ந்து ’என்ன’ன்னு கேட்கிறாங்க. ஏன் இந்த இந்திய ஆண்கள் இப்படி இருக்காங்க?..ஆக்சுவலா இந்திய ஆண்களுக்கு அடிப்படையிலேயே சம்திங் இஸ் வெரி வெரி ராங்’
பெரிதாக்கியா பாத்தீங்க..டுமீல்..டுமீல்!
இந்தப் பதிலைக்கேட்டு கதி கலங்கிப் போனேன். அப்புறம் அந்தப் பொண்ணு இருக்குற பக்கமே ரெண்டு மூணு நாள் போகலை.

ச்சே, இந்த இந்திய ஆண்கள் ஏங்க இப்படி இருக்காங்க..சம்திங் இஸ் வெறி வெறி ராங்!




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

68 comments:

  1. so, something is fundamentally wrong.....ha,ha,ha,ha....

    ReplyDelete
  2. சிநேகா அக்கா சுட்டு விழுந்தவங்க மொத்தம் 10,001.

    ReplyDelete
  3. தக்காளி இதுக்கு காரணம்............. பார்த்திபனின் உள்ளே வெளியே பட டயலாக்கு தான்! ஹி ஹி!

    ReplyDelete
  4. சினேகா முதல் படத்த பார்த்த உடனே பார்வை அங்க போறதை தடுக்க முடியலையே , என்ன பண்றது ? எனக்கு ஒரு பெண் போட்டிருந்த டீ சர்ட் வாசகம் தான் ஞாபகம் வருது , அது :I have pretty face too !

    ReplyDelete
  5. @! சிவகுமார் !:10,001ஆ..இதை எபடிங்க எண்ணுனீங்க?

    ReplyDelete
  6. @விக்கி உலகம்:இன்னும் நீங்க தக்காளியை விட்டு வெளில வரலையா...

    ReplyDelete
  7. @IlayaDhasan: உண்மையைப் பேசுனதுக்கு நன்றீ!

    ReplyDelete
  8. அண்மையில் நான் படித்த நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்று எனக் கூறலாம். கனடாவில் இந்தவித பிரச்சனைகள் இருக்கின்றது. அதாவது இங்கு ஆங்கிலேயர்/கனடியர் என்பதை விட, புதிதாக நாட்டுக்கு வந்தவர்கள், இந்நாட்டோடு ஒருங்கிணைந்து வாழும் நிரந்தவாசிகள் எனக் கூறலாம்.

    இந்திய ஆண்கள் வெள்ளைப் பெண்களிடம் ஈர்க்கப்படுவதை விடவும், இந்தியப் பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கு காரணம் - இந்திய பெண்கள் படும் சங்கோஜங்களும் ஒரு காரணம்.

    இந்திய ஆண்கள் முதலில் முகத்தைப் பாராமல் மு---களைப் பார்ப்பது நம்மில் இயல்பாகவே இருக்கும் ஒரு பழக்கமாகி விட்டது தான். இது ஒருவித இண்டேசென்சி என்பது இங்கு வந்தப் பின் தான் புரிந்துக் கொண்டேன்.. இதற்கு நம்நாட்டில் நாம் வளர்க்கப்படும் சூழலும், பாலியல் வறுமையும் காரணம் போல ! அப்படி அங்கெல்லாம் பார்க்காமல் பேசினாலும், இந்தியப் பெண்கள் தானாகவே அந்த இடங்களுக்கு கைகளைக் கொண்டுப் போய் சரிசெய்கிறார்கள் - இதனால் இங்கே பாரடா என்று சொல்வதைப் போல இருக்கிறது அல்லவா? தவறு இருபாலரிடமும் தான் இருக்கு !

    ReplyDelete
  9. //so, something is fundamentally wrong//

    ReplyDelete
  10. @இக்பால் செல்வன்:அருமையான பின்னூட்டம்..நல்லா தெளிவா விளக்கினதுக்கு நன்றி பாஸ்!..அப்போ முதல்ல அவங்க நிறுத்தட்டும்..அப்புறம் நாம நிறுத்தலாம்னு சொல்லுங்க!

    ReplyDelete
  11. @THOPPITHOPPI:என்ன தல, கமெண்ட் மட்டும் வருது..ரேசன் கார்டு ஜெராக்ஸை எங்கே..அதையும் அட்டாச் பண்ணுனாத்தான் கமெண்ட்டை ஏத்துக்குவோம்,,,ஆய்...ஊய்..!

