Saturday, November 28, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 65


65. SCENE FORMAT - இன்னும் கொஞ்சம்..
சென்ற பகுதியில் சீன் ஃபார்மேட் பற்றிப் பார்த்தோம். சிம்பிளான சீன்களை எழுத அது போதும். ஆனால் எல்லா சீன்களும் அப்படி ஒரே இடத்தில் நடப்பதாக இருப்பதில்லையே? எனவே சீன் ஃபார்மேட் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்களைப் பார்ப்போம்.

1. SCENE HEADING:

பகல் நேரத்தில் ஹீரோவும் ஹீரோயினும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை சென்ற பகுதியில் பார்த்தபடி இப்படி எளிதாக எழுதிவிடலாம்:  

SCENE 2: INT.HERO HOME - HALL - DAY

அவ்வாறு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிச்சனுக்கு இருவரும் நகர்ந்தால்?

அதை இப்படி எழுதுங்கள்:

SCENE 2: INT.HERO HOME - HALL - DAY



ஹீரோவும் ஹீரோயினும் காஃபி அருந்திக்கொண்டிருக்கிறார்கள்.



ஹீரோயின்
ஸ்டவ்வை ஆஃப் பண்ணேனா?



ஹீரோ உதட்டைப் பிதுக்குகிறான். ஹீரோயின் எழுந்து கிச்சனை நோக்கிப் போகிறாள்.



INT.KITCHEN



ஹீரோயின் ஸ்டவ்வைப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் புன்னகைக்கிறாள்.

ஒரே வீட்டிற்குள் என்பதால், இது ஓகே. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சீன் நடந்தால், எப்படி எழுதலாம் என்று பார்ப்போம்.

EXT.ROAD TO HOME - NIGHT

ஹீரோ பைக்கை ஓட்டிக்கோன்டு வருகிறான். ஹீரோயின் பின்னால் பதட்டமாக உட்கார்ந்திருக்கிறாள்.



ஹீரோயின்
வேகமாப் போ..ஸ்டவ்வை ஆஃப் பண்ணேனான்னு தெரியலை.


ஹீரோ பைக்கை விரட்டுகிறான்.



EXT.HERO HOME



பைக்கில் இருந்து இறங்கும் ஹீரோயின் கதவை நோக்கி ஓடுகிறாள்.



INT.KITCHEN



ஹீரோயின் ஸ்டவ்வைப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் புன்னகைக்கிறாள்.

ஆடியன்ஸ் ஒரு கேரக்டரில் இன்வால்வ் ஆகியிருக்கும்போது, அங்கே கட் செய்வது அட்டாச்மென்ட்டைக் குறைக்கும். உதாரணமாக, வீட்டிற்குள் பாம் வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை சென்ற காட்சியில் ஆடியன்ஸிற்குச் சொல்லியாகிவிட்டது. இப்போது ஹீரோயின் உள்ளே போகிறாள் என்றால், அவள் 'உள்ளே போகிறாள்' என்பது தான் இங்கே முக்கியமான ஆக்சன். எனவே அவள் உள்ளே நுழைவதைக் காட்டியாக வேண்டும். வெளியே கட் செய்து, சட்டென்று உள்ளே காட்டுவது எமோசனைக் குறைக்கும். எனவே ..

EXT/INT.HERO HOME - NIGHT - TRACKING



பைக்கில் இருந்து இறங்கும் ஹீரோயின் கதவை நோக்கி ஓடுகிறாள். வீட்டின் உள்ளே நுழைகிறாள். ஹாலைக் கடந்து கிச்சனுக்குள் நுழைகிறாள். ஸ்டவ்வைப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் புன்னகைக்கிறாள்...டமார்!
.

தொலைபேசி உரையாடல் போன்ற சீன்கள் அல்லது வில்லன் ஹீரோவை நெருங்குவது போன்ற சஸ்பென்ஸ் சீன்கள், Intercutt-ல் ஒரே நேரத்தில் இரு இடங்களில் நடைபெறும். அவற்றை இப்படி எழுதலாம்:

INT.HERO HOME - DAY



ஹீரோ தன் ஸ்மார்ட் ஃபோனை எடுத்து கால் செய்கிறான்.



EXT.COLLEGE



ஹீரோயின் தன் தோழிகளுடன் நின்றுகொண்டிருக்கிறாள். ஃபோன் ஒலிக்கிறது.


2. ACTION:

திரைக்கதை எழுதும்போது, ஷாட் டீயெல்ஸையும் எழுத வேண்டுமா எனும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. தமிழில் திரைக்கதை எனும் வார்த்தையையே Script-க்கும் Shooting Script-க்கும் உபயோகிப்பதால், இந்தக் குழப்பம் எழுகிறது. ஒரு திரைக்கதையாசிரியர், ஷாட் விவரங்களை எழுத வேண்டிய அவசியம் இல்லை. சில இயக்குநர்களும் அதை விரும்புவதில்லை.

பலமுறை திருத்தி எழுதி முழுமை பெற்ற திரைக்கதை, ஒரு இயக்குநரின் கைக்குப் போகிறது. அவரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து, ஷாட்களை முடிவு செய்வது தான் முறை. இருப்பினும், சில முக்கியமான இடங்களில் மட்டும் ஷாட் விவரத்தை நீங்கள் குறிப்பிடலாம்.

