Saturday, March 26, 2011

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?

டிஸ்கி: என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 8வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை!


இந்த சமூகத்தில் கல்யாணத்துக்கு ஜாதகம் எப்படி முக்கியமோ அப்படித்தான் உங்களுக்கு Resume-ம். இதை curriculum vitae (C.V)ன்னும் சொல்வாங்க.

சி.வி.-ங்கறது சுருக்கமா உங்களைப் பத்தின தகவல்களைச் சொல்ற ஒரு டாகுமெண்ட். நல்லாப் படிக்கிற பலரும் கோட்டை விடுகிற விஷயம், இந்த சி.வி. தயாரிப்பு. ஒரு கம்பெனிக்கு ஆள் தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுப்பாங்க. நீங்களும் சி.வி. அனுப்புவீங்க. உங்களை மாதிரியே நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான பேர் தங்களோட சி.வி.-யை அனுப்புவாங்க. அதில இருந்து உங்க சி.வி.யை கம்பெனி செலக்ட் பண்ணனும்னா, ஏதோ ஒரு விதத்தில் அவங்களை உங்க சி.வி. அட்ராக்ட் பண்ணனும். (அதுக்காக பதிவர் மாதிரி நமீதா படத்தை அட்டாச் பண்ணிடாதீங்க!). அது எப்படிப் பண்றதுன்னு பார்ப்போம்.

ஒரு சி.வி. இப்படித் தான் இருக்கணும்னு வரையறை எதுவும் கிடையாது. தேவையான தகவல்கள் எந்த வரிசையிலும் சொல்லப் படலாம். முதல்ல ஒரு சி.வி.-யில் இருக்க வேண்டிய முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம்.

Objective :
ஒரு சிவியோட ஆரம்பமே இது தான். சில பேர் ஒரு பாராகிரஃபே எழுதுவாங்க இங்கே. அது தேவையில்லை. இதுல நீங்க ஒரு வரி/ ரெண்டு வரில விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடனும். உதாரணமா ‘To obtain a challenging career as a Piping Engineer  in the field of Oil & Gas’-ன்னு சொன்னாப் போதும். கம்பெனி ’Piping Engineer  - Oil & Gas’ -ங்கிற ரெண்டு விஷயத்தைத் தான் பார்க்கும். 

நீங்க யார், என்ன போஸ்ட்டுக்கு அப்ளை பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க இது போதும். ஒரு பாரா எழுதுனா, அதுல தேடி, இதைக் கண்டுபிடிக்கவே கடுப்பாகிடும்.

Career Summary:
நீங்க ஃப்ரெஷ் கேண்டிடேட்-னா இதை 'Area of Interest'னு போடுங்க. உங்களுக்கு எந்த ஏரியா (Strength of Materials/Thermodynamics/Production Techmology etc) விருப்பமானதோ அதை இங்கே நீங்க சொல்லணும். உங்களுக்கு ஏதாவது எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா, Career Summary-ல சுருக்கமா 4-5 பாயிண்ட்ல சொல்லுங்க. முதல் பாயிண்ட்ல நீங்க எத்தனை வருசம் அனுபவம் உள்ளவர்னு சொல்லிடுங்க. என்ன பண்ணுனீங்கன்னு தான் இங்க சொல்லணும். கம்பெனி டீடெய்ல்ஸை பின்னாடி சொல்லலாம். 

இது எதுக்குன்னா, உங்களுக்கு என்ன தெரியும், இதுவரை எவ்வளவு நாளா, என்ன பண்ணியிருக்கீங்கன்னு கம்பெனி புரிஞ்சிக்க உதவும். இதுல மேட்ச் ஆகலைன்னா, பின்னாடி வர்ற எதையும் அவங்க படிக்க மாட்டாங்க. தூக்கி ஓரமா வச்சுடுவாங்க. ஏன்னா வர்ற சிவி எல்லாத்தையும் முழுசா உட்கார்ந்து படிக்க முடியாது. அதனால ரொம்பக் கவனமா இந்தப் பகுதியை எழுதுங்க. உதாரணமா 

-Design Engineer having totally 5 years experience in Product Modeling
- Modeling of Valve parts using Pro-E, Solidworks and AutoCAD

ஒரு கம்பெனி Pro-E Software-ல் 3 வருச எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளைத் தேடிக்கிட்டிருக்கலாம். முதல் ரெண்டு வரிலயே ‘இது நம்ம ஆளு’ன்னு அவங்களுக்குப் புரிஞ்சிடும்.