    ReplyDelete
  12. @ரஹீம் கஸாலி:ஏதாவது சொல்லுங்க கஸாலி..

    ReplyDelete
  13. "பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் க்ளிக்கவும்"??????????????????????????????நீங்களுமா ????

    ReplyDelete
  14. என்னத்த சொல்ல... ஹி... ஹி..!

    ReplyDelete
  15. @பார்வையாளன்: அது நகைச்சுவைக்காக!..கீழே உள்ள டுமீலை பார்க்கவில்லையா பாஸ்!

    ReplyDelete
  16. கையை மூடி வைத்திருந்தால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் இருக்கும். திறந்து காட்டிவிட்டால் சீ.. என்று ஆகிவிடும்.

    ReplyDelete
  17. @இக்பால் செல்வன்

    //இதற்கு நம்நாட்டில் நாம் வளர்க்கப்படும் சூழலும், பாலியல் வறுமையும் காரணம் போல ! அப்படி அங்கெல்லாம் பார்க்காமல் பேசினாலும், இந்தியப் பெண்கள் தானாகவே அந்த இடங்களுக்கு கைகளைக் கொண்டுப் போய் சரிசெய்கிறார்கள் - இதனால் இங்கே பாரடா என்று சொல்வதைப் போல இருக்கிறது அல்லவா? தவறு இருபாலரிடமும் தான் இருக்கு ! //

    I agree with u ..

    ReplyDelete
  18. >>>ஏன் அமெரிக்கப்பெண்களிடம் உள்ள ஃப்ரீனெஸ், நம் இந்தியப்பெண்களிடம் இல்லையென பலநாள் யோசிச்சிருக்கேன். பதில் கிடைக்கவேயில்லை


    நான் சொல்றேன்... மூடி டைப்பா இருக்கறப்பவே நம்ம ஆளுங்க....

    இதுல ஃபிரீயா பழகீட்டாலும்...

    ReplyDelete
  19. சினேகா ஃபோட்டோவுக்குக்கீழே போட்ட கமெண்ட்டுக்கு மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கலையா? ஹி ஹி - இப்படிக்கு போட்டுக்குடுக்கும் பொன்னுசாமிகள் சங்கம்...

    ReplyDelete
  20. >>>நான் அமெரிக்காவில் அந்தப் பெண்ணை விட சீனியர் சிட்டிசன்(!)என்பதால்,

    நான் ஒரு உத்தேசமா உங்களை அண்ணன்னு நினைச்சேன்.. போற போக்கைப்பார்த்தாபெரியப்பா போல...

    ReplyDelete
  21. >>>>ச்சே, இந்த இந்திய ஆண்கள் ஏங்க இப்படி இருக்காங்க..சம்திங் இஸ் வெறி வெறி ராங்!


    ஹி ஹி ஹி # இந்தியண்டா....

    ReplyDelete
  22. அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு ரசனை உணர்வு அதிகம் என்பதை பதிவு செய்து எனது கடைசி உரையை நிறைவு செய்கிறேன்.. ஹி ஹி சோடா ப்ளீஸ்

    ReplyDelete
  23. தமிழ்மணம் ஓட்டு விழமாட்டேங்குது...

    ReplyDelete
  24. நாம பேசிக்காவே கொஞ்சம் வீக்குங்க ஹி ஹி

    ReplyDelete
  25. @சே.குமார்: ஹி..ஹி..-ன்னு சொன்னதே போதும் குமார்.

    ReplyDelete
  26. @Jayadev Das: //திறந்து காட்டிவிட்டால் சீ.. என்று ஆகிவிடும்// இது காமத்திற்குப் பொருந்தும்னு எனக்குத் தோணலை பாஸ்!

    ReplyDelete
  27. @தனி காட்டு ராஜா: //I agree with u ..
    // பின்னே..மறுக்க முடியுமா..வருகைக்கு நன்றி ராஜா!

    ReplyDelete
  28. @சி.பி.செந்தில்குமார்://போர்க்கொடி தூக்கலையா?// ஓட்டுப் போடாட்டியும் பரவாயில்லை..இப்படியெல்லாம் கிளப்பி விடாதீங்கய்யா!

