Wednesday, March 16, 2011

நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்? (தேர்தல் ஸ்பெஷல்)

தேர்தல் ஸ்பெஷல் தொடரில் இதுவரை ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும் பார்த்து வந்தோம். தேர்தல் வேறு நெருங்கி விட்டதால் இனியும் இப்படி நிதானமாக அலசிக்கொண்டிருக்க முடியாது.. எனவே ஜெயலலிதா-கலைஞரை மையமாக வைத்து இனி கூட்டணி அலசல் செய்யலாம் என்று இருக்கிறேன். இப்போது ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரிக்க வில்லையென்றால் வெறும் திண்ணைப் பேச்சாகவே இந்த தொடர் வரலாற்றில்(!) கருதப்பட்டு விடும். ஆகவே நான் எந்தக் கட்சியின் சார்பு நிலை எடுப்பது என்று யோசிக்கிறேன்...
என் தாய்-தந்தையர் தீவிர திமுக ஆதரவாளர்கள். ‘என்ன இருந்தாலும் எம்.ஜி.ஆரு ஒரு நடிகன் தானப்பா’ என என் அப்பா (இருந்த வரை) அடிக்கடி இளக்காரமாகச் சொல்வார். எம்.ஜி.ஆருக்கே அப்படியென்றால் ஜெயலலிதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்..வைகோ மீது அவருக்கு தனி மதிப்புண்டு. அதிமுககாரங்க எங்க வீட்டுக்கு ஓட்டு கேட்டு வரவே மாட்டாங்க. 

ஆனால் பெரும்பாலான என் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருமுறை ஒரு பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வைகோ போட்டியிட்டார். அவருக்கு எதிராக யாரோ ஒரு அதிமுககாரர்! தேர்தல் நேரத்தில் நான் அதிமுக நண்பர்களுடன் தேர்தல் வேலை பார்த்தேன். தேர்தலுக்கு முதல் நாள் இரவும் ஓட்டு ஸ்லிப் கொடுத்தோம். மிகமுக்கிய புள்ளிகளுக்கு மட்டும் சரக்கு சப்ளை. இப்போதுள்ளது போல் அப்போது பணம் விளையாடவில்லை. கட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் சில ஆயிரங்கள் மிஞ்சும். அதுவும் தண்ணியாகச் செலவழியும்!

விடியவிடிய வேலை செய்துவிட்டு, மறுநாள் ஓட்டுப்போட எல்லாரும் ஒன்றாகச் சென்றோம். மெசின் கிடையாது. ஓட்டுச் சீட்டு தான். மதிமுக சின்னம் மேலே இருந்தது. இரட்டை இலை கீழே இருந்தது. இரண்டிற்கும் இடையில் நல்ல கேப்!. நான் மதிமுகவிற்கே குத்தினேன். அதை அதிமுக பூத் ஏஜெண்டாக இருந்த நண்பர் பார்த்துவிட்டார். ‘டேய்..மேல ஏண்டா குத்துறே’ன்னு கத்திவிட்டார். உடனே அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

நான் வெளியே வந்தபோது மொத்த அதிமுக நண்பர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். ‘அநியாயமா கவுத்திட்டான்யா...ஏண்டா அந்தாளுக்குப் போட்டே’ன்னு கேட்டார். ‘வைகோ பார்லிமெண்டில் நன்றாக வாதம் செய்பவர். நம் பகுதி பிரச்சினைகளுக்காக பலமுறை பேசி இருக்கிறார்.ஆனால் அதிமுக சார்பில் நிற்கும் அந்த மனிதர் யார் என்றே நமக்குத் தெரியலையே.. அந்தம்மா இப்படித்தான் யாரையாவது புதுசா நிப்பாட்டுது. அவங்களும் சம்பாதிச்சிட்டு ஒதுங்கிடுதாங்க.அதான்..’ என்றேன். மற்ற அதிமுக நண்பர்கள் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் ‘ரொம்ப படிச்சாலே பிரச்சினை தான்’னு!

சமீபத்தில் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் புதிதாகக் கிளம்பினார். என் பெரியப்பா அதில் ஒரு முக்கிய புள்ளி. எனவே அவர் மூலம் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, என்னிடம் நேரடியாகப் பேசினார். ’என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு இன உணர்வு மிகமிக முக்கியம்’ என்றும் ‘கட்சிக்கு ஆள் சேர்த்துத் தருமாறும், ஏதாவதொரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்’என்றும் உணர்ச்சிப் பிழம்பாய் எடுத்துச் சொன்னார். ’எப்படியும் திமுக/அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் வாங்கிவிட வேண்டும். அதில் ஒரு சீட் என் பெரியப்பாவிற்கு ’என்பது கூடுதல் டீலிங்! ஆனாலும் கடைசிவரை நான் ஒத்துழைக்க மறுத்து விட்டேன். என் பெரியப்பாவும் முடிந்தவரை முயற்சித்தார். அவர்களுக்கு ஒரு படித்த ‘பழமான’ முகம் தேவைப்பட்டது போலும். 