உதாரணமாக:
வில்லன் மேஜை டிராயரில் இருந்து எதையோ எடுக்கிறான். ( CLOSE UP ) அது, துப்பாக்கி.

(ஒரு நல்ல இயக்குநர்/ஒளிப்பதிவாளருக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!!)

ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதும்போது, கீழ்க்கண்ட மூன்று விஷயங்களை கேப்பிட்டல் லெட்டரில் எழுதச் சொல்கிறார்கள்:

  • கேரக்டர்களின் பெயர்கள் (முதல்முறை வரும்போது மட்டும்)
  • சிறப்பு சத்தங்கள் (காலடி ஓசை, சூறாவளி)
  • கதைக்கு முக்கியமான பொருட்கள். (நட்டு வச்ச ரோஜாவுக்கு உதவும் பொருட்கள் - உதாரணம்)

தமிழில் கேப்பிட்டல் லெட்டர் கிடையாது என்பதால், இவற்றை போல்டு லெட்டரில் சொல்லலாம்.

ஆக்சன் பகுதியை எழுதும்போது, நமக்கு குழப்பம் தரும் ஒரு விஷயம் மான்டேஜ். வசனங்கள் இல்லாமலோ அல்லது வசனங்களுடனோ தொடர்ச்சியாக நடக்கும் சிறுசிறு நிகழ்வுகள்.

உதாரணமாக, இன்னும் வீட்டிற்குத் திரும்பாத ஹீரோயினைத் தேடி ஹீரோ அலைகிறான். ஆபீஸில் போய்க் கேட்கிறான், தோழியின் வீட்டில் போய்க் கேட்கிறான், ரோட்டில் அலைகிறான், முடிவில் வீட்டிற்கே வருகிறான். வெவ்வேறு இடத்திலும் நேரத்திலும் நடப்பதால், இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சீனாக எழுத வேண்டிய அவசியம் இல்லை.

INT.HERO HOME - DAY



ஹீரோ பதட்டமாக அமர்ந்திருக்கிறான். வாட்ச்சைப் பார்க்கிறான். எழுகிறான்.



MONTAGE - VARIOUS



A)   EXT.ROAD – DAY – TRAVELING : ஹீரோ பைக்கில் போகிறான்.

B)    EXT.OFFICE GATE – DAY : ஆஃபீஸ் செக்யூரிட்டியிடம் விசாரிக்கிறான். அவர் இல்லையென தலையசைத்தபடி ஏதோ சொல்கிறார். ஹீரோ ஏமாற்றத்துடன் பைக்கை ஸ்டார்ட் செய்கிறான்.

C)    EXT.ROAD – DAY/NIGHT – TRAVELING : ஹீரோ பைக்கில் போகிறான்.

D)   EXT.FRIEND HOME –NIGHT : ஹீரோயினின் ஃப்ரெண்டிடன் ஹீரோ விசாரிக்கிறான்.

E)    EXT.ROAD-NIGHT-TRAVELING : ஹீரோ பைக்கில் போகிறான்.

F)    EXT. HERO HOME - NIGHT : வீட்டு வாசலில் பைக்கை நிறுத்துகிறான். வீட்டுக் கதவு திறந்திருக்கிறது.



MONTAGE ENDS.

3. CHARACTER NAME:

துணைக் கதாபாத்திரங்களை குறிக்கும்போது தான் சிக்கல் எழும். ஒரு பெண் என்று முதல் சீனில் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.


பெண்
இப்டிக்கா போய், லெஃப்ட் எடும்மே!

இருபதாவது சீனில் ஹீரோ ஒரு கடையில் பொருள் வாங்குகிறான். அந்த கடைக்காரப் பெண்ணையும் பெண் என்றே குறிப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பெண்
நூறு ரூபாய்ங்க சார்.

இப்படி திரைக்கதை முழுக்க பல 'பெண் 'களை உருவாக்கிவிடுவீர்கள். இதனால் என்ன ஆகும் என்றால், ூட்டிங்கின்ப முதல் சீனில் நடித்த பெண் மறுபடியும் இருபதாவது சீனிற்கு அழைத்து வரப்படலாம். எனவே எல்லா கேரக்டர்களுக்கும் பெயர் கொடுங்கள் அல்லது 'குண்டுப் பெண்மணி /பூக்காரம்மா' போன்று தனித்த அடையாளம் கொடுங்கள்.

4. Dialogue:

வசனம் பேசும்போது, வேறு செயல்களிலும் கேரக்டர்கள் ஈடுபடுவதுண்டு. அதை எழுத:


ஹீரோ

உன்னை முதன்முதலாப் பார்த்தப்பவே...



ஹீரோ கத்தியை எடுக்கிறான்.



ஹீரோ

(CONT’D)

என் மனசைப் பறி கொடுத்துட்டேன்.

CONT’D என்பதைத் தொடர்ச்சி என்றும் எழுதலாம்.

சில நேரங்களில் ஒரு பக்கத்தில் கீழே ஆரம்பித்து, அடுத்த பக்கத்திலும் நீளலாம். அப்போது, கடைசி வரியில் வலது மூலையில் (Alignment-Right) MORE என்று எழுதிவிட்டு, அடுத்த பக்கத்தில் வசனத்தை தொடருங்கள்.

5.  Transitions: பிவீள்வால், இுபற்றி இங்கே போய்ப் பிக்கும்:

 திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 66

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.