    ReplyDelete
  29. @சி.பி.செந்தில்குமார்://நான் ஒரு உத்தேசமா உங்களை அண்ணன்னு நினைச்சேன்.. போற போக்கைப்பார்த்தாபெரியப்பா போல// அண்ணந்னு சொல்றதே அதிகம்..இதுல பெரியப்பா வேறயா!

    ReplyDelete
  30. @சி.பி.செந்தில்குமார்: //ஹி ஹி சோடா ப்ளீஸ் // வந்து போட்டுக் குடுத்துட்டு சோடா வேற கேட்குதா..

    ReplyDelete
  31. @சி.பி.செந்தில்குமார்: //தமிழ்மணம் ஓட்டு விழமாட்டேங்குது// உங்க கடமை உணர்ச்சி என்னைப் புல்லரிக்க வைக்குது..பரவாயில்லை பாஸ்!

    ReplyDelete
  32. @இரவு வானம்: //நாம பேசிக்காவே கொஞ்சம் வீக்குங்க// நாம வீக்குன்னு சொல்றோம்..அவங்க ராங்கின்னு சொல்றாங்க.!

    ReplyDelete
  33. //அமெரிக்கப் பெண்கள் வந்து டெக்னிகல் விஷயங்களைப் பேசும்போது, நாம் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அவர்கள் பாட்டுக்கு வருவார்கள், வந்த உடனே டிராயிங்கைப் பற்றிப் பேச ஆரம்பிப்பர். டிஸ்கசன் முடிஞ்சதும் தேங்க்ஸ்-ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. //

    இதுக்குத்தான் ஹாய் சொல்ல வந்தேன்.ஆனால் கடைசிலே வெச்சீங்களே ஒரு குட்டு:)

    ReplyDelete
  34. \\இது காமத்திற்குப் பொருந்தும்னு எனக்குத் தோணலை பாஸ்!\\ அந்த ஊரில் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே "அத்தனையும்" பண்ணுதுங்க பாஸ். கற்பு, கணவனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும், வாழ் நாள் முழுவதும் ஒருவனுடந்தான் வாழ வேண்டும் போன்ற நம்மூர் "Moral Values" -க்கு அந்த ஊரில் மதிப்பே kidaiyaathu. Having illicit sexual relationship before or after marriage is not a big deal at all for them. In the name of dating they do trial for sexual compatibility and if found O.K. go for marriage. Obviously they won't care much about the "wrong" parts a woman. Our culture is also, as of now, very fast degrading yet the old tradition/values of life are still continuing. This makes the difference.

    ReplyDelete
  35. ச்சே, இந்த இந்திய ஆண்கள் ஏங்க இப்படி இருக்காங்க..சம்திங் இஸ் வெறி வெறி ராங்! நல்ல நகைச்சுவை ! உங்களுக்கு ‎(•̮̮̃•̃)۶ ٩(-̮̮̃-̃)۶ ٩(●̮̮̃•̃)۶ ٩(͡๏̯͡๏)۶ ٩(-̮̮̃•̃)۶ :)

    ReplyDelete
  36. படம் போட்டு விளக்கியதற்க்கு மிக்க நன்றி. விளங்கியது அப்போ ”அது” ஒண்ணும் ”பெரிய” மேட்டரே இல்லைன்னு.

    ReplyDelete
  37. @ராஜ நடராஜன்: நியாயத்தைச் சொன்னேன் சார்..குட்டு நானா வச்சேன்..அவங்க வச்சாங்க!

    ReplyDelete
  38. @Jayadev Das: உங்களை மாதிரி தான் நானும் முதல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா அப்படி இல்லை..அதைப் பத்தி தனிப் பதிவே போடறதா இருக்கேன் சார்..பின்னால் வரும்!

    ReplyDelete
  39. @தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை://நல்ல நகைச்சுவை ! உங்களுக்கு// நன்றி பாஸ்..அப்புறம் ஏதோ படம் படமாப் போட்ருக்கீங்க..அந்த ல்தகாசைஆ என்ன்ன்னு புரியலியே..

    ReplyDelete
  40. @கே. ஆர்.விஜயன்: //விளங்கியது அப்போ ”அது” ஒண்ணும் ”பெரிய” மேட்டரே இல்லைன்னு. // உங்களை யாரு சார் ரெண்டு படத்தையும் கம்பேர் பண்ணிப் பார்க்கச் சொன்னது..பொசுக்குன்னு போயிருக்குமே..