என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஜாதியும், இருக்கின்ற பெரிய கட்சிகளின் பெயரில் கூடுவதே நம் ஜனநாயகத்திற்கு நல்லது. மேலும் ஜாதியின் பெயரால் கூடுவது நம் சமூக அமைதிக்கு நல்லதல்ல என்பது அனுபவப் பூர்வமாகவே எனக்குத் தெரியும். தேவர்-கவுண்டர் போன்றோருக்கு பிடித்தமான கட்சியாக அதிமுகவும், நாயக்கர்களுக்கு பிடித்ததாக மதிமுக-தேமுதிகவும், நாடார்களுக்கு நெருங்கியதாக திமுகவும் இருப்பது பலவகையில் நன்மையே..ஒரு பிரச்சினை என்று வரும்போது இவர்கள் கட்சிரீதியாகவே மூவ் பண்ணி, விஷயத்தை முடிப்பதைக் கண்டிருக்கிறேன். இது ஜாதி வெறியை ஜாதி அபிமானம் என்ற அளவிற்காவது குறைக்கும் என்பது என் அனுபவம்.

1991ல் ஜெ-சசியின் மோசமான ஆட்சி பிடிக்காமல் அடுத்து வந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தேன் (தலைவர் வாய்ஸ் வேற..ம்..அது ஒரு கனாக்காலம்!)..தொடர்ந்து அதிமுகவிற்கும் திமுகவிற்கும் அவ்வப்போதைய நிலைமையைப் பொறுத்து வாக்களித்திருக்கிறேன். மேலே சொன்னபடி, இரு பெரியகட்சிகளுமே எனக்கு வேண்டியவையே. அதனால் யாராவது ஒருவருக்கு ஓட்டுப் போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை!

இப்போ உங்களுக்கே புரிஞ்சிருக்கும் நான் எந்தவொரு கட்சி சார்பும் இல்லாதவன்னு. ஓட்டுப் போடறவங்கள்ல 30% பேரு என்னை மாதிரி தான். கட்சி சார்புல விழுகிற ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்னா ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்திருக்கும். ஆனால் இங்கெ அப்படி இல்லை. எனது நண்பர்கள்/உறவினர்கள் சிலரும் என்னை மாதிரியே..நாங்க தான் ஆட்சியைத் தீர்மானிகிறதே..மற்றபடி, கட்சியின் தீவிர விசுவாசிகள்/தொண்டர்கள் கட்சி என்ன செய்தாலும் விட்டுத் தர்றதே இல்லை. அவங்களுக்கே ஓட்டு போடுவாங்க..என் தாய்-தந்தையர் உதய சூரியனுக்கு ஓட்டு போட்ட மாதிரி..என் நண்பர்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டமாதிரி!

பெரும்பாலான மற்ற வலைப்பூக்களில் வரும் தேர்தல் கட்டுரைகளுக்கும் என் பதிவுகளுக்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசமே ’நான் ஒரு சாமானியன்..சராசரி தமிழரை பிரதிபலிப்பவன்..சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே. ’அம்மா ஆட்சிக்கு வரணும்னு ஜிங்சா அடிப்பதாக’வும் கமெண்ட் வாங்கியிருக்கிறேன். ’தீவிர திமுக அனுதாபி’ என்றும் கமெண்ட் விழுந்திருக்கிறது. 

எந்தவிதமானதொரு கொள்கைக்கும் கட்சிக்கும் கட்டுப்படாத சாமானிய மனதின் சிந்தனைகளே இந்தத் தொடர். தற்போதைய ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

  1. ///சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே.///
    நீங்க எந்தக் கட்சியை செர்ந்தவன்னு முடிவெடுப்பதற்கு முன்பே தேர்தல் முடிந்து விடும் போல?

    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

    ReplyDelete
  2. /////சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே.///
    நீங்க எந்தக் கட்சியை செர்ந்தவன்னு முடிவெடுப்பதற்கு முன்பே தேர்தல் முடிந்து விடும் போல?//
    நான் எந்த கட்சியையும் சேராதவன் என்பதே பதிவு பிரதிபலிக்கிறது. சரியா?

    ReplyDelete
  3. @தமிழ்வாசி - Prakashஎன்ன பாஸ் செய்ய..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையா இருக்கே..’கழுதை விட்டையில முன் விட்டை என்ன பின் விட்டை என்ன’-ன்னு துணிஞ்சாத்தான் முடிவு எடுக்க முடியும்!

    ReplyDelete
  4. @bandhu//எந்த கட்சியையும் சேராதவன் என்பதே பதிவு பிரதிபலிக்கிறது. சரியா?// சரியே..

    ReplyDelete
  5. // ’நான் ஒரு சாமானியன்..சராசரி தமிழரை பிரதிபலிப்பவன்..சராசரித் தமிழனும் என்னைப் போன்றே குழப்பத்தில் இருப்பவன்’ என்பதே. ’அம்மா ஆட்சிக்கு வரணும்னு ஜிங்சா அடிப்பதாக’வும் கமெண்ட் வாங்கியிருக்கிறேன். ’தீவிர திமுக அனுதாபி’ என்றும் கமெண்ட் விழுந்திருக்கிறது. //

    அப்ப‌டியா சொல்ல‌வே இல்ல,.. ஒவ்வொரு அர‌சிய‌ல் ப‌திவு எழுதும் போதும் இவ‌ர் இந்த‌ க‌ட்சியா இருப்பாரோ என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து,.