Academic Qualification:
இங்கே நீங்க உங்களோட கல்வி பற்றிய விபரங்களைக் கொடுங்க. பத்தாவது வகுப்புல இருந்தே விவரங்கள் இருக்கணும்னு கம்பெனிகள் எதிர்பாக்குறாங்க. அதனால அட்டவணை வடிவத்துல கொடுங்க.

Course - Institution - Year of Passing(Batch)-Marks% இந்த வரிசைல 10, 12, Degree டீடெய்ல்ஸைக் கொடுங்க. இது எதுக்குன்னா, சில கம்பெனிகள் 70%க்கு மேல இருந்தாத் தான் எடுப்போம்-னு விதிமுறைகள் வச்சிருக்கலாம். அதனால இந்த டேபிளைப் பார்த்ததுமே, தொடர்ந்து உங்க சி.வி.யைப் பாக்குறதா வேணாமா-ன்னு முடிவு பண்ண இது உதவும். 

கடந்த இரு பகுதியும் ஓ.கே-ன்னா உங்க சி.வி. 80% செலக்ட் ஆகிடும்.


Professional Experience: (Current to Previous)

நீங்கள் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் என்றால், நீங்கள் இப்போது வேலை பார்க்கின்ற/பார்த்த கம்பெனி விவரங்களில் இருந்து ஆரம்பித்து, ரிவர்ஸில் முந்தைய கம்பெனி, அதற்கு முந்தைய கம்பெனி எனக் கொடுக்கவும். ஃப்ரெஷ் ஆளென்றால், Inplant Training சென்ற கம்பெனி விவரங்களையும், அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் சொல்லவும்.

ஒரு பொழுதும் கதை மாதிரி பத்தி பத்தியாக எழுதாதீர்கள். பாயிண்ட், பாயிண்டாகவோ, டேபிள் ஃபார்மேட்டிலோ இருப்பது நல்லது. உதாரணமாக:

Organization : மன்னார் & மன்னார் கம்பெனி
Designation : வெட்டி ஆபீசர்
Duration       : May.2001 – Aug.2010/Till Date

Job description: 

Lay-out planning and 3D Pipe Routing in PDMS, CADWorx, AutoCAD
Leading a Piping Designers team 
Iso-extraction, Checking and Issuing for fabrication


இவ்வாறு எழுதினால் படிப்போர்க்கு எரிச்சல் வராமல் உங்கள் சிவியை மதிப்பிட எளிதாக இருக்கும்.


Technical/Software Skills:

இந்தப் பகுதியில் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த சாஃப்ட்வேர் டீடெய்ல்ஸ் மற்றும் CNC Machining போன்ற வேறு ஏதேனும் கோர்ஸ் செய்திருந்தால் அவை பற்றிய விவரங்களைக் குறிப்பிடவும். ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு முக்கியமான பகுதி இது.

Extra-Curricular Activities:

ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு மட்டுமே இது கட்டாயம். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கள் இதை எடுத்துவிடலாம். இந்தப் பகுதியில் நீங்கள் NSS/NCC, Sports போன்றவற்றில் பங்கு பெற்ற விபரங்களைக் கொடுக்கவும். நீங்கள் ஏதெனும் செமினார் எடுத்திருந்தாலும் அது பற்றிய விவரங்களைக் கொடுக்கலாம்.

Personal Data:

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கு கொடுக்கவும் தனியார் கம்பெனிக்கு ஜாதி தேவையில்லை. அப்படியே கேட்டாலும் FC/BC/MBC/SC என பொத்தாம்பொதுவாகப் போடுவது நல்லது. கீழே உள்ளது போன்றும் விவரங்களைக் கொடுக்கலாம்:

Date of Birth                 : xxxxxx
Marital Status                 : Single/Married
Languages Known : English, Tamil
Academic Qualification : B.E (Mechanical)
Year of Passing      : xxxx
Residing Address : xxxxxxxxx
Permanent Address : : xxxxxxxx


முடிந்தவரை சி.வி.யை சுருக்கமாகவும், தெளிவாகவும் தயார் செய்யவும். படிக்கக்கூடிய ஃபாண்ட்-ல் கொடுங்கள். பக்கத்தைக் கூட்டவோ/குறைக்கவோ ஃபாண்ட்-ஐ மாற்றி சி.வி.யின் அழகைக் கெடுக்க வேண்டாம்.