    ReplyDelete
  41. ஹஹா ஏன் தலை அப்படி பார்த்தீங்க?

    ReplyDelete
  42. செங்கோவி said... [Reply] @THOPPITHOPPI:என்ன தல, கமெண்ட் மட்டும் வருது..ரேசன் கார்டு ஜெராக்ஸை எங்கே..அதையும் அட்டாச் பண்ணுனாத்தான் கமெண்ட்டை ஏத்துக்குவோம்,,,ஆய்...ஊய்..!//

    இங்கயுமா? அட பாவிகளா?

    ReplyDelete
  43. //கொஞ்சநாள் உற்று(!)க் கவனித்தபின் விஷயம்//
    //பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் க்ளிக்கவும்//
    //அப்புறம் அந்தப் பொண்ணு இருக்குற பக்கமே ரெண்டு மூணு நாள் போகலை.//
    //சம்திங் இஸ் வெறி வெறி ராங்!//

    மேலே இருக்கிற‌தையெல்லாம் வெச்சுப்பாக்கும்போது செங்கோவி இங்கிருந்து அமெரிக்கா போய் பாவ‌ம் வெறி வெறித்த‌னாய் சீனிய‌ர் சிட்டிச‌னாயிருக்கிறார்,.. த‌ப்பை உங்க‌ மேல‌ வெச்சுக்கிட்டு ப‌ழியை அப்பாவி இந்திய‌ஆண்க‌ளிட‌ம் ஏன் போடுகிறீர்க‌ள்,.. இதையெல்லாம் எங்க‌ள் ஆண்குல‌ம் ம‌ன்னிக்க‌வே ம‌ன்னிக்காது,..

    ReplyDelete
  44. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): //இங்கயுமா? அட பாவிகளா?// அய்யய்யோ..போலீஸ்கார் வந்துட்டார்..உஷ்..சைலன்ஸ்!

    ReplyDelete
  45. @jothi: //பாவ‌ம் வெறி வெறித்த‌னாய் சீனிய‌ர் சிட்டிச‌னாயிருக்கிறார்// நீங்க வேற புதுசாக் கிளப்பாதீங்கய்யா..கீழே டுமீல் டுமீல்-னு சுட்ருக்கேனே..அதுல இருந்தே தெரியலையா நான் நல்ல புள்ளன்னு!

    ReplyDelete
  46. //கீழே டுமீல் டுமீல்-னு சுட்ருக்கேனே..அதுல இருந்தே தெரியலையா நான் நல்ல புள்ளன்னு!//

    ம்ம்ம்ம்ம் தெரியுது,.. துப்பாக்கிய‌ வெச்சு டுமில் டுமில்ன்னு சுட்டிங்க‌ளா??

    ReplyDelete
  47. நல்ல விவாதம்..தொடரட்டும்..

    ReplyDelete
  48. போச்சு.. ஸ்னேகா படத்தை பெருசாக்கி பாத்தவன்லாம் மாட்டுனான்....!

    ReplyDelete
  49. //போச்சு.. ஸ்னேகா படத்தை பெருசாக்கி பாத்தவன்லாம் மாட்டுனான்....!//

    அய்ய‌ய்யோ, நான் பாக்க‌லையே,.. பார்க்கிற‌தா இல்லையான்னும் தெரிய‌லை,..

    ReplyDelete
  50. @நந்தா ஆண்டாள்மகன்: வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நந்தா!

    ReplyDelete
  51. @பன்னிக்குட்டி ராம்சாமி: வாங்க சார்..நடுராத்திரில வந்துட்டு சினேகா கூட என்ன பண்றீங்க?

    ReplyDelete
  52. @jothi:மத்தியானத்துல இருந்தே இங்க தானய்யா சினேகா கூட இருக்கீங்க..அப்புறம் என்ன பார்க்கலைன்னு பீலா விட்டுக்கிட்டு..

    ReplyDelete
  53. //////செங்கோவி said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி: வாங்க சார்..நடுராத்திரில வந்துட்டு சினேகா கூட என்ன பண்றீங்க?/////

    என்ன பண்ணச் சொல்றீங்க, பகலெல்லாம் கும்மி அடிச்சுட்டு இப்போத்தான் டைம் கெடைக்குது, ஆமா அது யாரு சினேகா?