    ReplyDelete
  6. உண்மையிலேயே தொட‌ர்ப‌திவு ந‌ன்றாக‌ போய்க்கொண்டு இருக்கிற‌து

    ReplyDelete
  7. நீங்க ஒரு சீனியர் விகடன்!

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி நண்பா

    கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு 49 O வழி இருக்கு!

    ReplyDelete
  9. சுவாரஸ்யமா போய்ட்டிருக்கு...

    ReplyDelete
  10. @jothi //ஒவ்வொரு அர‌சிய‌ல் ப‌திவு எழுதும் போதும் இவ‌ர் இந்த‌ க‌ட்சியா இருப்பாரோ என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து// நடுநிலையை இருந்தாலே அப்படித்தான் தோணும்!

    ReplyDelete
  11. @! சிவகுமார் !இன்னும் அந்த அளவுக்கு வயசாகலை சிவா!

    ReplyDelete
  12. @விக்கி உலகம் //49 O வழி இருக்கு!// உண்மை தான்...வைகோவுக்கு போட்டதுக்கே முறைச்சாங்க.49ஓ-ன்னா அடி தான் விழும்!

    ReplyDelete
  13. வோட்டு நமது தொகுதியில் நிற்கும் வேட்பாளரைப் பொறுத்து இருக்கணும் இல்லையா?!!

    ReplyDelete
  14. சமாளிச்சுடீங்க...நீங்க பதிவென்ன கட்சியே ஆரம்பிக்கலாம்...

    ReplyDelete
  15. தொடர வேண்டுமா,வேண்டாமா என்பது பற்றி நீங்கள் தொடருங்கள்; நானும் தொடர்கிறேன்!

    ReplyDelete
  16. @middleclassmadhavi //வோட்டு நமது தொகுதியில் நிற்கும் வேட்பாளரைப் பொறுத்து இருக்கணும் இல்லையா?!! // ஆமாம் சகோதரி!

    ReplyDelete
  17. @டக்கால்டி //நீங்க பதிவென்ன கட்சியே ஆரம்பிக்கலாம்.// இதுக்குத் தான்யா உண்மையே பேசக்கூடாதுங்கிறது...

    ReplyDelete
  18. @சென்னை பித்தன் //நீங்க பதிவென்ன கட்சியே ஆரம்பிக்கலாம்.// இதுக்குத் தான்யா உண்மையே பேசக்கூடாதுங்கிறது...

    ReplyDelete
  19. @சென்னை பித்தன் //தொடர வேண்டுமா,வேண்டாமா என்பது பற்றி நீங்கள் தொடருங்கள்; நானும் தொடர்கிறேன்// சார்..பின்னீட்டீங்க...

    ReplyDelete
  20. அருமையான அலசல் முடிவு சொல்லலையே ஹிஹி

    ReplyDelete
  21. வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    ReplyDelete
  22. //வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?
    //

    இந்த டீலிங்க் நல்லாயிருக்கே!!!

    ReplyDelete
  23. நானும் உங்களை போல்தான். எந்த கட்சியை சார்ந்தவனும் இல்லை. அதனால் தான் கலைஞர், ஜெயா எல்லோரின் நடவடிக்கைகளையும் சாதக பாதகங்களையும் அலச முடிகிறது.

    ReplyDelete
  24. அலசல் அருமை.. எத்துறையையும் சாராத அரணியல் அலசலையே மக்கள் ஏற்பர்.. நானும் அப்படிதாங்க..

    ReplyDelete
  25. @சே.குமார்வருகைக்கு நன்றி குமார்!

    ReplyDelete
  26. @ஆர்.கே.சதீஷ்குமார் உங்களை மாதிரி என்னால டக்னு முடிவு எடுக்க முடியலையே சார்..

    ReplyDelete
  27. @tharuthalai அப்படிச் செய்தால் ஜெயிப்பது கஷ்டம்..ஆனால் மரியாதை மிஞ்சும்!

    ReplyDelete
  28. @ராஜ நடராஜன் நமக்கு நல்லாயிருக்கு..வைகோவுக்கு..

    ReplyDelete
  29. @ரஹீம் கஸாலி //நானும் உங்களை போல்தான்// அதனால தானே பதிவுலகுல ஒன்னாவே சுத்துறோம்!

    ReplyDelete
  30. @தம்பி கூர்மதியன்நன்றி தம்பி கூர்மதி...படம் ஓ.கே வா?

    ReplyDelete
  31. //செங்கோவி said... [Reply]
    @தம்பி கூர்மதியன்நன்றி தம்பி கூர்மதி...படம் ஓ.கே வா?//

    படங்கள் பாராட்டுகுரியது..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.