நீங்கள் ரொம்பவும் நல்ல பிள்ளையென்றால், எவ்விதக் கோல்மால் வேலைக்கும் பழக்கப்படாதவ்ர் என்றால் இதுவரை சொன்னது போதும். All the Best!
--------------------------------

சரி, இந்த மாதிரி ‘நாம் யார், என்ன தெரியும், என்ன செய்தோம்’-னு கரெக்டாகப் போட்டால் நம் சி.வி.யை செலக்ட் செய்து விடுவார்களா? அது தான் இல்லை. எப்போது உங்கள் சி.வி.க்கு ஏற்ற வேலை ஒரு கம்பெனியில் காலி ஆகிறதோ அப்போது தான் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். 

‘காலுக்கு ஏற்ற செருப்பு கிடைக்கவில்லை எனில் செருப்புக்கு ஏற்ற மாதிரி காலை வெட்டத் துணிபவர் ’என்றால்....தொடர்ந்து வாருங்கள். என்ன கோல்மால் செய்ய வேண்டும் எனச் சொல்லித் தருகிறேன். அது அடுத்த வாரம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

  1. நீங்கள் ரொம்பவும் நல்ல பிள்ளையென்றால், எவ்விதக் கோல்மால் வேலைக்கும் பழக்கப்படாதவ்ர் என்றால் இதுவரை சொன்னது போதும். All the Best!

    ......ஹையோ...ஹையோ.....கோல்மால் இங்கேயுமா? அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  2. என்னால் முடிந்த டிப்ஸ்:

    . ஹார்ட் வொர்கிங் என போடுதல் இப்போது பேசன் இல்லை. அந்த வார்த்தை தேவையும் இல்லை. ஹார்ட் வொர்க் செய்யாவிடில் சும்மா விடுமா கம்பனி?

    . கடைசி நேரத்தில்தான் பலர் ரெஸ்யூமை தூசு தட்டுவர். அப்போது அவசரத்தில் காப்பி அடித்து ஏதோ ஒன்றை தயார் செய்வர். கேள்வி கேட்கும்போது ரெஸ்யூமில் உள்ள சில வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் முழிப்பார்கள். 100% நம் ரெஸ்யூமை படித்த பிறகே இன்டர்வியு அறைக்குள் நுழைய வேண்டும்.

    . இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் நன்று.

    . ஹாப்பிஸ் போன்றவை தேவை இல்லை. கேட்டால் மட்டும் சொல்லலாம்.

    இப்படி பல உள்ளன.

    உபயோகமான பதிவு செங்கோவி!

    ReplyDelete
  3. ண்ணா..இதுல கூட நமீதாவை பத்தி சொல்லன்னுமாங்ண்ணா ?
    நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க?

    ReplyDelete
  4. அண்ணன் கமல் மாதிரி.. ஒரு பதிவு கமர்ஷியல்.. அடுத்து பரீட்சார்த்த முயற்சி... ம் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.. போற போக்கைப்பார்த்தா சீக்கிரம் திருந்திடுவார் போல.. அட போங்கப்பா

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி மாப்ள

    எங்கயாவது இதுவர சைட்டடிச்ச பொண்ணுங்களோட எண்ணிக்கைய குறிப்பிடுனுமா வேணாமா டவுட்டு

    - இப்படிக்கு சிபி ஹிஹி!

    ReplyDelete
  6. @Chitra//ஹையோ...ஹையோ.....கோல்மால் இங்கேயுமா? அவ்வ்வ்வ்....// இந்த உலகத்தில் கோல்மால் இல்லாத இடம் ஏது?..முதல் பின்னூட்டத்திற்கு நன்றியும் வடையும்!