    ReplyDelete
  54. @பன்னிக்குட்டி ராம்சாமி //ஆமா அது யாரு சினேகா?// சந்தியா-மாலதி-ப்ரியாக்கெல்லாம் அக்கா!

    ReplyDelete
  55. //////செங்கோவி said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி //ஆமா அது யாரு சினேகா?// சந்தியா-மாலதி-ப்ரியாக்கெல்லாம் அக்கா!//////

    இப்படிக் கவுத்திட்டீங்களேண்ணே.... நான் கெளம்பறேன்...

    ReplyDelete
  56. @பன்னிக்குட்டி ராம்சாமி: குட் நைட்..சாரி, குட் மார்னிங் ஆபீஸர்!

    ReplyDelete
  57. மிக அருமையான பதிவு தல...... இந்திய ஆண்கள் என்று சொல்லுவதைவிட தமிழக ஆண்கள் என்று சொல்லலாம்,நான் இருக்கும் மும்பையில் கவனித்துள்ளேன்,இவர்கள் அப்படி கிடையாது,

    ReplyDelete
  58. @டெனிம்:நான் பார்த்த நார்த் இண்டியன்ஸ் அப்படி இல்லையே தல..மும்பை ஆண்கள் அவ்வளவு நல்லவங்களா..பரவாயில்லையே!

    ReplyDelete
  59. //:மத்தியானத்துல இருந்தே இங்க தானய்யா சினேகா கூட இருக்கீங்க..அப்புறம் என்ன பார்க்கலைன்னு பீலா விட்டுக்கிட்டு.//

    செங்கோவி ச‌த்திய‌மா நான் பார்க்க‌ல‌,.. ப‌ட‌த்தை பெரிதாக்கி பார்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌தால் நான் பார்க்க‌வில்லை!!!!!!!!!!!,..

    (க‌ட‌வுளே,.. இனிமேல் உங்க‌ ப‌க்க‌த்துக்கு வ‌ந்தாலே நீங்க‌ சொன்ன‌ ஸ்னேகா க‌மென்ட்டுதானே நியாப‌க‌ம் வ‌ரும்,.. இப்ப‌டி சொல்லிட்டிங்க‌ளே,.... )

    ReplyDelete
  60. @jothi://செங்கோவி ச‌த்திய‌மா நான் பார்க்க‌ல‌// ஏன் பாஸ் இப்படிப் பதறியடிச்சு மறுக்கீங்க..கல்யாணம் ஆனவரா நீங்க?..அடடா முதல்லயே சொல்லியிருக்கக் கூடாதா..பவுடர் டப்பா பறந்துடுச்சா பாஸ்...நான் சும்மா தான் சொன்னேன்..நீங்க பார்க்கவேயில்லைன்னு எனக்குத் தெரியும்..வேற ஏதாவது சொல்லணுமா..வேட்டியைப் போட்டு தாண்டணுமா..

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. //வேட்டியைப் போட்டு தாண்டணுமா..//

    மொத‌ல்ல‌ அதைப்ப‌ண்ணுங்க‌,.. இன்னிக்கு போட்டுருக்கிற‌ ப‌திவுல‌ விஜ‌ய‌காந்த் போட்டிருக்கிற‌த அந்த‌ ப‌ட்டு வேட்டிய‌ உருவுங்க‌,.. (ஏற்க‌ன‌வே அது பாதி உருவித்தான் இருக்கு,..) இந்த‌ எல‌க்ஸ‌ன்ல‌ என்னோட‌ ஓட்டு விஜ‌ய‌காந்துக்குதான்,.. (இல்லைன்னா அந்த‌ ஆள் திரும்ப‌வும் நாட்டை காப்ப‌த்த‌ப்போறேன்னு ந‌டிக்க‌ வ‌ந்திடுவார்!!!)

    ReplyDelete
  63. @jothi:நான் இந்தப் பதிவுக்கப்புறம் ரெண்டு பதிவு எழுதுன அப்புறமும் இங்க உங்க கமெண்ட் விழுதே..சினேகா ஃபோட்டோக்கு இவ்வளவு பவரா..விஜயகாந்த் வேட்டி தேர்தலின்போது உருவப்படும்!

    ReplyDelete
  64. அய்யா நீ எப்ப யாரு பக்கம் யா பேசுற

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.