    ReplyDelete
  7. @டக்கால்டி//Vada Missing// லேட்டா நான் போட்டதால வடை மிஸ்ஸாகிடுச்சா..பரவாயில்லை டகால்டி!

    ReplyDelete
  8. @! சிவகுமார் !://100% நம் ரெஸ்யூமை படித்த பிறகே இன்டர்வியு அறைக்குள் நுழைய வேண்டும்.// இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்லலாம்னு நினைச்சேன். நல்ல டிப்ஸ்களைக் கொடுத்ததுக்கு நன்றி சிவா. வேறெதும் விடுபட்டிருந்தால் சொல்லவும்..ஹாபீஸ் - ஃப்ரெஷெர்க்கு யூஸ் ஆகலாம்!

    ReplyDelete
  9. @டக்கால்டி//இதுல கூட நமீதாவை பத்தி சொல்லன்னுமாங்ண்ணா ?// அதுவா வருது டகால்டி.

    ReplyDelete
  10. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் கமல் மாதிரி.// ஏண்ணே திட்டுறீங்க?

    ReplyDelete
  11. @விக்கி உலகம்//எங்கயாவது இதுவர சைட்டடிச்ச பொண்ணுங்களோட எண்ணிக்கைய குறிப்பிடுனுமா வேணாமா டவுட்டு// இப்போல்லாம் பொண்ணு பார்க்க பயோ-டேட்டா கேட்கிறாங்கள்ல..அங்க மட்டும் இந்த டீடெய்ல் கொடுத்தாப் போதும் விக்கி.

    ReplyDelete
  12. நிறைய பேருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  13. அருமையான‌ ப‌திவு,..

    // அப்படியே கேட்டாலும் FC/BC/MBC/SC என பொத்தாம்பொதுவாகப் போடுவது நல்லது. //

    போடாம‌ல் இருப்ப‌து சால‌ சிற‌ந்த‌து.இத‌னால் ஒரு ப‌ல‌னும் இல்லை அர‌சுப்ப‌ணிக‌ளுக்கு ம‌ட்டுமே இது தேவைப்ப‌டுகிற‌து.த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் எவையும் இதை கேட்ப‌தில்லை. (கேட்கிற‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் சேராமல் இருப்ப‌து ந‌ல்ல‌து).இது தேவையே இல்லாம‌ல் எதிர்வினையாக‌ வாய்ப்பிருக்கு.

    இது என் எண்ண‌ம்.

    ReplyDelete
  14. மிகவும் உபயோகமான பதிவு! உங்கள் எச்சரிக்கையையும் மீறி படித்துக் கொண்டிருந்தேன்!.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. தொடருங்க தொடருங்க தொடர்கிறோம் தொடர்கிறோம்...

    ReplyDelete
  18. @இரவு வானம்யூஸ் ஆகணும்னு தானே எழுதுறோம்..நன்றி நைட்!

    ReplyDelete
  19. @jothi உண்மை தான் ஜோதி. இதை அவர்கள் கேட்பதில்லை தான்!

    ReplyDelete
  20. @middleclassmadhavi/உங்கள் எச்சரிக்கையையும் மீறி படித்துக் கொண்டிருந்தேன்!.// இது நல்ல பதிவு தான்..பயப்படாமப் படிக்கலாம்..ஹி..ஹி..பாராட்டுக்கு நன்றிக்கா!

    ReplyDelete
  21. @MANO நாஞ்சில் மனோ வாங்க சார்..தொடர்ந்து வாங்க சார்.

    ReplyDelete
  22. தேவையான மற்றும் அற்புதமான பதிவு...

    கண்டிப்பாக நிறையபேருக்கு இந்த பதிவு பயன்படும்

    ReplyDelete
  23. @பாட்டு ரசிகன்//தேவையான மற்றும் அற்புதமான பதிவு// பாராட்டுக்கு நன்றி பாட்டு ரசிகன்!

    ReplyDelete
  24. @Geetha6 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  25. அன்பு செங்கோவி, உபயோகமான பதிவு. எனக்கு தெரிந்த சில டிப்ஸ்- முதலில் நாம் முடிவு செய்ய வேண்டியது நாம் Resume தயார் செய்ய வேண்டுமா அல்லது CV தயார் செய்ய வேண்டுமா என்பது.

    1. பொதுவாக Resume என்பது 1 அல்லது 2 பக்கங்களில் நம்முடைய வேலை அனுபவம், கல்வித்தகுதி மற்றும் special skill sets/ computer skills போன்றவை - எவ்வளவு சுருக்கமாக தர முடியுமோ அவ்வளவு நலம்.

    2. CV என்பது சற்றே விரிவான (at least 3 pages) கல்வித்தகுதிகள், ஆராய்ச்சி மற்றும்/அல்லது ஆசிரியப் பணி அனுபவம், conference/journal publications, etc போன்றவை பற்றி ஒரு குறு அறிமுகம். CV - பொதுவாக கல்லூரி பணி, ஆராய்ச்சிப் பணி போன்ற பணிகளுக்கு CV உகந்தது, Resume அல்ல.

    எனவே, வேலைக்குத் தகுந்த CV/ Resume தயார் செய்வது அவசியம்.

    3. Resume/CV top right headerல் "Resume of Sengovi" or "CV of Sengovi" என்று 2ம் பக்கத்திலிருந்து தருவதும் நல்லது. ஒருவேளை நீளமான பெயர் இருந்தால் முதல் பெயர் மட்டும் உசிதம்(உம்: அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் - "Resume of Chandran" போதும்).

    4. Standard Font style உபயோகியுங்கள் (Arial/ Times New Roman) - fancy font களை தவிருங்கள்.

    5. Skills போன்றவற்றை எழுதும் போது, குறைந்த பட்சம் அதைப் பற்றி தெரிந்த்தால் மட்டும் குறிப்பிடவும் - வேலைக்கு சேர்ந்த பின் படித்துக் கொள்ளலாம் என்றால் வேலைக்கே ஆகாது :-). LS DYNA தெரியும் என்று போட்டுவிட்டு, கேட்டால் 'தெருவில் போகும் போது விளம்பரம் பார்த்திருக்கிறேன்' என்று வழியக்கூடாது ;-) தெரியாதென்றால் தெரியாது என்று நேர்மையாக ஒத்துக்கொள்வது மிக நல்லது.

    6. கேட்டால் ஒழிய புகைப்படம் தேவையில்லை.

    7. கேட்டால் ஒழிய Referencesம் தேவையில்லை.

    8. முக்கியமாக - நீங்கள் நேரில் சென்று குடுக்கும் அல்லது hard copy யாக அனுப்பும் Resumeல் மட்டும் Declaration என்னும் 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறோன்றுமில்லை :-) பகுதியை இணைத்து கையொப்பமிடலாம். Email or Online application களில் இது தேவையில்லை.

    9. உபயோகத்தில் உள்ள email address and Phone number கொடுக்கவும். Decent ஆன readable email ID யாக இருத்தல் நலம் (உம்: பட்டாசுபாலு@சிவகாசி.com ;-)

    10. கடைசியாக, உங்கள் Resume/CV யை அனுப்பப்போகும் கம்பெனியின் HR ஸ்தானத்திலிருந்த்து உங்கள் Resumeஐ படித்துப் பாருங்கள் - உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்த்தாலொழிய அனுப்ப வேண்டாம், சிறிய திருத்தங்ககள் செய்த பின் அனுப்பவும். தயவுசெய்து spelling mistakes இல்லாமல் அனுப்பவும்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. @ஷோபன் மிக அருமையாக, பாயிண்ட், பாயிண்டாக விடுபட்டதைச் சொன்னதற்கு நன்றி நண்பரே..Declaration எங்குமே நான் தருவதில்லை.கடைசிப் பக்கத்தில் ஒரு கையெழுத்து மட்டுமே!..ரெசுயூம்/சி.வி. விளக்கம் எனக்கே புதுசு..எனது அனுபவத்தில் இரண்டையும் ஒன்றாகவே சொல்கின்றனர். விளக்கியதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  27. நன்றி செங்கோவி. In fact, declaration கொடுக்காத போது, கையெழுத்துமே தேவையில்லை. ஆம், இன்னும் பலர் resume or CV இரண்டையுமே ஒரே அர்த்தத்தில்தான் உபயோகிக்கின்றனர். நல்ல முயற்சி, தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.